Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
"துரையப்பா" முதல் "கதிர்காமர்" .....
#1
எமது தமிழ்த் தேசியத்திற்கான எழுச்சி ஏற்பட்ட காலம் தொடக்கம் இன்றுவரை, இவ்வெழுச்சியை அடக்குவதற்காக சிங்கள இனவாத அரசு பல தமிழின அழிப்புகள் மூலம் முயற்சித்துவரும் வேளையில், அவர்களிற்கு எம் தேசிய எழுச்சியை காட்டிக்கொடுக்க காலத்திற்கு காலம் எம்மினத்தினுள்ளேயே உள்ள சில ஈனப்பிறவிகள் பதவிகள், சலுகைகளுக்காக தோற்றமெடுத்து வருகிறார்கள். அன்று தந்தை செல்வாவினால் தோற்றுவிக்கப்பட்ட இவ்வேள்வியை காட்டிக்கொடுக்க ஓர் துரையப்பா தோற்றமெடுத்தான், தொடர்ச்சியாக தாங்களும் தமிழ் மக்களுக்காகத்தான் போராடுகிறோம் எனும் தோற்றப்பாட்டில் அமிர்தலிங்கம், சிறீ சபாரட்னம், உமா மகேஸ்வரன், நீலன் திருச்செல்வம் ... என்று வெளிக்கிட்ட களைகள் காலத்திற்கு காலம் களையப்பட்டன. இவற்றை எல்லாம் மிஞ்சும் விதத்தில் 90களில் தீடீரென தோற்றமெடுத்த ஓர் நச்சுக்களையே "கதிர்காமர்" ஆவார்.

சந்திரிக்கா அரசினால் இன அழிப்புகள் உச்சம் கொண்டிருந்த காலகட்டத்தில் நடைபெற்ற "செம்மணிப் புதைகுழிகள், நாகர் கோவில் பாடசாலை மீதான குண்டு வீச்சு, கோவில்கள்-தேவாலயங்கள் மீதான குண்டு வீச்சுக்கள், கிளாலிப் படு கொலைகள்,, ......" எனத் தொடர்ந்த நாகரீக உலகே வெட்கித் தலை குனியும் படுகொலைகளை கூசாது பொய்களை கட்டவிழ்த்தும், அப்படியான சம்பவங்கள் நடை பெறவில்லையென மறுத்தும், சில சம்பவங்களை நியாயப்படுத்தியும் உலகெங்கும் எம்மின அழிவில் குளிர் காய்த்து கொண்டிருந்தார். சமாதான காலத்தில் தமிழர்கள் மீது நடைபெறும் நிழல் யுத்தத்தை ஆதரித்தும், நோர்வேயின் சமாதான முயற்சிகளை பகிரங்கமாக எதிர்த்தும், தனது எஜமானர்களுக்கான விசுவாசங்களை தொடர்ச்சியாக காட்டிக் கொண்டு வந்தவராவார். இதன் உச்சக்கட்டமாக சுனாமியால் அழித்தொழிந்த வடக்கு-கிழக்கு கரையோரப் பகுதிகளுக்கான சர்வதேசத்தால் வழங்கப்படும் நிதியை கையாளுவதற்காக ஏற்படுத்த முற்பட்ட கட்டமைப்பையும் எதிர்தது மட்டுமல்லாது, மறைமுகமாக "ஜே.வி.பி" இனவாதக் கும்பல் மூலம் தடுத்து நிறுத்தினார்.

உரிய காலத்தில் இந்நச்சுக் களையானது களையப்பட்டுள்ளது. ஆனால் இன்று எம்முன்னுள்ள கேள்வி என்னவென்றால் கதிர்காமருடன் துரோகங்கள் நின்று விடப் போகின்றதா??? இன்னும் எம்மத்தியில் நச்சு எச்சங்களான "டக்லஸ், ஆனந்த சங்கரி, சித்தார்த்தன், பரந்தன் ராசன், வரதராஜப் பெருமாள், கருணா, ...." என்று சில களைகள் எஞ்சியுள்ளன. இந்த எஞ்சியிருக்கும் நச்சுக் களைகளும் களையப்படும் வரை, எம்மினத்தின் விடிவிற்கான பாதையில் பல தடங்கல்கள், இடையூறுகள் வந்து கொண்டேதானிருக்கும்.
"
"
Reply


Messages In This Thread
"துரையப்பா" முதல் "கதிர்காமர்" ..... - by Nellaiyan - 08-12-2005, 10:33 PM
[No subject] - by muniyama - 08-13-2005, 04:06 PM
[No subject] - by cannon - 08-28-2005, 09:17 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)