Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தேவை உடற்பயிற்சி
#3
எல்லாம் உங்கள் கையில் தான் இருக்கின்றது.

நேரம் இல்லை இந்த வார்த்தையைச் சொல்லாதவர்கள் குறைவு. நாம் நேரத்தை சரியானபடி நிர்வகித்தால், இருக்கும் நேரத்தை இன்னும் பயனுள்ளதாக செலவழிக்கலாம். பணம், உழைப்பு இவற்றைப் போலவே நேரமும் ஒரு செல்வம்தான். செலவழித்தால் திரும்ப கிடைக்காது. ஆகவே நேர நிர்வாகம் என்பது நம் வாழ்க்கைக்கு மிக, மிக முக்கியமானது. முதலில் ஒவ்வொரு நாளும் நாம் செய்யும் எல்லா வேலைகளையும் அதன் நேர அளவையும் ஒரு வார காலத்திற்குக் குறித்துக் கொள்ள வேண்டும். பின் அதனை ஆராய்ந்து பார்த்தால் நமக்கே நாம் எப்படி நேரத்தைச் செலவழிக்கின்றோம் என்பது தெரியும். அதிலும் எத்தனை நேரம் பயனில்லாத வேலைகள் செய்திருக்கிறேம் என்பதும் தெரியும்.
நாம் பிறருடன் பேசும்பொழுது, நேரத்தை நிர்ணயித்துக் கொண்டு பேச வேண்டும். இதனால் பல தடங்கல்ளையும் தவிர்க்கலாம். அத்தோடு நாம் எந்த வேலையையும் கவனத்துடன் செய்ய வேண்டும். கவனம் இல்லாத எந்த வேலையும் நமது நேரத்தை அனாவசியமாகச் செலவழிக்கலாம். தினமும் அன்றைய வேலைகளைக் குறித்தவுடன், அதற்கான நேர ஒதுக்கீட்டையும் செய்ய வேண்டும்.

அத்தோடு மனித மனம் கட்டுப்பாடு இல்லாது அலைபாயும். ஆகவே அதைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினம். எனவே நாம் ஒரு வேலை செய்யம் பொழுது, மனம் வேறொன்றை நினைக்க ஆரம்பித்தால், நாம் உடனே மனதிற்குள்ளாகவே அதற்குக் கட்டளை இட்டு, அதை மீண்டும் அதே வேலைக்குத் திருப்ப வேண்டும். எந்தக் கடின வேலையைச் செய்து முடித்தாலும், உங்களை நீங்களே பாராட்டிக் கொண்டு உற்சாகப்படுத்துங்கள்.

எந்தப் பிடிக்காத வேலையையும் சமாளிப்பதற், அதைக்காலம் கடத்தாது உடனடியாக செய்து முடிப்பதே சிறந்த வழியாகும்.
இவற்றுக்கெல்லாம் பொதுவாக நாம் நேரம் தவறாமையை நாம் கடைப்பிடிக்க வேண்டும்.
பொன்னான நேரத்தை மண்ணாக்காமல் நேரத்தை நிர்வகிக்க பழக்கப்படுத்திக் கொண்டால், 24 மணிநேரத்தையும் நாம் திறமையாக . . . பிரயோசனம் உள்ளதாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

இவை தங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.
Reply


Messages In This Thread
[No subject] - by AJeevan - 10-23-2003, 07:33 AM
[No subject] - by shanmuhi - 10-23-2003, 07:53 AM
[No subject] - by Kanakkayanaar - 10-23-2003, 08:36 AM
[No subject] - by Kanakkayanaar - 10-23-2003, 08:39 AM
[No subject] - by AJeevan - 10-23-2003, 12:36 PM
[No subject] - by kuruvikal - 10-23-2003, 03:04 PM
[No subject] - by AJeevan - 10-23-2003, 04:06 PM
[No subject] - by sOliyAn - 10-23-2003, 11:26 PM
[No subject] - by AJeevan - 10-24-2003, 02:14 PM
[No subject] - by Saniyan - 10-24-2003, 03:57 PM
[No subject] - by சாமி - 10-29-2003, 08:15 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)