10-23-2003, 12:51 PM
தணிகை அவர்களே எங்கள் காலத்தில் தொங்கித் தான் திரியவேண்டி இருந்தது. ஏனேனில் நீங்கள் எழுதியது போல் இருக்கவில்லை. நான் உங்களை தொங்கித் திரிபவராக எழுதவில்லை. இப்படி ஒரு அசிங்கம் நடக்கின்றதே அதுவும் புனிதமான ஒரு இடத்தில் இப்படியான ஒரு சமூதாயச் சீர்கேடு நடக்கின்றதே என்று நினைத்து பக்கத்திலிருந்த வி.பு காரியலயத்திலோ அல்லது கலாச்சாரம் பேணும் குழுவிடமாவது முறையிட்டிருக்கலாமல்லவா? அதை விடுத்து அண்ணாந்து பார்த்து எச்சில் உமிழ்ந்தால் அது எமது முகத்தில் தான் வந்து விழும். ஒவ்வோருவரும் தவறுகளை பார்த்து விட்டு சும்மாயிருந்தால் அவை திருந்துவது, திருத்துவது எப்போது. வேறு ஒரு இடத்தில் என்றால் பரவாயில்லை. தாங்கள் குறிப்பிட்ட இடம் ஒரு சமுகத்தின் கலாச்சார மையமாகத் திகழும் ஒரு புனித இடம் என்பதனாலேயே வேதனைப்பட்டு எழுதினேன்.
அன்புடன்
சீலன்.
அன்புடன்
சீலன்.
seelan

