08-18-2005, 01:10 PM
முன்னம் அப்பர் சொன்னது அவங்கடை காலத்திலை ஊருக்கை லைட் இல்லையாம் இவைக்கு சைக்கிள் ஓட ஆசை ஆனா வீட்டில் அது இல்லாதபடியால் வேலைக்கு போட்டு வாற பக்கத்திவீட்டு அண்ணனின் சைக்கிளை எடுத்துத்தான் பழகுவதாம் இரவில் ஒழுங்கைகளுக்குள் ஓட ஏலாது எண்டு கிட்ட இருக்கிற சுடலைக்குள் போய்தான் ஓடிப் பழகுவார்களாம் இப்பிடித்தான் ஒருநாள் நல்ல நிலவு சைக்கிலை இரவல் வாங்கிக் கொண்டு 2பேராக சுடலைக்குப் போயிருக்கினம் 9மணியிருக்கும் அன்று பாத்து 7மணிபோலத்தான் ஒரு சவத்தைக் கொண்டு வந்து எரித்திருக்கிறார்கள் வெட்டியான் இரவெண்டபடியால் நிண்டு எரிக்காமல் போய்விட்டான் அது நெஞ்சான் கட்டை விலகி சவம் எலும்புக்கூடாக எழும்பி இருந்திருக்கு அப்பர் கொஞ்சம் பயமில்லாத ஆள் கிட்டப் போய் அதை தட்டி விழுத்தி அருகிலிருந்த விறகைப் போட்டு எரித்துவிட்டு இவை சைக்கிள் ஓடிப் பழகியிருக்கினம் 1மணித்தியாலத்தின் பின் வீடு திரும்பி இருக்கிறார்கள் வந்து பேசாமல் படுத்துவிட்டார்கள் விடிந்ததும் வீட்டிலை ஆச்சியை(அப்பாவின் அம்மா) படுக்கேலை தேடினால் காணவில்லையாம் வீடு முழுக்கத் தேடி வளவுக்குள் தேடியபோது வளவின் மூலையில் அடுக்கியிருந்த மரவள்ளிக் கட்டைக்கு மேல் ஆள் விழுந்து கிடந்திருக்கிறா. . தண்ணி தெளிச்சு ஆளை எழுப்பி ஏப்பிடி இஞ்சை வந்தனீங்கள் எண்டு கேட்டிச்சினமாம் நான் இரவு பாத்துறூம் போவமெண்டு வெளியிலை வந்தனான் அப்போ ஒரு காத்துமாதிரி ஒண்டு தள்ளிகொண்டு போச்சு வாயைதிறந்து கத்தினால் சத்தம் வெளியிலை வருகுதில்லை இஞ்சை கொண்டுவந்து போட்டதுதான் தெரியும் பிறகு என்ன நடந்ததெண்டு தெரியலை எண்டாவாம் அப்போ யாரோ சொன்னார்களாம் கெட்ட காத்து ஒண்டு வந்திருக்கு யாரைவது சுடலைக்குப் போட்டு கை கால் கழுவாமல் வந்திருக்க வேண்டும் என்று அப்பர் தான் தான் போய் வந்தது எண்டு மூச்சுகூட விடேலையாம் . . . . .
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>

