08-13-2005, 10:53 AM
பொதுக்கட்டமைப்பு விடயத்தில் இறுதிக்காலங்களில் சந்திரிக்காவிற்கும் கதிர்காமாருக்கும் இடையில் விரிசல் அதிகரித்து வந்தன. இதற்கு உதாரணம் அண்மைக்காலங்களில் சந்திரிக்கா பங்கு பற்றி உத்தியோக புூர்வ வெளிவிவகார நிகள்வுகளில் வெளிவிவகார அமைச்சர் என்றரீதியில் கதிர்காமர் பங்கு பற்றாமை. ஆழிப்பேரலை நடந்ததிலிருந்து 4-5 மாதங்கள் வரை அதாவது சித்திரை வைகாசி வரை கதிர்காமர் பெருமளவில் பத்திரிகையாளர் மகாநாடு, அறிக்கைகள், சந்திப்புக்கள் பேட்டிகள் என்பவற்றில் பங்கு பற்றி சர்வதேச சமூகம் ஆதரிக்கிற பொதுக்கட்டமைப்புக் எதிராக கருத்துரைத்து இலங்கை அரசை பல சங்கடங்களிற்குள்ளாக்கியவர். அவல காலத்திலும் சம்பந்தம் இல்லாதாவாறு பலரின் எதிர்பார்ப்புக்களை சிதைத்து ஆச்சரியத்துக்குள்ளாக்கும் கருத்துக்களாக "peace processe is now very much in the back burner" மொழிந்தவர். புலிகளின் அரசியல் விவகார குழுவின் ஜரோப்பிய பயணத்திற்கு முட்டுக்கட்டை போட சிறுவர்கள் புலிகள் இயக்கத்தில் இணைக்கப்படுவதாக ஒரு விசமப்பிரச்சாரம் செய்ய முனைந்து படுதோல்வி அடைந்தவர். சளைக்காமல் புலிகளின் சுற்றுப்பயணத்தின் சமகாலத்தில் தானும் பிரித்தானியா வந்து வான்புலிகள் விவகாரத்தை ஊதிப் பெருப்பிக்க முனைந்து படுதேல்வி கண்டவர். மொத்தத்தில் மேற்குலக அரச இராஜதந்திர வட்டாரங்களின் கவனிப்பு செவிமடுப்பை இழந்த ஒரு பயனற்ற, இடக்கு முடக்கான மிதவாதக் கருத்துக்களால் மட்டுமே கவனிப்பை பெற்ற வெளிவிவகார அமைச்சராக அண்மைக்காலங்களில் இருந்தார்.
இறுதியில் சந்திரிக்காவின் பிறந்தநாள் வாழ்த்து என்ற சாட்டில் பத்திரிகைக்கு எழுதிய போது சந்திரிக்காவின் அண்மைக்கால அரசியல் தீர்மானங்கள் முடிவுகளில் தனது அதிருப்தியை தெரிவித்திருந்தது அரசில் இருந்து எந்தளவிற்கு ஓரம்கட்டப்பட்டிருந்தார் என்பதை தெளிவாக்கியது.
இறுதியில் சந்திரிக்காவின் பிறந்தநாள் வாழ்த்து என்ற சாட்டில் பத்திரிகைக்கு எழுதிய போது சந்திரிக்காவின் அண்மைக்கால அரசியல் தீர்மானங்கள் முடிவுகளில் தனது அதிருப்தியை தெரிவித்திருந்தது அரசில் இருந்து எந்தளவிற்கு ஓரம்கட்டப்பட்டிருந்தார் என்பதை தெளிவாக்கியது.

