10-21-2003, 06:23 PM
அதிகம் அலட்டிக்கொள்ளாத அஜீவன், அரட்டையடிக்கும் குருவிகளென ஆளாளுக்கு அள்ளித்தெளிக்கும் கருத்துக்கள் ............... சுப்பர் இவ்வளவு காலமாக உங்கள் சிந்தனைகளுக்கெல்லாம் அணைபோட்டு வைத்ததேனோ?. களம் உண்மையிலேயே இப்பத்தான் ஒரு ஜனரஞ்சகமான பக்கமாக மாறிவருகிறது. வெறும் அலட்டல்களாகவோ அன்றி உயர் இலக்கியவாதிகளுக்கான பக்கமாகவோ இல்லாமல் சாதாரண வாசகர்களையும் கவரும் விதத்தில் கருத்துக்களும் கலகலப்பும் சரியானவிகிதத்தில் கலந்து தித்திக்கின்றதே. களமாடும் அனைவருக்கும் நன்றிகலந்த வாழ்த்துக்கள்

