10-23-2003, 09:30 AM
இதுவரையிருந்த பகை களைந்து இணைவோம்.
'தமிழ் இனிச்சாகாது
தமிழை நாமினிச்சாகவிடோம்"
தத்துவங்கள் பேசினோம்.
தனியாக , குழுக்களாக
மேடைகள் வைத்தோம்.
மெய்சிலிர்க்கப் புல்லரிக்க
புவியில் நம்மைவிட ஒருசாதி
இல்லையென்றுகூட இறுமாந்திருந்தோம்.
ஆரம்பம் அச்சாவாய்த்தான்
ஆரம்பித்தோம்.
சகோதரத்துவம் , சமத்துவம்
சமவுரிமை , தேசியம்
எல்லாமே அச்சாதான்.
ஒலிவாங்கிகள் கைகளில் வந்தது
'தமிழில் ஒலிபரப்பு" தரணியில்
நம்மைப்போல் துள்ளியோர் யாருமிலர்.
ஒன்றாய்ச் சேர்ந்து நிகழ்ச்சிகள்
ஒருவருக்கொருவர் துணையாய்
புலத்தார் பலத்தில்
வானலைகள் வண்ணஆடை கட்டிக்கொண்டது.
மனம் பொங்கிய மகிழ்வில்
மறந்திருந்த தமிழர் திருநாளெல்லாம்
நினைவிறங்கி வந்தன.
பொங்கலை வரவேற்றுப் பொங்கினோம் படைத்தோம்
தீபாவழியை வரவேற்றுப் பட்டாடையுடுத்தோம்
பலகாரங்கள் பரிமாறினோம்
முகம்தெரியாதோரோடெல்லாம்
வாழ்த்துக்கள் வாங்கினோம்.
வானலையில் விரும்பிய பாடல் கேட்டோம்
தானென்ற ஆணவம் இல்லையப்போ
தாழ்ந்தோர் , உயர்ந்தோர்
பேதங்களில்லாமல் மகிழ்ந்தோம்.
தாயகச்செய்திகள் , தமிழரின் கறைபடிந்த
நினைவுகள் சோகம் , துயர்
எல்லாவற்றையுமே எல்லோருமே பகிர்ந்து கொண்டோம்.
பிரியமான அறிவிப்பாளருக்குப் பிறந்தநாள் , திருமணநாள்
பிள்ளையின் பிறந்த நாளெல்லாம் நினைவில் வைத்து
வாழ்த்துக்கள் அனுப்பினோம்
வீட்டில் ஒரு உறவாய் நெஞ்சுகளில்
இடம்கொடுத்தோம்.
இப்போது நினைத்தாலும்
வலிக்கிறது.
வங்கிகளில் கடனெடுத்து வானொலி வளர்த்தோர்
சுமைகுறைத்து வீட்டுத்தேவைக்காயிருந்த நோட்டுகளையெல்லாம்
நேயர்மன்றங்களுக்காகச் செலவழித்து
வர்த்தகர்கள் வாசலில் உதவிகேட்டு
வாசல்விட்டிறங்கி நகரில் உள்ளோரிடமெல்லாம்
பிறந்தநாள் வாழ்த்துக்கள் , மரண அறிவித்தல்கள்
கொண்டாட்டங்களின் விளம்பரங்கள் சேர்த்துச்
சொந்தப்பணத்தில் தொலைநகலனுப்பி
ஊடக உயர்விற்காய் உளைத்தோர் தொகைபெரிது.
பொதுநலமாய் நினைத்து ஊடகவளர்ச்சியில்
உதவியோர் முகங்கள் எத்தனையோ
எல்லாம் மறந்து உளைத்தோரெல்லோரையும்
இடையில் வந்தோருக்காய் உதறித்தள்ளி
ஒலிவாங்கிப்பலம் உரைத்து
உண்மையாயிருந்தோரையெல்லாம்
ஒவ்வொருவராய்க் கலைத்தோம்.
ஒருவரின் வளர்ச்சியை உளக்கியடிப்பதில்
கண்ணாய் , கவனமாய் ஒலிவாங்கிகள் பலம் சேர்த்தன.
படைத்தவர் அனுமதியின்றி அவர் படைப்பைச் சிதைத்து
பாவத்தைப் படைப்பாளிமேல் சுமத்தி
நியாயம் தரோம் முடிந்தால் முன்னேறிப்பார்
சவால்விட்டுச் சாணக்கியர்களாய்.....
ஊடகத்தலைமையே உதவியாய்.....
உதவிக்குப் பரிசாய் துரோகிகள்
பட்டமும் கொடுத்துத் து}ரவிலக்கினோம்.
'என்னைவிட யாரிங்கு"
ஆணவம் தலையெடுத்து ஆளுக்கொரு கட்சி.
ஆளுக்கொரு நேயர் வட்டம்.
முகம்தெரியாதோரெல்லாம் மோதுப்பட்டு
யாருக்காகவோவெல்லாம் சண்டைகள் செய்து
மிஞ்சியது ?????
உண்மை , நியாயம் சாகக்கூடாது
அதை நிலைநாட்டுவோம் என்ற நல்லவர்க்கெல்லாம்
சொல்லடிகளும் , வசவுகளும் பரிசாய்க்கிடைத்தது.
தன்குடும்பம் மறந்து , தன்வீடு மறந்து
ஊடகம் வளரத் தேய்ந்தோரெல்லாம்
வீட்டு மூலைகளுக்குள் முடங்கிப்போகும் வண்ணம்
சாட்டைகள் விழாக்குறை மற்றப்படி எல்லாம்
நன்றே நடந்தது.
புதியதோர் உலகம் செய்வோமென
எழுந்த தலைமுறை தன்னைப் பூட்டிக்கொண்டது
புதிதுக்கும் பழசுக்கும் நடுவில்
நின்ற குழு பாதையை மாற்றிக் கொண்டது.
முதியோர்கள் , குழந்தைகள் முகங்கள்
புரியாது விழித்துக் கொண்டது.
ஒன்றாயிருந்த பலம் சிதறிப் பலவாகி
ஆளுக்கொரு வானொலி , தொலைக்காட்சி
அரசியல்க்கட்சிகள் போல்.....
நாளுக்கொரு ஊடகம்.....
இதிலும் நன்மைகள் நிறையவே
நானென்ற ஆணவம் இடிந்து
உலகு நீண்டது - அதில்
உண்மை நிலைக்கும் என்பது
பலருக்கு உறைக்கிறது இப்போது.
எங்களது உளைப்பை யாரோ நுகர நாங்கள்
கொடுப்போராய் இன்னும்.....
திருந்துவதாய் எண்ணமின்றி.....
இன்னும் தத்துவங்களோடு மட்டும்....
'சேர்ந்தால் சிறப்போம் சேருங்கள்"
அயலானை அழைப்பதிலே கவனமாக.....
நான் சேர்ந்து மற்றவரை அணைத்தாலல்லவா
சிறப்பு வரும்.
இதைப்புரியாமல் இன்னும்
சாயங்களோடு எத்தனை காலம்
சமாளிப்பதாம்.....?
ஊடகங்கள் மலிந்து போய்
எதைக்கேட்க , எதைப்பார்க்க
எதுவும் வேண்டாம் என்கிறார் பலரிப்போ - இல்லை
ஊடகங்கள் வேண்டும்
இக்கால விஞ்ஞானத்தோடு ஒட்ட வேண்டும்
எங்களைத்தாண்டியொரு தலைமுறை
எங்கள் கருவறைகளிலிருந்து தளைத்து மரமாகிறது
அவை விழுதாகி வேரூன்றி - எம்
அடையாளம் எழுத
இதுவரையிருந்த பகைகளைந்து
இணைவோம்.
22.10.03.
'தமிழ் இனிச்சாகாது
தமிழை நாமினிச்சாகவிடோம்"
தத்துவங்கள் பேசினோம்.
தனியாக , குழுக்களாக
மேடைகள் வைத்தோம்.
மெய்சிலிர்க்கப் புல்லரிக்க
புவியில் நம்மைவிட ஒருசாதி
இல்லையென்றுகூட இறுமாந்திருந்தோம்.
ஆரம்பம் அச்சாவாய்த்தான்
ஆரம்பித்தோம்.
சகோதரத்துவம் , சமத்துவம்
சமவுரிமை , தேசியம்
எல்லாமே அச்சாதான்.
ஒலிவாங்கிகள் கைகளில் வந்தது
'தமிழில் ஒலிபரப்பு" தரணியில்
நம்மைப்போல் துள்ளியோர் யாருமிலர்.
ஒன்றாய்ச் சேர்ந்து நிகழ்ச்சிகள்
ஒருவருக்கொருவர் துணையாய்
புலத்தார் பலத்தில்
வானலைகள் வண்ணஆடை கட்டிக்கொண்டது.
மனம் பொங்கிய மகிழ்வில்
மறந்திருந்த தமிழர் திருநாளெல்லாம்
நினைவிறங்கி வந்தன.
பொங்கலை வரவேற்றுப் பொங்கினோம் படைத்தோம்
தீபாவழியை வரவேற்றுப் பட்டாடையுடுத்தோம்
பலகாரங்கள் பரிமாறினோம்
முகம்தெரியாதோரோடெல்லாம்
வாழ்த்துக்கள் வாங்கினோம்.
வானலையில் விரும்பிய பாடல் கேட்டோம்
தானென்ற ஆணவம் இல்லையப்போ
தாழ்ந்தோர் , உயர்ந்தோர்
பேதங்களில்லாமல் மகிழ்ந்தோம்.
தாயகச்செய்திகள் , தமிழரின் கறைபடிந்த
நினைவுகள் சோகம் , துயர்
எல்லாவற்றையுமே எல்லோருமே பகிர்ந்து கொண்டோம்.
பிரியமான அறிவிப்பாளருக்குப் பிறந்தநாள் , திருமணநாள்
பிள்ளையின் பிறந்த நாளெல்லாம் நினைவில் வைத்து
வாழ்த்துக்கள் அனுப்பினோம்
வீட்டில் ஒரு உறவாய் நெஞ்சுகளில்
இடம்கொடுத்தோம்.
இப்போது நினைத்தாலும்
வலிக்கிறது.
வங்கிகளில் கடனெடுத்து வானொலி வளர்த்தோர்
சுமைகுறைத்து வீட்டுத்தேவைக்காயிருந்த நோட்டுகளையெல்லாம்
நேயர்மன்றங்களுக்காகச் செலவழித்து
வர்த்தகர்கள் வாசலில் உதவிகேட்டு
வாசல்விட்டிறங்கி நகரில் உள்ளோரிடமெல்லாம்
பிறந்தநாள் வாழ்த்துக்கள் , மரண அறிவித்தல்கள்
கொண்டாட்டங்களின் விளம்பரங்கள் சேர்த்துச்
சொந்தப்பணத்தில் தொலைநகலனுப்பி
ஊடக உயர்விற்காய் உளைத்தோர் தொகைபெரிது.
பொதுநலமாய் நினைத்து ஊடகவளர்ச்சியில்
உதவியோர் முகங்கள் எத்தனையோ
எல்லாம் மறந்து உளைத்தோரெல்லோரையும்
இடையில் வந்தோருக்காய் உதறித்தள்ளி
ஒலிவாங்கிப்பலம் உரைத்து
உண்மையாயிருந்தோரையெல்லாம்
ஒவ்வொருவராய்க் கலைத்தோம்.
ஒருவரின் வளர்ச்சியை உளக்கியடிப்பதில்
கண்ணாய் , கவனமாய் ஒலிவாங்கிகள் பலம் சேர்த்தன.
படைத்தவர் அனுமதியின்றி அவர் படைப்பைச் சிதைத்து
பாவத்தைப் படைப்பாளிமேல் சுமத்தி
நியாயம் தரோம் முடிந்தால் முன்னேறிப்பார்
சவால்விட்டுச் சாணக்கியர்களாய்.....
ஊடகத்தலைமையே உதவியாய்.....
உதவிக்குப் பரிசாய் துரோகிகள்
பட்டமும் கொடுத்துத் து}ரவிலக்கினோம்.
'என்னைவிட யாரிங்கு"
ஆணவம் தலையெடுத்து ஆளுக்கொரு கட்சி.
ஆளுக்கொரு நேயர் வட்டம்.
முகம்தெரியாதோரெல்லாம் மோதுப்பட்டு
யாருக்காகவோவெல்லாம் சண்டைகள் செய்து
மிஞ்சியது ?????
உண்மை , நியாயம் சாகக்கூடாது
அதை நிலைநாட்டுவோம் என்ற நல்லவர்க்கெல்லாம்
சொல்லடிகளும் , வசவுகளும் பரிசாய்க்கிடைத்தது.
தன்குடும்பம் மறந்து , தன்வீடு மறந்து
ஊடகம் வளரத் தேய்ந்தோரெல்லாம்
வீட்டு மூலைகளுக்குள் முடங்கிப்போகும் வண்ணம்
சாட்டைகள் விழாக்குறை மற்றப்படி எல்லாம்
நன்றே நடந்தது.
புதியதோர் உலகம் செய்வோமென
எழுந்த தலைமுறை தன்னைப் பூட்டிக்கொண்டது
புதிதுக்கும் பழசுக்கும் நடுவில்
நின்ற குழு பாதையை மாற்றிக் கொண்டது.
முதியோர்கள் , குழந்தைகள் முகங்கள்
புரியாது விழித்துக் கொண்டது.
ஒன்றாயிருந்த பலம் சிதறிப் பலவாகி
ஆளுக்கொரு வானொலி , தொலைக்காட்சி
அரசியல்க்கட்சிகள் போல்.....
நாளுக்கொரு ஊடகம்.....
இதிலும் நன்மைகள் நிறையவே
நானென்ற ஆணவம் இடிந்து
உலகு நீண்டது - அதில்
உண்மை நிலைக்கும் என்பது
பலருக்கு உறைக்கிறது இப்போது.
எங்களது உளைப்பை யாரோ நுகர நாங்கள்
கொடுப்போராய் இன்னும்.....
திருந்துவதாய் எண்ணமின்றி.....
இன்னும் தத்துவங்களோடு மட்டும்....
'சேர்ந்தால் சிறப்போம் சேருங்கள்"
அயலானை அழைப்பதிலே கவனமாக.....
நான் சேர்ந்து மற்றவரை அணைத்தாலல்லவா
சிறப்பு வரும்.
இதைப்புரியாமல் இன்னும்
சாயங்களோடு எத்தனை காலம்
சமாளிப்பதாம்.....?
ஊடகங்கள் மலிந்து போய்
எதைக்கேட்க , எதைப்பார்க்க
எதுவும் வேண்டாம் என்கிறார் பலரிப்போ - இல்லை
ஊடகங்கள் வேண்டும்
இக்கால விஞ்ஞானத்தோடு ஒட்ட வேண்டும்
எங்களைத்தாண்டியொரு தலைமுறை
எங்கள் கருவறைகளிலிருந்து தளைத்து மரமாகிறது
அவை விழுதாகி வேரூன்றி - எம்
அடையாளம் எழுத
இதுவரையிருந்த பகைகளைந்து
இணைவோம்.
22.10.03.
+++++ ++++
http://uyirvaasam.blogspot.com
http://uyirvaasam.blogspot.com

