Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
"கதிர்காமர்" கொலையிலுள்ள மர்மங்கள்!!!
#53
<b>பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை தவிர்ப்பது அவசியம்</b>

""வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரை புலிகளே கொலை செய்ததாக அரசாங்கம் குற்றம் சாட்டுகின்றது. ஆனால், கதிர்காமர் மீது தாம் தாக்குதல் நடத்தவில்லையென புலிகள் தெரிவிக்கின்றனர். ஒருவரையொருவர் குற்றம் சாட்டுவதை விடுத்து உடன் பேச்சுவார்த்தையினை ஆரம்பிப்பதன் மூலம் இனப்பிரச்சினைக்குத் தீர்வை காண முடியும்'' என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க புதுடில்லியில் தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க இந்தியத் தலைவர்களிடம் எடுத்துரைத்த கருத்து இந்தியாவை மாத்திரமன்றி, சர்வதேச சமூகத்தையும் சென்றடைய வேண்டும். அப்போதுதான், இவரது கூற்று அர்த்தம் பொதிந்ததாக அமையும். அதுவே இன்றையத் தேவையாகவுமுள்ளது என தமிழ் பேசும் மக்கள் கூறுகின்றனர்.

பரஸ்பரம் ஒருவரையொருவர் குற்றம் சுமத்துவதையே இரு தரப்பினரும் பிரதானமாகக் கொண்டு செயற்படுகின்றனரே தவிர, பிரச்சினைக்குத் தீர்வு காண எவரும் முன்வருவதில்லை. பிரச்சினைகள் உருவாகும் சந்தர்ப்பங்களில் அரசியல்வாதிகள் தேவையற்ற கருத்துக்களை வெளியிட்டு, அதனூடாக முறுகல் நிலையை ஏற்படுத்துவதையே நோக்காகக் கொண்டு செயற்படுகின்றனர். மாறாக, பிரச்சினைகளை பேசித் தீர்க்க முற்படுவதில்லை என்றும் தமிழ் பேசும் மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இன்றைய போக்குகளால் யுத்தநிறுத்த உடன்படிக்கை முறிவடையும் அபாயமே தோன்றியுள்ளது. இதன் காரணமாக நாட்டில் மீண்டுமொரு போர் மூண்டு விடுமோ என மக்கள் அஞ்சுகின்றனர்.

தற்பொழுது, ஓரளவு நிம்மதி பெருமூச்சுடன் வாழும் மக்கள் மீண்டும் பழைய விரக்தி நிலைக்குச் செல்ல அஞ்சுகின்றனர். அந்த நிலை ஏற்படாமல் தடுக்க சகலரும் முனைப்புடன் செயற்பட வேண்டியது இன்றியமையாதது.

குறிப்பாக வெளிவிவகார அமைச்சர் கதிர்காமரின் கொலையின் பின்னணியில் அரசியல்வாதிகள் அரசியல் இலாபம் தேட முனையக் கூடாது. அவ்வாறு அவர்கள் முனைந்தால் நாட்டில் மேலும் விபரீதங்களே ஏற்படும். எனவே, அரசாங்கம் நிதானத்துடன் செயற்பட வேண்டும். அதுவே பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஒரே மார்க்கமாகும்.

கடந்த கால தவறுகளைத் திருத்திக் கொண்டு புதிய முறையில் சமாதான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயமாகும். அதனை விடுத்து, இனப்பிரச்சினையை வைத்து அரசியல் இலாபம் காண எவரும் முனைவார்களேயானால் நாட்டின் பிரச்சினைகள் ஒருபோதும் முடிவுக்கு வர மாட்டாது.

இனப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்து நிரந்தர தீர்வொன்று காணப்படுமிடத்து மாத்திரமே இத்தகைய பிரச்சினைகளை தவிர்க்க முடியும் என்பது சகலரதும் நம்பிக்கையாகும். எனவே, இரு தரப்பினரும் ஒரே மேசையில் அமர்ந்து பேசுவதன் மூலமே. நிரந்தர சமாதானத்தை மலரச் செய்ய முடியும்.

இதற்கு கால்கோளிட வேண்டிய பாரிய பொறுப்பு சர்வதேச சமூகத்திடமே உள்ளது. இதனை சகல தரப்பினரும் பல தடவைகள் இடித்துரைத்துள்ளனர். எவ்வாறெனினும் சர்வதேச சமூகமோ அல்லது சமாதான விரும்பிகளோ அதனை உணர்ந்து செயலுருப்படுத்த முன்வராமை வேதனைக்குரியதே.

எதிர்க்கட்சித் தலைவரின் கூற்றை சிரமேற்கொண்டு, சர்வதேச சமூகம் சமாதான பேச்சுக்களுக்கான அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டிய தருணம் இதுவாகும். உரிய வகையில் இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் அழுத்தம் கொடுத்து இரு தரப்பினரையும் பேச்சுவார்த்தை மேசைக்கு அழைக்கும் பாரிய பொறுப்பு அவர்களிடமே சார்ந்துள்ளது.

இதேவேளை, ""லக்ஷ்மன் கதிர்காமரின் கொலைக்கு விடுதலைப் புலிகள் மீது எழுந்தமானத்தில் குற்றஞ்சாட்டி விட்டு உண்மையான குற்றவாளிகள் தப்பிச் செல்வதற்கு வழிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் செயலில் ஸ்ரீலங்கா அரசு இறங்கியுள்ளது'' என்று தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் ராய்ட்டர் செய்திச் சேவைக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்திருக்கிறார்.

கதிர்காமர் கொலையின் பின்னணியில், அரசு புலிகளைக் குற்றஞ்சாட்டியதற்கு பதிலாக புலிகள் அரசு மீது பழி சுமத்தியுள்ளது. சர்வதேச ரீதியில் இந்த பழி சுமத்தும் படலம் இரு தரப்பினர் மத்தியிலும் தொடர்ந்த வண்ணமேயுள்ளது. இதனைவிடுத்து, இரு தரப்பும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுத்து, பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டும் என்பதையே சகலரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

வெறுமனே வாய்ப்பேச்சினால் மீண்டும் கொலை கலாசாரம் தொடர்வதற்கு எவரும் வித்திடக் கூடாது. மாறாக, கொலை கலாசாரத்தை முடிவுக்குக் கொண்டு வரவே சகலரும் பாடுபட வேண்டுமென்பதே பொதுவான அபிப்பிராயமாகும்.

எது எவ்வாறாயினும், தமிழ்ச் செல்வன் முன் வைத்திருக்கும் கருத்தை எவரும் இலகுவில் அலட்சியம் செய்து விட முடியாது. இவ்விதமாக, அரசு எழுந்தமானமாக குற்றஞ் சுமத்துவதால் உண்மையான குற்றவாளிகளை தப்ப வைத்து விடக் கூடாது. அல்லது அரசு குற்றவாளிகளை தப்ப வைக்க முயற்சிகளை மேற்கொள்ளக் கூடாது என்ற தொனிப் பொருளிலேயே அவர் இதனை வெளிப்படுத்தியிருக்கிறார் போலும்.

உண்மையான குற்றவாளிகளை கண்டு பிடிக்கும் பொறுப்பிலிருந்து அரசு விலகிக் கொள்ள முடியாது. உண்மை நிலையை சர்வதேச சமூகத்துக்கு எடுத்து விளக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது என்பதே தமிழ்ச் செல்வனின் வாதமாகவுள்ளது.

அந்த வகையில், வரவேற்கப்பட வேண்டியதொரு கருத்தையும் தமிழ்ச்செல்வன் முன்வைத்திருக்கிறார் என்பது மறுக்கப்படுவதற்கில்லை.

எனவே, அரசு உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்த உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். கொலை நடந்து, ஒருமாத காலத்தில் அந்தக் கொலையை மறந்து விடுவதே வழமையாக இடம்பெற்று வருகின்றது. இதனால், குற்றவாளிகள் தப்பித்துக் கொள்கின்றனர். எனவே, உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிய அரசு நடவடிக்கை எடுக்கும் அதேவேளை, முறிந்து போயுள்ள சமாதான முயற்சிகளுக்கும் உயிரூட்ட அரசு தயாராக வேண்டும்.

எது எப்படியிருப்பினும், அநாவசியமான கருத்துக்களால் சமாதான முயற்சிகள் பாழ்பட்டு விடவோ, நாட்டில் மீண்டும் யுத்த மேகங்கள் மூண்டு விடவோ கூடாது என்பதையே நாம் கூறி வைக்க விரும்புகிறோம்.

Veerakesari
Reply


Messages In This Thread
[No subject] - by ottan - 08-13-2005, 08:55 AM
[No subject] - by narathar - 08-13-2005, 08:59 AM
[No subject] - by MUGATHTHAR - 08-13-2005, 09:44 AM
[No subject] - by kurukaalapoovan - 08-13-2005, 10:53 AM
[No subject] - by Thala - 08-13-2005, 12:00 PM
[No subject] - by கறுணா - 08-13-2005, 12:57 PM
[No subject] - by வினித் - 08-13-2005, 01:58 PM
[No subject] - by Thala - 08-13-2005, 04:05 PM
[No subject] - by muniyama - 08-13-2005, 04:09 PM
[No subject] - by Thala - 08-13-2005, 04:18 PM
[No subject] - by Thala - 08-13-2005, 04:19 PM
[No subject] - by narathar - 08-13-2005, 05:22 PM
[No subject] - by vijitha - 08-13-2005, 05:32 PM
[No subject] - by AJeevan - 08-13-2005, 06:03 PM
[No subject] - by Thala - 08-13-2005, 08:58 PM
[No subject] - by AJeevan - 08-13-2005, 09:22 PM
[No subject] - by Thala - 08-13-2005, 10:18 PM
[No subject] - by Birundan - 08-13-2005, 10:43 PM
[No subject] - by narathar - 08-13-2005, 11:05 PM
[No subject] - by narathar - 08-13-2005, 11:45 PM
[No subject] - by narathar - 08-13-2005, 11:49 PM
[No subject] - by narathar - 08-13-2005, 11:56 PM
[No subject] - by aathipan - 08-14-2005, 12:50 AM
[No subject] - by aathipan - 08-14-2005, 12:59 AM
[No subject] - by Thala - 08-14-2005, 07:29 AM
[No subject] - by Thala - 08-14-2005, 07:56 AM
[No subject] - by narathar - 08-14-2005, 08:50 AM
[No subject] - by sinnakuddy - 08-14-2005, 09:18 AM
[No subject] - by cannon - 08-14-2005, 10:22 PM
[No subject] - by narathar - 08-14-2005, 10:32 PM
[No subject] - by Niththila - 08-14-2005, 10:42 PM
[No subject] - by vasisutha - 08-14-2005, 11:12 PM
[No subject] - by Birundan - 08-15-2005, 09:38 PM
[No subject] - by sinnakuddy - 08-15-2005, 10:59 PM
[No subject] - by Thala - 08-16-2005, 08:07 AM
[No subject] - by Niththila - 08-16-2005, 09:31 AM
[No subject] - by Thala - 08-16-2005, 09:33 AM
[No subject] - by Birundan - 08-16-2005, 01:32 PM
[No subject] - by kurukaalapoovan - 08-16-2005, 03:42 PM
[No subject] - by narathar - 08-16-2005, 03:48 PM
[No subject] - by kurukaalapoovan - 08-16-2005, 03:50 PM
[No subject] - by narathar - 08-16-2005, 04:02 PM
[No subject] - by வினித் - 08-17-2005, 06:47 PM
[No subject] - by cannon - 08-17-2005, 08:38 PM
[No subject] - by வினித் - 08-17-2005, 09:09 PM
[No subject] - by வினித் - 08-17-2005, 09:25 PM
[No subject] - by narathar - 08-18-2005, 09:05 PM
[No subject] - by narathar - 08-18-2005, 09:07 PM
[No subject] - by narathar - 08-18-2005, 09:10 PM
[No subject] - by AJeevan - 08-18-2005, 09:26 PM
[No subject] - by Thala - 08-18-2005, 09:29 PM
[No subject] - by AJeevan - 08-18-2005, 09:58 PM
[No subject] - by AJeevan - 08-19-2005, 07:46 PM
[No subject] - by AJeevan - 08-19-2005, 07:49 PM
[No subject] - by AJeevan - 08-20-2005, 09:34 PM
[No subject] - by vasisutha - 08-20-2005, 10:27 PM
[No subject] - by AJeevan - 08-20-2005, 10:52 PM
[No subject] - by Rasikai - 08-21-2005, 01:01 AM
[No subject] - by cannon - 08-21-2005, 09:41 AM
[No subject] - by Danklas - 08-21-2005, 09:50 AM
[No subject] - by sathiri - 08-21-2005, 10:00 AM
[No subject] - by Danklas - 08-21-2005, 10:10 AM
[No subject] - by Thala - 08-21-2005, 10:47 AM
[No subject] - by kuruvikal - 08-21-2005, 11:01 AM
[No subject] - by வினித் - 08-21-2005, 01:20 PM
[No subject] - by Thala - 08-21-2005, 01:41 PM
[No subject] - by eelapirean - 08-21-2005, 01:52 PM
[No subject] - by ஊமை - 08-21-2005, 02:26 PM
[No subject] - by AJeevan - 08-21-2005, 05:07 PM
[No subject] - by வினித் - 08-21-2005, 06:52 PM
[No subject] - by Vaanampaadi - 08-21-2005, 07:41 PM
[No subject] - by Thala - 08-21-2005, 07:52 PM
[No subject] - by AJeevan - 08-21-2005, 09:00 PM
[No subject] - by AJeevan - 08-21-2005, 09:08 PM
[No subject] - by cannon - 08-21-2005, 09:37 PM
[No subject] - by cannon - 08-21-2005, 10:03 PM
[No subject] - by ஊமை - 08-25-2005, 04:24 PM
[No subject] - by cannon - 08-27-2005, 11:50 AM
[No subject] - by AJeevan - 08-28-2005, 07:12 PM
[No subject] - by kurukaalapoovan - 08-28-2005, 08:18 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)