10-22-2003, 09:15 AM
Quote:திறமைக்கு மதிப்புகொடுக்கின்ற தமிழ்சமுதாயம் என்று தான் புலம்பெயர்வாழ்வியல் சுழலில் உருவாகும் ?
வாய்ப்புக்கள் குறைவுதான்.
ஏனெனில் இங்குள்ள பல திறமைசாலிகளே தங்களை யார் என்று இனங்கண்டுகொள்ள முடியாமல் இருக்கின்றனர்.
ஏன் மற்றவர் திறமையை அழிக்கவேண்டும்?அல்லது மற்றவர்களை வளரவிடக்கூடாது என்ற மனப்பக்குவம் இன்னுமொரு திறமைசாலிக்கு வருகிறது என்றால் அது அவரிடம் இருக்கும் தாழ்வு மனப்பான்மையே தவிர வேறு ஒன்றும் இல்லை.
எனக்குத்தெரிந்த ஒரு பல்கலைக் கலைஞன் ஒருவர் அடிக்கடி இப்படிச் சொல்லுவார்.[b]அதாவது ஒரு திறமைசாலியால் இன்னுமொரு திறமைசாலியை முந்திக்கொண்டு செல்ல முடியமே தவிர இன்னுமொரு திறமையையோ கலைஞனையோ அழிக்க முடியாது என்பார்.
இது முற்றிலும் உண்மை.அதாவது எப்போது திறமைசாலிகள் தங்களை தமது திறமையை முழுமையாக நம்பி தனக்கு முன்னால் இருப்பவரை விட முயற்சியுடன்,தன்னைத்தானே மெரூகூட்டி முன்னுக்கு வரவேண்டும் என்று நினைப்பாரோ அப்போது அவர் மற்றவரைப் பற்றிக் கவலைப்படவும் மாட்டார் மற்றவர் திறமைகளை மதிக்கத் தவறவும் மாட்டார்.
எனவே முதலில் (ஏதோவொரு வகையில்) இவர்களிடம் உருவாகும், பொறாமையை உருவாக்கும் தாழ்வு மனப்பாண்மை ஒழியுமானால் சந்தியா விரும்புவது போன்று ஒரு காலம் உருவாகும்.
ஆனால்....? நடக்குமா என்று பார்த்தால்,வாய்ப்புக்கள் குறைவாகத்தான் இருக்கிறது.
:: <b>give respect and take respect </b>::
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>

