10-23-2003, 09:15 AM
Quote:* ஒரு கொள்கைக்காக துன்பத்தை ஏற்றுக் கொண்ட பிறகு பின் வாங்கக் கூடாது. —ராஜாஜி.
ஆனால் அந்த கொள்கை பிழையென உண்ர்ந்தால்?
Quote:நல்ல நம்பிக்கையே நிம்மதியை அளிக்கும். —நார்மன் வின்சென்ட்
ஆனால் அது பொய்மையான நிம்மதியல்லவோ?
Quote:மூடனுக்கு அறிவுரை கூறினால் நமக்குத் தான் கேடு வரும். —பஞ்ச தந்திரம்
இது இயலாதோர் கூற்றா, இல்லை பிறர் முன்னெறுவதை விழையாதார் கூற்றா?
Quote: கஞ்சன் எப்போதுமே பிச்சைக்காரன் தான். —லவேட்டர்
இது பிச்சைக்காரர்கள் கூறும் தந்திரக் கூற்று, பிழைப்பு நடக்கவேண்டுமல்லவா!
Quote:உடலில் அணியும் உடையைவிட, மேலானது முகத்தில் அணியும் மலர்ச்சி. —ரூஸ்வெல்ட்.
ம்ஃகீம் என்னை நம்பாவிட்டால், உடையணியாமல் முகமலர்ந்த வண்ணம் வெளியில் செல்லுங்கள் பார்போம் (உலகே எள்ளி நகையாடும்)!
ஏனைய கூற்றுககள் நன்றாகவே உள, எடுத்தளித்தமைக்கு மிக்க நன்றி!
-

