10-22-2003, 11:00 AM
mohamed Wrote:தென்னிந்திய சினிமா திறமான சினிமா எண்டால் எங்கு போய் முட்ட! இந்தியாவலி தென்னிந்தியாவல் உலக சினிமா தரத்தில் உள்ளது மலையாள சினிமாவே. மற்றவை குறிப்பாக தமிழ், தெலுங்கு அனைத்தும் காப்பியடிக்கும் சினிமாக்களே! உலக சினிமா தரத்திற்கு ஒரு சத்தியஜித்ரே தமிழ் சினிமாவில் வராமைக்க காரணம் அவர்களிடம் ஒரு தனித்துவம் இல்லாமையே. மணிரத்தினம் முதல் பாலுமகேந்திரா வரை அடுத்தவனை காப்பியடித்தார்களே தவிர ஒரு தனித்துவத்தை உருவாக்கவில்லை. பாலச்சந்தர் ஓரளவு செய்ய முனைந்தபோதும் அவரால் வெற்றிபெற முடியாமைக்கு தமிழ் சினிமாவின் மசாலா தன்மை இடம்கொடுக்கவில்லை. ஆனால் பாலுமகேந்திரா ஒரு திறைமைசாலி என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் மணிரத்தினம் ஒரு கேள்விக்குறியே.
"தமிழ் சினிமா இந்திய தரத்தையே எட்டாத போது உலக தரத்துக்கு நாம் எப்படிச் செல்வது..........." என்று சில வாரங்களுக்கு முன்னர் கமல் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். அவர்கள் சொல்லாததை நாமாக கற்பனை செய்து பேசிக் கொண்டிருக்கிறோம். மலையாள பட உலகமும் தமிழ் சினிமாவை பின்பற்றத் தொடங்கி விட்டது. அதனால்தான் மலையாள நடிக-நடிகயரின்-படைப்பாளிகளின் படையெடுப்பு தமிழ் படவுலக்தை நோக்கி நகர்ந்துள்ளது.
<span style='color:brown'>சினிமா என்பது ஒரு சுமை நிறைந்த மிக மிகக் கடினமான ஒரு பணி.
இது ஒரு அறைக்குள் இருந்து கொண்டு வானோலியை நடத்துவது போலோ,வாங்கிய நிகழ்ச்சிகளை கொண்டு தொலைக்காட்சி நடத்துவது போலோ,ஒரு நிறுவனத்தில் வேலை செய்வது போலோ அல்ல.
திரைப்படத்தில் வேலை செய்யும் அடிமட்ட தொழிலாளி முதல்,...................... கடைசி பார்வையாளன் வரை அப் படைப்பை கொண்டு திருப்திப்படுத்த முயலும் ஒரு விசப்பரீட்சை சினிமா.
வென்றால் சிம்மாசனம்,தோற்றால் காடு கூட அவனுக்கு கொள்ளி போடாது.
இது அங்கே தொழிலே தவிர சமூகத்தை மாற்றும் ஒர் சீர்திருத்தப் பள்ளியல்ல. கடின உழைப்பில் , அசதியோடும்-கவலையோடும் வரும் சாதாரண மனிதனுக்கு கிடைக்கும் ஒரு பொழுது போக்கு மட்டுமே அங்குள்ள சினிமா.
சத்தியஜித்ரே,மிருணால் சென்,அடுர் கோபலகிருஸ்ணன் போன்றோரின் மட்டுமல்ல............................. சுவிஸ் குறும்பட விழாவுக்கு வந்த பெயர் தெரியா படைப்பாளிகளின் எத்தனையோ குறும்படங்கள் உலக தர சினிமாவுக்கு நிகரானவை.சுவிஸ் திரைப்பட மேதைகளே வியந்து நின்றவை. ஆனால் இவர்கள் தமது படைப்புக்குப் பின் வறுமைக்குள் செத்துக் கொண்டிருப்பவர்கள்.
புலம் பெயர் மண்ணில்,உங்களிடம் ஒரு வேளைச் சோற்றுக்காவது வழியிருக்கிறது.அங்கே அது கூட இல்லாது தம் கலைத் தாகங்களுக்காக நடு வீதிகளில் உறங்குவோரை தயவுடன் ஏளனப்படுத்தாதீர்கள்..................ஒரு வேளைச் சோற்றுக்காக எத்தனையோ கலைஞர்கள் அல்லாடுகிறார்கள்.
இலவசமாக வேலை செய்யவும் , ஒரு புலம் பெயர் படைப்புக்காக என்ன பங்களிப்பு (பணத்தால்) செய்ய முடியும் என்றும் சொல்லுங்கள்.அப்போது சொல்ல முடியும் நீங்கள் யாரென்று.....................
எழுதவும்,பேசவும் எல்லோராலும் முடியும்,செய்து பார்த்தால்தான் நிலைமை விளங்கும்.
வந்த ஒன்றிரண்டு புலம் பெயர் படைப்புகளையே காசு கொடுத்து பார்க்க முடியாதவர்கள், பேச அருகதையுள்ளவர்களா?
அறைக்குக்குள் இருந்து கொண்டு உருப்படியாக ஒரு வானோலி நடத்தவோ, உருப்படியாக ஒரு சஞ்சிகையைக் தொடர்ந்து கொண்டு வரவோ இயலாத போது ஏன் இந்த வியாக்கியானம் ............... வாயிருப்பதால் ஓசி பல்லக்கில் ஏறி வலம் வர மட்டும் ஆசை..............................
[size=15]அதிகம் தேவையில்லை இந்த யாழ் களம் கூட ஓர் உயரிய இதயத்தினதும்,
தன்னலம் கருதா உழைப்பாளிகளினதும் அர்ப்பணிப்பே தவிர , எந்த ஒரு பங்களிப்புமில்லை.</span>
<span style='font-size:20pt;line-height:100%'>(யாழின் பணிக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள்..................நீடுழி வாழ வளம் நிறை வாழ்த்துகள்............)</span>
[size=15]தாய்க்கு மட்டுமே தாய்மையின் வேதனை புரியும்.
மற்றவர்களுக்கு அது புரிய வாய்ப்பே இல்லை......................
மைதானத்துக்கு வெளியேயிருந்து கோல் போடாது.
ஆட்டத்தில் இறங்குங்கள்,விபரீதம் புரியும்.
-அஜீவன்
[scroll:d362c0918c][size=15]எவருக்கும் நீ அடிமையில்லை , எவரும் உனக்கு அடிமையில்லை. -அஜீவன்

