Yarl Forum
பிற மொழிச் சொற்கள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: தமிழ் /தமிழர் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=20)
+--- Thread: பிற மொழிச் சொற்கள் (/showthread.php?tid=5473)



பிற மொழிச் சொற்கள் - Eswar - 02-02-2005

பிற மொழிச் சொற்கள்
பண்டைக் காலத்திலிருந்து இன்றைக் காலம் வரை எமது மொழி பிற மொழிகளிலிருந்து பல சொற்களை இரவல் வாங்கிப் பாவித்து வந்துள்ளது நாம் அறிந்ததே. எம்மிடம் அவற்றுக்கு இணையான சொற்கள் இல்லையென்று பொருளல்ல. ஏதோ காரணங்களால் எம் முன்னோர்கள் காலம்காலமாக அத்தவற்றைச் செய்து வந்துள்ளார்கள்.
ஆரம்ப காலங்களில் பல வடமொழிச் சொற்களையும் பின்னர் ஐரோப்பியர் ஆதிக்கத்தில் அவர்களிடம் இருந்தும் பல சொற்கள் தமிழுக்கு வந்துள்ளன.
எனது கேள்வி என்னவென்றால் ...... தமிழார்வமும் தமிழ் பற்றும் அதிகரித்து வரும் இக்காலகட்டத்தில் எவ்வளவு காலத்திற்கு நாம் பின்னோக்கிப் போய் சொற்களை தமிழ்ப் படுத்தப் போகிறோம்.... :?: :?: :?:
எனது கேள்வியின் ஆழத்தைப் புரிய வைப்பதற்காக ....Bottle போத்தல்..ஆகவும் Kontor கந்தோர்... ஆகவும் மாற்றப்பட்டது இந்தக் காலம். ஸஜஹ தமிழுக்கு வந்தது அந்தக் காலம். இதில் எந்தக்காலம் வரை எமது பயணம் :roll:


Re: பிற மொழிச் சொற்கள் - Jude - 02-02-2005

Eswar Wrote:பிற மொழிச் சொற்கள்
பண்டைக் காலத்திலிருந்து இன்றைக் காலம் வரை எமது மொழி பிற மொழிகளிலிருந்து பல சொற்களை இரவல் வாங்கிப் பாவித்து வந்துள்ளது நாம் அறிந்ததே. எம்மிடம் அவற்றுக்கு இணையான சொற்கள் இல்லையென்று பொருளல்ல. ஏதோ காரணங்களால் எம் முன்னோர்கள் காலம்காலமாக அத்தவற்றைச் செய்து வந்துள்ளார்கள்.
அது அவர்கள் செய்த தவறல்ல. உலகின் வாழும் மொழிகள் அனைத்தும் மற்ற மொழிகளில் இருந்து சொற்களை பெற்று தான் வளர்ச்சியடைந்திருக்கின்றன. அதிகம் பயன்படுத்தப்படும் மொழிகள் அதிக சொற்களை பெற்று வளர்ச்சியடைந்து வறந்திருக்கின்றன. தமிழ் முதலில் கோலெழுத்து வட்டெழுத்து என இரு வகையாக சோழ நாட்டிலும் பாண்டிய நாட்டிலும் பயன்பட்டு வந்தது. பின்னர் தான் இரண்டும் இணைந்து தமிழ் எல்லோரும் படிக்கத்தக்கதாக மாற்றப்பட்டது. அந்த தமிழிலும் நாம் இன்று மெய்யெழுத்துக்களில் பயன் படுத்தும் குற்றுக்களும் கமா முழுத்தரிப்பு போன்றவையும் இருக்கவில்லை. மதம் பரப்ப வந்த இத்தாலிய பாதிரி பெஸ்கி தான் வீரமாமுனிவர் என்ற பெயருடன் இவற்றை தமிழில் அறிமுகப்படுத்தினார்.

தமிழ் வாழும் வளரும் மொழி. வேற்று மொழி பேசுபவர்கள் தமிழ் பேசும் மக்கள் மத்தியல் வாழ வருவதும் தமிழும் தமிழரும் கலப்பதற்கு காரணம். ஆனால் வாழும் வளரும் சமுதாயத்தில் மற்றவர்கள் வந்து இணைவதும் அனைவரும் சேர்ந்து மாற்றம் அடைவதும் தவிர்க்க முடியாதது. இது இயற்கை.


- Vasampu - 02-02-2005

பொதுவாக எல்லா மொழிகளிலும் வேற்று மொழிக்கலப்பு ஏற்பட்டேயுள்ளது. ஆங்கிலத்தில் கூட நிறைய இலத்தீன் சொற்கள் கலந்துள்ளன. ஒரு மொழி வளர்ச்சியடைய வேண்டுமாயின் புதுப்புதுச் சொற்கள் உருவாக வேண்டும். ஆனால் தமழில் ஒவ்வொருவரும் தமது மனம் போன போக்கில் சொற்களை உருவாக்கி உபயோகித்து வருகின்றனர். இதனால் பல குழப்பங்களே உருவாகின்றன. என்னைப் பொறுத்தமட்டில் தமிழ்மொழி பேசும் மக்கள் வாழும் நாடுகளிலிருந்து சிறந்த தமிழ்மொழி வல்லுனர்களை தெரிவு செய்து அவர்கள் மூலம் பொதுவான ஒரு அமைப்பை உருவாக்கி அவரகள் மூலமாகவே புதுப்புதுச் சொற்களை உருவாக்கினால் தமிழ்மொழியும் வளர்ச்சியடையும் நாமும் பயன் பெறுவோம். எல்லா நாடுகளில் வாழும் தமிழர்களும் பொதுவான ஒரு முறையை பின்பற்றலாம். இதனால் எமது வருங்காலச் சந்ததியினரும் இலகுவாக தமிழ்மொழியை கற்றுக் கொள்ள சில இலகுவான வழிமுறைகளும் உருவாகலாம். எனவே எல்லோரும் ஒன்று சேர்ந்து தமிழ்மொழி எனும் தேரின் வடத்தைப் பிடித்திழுத்தால் மொழி வளர்ச்சி எனும் சக்கரம் சுற்றாமலா விடப்போகின்றது. ஒன்றாகவே முயற்சிப்போம்.


- muzhakkam thiru - 02-02-2005

தமிழன் நாடு தமிழனின் முழுமையான ஆட்சிக்கு கீழ் இருந்த நாள் வரையில் தமிழ் எந்த மொழியிடமும் இருந்து சொற்களை இரவல் வாங்கியதாக வரலாற்றில் எங்கேணும் காணோம் என்கிறார் பாவாணர்.
ஆரியப்படையெடுப்பு மற்றும் ஆரியர்களின் பண்பாட்டுப் படையெடுப்பை அடுத்து பல அரிய செல்வங்களை தமிழ் ஆரியரிடம் கொள்ளை கொடுத்தது உண்மை. அதேநேரத்தில் ஆரியரின் சூழ்சியால் அறிமுகமான மணிப்பிரவாள நடை( சமசுக்கிருதம்ää தமிழ்) அறிமுகத்திற்கு வந்தபோது போச்சு வழக்கில்ää எழுத்து வழக்கில் வடமொழி (சமசுகிருதம்) கலந்து விட்டது. விலங்கொடிக்க போராடும் இவ்வேளையில் அந்த வடமொழிச் சொற்களுக்கான தமிழ் சொல்லை மீண்டும் நடைமுறை கொண்டுவருவதில் தவறேதும் இல்லை.
காலவேட்டத்தில் பலமாறுதல்கள் வரும் பல புதிய செயல்கள் ஆக்கங்கள் தோன்றுவது பேலவே சொல்லாக்கங்கள் நடைபெறுகின்றது. வினைääஓசை...மற்றும் தமிழ் இலக்கண வரபிற்கு உட்பட்டு சொல்லாக்கங்கள் இடம்பெறுகின்றன.
இற்றைக்கு 400 ஆண்டுகாலத்திற்கு முன்னர் சிலி நாட்டில் இருந்து தமிழன் நாட்டிற்கு மிளகாய் வந்தது. அது நாள் வரையில் மிளகையே உபயோகித்து வந்த தமிழர்கள்ää அதன் பயன்பாட்டிற்கும் வினைக்கும் ஏற்றாற்போல் அதற்கு மிளகாய் என்று பெயரிட்டனர்.
அதுபோலவே
ஐரோப்பியர் கந்தேர் என்ற சொல்லை கொண்டு வரமுன்னர் தமிழர்கள் கந்தோர் எதனையும் வைத்திராமலா இருந்தனர்.
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
தமிழன் பணிகள் செய்யும் இடத்தை பணிமனை என்று அழைத்தான். அல்லது
அலுவல்கள் செய்யும் இடத்தை அலுவலகம் என்று அழைத்தான்.
அதேபோல போத்தல் என்ற ஆங்கிலச் செல்லுக்கு நிகரான தமிழ் சொல் புட்டில் ஆகும்.

'ழ்" என்கிற சிறப்பு ழகரம் தமிழுக்கே உரித்தான சிறப்பு. இதனை ஆங்கிலத்தில் எழுதமுடியாது. ஆங்கில 26 எழுத்துக்களுடன் இதனையும் இணைத்தால் ஆங்கிலத்திற்கு சிறப்பாக இருக்கும் ஆங்கிலேயர்கள் இணைக்க சம்பமதிப்பார்களா....? அதுபோலவே எல்லா ஓசைகளையும் அது எந்த மொழியாக இருந்தாற் கூட உச்சரிக்க முடியாது. அது அந்தந்த மொழிக் குடும்பங்களின் தனி இயல்பு எனலாம். ஆகவே ஸääஜääஹ... என்கின்ற கிரந்த எழுத்துக்கள் தேவை இல்லை என்கின்றனர் தமிழறிஞர்கள்.
மண்ணின் விலங்கொடிக்க மட்டுமல்ல மொழியின்ää பண்பாண்டின்ää சமூகத்தின் விலங்கொடிக்கவும்தான் போராடுகின்றோம் என்று கூறும் புலிகள் 46ää000 தமிழ் பெயர்கள் அடங்கிய அகராதி ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். அந்த அகாரதியில் இருந்து போராளிகளுக்கும் பிறந்த மகவுகளுக்கும் பெயர்கள் வைக்கப்படுகின்றன. தமிழன் ஆட்சி அதிகாரம் அரசியல் உரிமை இழந்து 400 ஆண்டுகள் ஆகின்றன. ஆகையால் தமிழில் பயன்பாடு இழந்த ஆட்சி மொழிச் சொற்களை மீட்டு தமது நிழல் அரசில் பயன்படுத்துகின்றார்கள் விடுதலைப் புலிகள். விடுதலைப் புலிகள் தமிழ் வளர்ச்சிக் கழகம் பொதுவான சொற்பிரயோகம் போன்ற பல சிக்கல்களுக்கு முடிவகாண உழைக்கின்றதாக செய்திகள் வாயிலாக அறிகின்றோம்.

விழிப்பும் பயன்பாடும் இருப்பின் மொழி மிளிரும்.
-முழக்கம் திரு


- Eswar - 02-03-2005

Quote:என்னைப் பொறுத்தமட்டில் தமிழ்மொழி பேசும் மக்கள் வாழும் நாடுகளிலிருந்து சிறந்த தமிழ்மொழி வல்லுனர்களை தெரிவு செய்து அவர்கள் மூலம் பொதுவான ஒரு அமைப்பை உருவாக்கி அவரகள் மூலமாகவே புதுப்புதுச் சொற்களை உருவாக்கினால் தமிழ்மொழியும் வளர்ச்சியடையும் நாமும் பயன் பெறுவோம். எல்லா நாடுகளில் வாழும் தமிழர்களும் பொதுவான ஒரு முறையை பின்பற்றலாம்.
மிகச் சிறந்த கருத்து. இதை நானும் வரவேற்கிறேன்.


- KULAKADDAN - 02-03-2005

Eswar Wrote:
Quote:என்னைப் பொறுத்தமட்டில் தமிழ்மொழி பேசும் மக்கள் வாழும் நாடுகளிலிருந்து சிறந்த தமிழ்மொழி வல்லுனர்களை தெரிவு செய்து அவர்கள் மூலம் பொதுவான ஒரு அமைப்பை உருவாக்கி அவரகள் மூலமாகவே புதுப்புதுச் சொற்களை உருவாக்கினால் தமிழ்மொழியும் வளர்ச்சியடையும் நாமும் பயன் பெறுவோம். எல்லா நாடுகளில் வாழும் தமிழர்களும் பொதுவான ஒரு முறையை பின்பற்றலாம்.
மிகச் சிறந்த கருத்து. இதை நானும் வரவேற்கிறேன்.
ஆமா இமயமலை ஆரியரின் கட்டுபாட்டில்....[நேபாளம்]...ஆரியர்களுக்கும் தமிழ் நன்கு வருகிறது :wink:


- Eswar - 02-03-2005

Quote:Eswar எழுதியது:
மேற்கோள்:

என்னைப் பொறுத்தமட்டில் தமிழ்மொழி பேசும் மக்கள் வாழும் நாடுகளிலிருந்து சிறந்த தமிழ்மொழி வல்லுனர்களை தெரிவு செய்து அவர்கள் மூலம் பொதுவான ஒரு அமைப்பை உருவாக்கி அவரகள் மூலமாகவே புதுப்புதுச் சொற்களை உருவாக்கினால் தமிழ்மொழியும் வளர்ச்சியடையும் நாமும் பயன் பெறுவோம். எல்லா நாடுகளில் வாழும் தமிழர்களும் பொதுவான ஒரு முறையை பின்பற்றலாம்.


மிகச் சிறந்த கருத்து. இதை நானும் வரவேற்கிறேன்.

ஆமா இமயமலை ஆரியரின் கட்டுபாட்டில்....[நேபாளம்]...ஆரியர்களுக்கும் தமிழ் நன்கு வருகிறது
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

வதிவிடம்தானுங்கோ இமயத்தில....
குடிச்சது தமிழ் பாலுங்கோ....


- KULAKADDAN - 02-03-2005

தமிழ் பால் குடிச்ச ஆரியனோ..................


- Eswar - 02-03-2005

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்.

சாவகச்சேரி இந்துவுக்கு லொள்ளு கொஞ்சம் ஜாஸ்திதான்.. :mrgreen:


- Jude - 02-05-2005

Eswar Wrote:யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்.

தமிழ் மொழி அறிந்தளவுக்கு தாமறிந்த மொழிகள் எத்தனையோ?


- Mathan - 02-05-2005

muzhakkam thiru Wrote:muzhakkam thiru



Joined: 02 Feb 2005
Posts: 1
Location: nuhud;Nuh>fdlh
Posted: Wed 02 02, 2005 9:06 pm Post subject:

--------------------------------------------------------------------------------

தமிழன் நாடு தமிழனின் முழுமையான ஆட்சிக்கு கீழ் இருந்த நாள் ......

விழிப்பும் பயன்பாடும் இருப்பின் மொழி மிளிரும்.
-முழக்கம் திரு


முதல் கருத்தையே நேரடியாக இந்த பகுதியில் எழுதி இருக்கின்றீர்கள் போல இருக்கின்றது எப்படி?


- Eswar - 02-05-2005

Quote:Eswar எழுதியது:
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்.



தமிழ் மொழி அறிந்தளவுக்கு தாமறிந்த மொழிகள் எத்தனையோ?
என்ன இப்பிடிக் கேட்டிட்டியள்..... தமிழ் ஆங்கிலம் தவிர்ந்து....
சிங்களம் மலையாளம் தெலுங்கு ஹிந்தி ஜேர்மன் பிரென்ச் இத்தாலி டேனிஸ் சுவிடிஸ் நோர்வேஜியன் ஸ்பானிஸ் படங்கள் எல்லாம் ஒழுங்காப் பாக்கிறனான் அதில 7 மொழியில 1 2 3 சொல்லத் தெரியும். அதைவிட 10 மொழியில I love you சொல்லத் தெரியும். இதையும் விட முக்கியமா எல்லா மொழியிலயும் ***************** சொல்லுவன்.இது காணாதா.


- Jude - 02-06-2005

Eswar Wrote:
Quote:Eswar எழுதியது:
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்.



தமிழ் மொழி அறிந்தளவுக்கு தாமறிந்த மொழிகள் எத்தனையோ?
என்ன இப்பிடிக் கேட்டிட்டியள்..... தமிழ் ஆங்கிலம் தவிர்ந்து....
சிங்களம் மலையாளம் தெலுங்கு ஹிந்தி ஜேர்மன் பிரென்ச் இத்தாலி டேனிஸ் சுவிடிஸ் நோர்வேஜியன் ஸ்பானிஸ் படங்கள் எல்லாம் ஒழுங்காப் பாக்கிறனான் அதில 7 மொழியில 1 2 3 சொல்லத் தெரியும். அதைவிட 10 மொழியில I love you சொல்லத் தெரியும். இதையும் விட முக்கியமா எல்லா மொழியிலயும் ***************** சொல்லுவன்.இது காணாதா.

ஆக, தமிழ் மொழியில் ************ சொல்லும் போது மற்ற மொழிகளிலும் இனிமையாக தோன்றுகிறதாக சொல்லியிருக்கிறீர்கள். விளக்கத்துக்கு நன்றிகள்.


- Mathuran - 02-06-2005

தமிழ் மொழி பற்றி பேசுஙக்ளேன்.

நன்றி இருவருக்கும்.


- Eswar - 02-06-2005

Quote:இக்காலகட்டத்தில் எவ்வளவு காலத்திற்கு நாம் பின்னோக்கிப் போய் சொற்களை தமிழ்ப் படுத்தப் போகிறோம்....

மீண்டும் தொடங்கிய இடத்துக்கே வருகிறேன். தமிழர்களுக்குள்ளேயே தலைமுறை இடைவெளி வந்துவிடக் கூடாது என்ற நல்லெண்ணத்திலேதான் இக்கேள்வி வருகிறது. நாம் பாடசாலையிலே படித்த தமிழுக்கும் புலம் பெயர்ந்த தமிழ்ச் சிறார்கள் பயிலும் தமிழுக்குமே இடைவெளி வந்துவிட்டது. இதில சின்னப்பு கதைக்கிற தமிழ் எதிhகால மழழைகளுக்கு விளங்குமா ?


- Jude - 02-07-2005

[quote="Eswar"][quote]
மீண்டும் தொடங்கிய இடத்துக்கே வருகிறேன். தமிழர்களுக்குள்ளேயே தலைமுறை இடைவெளி வந்துவிடக் கூடாது என்ற நல்லெண்ணத்திலேதான் இக்கேள்வி வருகிறது. நாம் பாடசாலையிலே படித்த தமிழுக்கும் புலம் பெயர்ந்த தமிழ்ச் சிறார்கள் பயிலும் தமிழுக்குமே இடைவெளி வந்துவிட்டது. இதில சின்னப்பு கதைக்கிற தமிழ் எதிhகால மழழைகளுக்கு விளங்குமா ?[/quote]

உலகில் வாழும் மொழிகள் தொடர்ந்து மாறி வருவதும் புதியன புகுதலும் பழையன கழிதலும் இயற்கை. அதற்காக அன்றைய ஒளவையாரின் பாடலும் வள்ளுவனின் குறளும் எமக்கு விளங்காமல் இல்லை. விளங்காதவருக்கு விளங்கவைக்க யாராவது விளக்கவுரை எழுதி விற்பர். மொழிகள் இடத்துக்கிடம் மாறுபடுவதும் இயற்கை. அதற்காக மட்டக்களப்பு தமிழ் மதுரைத்தமிழனுக்கு விளங்காமல் போய்விடவில்லை. கவலையை விடுங்கள்.


- tamilini - 08-12-2005

<b>Bath</b> (பாத்) என்ற சொல் தமிழில் இருந்து தான் ஆங்கிலத்திற்கு சென்றது என்றார்களே. தகவல் தெரிந்தால் சொல்லுங்களேன். TTN தமிழருவி நிகழ்ச்சில சொன்னாங்க என்றாங்க.


- Mathuran - 08-17-2005

Eswar Wrote:
Quote:இக்காலகட்டத்தில் எவ்வளவு காலத்திற்கு நாம் பின்னோக்கிப் போய் சொற்களை தமிழ்ப் படுத்தப் போகிறோம்....

மீண்டும் தொடங்கிய இடத்துக்கே வருகிறேன். தமிழர்களுக்குள்ளேயே தலைமுறை இடைவெளி வந்துவிடக் கூடாது என்ற நல்லெண்ணத்திலேதான் இக்கேள்வி வருகிறது. நாம் பாடசாலையிலே படித்த தமிழுக்கும் புலம் பெயர்ந்த தமிழ்ச் சிறார்கள் பயிலும் தமிழுக்குமே இடைவெளி வந்துவிட்டது. இதில சின்னப்பு கதைக்கிற தமிழ் எதிhகால மழழைகளுக்கு விளங்குமா ?

சின்னப்பு அப்பு பேசும் தமிழ் வரும் தலைமுறியினரும் பேசுவார்கள். அது எவ்வாறு சாத்தியம் என்றால். சின்னப்பு பேசுவதனை அவர்களும் கேட்கவேண்டும்.
அப்படி அவர்களும் கேட்கவேண்டுமாயின் அவர்களும் யாழ்களம் வருதல் வேண்டும்.

ஒரு சுவையான செய்தி ஒன்று. எனது அக்காவின் மகன் அண்மையில் ஈழம் சென்றுவந்தார். அவருக்கோ வயது ஏழு மட்டும்தான். அவர் நோர்வேயில் பிறந்தவர், நோர்வேயியமொழியும் அழகாகப் பேசுவார், அத்தோடு இங்கே அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடத்திற்கும் சென்று வருகின்றார். அண்மையில் அவர் தாய் நாடு சென்று திரும்புகையில் ஈழத்தில் சிறார்கள் எப்படி பேசுவார்களோ அவ்வாறு அருமையாக பேசுகின்றார். குழந்தைகளுக்கு நாம் எதை புகட்டுகின்றோமோ அதுவே அவர்களின் வாய் ஒலியாக வரும் என்பதுதான் எனது நிலைப்பாடு.