08-13-2005, 08:59 AM
குற்றச்சாட்டை விடுதலைப் புலிகள் மறுப்பு
[சனிக்கிழமை, 13 ஓகஸ்ட் 2005, 13:56 ஈழம்] [கிளிநொச்சிலிருந்து செ.தனோஜன்]
சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரின் கொலை தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் மீது குற்றம் சுமத்துவதை விடுதலைப் புலிகள் கண்டித்துள்ளனர்.
ஊடகமொன்றுக்கு வழங்கிய பேட்டியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
லக்ஸ்மன் கதிர்காமர் கொலை செய்யப்பட்ட இடமானது மிகவும் பாதுகாப்புக்குட்படுத்தப்பட்ட பிரதேசமாகும். இவ்வாறான பாதுகாப்பு நிறைந்த பகுதியில் வெளியார் தாக்குதல் நடத்தி கொலை செய்வது என்பது மிகவும் கடினமானதாகும்.
இக்கொலையானது கடினமானதும் மிகவும் பலத்த சந்தேகத்தையும் கிளப்புகின்றது. தெற்கில் அரசியல் குழப்பம் தீவிர அடைந்துள்ள இந்நிலையில் இத்தாக்குதல் இடம்பெற்றதானது பல்வேறு ஊகங்களை ஏற்படுத்தியுள்ளது.
உண்மை நிலைகளை அறிந்த பின்பு தான் எமது கருத்துக்களை வெளிப்படுத்த முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.