![]() |
|
ஊடகம் அவசியமா / அவசியமற்றதா? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21) +--- Thread: ஊடகம் அவசியமா / அவசியமற்றதா? (/showthread.php?tid=7961) Pages:
1
2
|
ஊடகம் அவசியமா / அவசியம - sandiya - 10-20-2003 <b>Media is wanted or unwanted *** [b]திருத்தம்:</b> ஊடகம் அவசியமா அல்லது அவசியமற்றதா? ----------------------------------- தமிழில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தயவுசெய்து தமிழில் எழுதுக. நன்றி! வலையில் கலைஞன் [b]வலைஞன் *** - kuruvikal - 10-20-2003 but Title in English is definitely unwanted here....please...write in annaith thamizh. - sOliyAn - 10-20-2003 u mean multi media player? :wink: - sandiya - 10-21-2003 Media means Radio and TV ..... *** <b>¾¢Õò¾õ:</b> அதாவது, ஊடகம் எனக் கருதுவது வானொலி, தொலைக்காட்சி போன்றன ..... ---------------------------------- ¾Á¢Æ¢ø Á¡üÈõ ¦ºöÂôÀðÎûÇÐ. ¾ÂצºöÐ ¾Á¢Æ¢ø ±ØÐ¸. ¿ýÈ¢! வலையில் கலைஞன் [b]வலைஞன் *** - shanthy - 10-21-2003 :roll: - Mathivathanan - 10-21-2003 பரவாயில்லை.. புலத்துக்கு வந்ததாலை சரியோ பிழையோ உங்களுக்கும் கொஞ்சம் இங்கிலிப்பீசு எழுத வருகுது குருவியாரே.. அதற்கு பாராட்டத்தான்வேணும். ஏதோ அன்னைத் தமிழ் எண்டு நீங்கள் இங்கிலிப்பீசு எழுதினதைச் சொல்லுறன்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- sandiya - 10-21-2003 திருத்தத்தை தவிர்த்து உங்கள் கருத்துக்களை கூறவும் ! - இளைஞன் - 10-21-2003 வணக்கம் சந்தியா அவர்களே... நல்லதொரு தலைப்பு. முதலில் நன்றிகள். ஊடகம் என்பதன் கீழ் குறிப்பிட்டது வானொலி, தொலைக்காட்சி ஆகியனவாகும். நீங்கள் இவ்விரண்டையுந்தான் கருதுகிறீர்களா? அதிலும் குறிப்பாக புலம்பெயர்ந்த மண்ணில் உருவாகியிருக்கும், தமிழ்த் தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளைக் குறிப்பிடுகிறீர்களா? அல்லது பொதுவாக உலக ஊடகங்களைக் குறிப்பிடுகிறீர்களா? வானொலி, தொலைக்காட்சி தவிர்த்து இணையம், சஞ்சிகைகள் போன்றனவும் அடங்கும்தானே? இத்தனை கேள்விகளைக் கேட்டதற்கு மன்னிக்க. உங்கள் கேள்வியின் நோக்கம் புரிந்தால்தானே என்னாலும் நானறிந்த கருத்தினை அறியத் தரமுடியும். விரைவில் உங்கள் பதில் கண்டு மிகுதி... - sandiya - 10-21-2003 நான் கூயியது என்னவேன்றால் புலம்பெயர்ந்த மண்ணில் உருவாகியிருக்கும் தமிழ்த் தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகள் அவசியமா அல்லது அவசியமற்றதா ? - இளைஞன் - 10-21-2003 அதானே பார்த்தேன்! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->புலம்பெயர்ந்த மண்ணில் தமிழ்த் தகவல் மற்றும் தொடர்பு ஊடகங்கள் அவசியம் என்பது எனது கருத்து. எவ்வளவுதான் அவர்களுக்குள் போட்டிகள், பொறாமைகள், பிரச்சினைகள் எல்லாமும் இருப்பினும் ஊடகங்கள் ஒரு இனத்தின் வளர்ச்சிக்கு அல்லது முன்னேற்றத்திற்கு அவசியமானது. விரிவாக எழுத நேரம் ஒத்துழைக்கவில்லை. இருப்பினும் சுருக்கமாக சில பதில்கள்: 1. இனவொருமைப்பாடு 2. தகவல் பரிமாற்றம் 3. கலை, மொழி, பண்பாடு, தேசியம் வளர்த்தல். 4. உறவுப்பாலம் 5. உலகத்தரத்திற்கு உயர்தல் முடிந்தால் மிகுதி பிறகு விளக்கமாக. - sandiya - 10-21-2003 தாங்கள் பயமின்றி எல்லா கருத்தையும் கூறலாம்! - Mathivathanan - 10-21-2003 உங்கள் இராச்சியம்தானே.. நடக்கட்டும். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- ganesh - 10-21-2003 ஊடகம் எத்தனையும் வரலாம் மிகவும் நல்லது வரவேற்கத்தக்கது ஆனால் ஜரோப்பிய நாடுகளில் அநேகமான ஊடகங்கள் பொருளாதாரத்திற்காக மக்களை நம்பிவேண்டியிருக்கவேண்டியுள்ளது மக்களும் எந்தவானொலிக்கு உதவிவழங்குவது? இரண்டொரு வானொலி இருந்தால் அவர்கள் வர்த்தக ஸ்தாபனங்களின் உதவியுடன் மக்களின் உதவியின்றி வெற்றிகரமாக நடாத்த முடியும் அத்துடன் இவ் ஊடகங்களுக்கு வழங்கும் நிதியை எமதுநாட்டில் கஸ்டப்படுவோருக்கு உதவிசெய்யலாம் ஆனால் இங்கு நடப்பது என்ன? சிறிய பிரச்சனை என்றால் பேசித்தீர்க்காமல் பிரிந்துசென்று புதிய வானொலியை ஆரம்பிக்கிறார்கள் சில காலம் சென்றபின் பொருளாதாரப்பிரச்சனை என்கிறார்கள் இவைகள் எல்லாம் தேவைதானா எத்தனையோ அறிவிப்பாளர்கள் சம்பளம் இன்றி வேலை செய்கிறார்கள் ஆனால் இவர்கள் வேறு இடத்தில் வேலை செய்தால் எவ்வளவோ சம்பாதிப்பார்கள் இவற்ளுக்கெல்லாம் என்ன காரணம் நம்மக்களுக்குள் இல்லாத ஒற்றுமையின்மையே தற்போது வந்துள்ள புதிய தொலைக்காட்சியை பாருங்கள் இலவசம்? நம்புவீர்களா நீங்கள் அவர்களின் தொலைபேசி அட்டையைப்பயன் படுத்தியே அவர்களின் நிகழ்ச்pயில் பங்குகொள்ள அல்லது மின்கடிதம் அனுப்பமுடியும் ஆகவே நமது ஊடகங்கள் நமக்கு நன்மையல்ல தரமான நடுநிலையான ஊடகங்கள் வரவேண்டும் அதனைவரவேற்போம் - sandiya - 10-21-2003 தமிழினம் எந்த காலகட்டத்திலாவது ஒற்றுமைபட்டிருந்தாக எனக்கு தெரிந்தளவில் சரித்திரம் உள்ளதாக இல்லையே? - mohamed - 10-21-2003 என்ன புது றேடியோ தொடங்கிற பிளானே? கடன் கேட்காமல் சொந்தக் காசிலை தொடங்கினா நல்லது. மற்றது ஒரு ஐடியா? இந்த ஊடகம் தொடங்கிற ஆக்கள் முதலிலை ஒரு கோயிலை தொடங்கி அந்த வருமானத்திலை ஊடகம் நடாத்தலாம் தானே? அண்மையில் ஒரு கோயில் வருமானத்தை கேள்விப்பட்டு சொன்ன கதை! நொந்துபோன பணிப்பாளர்கள் கவனிக்கவும்! - poorukki - 10-21-2003 தமிழன் நல்லா நோகாமல் நொங்கெடுப்பான் ! - sOliyAn - 10-21-2003 கீழே உள்ள கருத்து சிலவருடங்களுக்கு முன் எழுதியது.. அது இன்றும் பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன். மேலும் கருத்துகளை பார்த்து தொடருவோம்!! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->எல்லோரும் சந்தோசப்படக் கூடியவகையில் கடந்த சில வருடங்களின் முன்னால் தமிழ் வானொலிகளின் வருகை நிகழ்ந்தது. புலம்பெயர் நாடுகளில் தமிழ் இனி மெல்லமெல்லச் சாகும் என்று பல தமிழ் அறிஞர்கள் கூறியவற்றை, இவ் வானொலிகள் தகர்த்தெறிந்து, அவர்களையும் வியப்புற வைத்தன. இலைமறை காயாக இருந்த எத்தனையோ கலைஞர்களும், கவிஞர்களும் வெளிச்சத்துக்கு வந்தார்கள். எத்தனையோ தமிழ்ச் சிறார்கள் தமது தமிழறிவை ஏனைய சிறார்களுடன் பகிர்ந்து, அவர்களையும் தமிழின் பக்கமாகத் திரும்ப வைத்தார்கள். பலரது அறிவுபூர்வமான கருத்துகள் ஒன்றாகச் சங்கமித்து, நல்லன எமது சமூகத்துள் விளையவேண்டும் என்ற ஆர்வத்தையும் துாண்டுதல்களையும் வானலைகளில் விதைத்து நின்றன. ஆகவே, தமிழ் வானொலியின் வருகையால் புலம்பெயர் தமிழினமானது எதிர்காலம்பற்றிய அச்சம் குறைந்து மனமகிழ்வெய்திய வேளையில்தான் எமது இனத்துக்கே உரித்தான சாபக்கேடான பல விடயங்கள் அரங்கேறின. ஒரே குடும்பம் என்றும், தொப்புள்கொடி உறவுகளென்றும், ஒரே இனமென்றும் வார்த்தைக்கு வார்த்தை முழங்கிய வானொலிகளுக்குள் பிரிவுகள் முளைத்தன. வானலைகளிலே நேயர்களுடன் ஐக்கியமான பல குரல்கள் தலைமறைவாகின. தமிழ்ச் சிறார்களை தாயன்புடன் அரவணைத்த குரல்கள் திடீரென மாயமாகி, அந்தக் குழந்தைகளின் பிஞ்சுமனங்களிலே ஏக்கத்தை விதைத்தன. ஒரே குடும்பம், உறவுகள் என்றெல்லாம் கூறிய வானொலிப் பாசைகள் பொய்த்துப்போயின. நேயர்களிடையே இரசிப்புப் பிரிவினைகள் தோன்றின. வானொலிகள் பெருகப்பெருக நேயர்களாகிய தமிழ் மக்களிடையே குழுக்களாகும் பிரிவினைகள் அதிகரித்து, இன்று புலம்பெயர் தமிழ்மக்கள் 'இன்ன வானொலி இரசிகர்" என்ற கோதாவில் இறங்கி தொலைபேசியில் மனம்போனபோக்கில் வார்த்தைகளைக் கக்கி மகிழ்வதையும், இனஒற்றுமை உணர்வு உருக்குலைவதையுமே தற்போது காணக்கூடியதாக உள்ளது. எல்லோரும் திறமை உள்ளவராக வளரவேண்டும் என்கிறார்கள். எல்லோரும் திறமை உள்ளவர்களாக வளர்ந்தால்தான் அந்த சமூகம் முன்னேற்றமடையும் என்கிறார்கள். இது தமிழ் மேடைகளிலும் வான் அலைகளிலும் வெகு வீரியமாகவே நிகழ்ந்து கொண்டிருக்கிற சமாச்சாரம். ஆனால், 'இவை வெறும் உதட்டளவில் எழும் சுலோகங்கள்" என்றே எண்ணத் தோன்றுகிறது. தினம்தினம் நிகழும் வானொலிச் சங்கதிகளைக் கேள்வியுறும்போது இவ்வாறுதான் எண்ணத் தோன்றுகிறது. வெறும் ஒற்றுமையும், இன உணர்வும், நாட்டுப்பற்றும் தமிழ் மக்களைக் கவரப் பிரயோகிக்கப்படும் வார்த்தை ஜாலங்கள் என்ற எண்ணம், குறிப்பாக வானொலிகளின் போக்குகளையும் தடுமாற்றங்களையும் அவதானிக்கும்போது நியாயமானது என்றே தோன்றுகிறது. எங்கே நியாயம் இருக்கிறது? எங்கே அநியாயம் நிகழ்கிறது? எங்கே நிறை உண்டு? எங்கே குறை குறுக்கிடுகிறது? இவ்வாறான கேள்விகளைக் கேட்க விடாதவாறு, இந்த விடுதலை, ஒற்றுமை, இன உணர்வு, நாட்டுப்பற்று என்ற பதங்கள் புலம்பெயர் தமிழர்கள் பலரையும் அமுக்கிக் கட்டிப்போடுகின்றனவோ என்ற நியாயமான சிந்தனைச் சீண்டல்கள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாமல் உள்ளது. புலம்பெயர் மக்களின் துயர்களுடனும், பாசப் பிணைப்புகளுடனும், மனிதாபிமானத்துடனும் சில சுயநலவாதிகள் விளையாடி, தமது நலன்களைப் பேணுவதையும், அதற்கு எம்மவர்கள் பலர் கண்மூடித்தனமாகப் பின்னின்று தோள்கொடுத்து ஆலவட்டம் பிடித்து, அவர்களை யுகபுருசர்களாக்க முயல்வதையும் பார்க்கும்போது, புலம்பெயர் தமிழ் சமூகம் எங்கே சென்று கொண்டிருக்கிறது என்ற பயம்கலந்த கேள்வி எழுவது தவிர்க்கமுடியாததாகிறது. தங்களுக்குள் ஒற்றுமையைக் கடைப்பிடிக்க இயலாமல், புதுப்புதுப் பெயர்களுடன் பிரிவடையும் வானொலிகள், தமது நேயர்களுக்கு எவ்வாறான ஒற்றுமை உணர்வைப் போதிக்கின்றன? இன ஒற்றுமை உணர்வையா? அல்லது தம்மைவிட்டு விலகிச் செல்லாத ஒற்றுமை உணர்வையா? அரிசி வியாபாரம் தெரிந்தவன் அரிசி வியாபாரம் ஆரம்பிப்பதில் தவறில்லைத்தான். ஆனால், ஏற்கெனவே பல அரிசிக் கடைகள் இருக்கும்போது புதிதாக ஒரு அரிசிக்கடை ஆரம்பிப்பதால், யாருக்கு என்ன இலாபம்?! இதனால் ஏற்கெனவே உள்ள அரிசி வியாபாரிகளும் புதிதாக வியாபாரம் ஆரம்பிப்பவரும் நட்டமடைவது அல்லது அவர்களின் உழைப்பிற்கான பலன் சுருங்குவதுதானே சாத்தியமான விளைவாக அமையும். ஆகவே, அரிசி வியாபாரம் புதிதாக ஆரம்பிப்பவர், ஏற்கனவே அரிசி வியாபாரம் செய்பவருடன் கூட்டாக வியாபாரத்தை நடாத்த முற்பட்டால், வியாபாரம் மேலும் புது உத்வேகத்துடன் வளர்ச்சி அடையும் என்பதை ஏன்தான் எம்முள் இருக்கும் திறமையான வியாபாரிகள் நினைக்கத் தவறுகிறார்களோ தெரியவில்லை. ஒற்றுமையைப் பற்றியும் சமூக மேம்பாட்டைப்பற்றியும் மூச்சுக்கு முந்நுாறு தடவை பேசுபவர்கள், தம்மைப் பொறுத்தளவில் இவைகளின் பக்கம் திரும்பிப் பாராததையும், இப்படியான போக்குகளை கண்மூடித்தனமாக வரவேற்கும் நேயர் நெஞ்சங்களையும் அவதானிக்கும்போது, எமது புலம்பெயர் தமிழ்ச் சமூகமானது அன்றும் இன்றும் தனக்கேயுரிய பிற்போக்கான பாதையிலேயே செல்கிறது என்றே கூறத் தோன்றுகிறது. - ganesh - 10-21-2003 ஏன் வானொலி அறிவிப்பாளர்கள் வானொலி விட்டு வானொலி மாறுகிறார்கள் இந்த அறிவிப்பாளர்களுக்காhக எத்தனையோவானொலி ரசிகர்கள் பிரிந்துஉள்ளார்கள ஆனால் அறிவிப்பாளளர்களோ இயக்குனர்களோ இன்று இங்கு இருப்பார்கள் நாளை அங்கு இருப்பார்கள் இவர்களை எப்படி மக்களால் நம்பமுடியும் - ganesh - 10-21-2003 புலம்பெயர் ஊடகங்கள் என்ற தலைப்பின் கீழும் கருத்துக்கள் வைக்கப்பட்டுள்ளன - shanthy - 10-23-2003 இதுவரையிருந்த பகை களைந்து இணைவோம். 'தமிழ் இனிச்சாகாது தமிழை நாமினிச்சாகவிடோம்" தத்துவங்கள் பேசினோம். தனியாக , குழுக்களாக மேடைகள் வைத்தோம். மெய்சிலிர்க்கப் புல்லரிக்க புவியில் நம்மைவிட ஒருசாதி இல்லையென்றுகூட இறுமாந்திருந்தோம். ஆரம்பம் அச்சாவாய்த்தான் ஆரம்பித்தோம். சகோதரத்துவம் , சமத்துவம் சமவுரிமை , தேசியம் எல்லாமே அச்சாதான். ஒலிவாங்கிகள் கைகளில் வந்தது 'தமிழில் ஒலிபரப்பு" தரணியில் நம்மைப்போல் துள்ளியோர் யாருமிலர். ஒன்றாய்ச் சேர்ந்து நிகழ்ச்சிகள் ஒருவருக்கொருவர் துணையாய் புலத்தார் பலத்தில் வானலைகள் வண்ணஆடை கட்டிக்கொண்டது. மனம் பொங்கிய மகிழ்வில் மறந்திருந்த தமிழர் திருநாளெல்லாம் நினைவிறங்கி வந்தன. பொங்கலை வரவேற்றுப் பொங்கினோம் படைத்தோம் தீபாவழியை வரவேற்றுப் பட்டாடையுடுத்தோம் பலகாரங்கள் பரிமாறினோம் முகம்தெரியாதோரோடெல்லாம் வாழ்த்துக்கள் வாங்கினோம். வானலையில் விரும்பிய பாடல் கேட்டோம் தானென்ற ஆணவம் இல்லையப்போ தாழ்ந்தோர் , உயர்ந்தோர் பேதங்களில்லாமல் மகிழ்ந்தோம். தாயகச்செய்திகள் , தமிழரின் கறைபடிந்த நினைவுகள் சோகம் , துயர் எல்லாவற்றையுமே எல்லோருமே பகிர்ந்து கொண்டோம். பிரியமான அறிவிப்பாளருக்குப் பிறந்தநாள் , திருமணநாள் பிள்ளையின் பிறந்த நாளெல்லாம் நினைவில் வைத்து வாழ்த்துக்கள் அனுப்பினோம் வீட்டில் ஒரு உறவாய் நெஞ்சுகளில் இடம்கொடுத்தோம். இப்போது நினைத்தாலும் வலிக்கிறது. வங்கிகளில் கடனெடுத்து வானொலி வளர்த்தோர் சுமைகுறைத்து வீட்டுத்தேவைக்காயிருந்த நோட்டுகளையெல்லாம் நேயர்மன்றங்களுக்காகச் செலவழித்து வர்த்தகர்கள் வாசலில் உதவிகேட்டு வாசல்விட்டிறங்கி நகரில் உள்ளோரிடமெல்லாம் பிறந்தநாள் வாழ்த்துக்கள் , மரண அறிவித்தல்கள் கொண்டாட்டங்களின் விளம்பரங்கள் சேர்த்துச் சொந்தப்பணத்தில் தொலைநகலனுப்பி ஊடக உயர்விற்காய் உளைத்தோர் தொகைபெரிது. பொதுநலமாய் நினைத்து ஊடகவளர்ச்சியில் உதவியோர் முகங்கள் எத்தனையோ எல்லாம் மறந்து உளைத்தோரெல்லோரையும் இடையில் வந்தோருக்காய் உதறித்தள்ளி ஒலிவாங்கிப்பலம் உரைத்து உண்மையாயிருந்தோரையெல்லாம் ஒவ்வொருவராய்க் கலைத்தோம். ஒருவரின் வளர்ச்சியை உளக்கியடிப்பதில் கண்ணாய் , கவனமாய் ஒலிவாங்கிகள் பலம் சேர்த்தன. படைத்தவர் அனுமதியின்றி அவர் படைப்பைச் சிதைத்து பாவத்தைப் படைப்பாளிமேல் சுமத்தி நியாயம் தரோம் முடிந்தால் முன்னேறிப்பார் சவால்விட்டுச் சாணக்கியர்களாய்..... ஊடகத்தலைமையே உதவியாய்..... உதவிக்குப் பரிசாய் துரோகிகள் பட்டமும் கொடுத்துத் து}ரவிலக்கினோம். 'என்னைவிட யாரிங்கு" ஆணவம் தலையெடுத்து ஆளுக்கொரு கட்சி. ஆளுக்கொரு நேயர் வட்டம். முகம்தெரியாதோரெல்லாம் மோதுப்பட்டு யாருக்காகவோவெல்லாம் சண்டைகள் செய்து மிஞ்சியது ????? உண்மை , நியாயம் சாகக்கூடாது அதை நிலைநாட்டுவோம் என்ற நல்லவர்க்கெல்லாம் சொல்லடிகளும் , வசவுகளும் பரிசாய்க்கிடைத்தது. தன்குடும்பம் மறந்து , தன்வீடு மறந்து ஊடகம் வளரத் தேய்ந்தோரெல்லாம் வீட்டு மூலைகளுக்குள் முடங்கிப்போகும் வண்ணம் சாட்டைகள் விழாக்குறை மற்றப்படி எல்லாம் நன்றே நடந்தது. புதியதோர் உலகம் செய்வோமென எழுந்த தலைமுறை தன்னைப் பூட்டிக்கொண்டது புதிதுக்கும் பழசுக்கும் நடுவில் நின்ற குழு பாதையை மாற்றிக் கொண்டது. முதியோர்கள் , குழந்தைகள் முகங்கள் புரியாது விழித்துக் கொண்டது. ஒன்றாயிருந்த பலம் சிதறிப் பலவாகி ஆளுக்கொரு வானொலி , தொலைக்காட்சி அரசியல்க்கட்சிகள் போல்..... நாளுக்கொரு ஊடகம்..... இதிலும் நன்மைகள் நிறையவே நானென்ற ஆணவம் இடிந்து உலகு நீண்டது - அதில் உண்மை நிலைக்கும் என்பது பலருக்கு உறைக்கிறது இப்போது. எங்களது உளைப்பை யாரோ நுகர நாங்கள் கொடுப்போராய் இன்னும்..... திருந்துவதாய் எண்ணமின்றி..... இன்னும் தத்துவங்களோடு மட்டும்.... 'சேர்ந்தால் சிறப்போம் சேருங்கள்" அயலானை அழைப்பதிலே கவனமாக..... நான் சேர்ந்து மற்றவரை அணைத்தாலல்லவா சிறப்பு வரும். இதைப்புரியாமல் இன்னும் சாயங்களோடு எத்தனை காலம் சமாளிப்பதாம்.....? ஊடகங்கள் மலிந்து போய் எதைக்கேட்க , எதைப்பார்க்க எதுவும் வேண்டாம் என்கிறார் பலரிப்போ - இல்லை ஊடகங்கள் வேண்டும் இக்கால விஞ்ஞானத்தோடு ஒட்ட வேண்டும் எங்களைத்தாண்டியொரு தலைமுறை எங்கள் கருவறைகளிலிருந்து தளைத்து மரமாகிறது அவை விழுதாகி வேரூன்றி - எம் அடையாளம் எழுத இதுவரையிருந்த பகைகளைந்து இணைவோம். 22.10.03. |