08-13-2005, 01:58 PM
கதிர்காமர் கொலை: தமிழ் தம்பதியினர் கைது
[சனிக்கிழமை, 13 ஓகஸ்ட் 2005, 19:16 ஈழம்] [ம.சேரமான்]
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் கொலை தொடர்பாக தமிழ் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கதிர்காமரின் இல்லம் அருகே வசித்து வந்த கொழும்பு வர்த்தக நிறுவனம் ஒன்றில் நிர்வாக மேலாளரான லக்ஸ்மன் தளையசிங்கம் (வயது 58) மற்றும் அவரது துணைவியார் விபியன் செல்வலோஜினி தளையசிங்கம் ஆகியோர் இன்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
தளையசிங்கத்தின் மாடியிலிருந்துதான் கதிர்காமர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக சிறிலங்கா காவல்துறையினர் கூறுகின்றனர். ஆனால் பெரும்பகுதி நேரம் மாடிப் பகுதி ப+ட்டப்பட்டிருப்பதால் இந்தத் தாக்குதல் குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என்று இருவரும் விளக்கம் அளித்துள்ளனர்.
தளையசிங்கம் இல்லத்தின் மாடியில் அமைந்துள்ள குளியலறை யன்னல்கள் உடைக்கப்பட்டு அதன் வழியே கதிர்காமர் மீது குறிபார்த்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
அந்த அறையிலிருந்து இருவேறு கைரேகைகளையும் காவல்துறையினர் கைப்பற்றி உள்ளனர். கதிர்காமரின் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி 8.3 மில்லி மீற்றர் வகை என்றும் கூறப்படுகிறது.

[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>