10-22-2003, 10:20 AM
யாழ்/yarl Wrote:திறமை மட்டும் போதாது.வித்தையும் தெரிந்திருக்கவேண்டும்.
விதை வீரியமாகவிருந்தாலும்.அது வளர்வதற்கு இயற்கையை சமாளிக்கும் வித்தை தெரிந்திருக்கவேண்டும்.
இது முற்றிலும் உண்மை.
வித்தை அதாவது சமாளிப்பு,சகிப்புத்தன்மை,பணிவுடைமை,தன்னடக்கம்,இணக்கப்பாடு எல்லாவற்றையும் விட புலம் பெயர் கலைஞர்களுக்கு இன்னுமொரு வித்தை தேவைப்படுகிறது.காக்கா பிடிப்பது அல்லது ஜால்ரா அடிப்பதுதான் அது.
இந்த வித்தையை நல்ல கலைஞர்கள் கற்றுக்கொள்ள வேண்டாம்.இன்று நமது புறக்கண்களுக்குத் தெரியாமல் எத்தனையோ கிராமங்களில் மட்டும் பகுதிகளில் மட்டும் மாவட்டங்களில் மட்டும் ஓரளவு பிரபலத்துடன் பல கலைஞர்கள் தன்மானத்துடன் வாழ்ந்து மடிந்துவிட்டார்கள்.
ஆகக்குறைந்தது அவர்களுக்கு செலுத்தும் மரியாதைக்காகவாவது கலைஞர்கள் இந்தக்கேவலமான நிலைக்குத் தள்ளப்பட வேண்டாம்.ஒவ்வொரு கலைஞனிடமும் தன்நம்பிக்கை வளர வேண்டும்.அதே போல் அவர்களின் திறமைகளை அங்கீகரிக்க ஒரு சமூகம் உருவாக வேண்டும்.
இதற்கிடையில் ஊளையிடும் சில நரிகளைத் துரத்தவேண்டும்.அல்லது அவர்கள் திருந்தவேண்டும்.
இந்த நாள் இந்த நேரம், இதை நான் எழுதிக்கொண்டிருக்கும் போது தனது சுய கெளரவம் தன் மானத்தையெல்லாம் இழந்து ஆறு வருடங்களாக தான் காப்பாற்றி வந்த தனக்குள் இருந்த கலைஞனை மற்றவன் காலடியில் 31ம் திகதி வரையான ஒரு கெடுவிற்கு இணங்கி, மானமிழந்து,சுதந்திரமிழந்து தலை குணிந்து நிற்கும் ஒரு கலைஞன் பெட்டிக்குள் அடங்கிய பாம்பாக மாறி அவர்கள் காலடியில் சுருண்டு கிடக்கிறான்.இந்த வேதனையான கதையை இன்று காலை நான் கேள்விப்பட்டேன்.
ஆனால் அவனைப் பார்த்து பரிதாபப்படவும் முடியாது.ஏனெனில் இதற்கு முன்னர் தன்னைவிட யார் வளர்ந்தாலும் அவனை வெட்டி வீழ்த்திய தீய குணங்கொண்டவன் தான் அவன்.ஆனாலும் ஒரு கலைஞனின் வேதனையை இன்னுமொரு கலைஞன் வேதனையடன் சொல்லக்கேட்டபோது உண்மையிலேயே பரிதாபமாக இருந்தது.
எனவே சில யதார்த்தங்களை,சில மனிதர்களை,சில உண்மைகளை உலகம் புரிந்து கொள்ளும் காலம் மிகத்தொலைவில் இல்லை.
கலைஞர்களே தன்நம்பிக்கையுடன் இருங்கள்.
:: <b>give respect and take respect </b>::
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>

