08-17-2005, 12:57 PM
முகத்தார் சொன்ன கதைபோல எங்கள் பெரியப்பாவிற்கு ஒரு சம்பவம் நடந்தது. இதை அவரே அடிக்கடி சொல்லியிருக்கிறார்.
யாழ்ப்பாணத்தில் அவரின் வீடு பெருமாள்கோவிலடி. ரயில்ப்பாதையால் வந்து ஒரு ஒழுங்கையில் திரும்பினால் வீடு.
ஒரு நாள் இரவு ஒரு மணிபோல் ரெயிலில் வந்து இறங்கி ரெயில்ரோட் ஓரமாக நடந்து வந்திருக்கிறார். ஒரிடத்தில் கோவிந்த சாமி என்பவர் விளக்கு வைத்து கிடுகு பின்னுவதைப்பார்த்தாராம். அது அவரது வீட்டின் முன்புறம். அட இந்த நேரத்தில் ஏன் கோவிந்த சாமி கிடுகு பின்னுகிறார் என்ன கஸ்டமோ? நாளைக்கு விசாரிப்பபம் என நினைத்துக்கொண்டு வந்துவிட்டாராம். வீட்ற்கு வந்து முகம் கழுவி சாப்பிட இருக்கும் போது பாட்டியிடம் கேட்டாராம் என்ன இந்தச்சாமத்தில் கோவிந்தசாமி கிடுகுபின்னுகிறார் என்ன சங்கதி என. அதிர்ந்து போனாராம் பாட்டி. ஐயோடா சத்தியம் பண்ணு நீ கோவிந்த சாமியைப்பாத்தினி என சத்தியம் பண்ணக் கேட்டிருக்கிறார். ஓமணை பாத்துட்டுத்தான் வாறன் பசி அதாலை நான் கதைக்க வில்லை நாளைக்கு கதைப்பம் என யோசிச்சன் அவர் வேற என்னைப்hhக்கவில்லை என்றாராம் பெரியப்பா. பாட்டி சொன்னாவாம் சிவசிவா 2 நாள் முதல்தான்; ரெயில் றோட்டைக் கடக்கேக்கை ரெயில் அடிச்சுச் செத்துப்போனார் கோவிந்தசாமி. இன்டைக்குத்தான் பிரேதம் எடுத்தது என. பெரியப்பா 2 நாள் காச்சலில் படுத்து தேறி திரும்பி கொழும்பு போக ஓருகிழமை எடுத்துதாம்.