Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சிந்தனைகள்!
#1
* தன்னடக்கமே வலிமை; அமைதியே ஆற்றல். —கன்பூஷியஸ்.

* கடினமான வேலையை செய்து முடிப்பவர்கள் வீரர்கள். —மில்டன்.

* சாதுரியம் இல்லாமல் நீங்கள் எதையும் கற்றுக் கொள்ள முடியாது. —டிஸ்ரேலி.

* மனிதர்களிடம் கருணை காட்டாதவர்களுக்கு இறைவனும் கருணை காட்டுவதில்லை. —சேத்ரஞ்சர்.

* உழைப்புதான் எல்லா செல்வங்களுக்கும், மதிப்புகளுக்கும் மூலம். —கார்ல் மார்க்ஸ்.

* ஒரு கொள்கைக்காக துன்பத்தை ஏற்றுக் கொண்ட பிறகு பின் வாங்கக் கூடாது. —ராஜாஜி.

* நல்ல நம்பிக்கையே நிம்மதியை அளிக்கும். —நார்மன் வின்சென்ட்.

* நீ வீணாக்கும் ஒவ்வொரு நொடியும் உன்னை வறுமைக்குள் தள்ளிவிடும். —இங்கர்சால்.

* உங்களை முதலில் கட்டுப்படுத்துங்கள்; பிறகு, உலகமே உங்கள் வசமாகும். —தோரோ.

* அரைகுறை பண்பாடு ஆடம்பரத்தை விரும்பும்; நிறைந்த பண்பாடு எளிமையை விரும்பும். —போவீ.

* மனிதனின் அதிர்ஷ்டம் அவன் நடத்தையில் தான் இருக்கிறது. —இங்கர்சால்.

* கர்வம் பிடித்தவன் கவுரவத்தை இழக்கிறான். —ஷேக்ஸ்பியர்.

* உழைப்பு, மூன்று தீமைகளை களைகிறது. அவை, பொழுது போகாமை, கெட்ட பழக்கம், வறுமை. —வால்டேர்.

* மூடனுக்கு அறிவுரை கூறினால் நமக்குத் தான் கேடு வரும். —பஞ்ச தந்திரம்.

* கஞ்சன் எப்போதுமே பிச்சைக்காரன் தான். —லவேட்டர்.

* வேலையை விட அதிக களைப்பைத் தருவது சோம்பல். —ஆவ்பரி.

* தன்னைத் தானே ஆளாதவன் தனக்குத் தானே பகைவன். —கதே.

* உழைப்பும், நேர்மையும் உயர்வுக்கு வழிகள். —நெப்போலியன்.

* உடலில் அணியும் உடையைவிட, மேலானது முகத்தில் அணியும் மலர்ச்சி. —ரூஸ்வெல்ட்.

* உழைப்பால் உடல் நலமும், உடல் நலத்தால் உள்ள நிறைவும் உண்டாகும். —பியாட்டி.

* எதையும் தாங்குபவன் இறுதியில் வெல்வான். —பெர்சியஸ்.

* முடியுமானால் பிறரை விட அறிவாளியாக இரு; ஆனால், அதை அவர்களிடம் சொல்லாதே. —ஸபர்ஜியன்.

நன்றி: தினமலர்
[i][b]
!
Reply


Messages In This Thread
சிந்தனைகள்! - by சாமி - 10-21-2003, 08:56 PM
[No subject] - by Kanakkayanaar - 10-23-2003, 09:15 AM
[No subject] - by kuruvikal - 10-23-2003, 11:11 AM
[No subject] - by சாமி - 10-25-2003, 07:52 PM
[No subject] - by சாமி - 10-29-2003, 08:33 PM
[No subject] - by சாமி - 11-16-2003, 06:07 PM
[No subject] - by சாமி - 11-22-2003, 11:10 PM
[No subject] - by சாமி - 01-02-2004, 01:44 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)