08-18-2005, 05:37 PM
திரிபுரா மாநிலத்தின் மேற்கு பகுதியில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் ஷெரீனா பேகம். கடந்த ஆண்டு இவருக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையின் கழுத்தில் நிறைய கோடுகள் இருந்தன.
வெட்டு காய தழும்பு போல அந்த கோடுகள் இருந்தன. அதை பார்த்து குழந்தையின் தாத்தா பாட்டி இருவரும் பயந்தனர்.
பழமையில் ஊறிப்போன அவர்கள் இது பற்றி ஒரு ஜோதிடரிடம் கேட்டனர். அந்த ஜோதிடர் உங்கள் பேத்தியால் குடும்பத்துக்கு தீமைகள் வரும். அந்த பெண் குழந்தையை கொன்று விடுங்கள் என்றார்.
இதை கேட்ட தாத்தா பாட்டி இருவரும் தங்கள் பேத்தியை கொல்ல முடிவு செய்தனர். நேற்று ஷெரீனா பேகம் தன் குழந்தையை வீட்டில் தூங்க வைத்து விட்டு வெளியில் சென்றிருந்தார்.
அந்த சமயத்தில் தாத்தா பாட்டி இருவரும் குழந்தையின் முகத்தில் `ஆசிட்' ஊற்றினார்கள். இதில் அந்த குழந்தை முகம் வெந்தது. சிறிது நேரத்தில் அந்த குழந்தை இறந்தது.
வீடு திரும்பிய ஷெரீனா பேகம் குழந்தை கொல்லப்பட்டதை அறிந்து அலறி கண்ணீர் விட்டார். இது பற்றி தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து தாத்தா பாட்டியை கைது செய்தனர்.

oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............