08-13-2005, 12:00 PM
<b>கதிர்காமர் படுகொலைக்கு இந்தியா கடும் கண்டனம்!</b>
சனி, 13 ஆகஸ்ட் 2005
இலங்கையின் அயலுறவு அமைச்சராக இருந்த லக்ஷ்மண் கதிர்காமர் சுட்டுக்கொலை செய்யப்பட்டதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் ஒற்றுமைக்கும், பாதுகாப்பிற்கும் நிலையான, நேர்மையான ஆதரவினை இந்தியா எப்போதும் அளிக்கும் என்றும் உறுதியளித்துள்ளது.
லக்ஷ்மண் கதிர்காமர் படுகொலை குறித்து இந்திய அயலுறவு அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிக்கையில், இந்த பயங்கரவாத நடவடிக்கைக்கு காரணமானவர்கள் நியாயத்தின் முன்பு நிறுத்தப்பட வேண்டும். நமது அண்டை நட்பு நாடானா இலங்கையில் ஏற்பட்டுள்ள அவசர நிலைக்குத் தேவையான முழு ஆதரவையும், உதவிகளையும் இந்தியா அளிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
கதிர்காமர் படுகொலை செய்யப்பட்டது அதிர்ச்சியையும், கவலையையும் அளிக்கின்றது என்று இந்தியா கூறியுள்ளது. இந்த படுகொலை ஒரு பயங்கரவாதச் செயலாகும். இதனை இந்தியா கடுமையாக கண்டிப்பதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையின் அரசியல் நிலைத்தன்மைiயும், ஒற்றுமையும் சீர்குலைக்கும் சக்திகளை அழிப்பதில் இலங்கை அரசு மற்றும் மக்களுடன் இணைந்து இந்தியாவும் போராடும் என்று அந்த அறிக்கை கூறுகிறது.
நேற்று இரவு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் கொழும்புவில் உள்ள தனது இல்லத்திற்கு திரும்பிய போது மர்ம மனிதன் ஒருவன் காரில் இருந்து இறங்கிய கதிர்காமரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில், தலையிலும், மார்பிலும் குண்டுகள் பாய்ந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட கதிர்காமர், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
(வெப்புலகம்)
<b>பிள்ளையையும் கிள்ளி தொட்டிலயும் ஆட்டீனமோ </b>:?:

::