08-17-2005, 11:15 AM
Eswar Wrote:Quote:இக்காலகட்டத்தில் எவ்வளவு காலத்திற்கு நாம் பின்னோக்கிப் போய் சொற்களை தமிழ்ப் படுத்தப் போகிறோம்....
மீண்டும் தொடங்கிய இடத்துக்கே வருகிறேன். தமிழர்களுக்குள்ளேயே தலைமுறை இடைவெளி வந்துவிடக் கூடாது என்ற நல்லெண்ணத்திலேதான் இக்கேள்வி வருகிறது. நாம் பாடசாலையிலே படித்த தமிழுக்கும் புலம் பெயர்ந்த தமிழ்ச் சிறார்கள் பயிலும் தமிழுக்குமே இடைவெளி வந்துவிட்டது. இதில சின்னப்பு கதைக்கிற தமிழ் எதிhகால மழழைகளுக்கு விளங்குமா ?
சின்னப்பு அப்பு பேசும் தமிழ் வரும் தலைமுறியினரும் பேசுவார்கள். அது எவ்வாறு சாத்தியம் என்றால். சின்னப்பு பேசுவதனை அவர்களும் கேட்கவேண்டும்.
அப்படி அவர்களும் கேட்கவேண்டுமாயின் அவர்களும் யாழ்களம் வருதல் வேண்டும்.
ஒரு சுவையான செய்தி ஒன்று. எனது அக்காவின் மகன் அண்மையில் ஈழம் சென்றுவந்தார். அவருக்கோ வயது ஏழு மட்டும்தான். அவர் நோர்வேயில் பிறந்தவர், நோர்வேயியமொழியும் அழகாகப் பேசுவார், அத்தோடு இங்கே அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடத்திற்கும் சென்று வருகின்றார். அண்மையில் அவர் தாய் நாடு சென்று திரும்புகையில் ஈழத்தில் சிறார்கள் எப்படி பேசுவார்களோ அவ்வாறு அருமையாக பேசுகின்றார். குழந்தைகளுக்கு நாம் எதை புகட்டுகின்றோமோ அதுவே அவர்களின் வாய் ஒலியாக வரும் என்பதுதான் எனது நிலைப்பாடு.

