08-13-2005, 06:42 PM
5
தமிழ்த் தொடர்களின் மையப் புள்ளிகளாக இயங்குவது இரண்டு. ஒரு மையப் புள்ளி, பழிவாங்கும் உணர்வு. இந்த உணர்வைப் பலமுறை கசக்கிப் பிழிந்து தோய்த்து உலர்த்தியாகிவிட்டது. மிச்சம் இருப்பது கந்தலிலும் கந்தல். ஆனால் கந்தலே இந்தத் தொடர்களைவிடாமல் பார்க்கும் பெண்களுக்குப் போதும் என்று தயாரிப்பாளர்கள் நினைக்கிறார்கள்.
மற்றொரு மையப் புள்ளி, பெண்ணின் கருப்பை.
தமிழ் மெகா தொடர்கள் அனைத்தும் பெண்ணின் கருப்பையைச் சுற்றிச் சுற்றி வருபவை. கருத்தரித்த, குழந்தை பெற்ற பெண்ணின் வாழ்க்கையில் நடக்கும் அவலங்களைப் பல மடங்கு மிகைப்படுத்திக் காட்டுபவை. பெண்ணைச் சந்தை நடுவில் நிறுத்தி மனத்தளவில் துகிலுரிந்து எவ்வளவு தூரம் அவளை அவமானப்படுத்த முடியுமோ அவ்வளவு தூரம் அவமானப்படுத்துபவை. தமிழுக்காகவே வாழ்வதாகச் சொல்லிக்கொள்பவர்கள், அவர்கள் தயவில் நடைபெறும் தொலைக்காட்சி நிறுவனங்கள் மக்களுக்கு விடாது நஞ்சை அளித்துக்கொண்டிருப்பதைக் கண்டுகொள்ளாமல் இருப்பது பற்றி எனக்கு எந்த வியப்பும் இல்லை. ஆனால் பெண்ணியத்தைத் தூக்கிப் பிடிப்பதாகக் கூறிக்கொள்பவர்கள் இத்தகைய தொடர்களைப் பற்றி ஏதும் சொல்லாமல் மெüனமாக இருப்பது வியப்பைத் தருகிறது.
ஒரு நாள் கோபம் தாங்க முடியாமல் ஒரு புகழ்பெற்ற பெண் கவிஞர் ஒருவருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். இத்தகைய அவமானங்களை எப்படிச் சகித்துக்கொள்கிறீர்கள் என்று கேட்டேன். அவர் நான் இந்தத் தொடர்களைப் பார்ப்பதே இல்லை என்று சொன்னார். பார்க்காமல் இருப்பது தீர்வு ஆகும் என்று எனக்குத் தோன்றவில்லை.
தமிழ் மொழிமீதும் தமிழ்க் கலாச்சாரம்மீதும் தமிழ்ப் பெண்கள்மீதும் அக்கறை கொண்டவர் அனைவரும் ஒன்று சேர்ந்து குரல் கொடுக்கவேண்டிய காலம் வந்துவிட்டது. பின்நவீனத்துவம் மற்றும் முன், இடை நவீனத்துவங்களுக்குக் கொடி பிடிப்பது, கட்டுடைப்பது, இலக்கிய எதிரியின் பற்களை உடைப்பது, யதார்த்த இலக்கியத்திற்குப் பாடை கட்டுவது போன்ற வேலைகளை இலக்கியவாதிகள் சிறிது தள்ளிவைத்துக் கொள்ள வேண்டும். தமிழுக்கும் தமிழ்ப் பெண்களுக்கும் இன்று மிகப் பெரிய எதிரிகள் மெகா தொடர்களும் அவற்றை மனசாட்சியே இல்லாமல் விற்றுக்கொண்டிருப்பவர்களும்தான்.

<b> . .</b>