08-17-2005, 06:47 PM
கதிர்காமர் கொலை உள்வீட்டு வேலையே?
[புதன்கிழமை, 17 ஓகஸ்ட் 2005, 23:26 ஈழம்] [கொழும்பு நிருபர்]
கதிர்காமரின் கொலையுடன் புலிகளைச் சம்பந்தப்படுத்த சிறீலங்கா அரசு முயன்று வரும் இவ்வேளையில், கதிர்காமரின் கொலை தொடர்பாக புதிதாகக் கிடைத்திருக்கும் தகவல்கள் உள்வீட்டு விவகாரமே இக்கொலையா என்ற சந்தேகத்தைப் பலமாக ஏற்படுத்தியிருக்கிறது.
கதிர்காமரின் கொலையாளிகள் தங்கியிருந்த இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சிகரட் துண்டு மரபணுப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ள இவ்வேளையில், விடுதலைப் புலிகள் இயக்கப் போராளிகள் புகைப்பிடிக்காதவர்கள் என்பதை நோக்கும் கொழும்பு ஊடகவியலாளர்கள் இக் கொலைக்கான சில வேறு சந்தேகங்களையும் இதனுடன் இணைத்துள்ளனர்.
குறிப்பாக, ஊடகவியலாளர் சிவராம் படுகொலை செய்யப்பட்ட போது அச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் பம்பலப்பிட்டிப் பொலிஸ் நிலையத்தின் முன்பாகவே அவருக்காகக் காத்திருந்ததோடு, மிகவும் பாதுகாப்பான பிரதேசமும், உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் அடக்கும் பிரதேசமுமான பாராளுமன்றத்திற்கு அண்மையில் வைத்து அவரைக் கொலை செய்த பின்னர் அவரது உடலைப் போட்டுவிட்டு வருமளவிற்கு அவர்களிற்கு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருந்தன.
எனினும் சிவராமின் தொலைபேசியின் சிம் அட்டையை கொலைக்காகப் பயன்படுத்தப்பட்ட குற்றவாளிகளில் ஒருவர் தனிப்பட்ட பாவனைக்கான அற்ப ஆசையில் வைத்திருந்த காரணத்தினாலேயே இக் கொலையில் அவர்கள் சிக்க நேர்ந்தது. அதில் கூட கொலைக்கான வலைப்பின்னல் மறைக்கப்பட்டிருந்தாலும், தற்போதைய அரசுடன் தொடர்புடைய அரசியல்வாதியொருவரின் பங்கு குறித்துப் பிரஸ்தாபிக்கப்பட்டிருந்தது.
அதேபோல, அடுத்த அரசுத் தலைவருக்கான வேட்பாளராக தற்போதைய பிரதமர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த பிரதமராகும் வாய்ப்பு யாருக்கிருக்கிறது என்ற ஹேஸ்யங்களின் மத்தியிலேயே இக் கொலை இடம்பெற்றிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது. கடந்த காலத்தில் கதிர்காமரை பிரதமராக நியமிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட போது மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட ஆளும்கட்சியின் பெரும்பாலான அரசியல்தலைவர்களும் ஜே.வி.பி.யும் இதற்கு பூரண எதிர்ப்புத் தெரிவித்து அந்த வாய்ப்பை கதிர்காமருக்கு வழங்க மறுத்திருந்தன.
எனவே பிரபல்யமான அரசியற் குடும்பமொன்றின் ஆண் வாரிசு பிரதமராகலாம் என்று கணிக்கப்பட்ட போதிலும் அவர் நிதானமில்லாத நடவடிக்கைகளில் பலதடவைகள் முன்னரே ஈடுபட்டிருந்தார் என்ற காரணத்தினால் அவர் தவிர்க்கப்படலாம் என்ற நிலை இருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக, இந்தியாவின் மும்பை நகரில் பல ஆண்டுகளிற்கு முன்பு ஆடைகள் ஏதுமின்றி மதுபோதையில் ஒரு நபர் தெருவில் சென்ற போது கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்ட போது, அவர் சிறீலங்காவின் பிரபல்யமான அரசியற் குடும்பமொன்றைச் சார்ந்தவர் என்ற காரணத்தினால் விசாரணைகள் ஏதுமின்றி தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தார்.
எனவே கதிர்காமர் மீதே இனவாதத்தைப் பிரயோகித்த இந்த அரசின் அரசியல்வாதிகள் எவ்வளவு தூரம் நம்பிக்கையானர்கள் என்பது சந்தேகக் கண்கொண்டு பார்க்கப்பட வேண்டிய ஒரு விவகாரமாகச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, இன்று ஊடகமொன்றிற்குப் பேட்டியளித்த தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியற் பொறுப்பாளரின் கூற்றுக்களும், கதிர்காமரின் கொலை உள்வீட்டு வேலையாக இருக்கலாம் என்பதற்காகத் தெரிவித்த ஆதாரங்களும் கனதியானவை என்றும், சிறீலங்காவின் நீதித்துறை குற்றவாளிகளைக் கண்டறிய வேண்டும் என்ற வேண்டுகோள் அலட்சியப்படுத்தக்கூடியதொன்றல்ல என்றும் கொழும்பு ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>