![]() |
|
"துரையப்பா" முதல் "கதிர்காமர்" ..... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: அரசியல் / பொருளாதாரம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=36) +--- Thread: "துரையப்பா" முதல் "கதிர்காமர்" ..... (/showthread.php?tid=3677) |
"துரையப்பா" முதல் "கதிர்காமர்" ..... - Nellaiyan - 08-12-2005 எமது தமிழ்த் தேசியத்திற்கான எழுச்சி ஏற்பட்ட காலம் தொடக்கம் இன்றுவரை, இவ்வெழுச்சியை அடக்குவதற்காக சிங்கள இனவாத அரசு பல தமிழின அழிப்புகள் மூலம் முயற்சித்துவரும் வேளையில், அவர்களிற்கு எம் தேசிய எழுச்சியை காட்டிக்கொடுக்க காலத்திற்கு காலம் எம்மினத்தினுள்ளேயே உள்ள சில ஈனப்பிறவிகள் பதவிகள், சலுகைகளுக்காக தோற்றமெடுத்து வருகிறார்கள். அன்று தந்தை செல்வாவினால் தோற்றுவிக்கப்பட்ட இவ்வேள்வியை காட்டிக்கொடுக்க ஓர் துரையப்பா தோற்றமெடுத்தான், தொடர்ச்சியாக தாங்களும் தமிழ் மக்களுக்காகத்தான் போராடுகிறோம் எனும் தோற்றப்பாட்டில் அமிர்தலிங்கம், சிறீ சபாரட்னம், உமா மகேஸ்வரன், நீலன் திருச்செல்வம் ... என்று வெளிக்கிட்ட களைகள் காலத்திற்கு காலம் களையப்பட்டன. இவற்றை எல்லாம் மிஞ்சும் விதத்தில் 90களில் தீடீரென தோற்றமெடுத்த ஓர் நச்சுக்களையே "கதிர்காமர்" ஆவார். சந்திரிக்கா அரசினால் இன அழிப்புகள் உச்சம் கொண்டிருந்த காலகட்டத்தில் நடைபெற்ற "செம்மணிப் புதைகுழிகள், நாகர் கோவில் பாடசாலை மீதான குண்டு வீச்சு, கோவில்கள்-தேவாலயங்கள் மீதான குண்டு வீச்சுக்கள், கிளாலிப் படு கொலைகள்,, ......" எனத் தொடர்ந்த நாகரீக உலகே வெட்கித் தலை குனியும் படுகொலைகளை கூசாது பொய்களை கட்டவிழ்த்தும், அப்படியான சம்பவங்கள் நடை பெறவில்லையென மறுத்தும், சில சம்பவங்களை நியாயப்படுத்தியும் உலகெங்கும் எம்மின அழிவில் குளிர் காய்த்து கொண்டிருந்தார். சமாதான காலத்தில் தமிழர்கள் மீது நடைபெறும் நிழல் யுத்தத்தை ஆதரித்தும், நோர்வேயின் சமாதான முயற்சிகளை பகிரங்கமாக எதிர்த்தும், தனது எஜமானர்களுக்கான விசுவாசங்களை தொடர்ச்சியாக காட்டிக் கொண்டு வந்தவராவார். இதன் உச்சக்கட்டமாக சுனாமியால் அழித்தொழிந்த வடக்கு-கிழக்கு கரையோரப் பகுதிகளுக்கான சர்வதேசத்தால் வழங்கப்படும் நிதியை கையாளுவதற்காக ஏற்படுத்த முற்பட்ட கட்டமைப்பையும் எதிர்தது மட்டுமல்லாது, மறைமுகமாக "ஜே.வி.பி" இனவாதக் கும்பல் மூலம் தடுத்து நிறுத்தினார். உரிய காலத்தில் இந்நச்சுக் களையானது களையப்பட்டுள்ளது. ஆனால் இன்று எம்முன்னுள்ள கேள்வி என்னவென்றால் கதிர்காமருடன் துரோகங்கள் நின்று விடப் போகின்றதா??? இன்னும் எம்மத்தியில் நச்சு எச்சங்களான "டக்லஸ், ஆனந்த சங்கரி, சித்தார்த்தன், பரந்தன் ராசன், வரதராஜப் பெருமாள், கருணா, ...." என்று சில களைகள் எஞ்சியுள்ளன. இந்த எஞ்சியிருக்கும் நச்சுக் களைகளும் களையப்படும் வரை, எம்மினத்தின் விடிவிற்கான பாதையில் பல தடங்கல்கள், இடையூறுகள் வந்து கொண்டேதானிருக்கும். - muniyama - 08-13-2005 அன்று அம்மாக்கு துரையப்பா இன்று மகளுக்கு கதிர்காமர் - cannon - 08-28-2005 சிங்கள பேரினவாத நலன்களுக்காகவே தனது புலமையை முற்றாக அர்ப்பணித்தார் * மறைந்த வெளிநாட்டமைச்சர் பற்றிய ஒரு பார்வை... -தாயகன்- தமிழர்கள் தமது உரிமைகளை பெற்று விடக் கூடாதென்பதில் சிங்களப் பேரினவாதிகளை விட முனைப்பாக செயற்பட்டு, காட்டிக் கொடுப்பது தான் விசுவாசம் என்ற கோட்பாட்டை சிங்களவர்களுக்கு புரிய வைத்த, "தமிழர்களுக்கெதிரான துரோகத்தனத்தின் தேசபிதா"வான வெளிநாட்டு விவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமருக்கு தாய்நாட்டின் திரு மகனென்ற புகழஞ்சலியுடன் பிரியாவிடை கொடுத்து கண்ணீர் விட்டுக் கதறிய சிங்கள தேசம், அடுத்த விசுவாசியான தமிழனைத் தேடும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது. வெளிநாட்டமைச்சர் கதிர்காமர் கொல்லப்பட்டதற்கு விடுதலைப் புலிகளே காரணமென அரசாங்கமும், அரசின் உள்வீட்டுச் சதியே காரணமென விடுதலைப் புலிகளும், சர்வதேச ரீதியில் புலிகள் பெற்றுள்ள வெற்றியை சிதறடிக்க கதிர்காமரை அரசாங்கமே படுகொலை செய்து விட்டு புலிகள் மீது பழியைப் போட முயல்வதாக அவதானிகளும், ஜே.வி.பி.யினரின் சில கருத்துகளுக்கு கதிர்காமர் உடன்பட மறுத்ததால் ஜே.வி.பி.யினர் தான் சந்தர்ப்பம் பார்த்து பழி தீர்த்ததாக சிலரும் மாறிமாறி குற்றம் சாட்டி வருகின்றார்கள். கதிர்காமர் யாரால் கொல்லப்பட்டிருந்தாலும் அதனால் தமிழ் சமுதாயத்துக்கு எவ்வித பாதிப்புமில்லை. முற்று முழுதாக பாதிக்கப்பட்டது சிங்கள பேரினவாதமேயென்பதால் கதிர்காமரின் கொலைச் சூத்திரதாரியை கண்டுபிடிக்க வேண்டிய தேவை தமிழருக்கு ஏற்படவில்லை. கதிர்காமர் பிறப்பில் ஒரு தமிழனாகவிருந்தும் அவர் தன்னின மக்களுக்கு செய்த துரோகத்தனங்கள், சகுனி வேலைகள், காட்டிக் கொடுப்புகள் போன்றவற்றையே கதிர்காமர் தொடர்பில் தமிழ் மக்கள் நினைவில் வைத்துள்ளனர். தமிழரின் உரிமைப் போராட்டங்களை ஒடுக்குவதற்காக சிங்களப் பேரினவாதத்தால் பயன்படுத்தப்பட்ட தமிழ்ப் பகடைக்காய்களில் கதிர்காமரே முதன்மையானவர். தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகளான விடுதலைப் புலிகளை சர்வதேச ரீதியில் ஒடுக்க வேண்டுமென்பதற்காக இரவு பகல் பாராது அரும்பாடுபட்டவர். உலக நாடுகளுக்குச் சென்று பொய்ப் பிரசாரங்களை மேற்கொண்டு தானும் ஒரு தமிழன் என்ற முத்திரையை பல வீனத்தின் பலனாகப் பயன்படுத்தி புலிகளுக்குச் சில நாடுகளில் தடை முத்திரை குத்த வைத்த பெருமைக்குரியவர். புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்ட போது போராளியொருவர் தனது சிறுநீரகத்தைத் தானமாக வழங்கினார். அதேபோன்று கதிர்காமர் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்ட போது பௌத்த பிக்கு ஒருவர் தனது சிறுநீரகத்தைத் தானமாக வழங்கி கதிர்காமரின் உயிரைக் காப்பாற்றி அவரின் துரோகத்தனங்கள் தொடர உதவி செய்தார். கதிர்காமர் கொல்லப்படும் போது கூட அவர் ஈரல் புற்றுநோயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. சிங்களத்தின் தேவைக்கு அதிகமாக சேவை செய்த அடிமையான கதிர்காமர் குறித்து 1998 ஆம் ஆண்டு, போரில் பலியான படையினரை நினைவு கூருமொரு நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க பின்வருமாறு கூறுகிறார். `.... இவ்வளவு நாட்களும் தமிழரின் போராட்டத்தில் நியாயம் இருப்பதாகவே உலக நாடுகள் பல கருதி வந்தன. இதன் காரணமாக நாம் தமிழரின் போராட்டம் குறித்துக் கூறிய கருத்துகளை அவை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால், எங்கள் வெளிநாட்டமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் சளையாது மேற்கொண்ட அரும்பெரும் பணி காரணமாக அந் நாடுகளின் போக்கில் எம்மால் மாற்றத்தை ஏற்படுத்தி வெற்றி காண முடிந்தது...' இவ்வாறு ஜனாதிபதியால் புகழ் பாடப்பட்ட, தேசியப் பாதுகாப்புச் சபையில் அங்கம் வகித்த ஒரேயொரு தமிழரான கதிர்காமரை, நீலன் திருச்செல்வமே ஜனாதிபதிக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். நீலன் திருச்செல்வம் தமிழினத்துக்கு செய்த துரோகத்தனத்தின் வித்தாகவே கதிர்காமரும் செயற்பட்டார். 1994 ஆம் ஆண்டு சந்திரிகா ஜனாதிபதியான போது, இலங்கையில் தமிழ் மக்களுக்கு பிரச்சினைகள் உண்டென துணிவுடன் கூறி தமிழ் மக்களிடம் பெரு நம்பிக்கையைப் பெற்றார். அத்துடன், புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இனப் பிரச்சினைக்கு தீர்வுகாணப் போவதாக கூறிய சந்திரிகா, தனது அமைச்சரவையில் தமிழரென பிரசாரப்படுத்தி தமிழ் தெரியாத அமைச்சராக, நீலன் திருச்செல்வம் அறிமுகப்படுத்திய நச்சுவிதையான கதிர்காமரை நியமித்தார். சமாதான முயற்சியின் நல்லெண்ண நடவடிக்கையே கதிர்காமரின் நியமனமென தமிழர்கள் நினைத்த போது அது தலைகீழாக மாறியது. தமிழரின் விடுதலைப் போராட்டத்தை நசுக்கும் கொடிய சக்தியாகவே கதிர்காமர் செயற்படத்தொடங்கினார். தமிழர் கையைக் கொண்டே தமிழர் கண்ணைக் குத்தும் பொறுப்பை ஏற்றுக் கொண்ட கதிர்காமர் அதனைக் கனகச்சிதமாக நிறைவேற்றத் தொடங்கினார். தமிழ் மக்களின் போராட்டத்தை ஏளனப்படுத்தி, அதனைப் பயங்கரவாத நடவடிக்கையாக உலகுக்கு பிரசாரம் செய்து, சர்வதேச ஆதரவுடன் தமிழ் மக்களுக்கெதிரான போரைத் தீவிரமாக்கவும், புலிகளை அழிக்கவும் ஒரு தமிழரைப் பயன்படுத்த நினைத்த சதியின் காரணமாகவே கதிர்காமருக்கு வெளிநாட்டு அமைச்சர் பதவி வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கதாகும். தமிழ் மக்களது நியாயமான உரிமைகளுக்கெதிராக சர்வதேசத்தில் பிரசாரம் செய்வதில் மட்டும் கதிர்காமரின் பணி மட்டுப்பட்டிருக்கவில்லை. இலங்கைப் படைத் தரப்புக்கு ஆயுதங்களை உலக நாடுகளிடமிருந்து பெற்றுக்கொடுப்பதற்கும், பாதுகாப்பு உடன்படிக்கைகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கும் கதிர்காமர் முன்னின்று முயற்சிகளை மேற்கொண்டு வெற்றியும் பெற்றார். இலங்கை இராணுவம் 1995 ஆம் ஆண்டு யாழ் குடாநாட்டைக் கைப்பற்றிய போது, ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் இடம்பெயர்ந்து அகதிகளாக வன்னிக்குச் சென்று மரங்களின் கீழ் உணவின்றி, உடுக்க உடையின்றி உயிர் வாழப் போராடியபோது அக்காலகட்டத்தில் ஐ.நா. செயலாளராகவிருந்த பூட்ரெஸ்பூட்ரெஸ் காலி, தமிழர்கள் படும் துன்பங்களைத் தீர்க்க சர்வதேச நாடுகளை உதவி புரியும்படி கோரிக்கை விடுத்தார். இக் கோரிக்கையை கடுமையாக எதிர்த்த வெளிநாட்டமைச்சரான கதிர்காமர் `இது உள்நாட்டு விடயம்' எனக்கூறி அந்த மனிதாபிமான உதவியைத் தடுத்து நிறுத்தினார். அதேபோன்று 1995 ஆம் ஆண்டு நவாலி தேவாலயம் மீது இலங்கை விமானப் படையினர் குண்டு வீசியதில் 250 இற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். விமானப் படையின் இந்த காட்டுமிராண்டித்தனமான செயலை உலகிற்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் எடுத்துக் காட்டியபோது, செஞ்சிலுவைச் சங்கத்தின் செயலை கதிர்காமர் கடுமையாக கண்டனம் செய்தார். முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியிலுள்ள சந்தை மீது இலங்கை விமானப் படையின் கிபிர் குண்டு வீச்சு விமானங்கள் நடாத்திய தாக்குதலில் 25 இற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டபோது, அதை ஐ.நா. கடுமையாக கண்டித்தது. இதனால் விசனமடைந்த கதிர்காமர், நுளம்புக்கு மருந்தடிக்க வந்தால் அந்த வேலையை மட்டும் பாருங்கள். உள்நாட்டு விவகாரங்களில் தலையிட உங்களுக்கு எந்த உரிமையுமில்லையெனக் கூறி, தமிழ் மக்கள் மீதான படுகொலைத் தாக்குதலை நியாயப்படுத்தினார். 1996 ஆம் ஆண்டு மே மாதம் 6 ஆம் திகதி ஐ.நா.சபையின் சிறுவர்களுக்கான பிரதிநிதி ஒலரா ஒட்டுணுவை இலங்கைக்கு வரவழைத்து புலிகள் சிறுவர்களை படையில் சேர்ப்பதாக பொய்களைக்கூறி புலிகள் மீது அழுத்தம் கொடுக்க வைத்தார். 1998 ஆம் ஆண்டு மே மாதம் இந்தியாவிற்கும் சீனாவிற்குமிடையே முறுகல் நிலையேற்பட்டபோது, தரகராக செயற்பட தயாரென கூறிய கதிர்காமர், இதற்கு பிரதியுபகாரமாக இலங்கையரசுடன் இரு நாடுகளும் இணைந்து புலிகளை எதிர்க்க முன்வரவேண்டுமென்றார். 1998 ஆம் ஆண்டு 7 ஆம் மாதம் 8 ஆம் திகதி இடம்பெற்ற சார்க் நாடுகளின் கூட்டத் தொடரில் விடுதலைப் புலிகளை மிக மோசமாகச் சாடினார். அதேயாண்டு இடம்பெற்ற தென்னாபிரிக்க மாநாட்டில் தமிழ் மக்களை இழிவுபடுத்திப் பேசினார். 1999 ஆம் ஆண்டு இலங்கையின் இனப் பிரச்சினையில் எவரும் நடுநிலையாளர்களாக வருவதை தான் அனுமதிக்கப் போவதில்லையென கூறினார். அதேயாண்டு விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகரான அன்ரன் பாலசிங்கம் கடும் நோய்வாய்ப்பட்டிருந்தார். அவரை சிகிச்சைக்காக வெளிநாடு கொண்டு செல்ல புலிகள் சார்பாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மனிதாபிமான அடிப்படையில் அனுமதிகோரிய போது இந்தக் கதிர்காமரே அதை முற்றாக நிராகரித்தார். 2000 ஆம் ஆண்டு, இலங்கையரசு எவ்வளவு நிதியை செலவழித்தாவது புலிகளை அடியோடு அழித்துவிடுமென சவால் விட்டார். அத்தோடு, இந்தியாவிடமிருந்து 100 மில்லியன் அமெரிக்க டொலரை கடனாகப் பெற்று இலங்கைப் படைக்கு ஆயுதம் கொள்வனவு செய்தார். அதேயாண்டு கனடா சென்ற கதிர்காமர் இலங்கைத் தமிழர்களுக்கு கனடா அகதி அந்தஸ்து கொடுக்கக் கூடாதென கோரியதுடன், புலிகள் சர்வதேச மட்டத்தில் போதைவஸ்து வியாபாரம் செய்வதாகவும் பிரசாரம் செய்தார். இதேகாலப் பகுதியில் பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் பீற்றர் கெயினை இலங்கையில் சந்தித்த கதிர்காமர், பிரிட்டனில் புலிகளை தடை செய்யுமாறும் அனைத்து இலங்கைத் தமிழர்களையும் நாடு கடத்துமாறும் வேண்டினார். விடுதலைப் புலிகள் வெளிநாட்டுப் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புகள் வைத்திருப்பதாக பிரசாரம் செய்த கதிர்காமர், 2003 ஆம் ஆண்டு 4 ஆம் மாதம் 5 ஆம் திகதி உலக வங்கியிடம் 800 மில்லியன் டொலர்களை கடனாகப் பெற்று ஆயுதங்கள் கொள்வனவு செய்தார். துருக்கி நாட்டிடமிருந்து 7 மில்லியன் டொலர் பெறுமதியான ஆயுதங்கள் வாங்கப்பட்டன. அத்துடன், பயங்கரவாத ஒழிப்பு உடன்படிக்கையில் புலிகளுக்கெதிராக ஐ.நா.வில் ஒப்பமிட்டார். 2004 ஆம் ஆண்டு மே மாதம் 10 ஆம் திகதி அமெரிக்கா சென்ற கதிர்காமர், புலிகளை ஒழிக்க தமக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு மன்றாடினார். இதேவேளை, இலங்கையின் வடக்கு, கிழக்கிலுள்ள பலாலி, காங்கேசன்துறை, திருகோணமலை துறைமுகங்களை இந்தியாவிடம் பொறுப்பளிக்க வேண்டுமெனவும் இந்திய- இலங்கை ஒப்பந்தம் மீளவும் புதுப்பிக்கப்பட வேண்டும் எனவும் கோரியிருந்தார். இதே காலப்பகுதியில் தான் விடுதலைப் புலிகளுக்கெதிராக ஜப்பான் அரசுடன் இரகசியப் பேச்சொன்றையும் நடத்தியிருந்தார். 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி ஏற்பட்ட கடல்கோள் அனர்த்தத்தையடுத்து, உலக நாடுகளின் தலைவர்கள் பலர் இலங்கைக்கு விஜயம் செய்தனர். கடல்கோளால் பாதிக்கப்பட்ட தென்னிலங்கை பிரதேசங்களான காலி, மாத்தறை, பாணந்துறை போன்றவற்றை பார்வையிட்ட இவர்கள், புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு செல்ல எவ்வளவோ பிரயத்தனங்கள் மேற்கொண்ட போதிலும், அதற்கு கதிர்காமர் இடங்கொடுக்கவில்லை. ஐ.நா. செயலர் கொபி அனான், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதிகளான பில்கிளின்டன், ஜோர்ஜ் புஷ் ,இளவரசர் சாள்ஸ் ஆகியோர் கூட புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு செல்ல முயன்றபோதும் கதிர்காமர் விடவில்லை. புலிகளின் பகுதிக்கு செல்ல தனக்கு அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பில் கொபி அனான் பின்னர் தனது கவலையை வெளியிட்டார். அதைப் போன்றே பல நாட்டுத் தலைவர்களும் தமக்கு இலங்கையின் வெளிநாட்டமைச்சு அனுமதி வழங்கவில்லையென்பதை பகிரங்கமாக சுட்டிக்காட்டினர். அப்போது அரசில் அங்கம் வகித்திருந்த ஜே.வி.பி. யினர் கூட வெளிநாட்டுத் தலைவர்களை புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு செல்லவிடாது தடுத்த பெருமை கதிர்காமரையே சாருமென புகழ்பாடினர். வெளிநாடுகளின் தலைவர்கள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு சென்றால் அங்கு தனியரசொன்றுள்ளதையும், அப்பிரதேச மக்களின் நியாயமான உரிமைப் போராட்டத்தையும் உணர்ந்து விடுவார்களென்பதாலேயே தமிழரான கதிர்காமர் தடையுத்தரவு போட்டு சிங்களத்துக்கு சேவகம் செய்தார். விடுதலைப் புலிகளின் மட்டு.-அம்பாறை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் கௌசல்யனும் 4 உறுப்பினர்களும் இலங்கை இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து ஐ.நா. செயலர் கொபி அனான் கண்டன அறிக்கையொன்றை வெளியிட்டு கதிர்காமர் தனக்கு அனுமதி மறுத்ததற்கு பதிலடி கொடுத்த போது, வெகுண்டெழுந்த கதிர்காமர், கொபி அனான் தனது கண்டன அறிக்கையை வாபஸ் பெற வேண்டுமென வற்புறுத்தினார். கொபி அனான் கண்டனம் தெரிவித்தது பாரதூரமான தவறென பதில் கண்டன அறிக்கை விடுத்து தனது அடிமை சேவகத்துக்கு மேலும் அழகு சேர்த்தார். அதேபோன்று, உலக வங்கியின் இலங்கைக்கான பிரதிநிதி பீற்றர் ஹெரோல்ட், புலிகளின் கட்டுப்பாட்டில் சில பகுதிகள் இருக்கின்றதென்பதை ஏற்றுக்கொள்ள வேண்டுமென உண்மையைக் கூறிய போது, அவரின் கூற்றை மிகவும் கடுமையான முறையில் கண்டித்த கதிர்காமர், நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டி வருமெனவும் எச்சரிக்கை விடுத்தார். அத்தோடு, புலிகளுக்கு நிதிசேகரிக்கப்படுவதை தடை செய்யவும் வெளிநாடுகளில் புலிகளின் செயற்பாடுகளை முடக்கவும் பாராளுமன்றில் பல சட்ட மூலங்களை கொண்டு வந்தார். தமிழரின் உரிமைகள் தொடர்பான விடயங்களில் சிங்கள பேரினவாதம் சில விட்டுக்கொடுப்புகளை செய்ய முன் வந்த போதும், அதற்கு முட்டுக்கட்டைகளை போட்டுத் தடுத்து, தமிழர்கள் என்றுமே சிங்களவர்களுக்கு அடிமையானவர்களென கூறிப் பெருமைப்பட்டுக் கொண்டவர் கதிர்காமர். கடல்கோளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புனர்வாழ்வளிக்கவென பொதுக்கட்டமைப்பொன்றை ஏற்படுத்த உலக நாடுகள் முயன்ற போது அதனை கடுமையாக எதிர்த்த கதிர்காமர், தனது கையையும் மீறி பொதுக்கட்டமைப்பு கைச்சாத்திடப்பட்டு விட்டதனால் தனது மேதாவித்தனத்தை பயன்படுத்தி பொதுக்கட்டமைப்பை தற்போது பொய்க்கட்டமைப்பாக்கி, அதனால் பயனடையவிருந்த சிங்கள, தமிழ், முஸ்லிம் ஆகிய மூவின மக்களுக்கும் துரோகமிழைத்தார். கடல்கோள் அனர்த்தத்துக்கு உதவ விரும்பும் நாடுகள் இலங்கை அரசாங்கத்தின் உதவியுடன் மட்டும்தான் உதவ முடியுமென உலக நாடுகளுக்கு எச்சரித்துமிருந்தார். அதேவேளை, இந்திய அரசாங்கத்தின் புலனாய்வுப்பிரிவான றோ அமைப்பின் பிராந்திய தலைமையகத்தை இலங்கையில் அமைக்க உடன்படிக்கையொன்றை செயற்படுத்தியிருந்தார். அத்தோடு அமெரிக்காவிற்கெதிராக, இந்தியாவின் சேது சமுத்திரத் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தார். அமெரிக்காவிற்கெதிராக இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையில் பாதுகாப்பு ஒப்பந்தமொன்றையும் உருவாக்கினார். இலங்கையின் சமாதான முயற்சிகளில் நடுவராக செயற்பட்டு வரும் நோர்வே நாட்டினரை நாட்டைவிட்டு வெளியேறுமாறும், இந்தியாவின் மத்தியஸ்தத்துடனேயே இலங்கைப் பிரச்சினை நகர்த்தப்பட வேண்டுமெனவும் கதிர்காமர் வலியுறுத்திக் கூறியிருந்தார். கொழும்பிலுள்ள மேற்குலக நாடுகளின் தூதர்கள் தமிழகத் தரப்புடன் தொடர்புகளை மேற்கொள்ள முயன்றாலோ, அல்லது அவர்களுக்கு சார்பான கருத்துகளை வெளியிட்டாலோ கதிர்காமரால் உடனடியாக அழைக்கப்பட்டு இராஜ தந்திர வரம்பு முறைகளை மீறுவதாக கண்டிக்கப்பட்டனர். ஆனால், மேற்குலக நாடுகள் கதிர்காமரினதும் அரசினதும் உண்மைத் தன்மையைப் புரிந்து கொண்டதாலும், தமிழர் மீதான மலேச்சத்தனமான தாக்குதல்களை உணர்ந்து கொண்டதாலும் புலிகளின் தொடர் வெற்றிகளினாலும் இலங்கைக்கு சமாதானப் பேச்சென்ற கால இடைவெளி தேவைப்பட்டது. இதற்கு கதிர்காமரின் எதிர்ப்பையும் புறக்கணித்து விட்டு நோர்வே நாட்டை இடைத்தரகராக ஜனாதிபதி தெரிவு செய்தார். அரசுக்கும் புலிகளுக்குமிடையிலான சமாதானப் பேச்சு காலகட்டத்தில் தான் கதிர்காமரின் இராஜதந்திரங்கள், சகுனித் தனங்கள் மண் கவ்வின. புலிகளின் சாணக்கியத்தனமான அரசியல் நகர்வுகளினாலும் வெளிநாட்டு விஜயங்களினாலும் கதிர்காமரின் பொய்ப் பிரசாரங்கள் தவிடு பொடியாக்கப்பட்டன. குறிப்பாக அமெரிக்கா மற்றும் பிரிட்டன் அரசுகளின் ஆதரவுகளை இழந்த ஒருவராகவே கடைசிக் காலகட்டத்தில் கதிர்காமர் காணப்பட்டார். இவ்வாறு சர்வதேச விடயங்களில் வீழ்ச்சியை எதிர்கொண்ட சிங்கள தேசத்தின் விசுவாச இராஜ தந்திரியான கதிர்காமர், மறுபுறத்தே இந்தியாவின் அரவணைப்பை பெறுவதற்கான முயற்சியை விடாப்பிடியாக மேற்கொண்டு வந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளில் பல தடவைகள் இந்தியாவுக்கு சென்ற கதிர்காமர், அயல் நாடும் பிராந்திய வல்லரசுமான இந்தியா, இலங்கையில் நடக்கும் சமாதான முயற்சிகளை வெறுமனே பார்த்துக் கொண்டிராது நேரடியாக பங்களிப்பு வழங்க வேண்டுமென கோரினார். ஆனாலும், இந்தியா நழுவல் போக்கை கடைப்பிடித்து வந்தது. அதேவேளை, தனது மதிநுட்பத்தினால் ஜே.வி.பி. யுடன் இணைந்து அமைத்துக் கொண்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசு உடைந்து அதிலிருந்து ஜே.வி.பி. வெளியேறியது கதிர்காமருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஐ.தே.க. ஆட்சிக்கு வந்தால் சில வேளைகளில் தமிழர்களுக்கு சில உரிமைகளை விட்டுக் கொடுத்து விடுமென்ற அச்சத்தினாலேயே ஜே.வி.பி.யின் சுயரூபம் தெரிந்திருந்தும் தனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை, எதிரிக்கு இரண்டு கண்களும் போக வேண்டுமென்ற சித்தாந்தத்தில் கூடக் கூடாத கட்சியான ஜே.வி.பி. யுடன் கூட்டமைத்துக் கொள்ள கதிர்காமர் திட்டம் வகுத்துக் கொடுத்தார். சந்திரிகா இதற்கு முதலில் உடன்பட மறுத்த போதும், பின்னர் தனது விசுவாசியான கதிர்காமரின் வற்புறுத்தலுக்கிணங்கி ஜே.வி.பி.யுடன் கூட்டமைப்பு அரசை ஏற்படுத்தினார். ஒருவேளை ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தமிழர்களுக்கு ஏதாவது உரிமைகளை கொடுக்க முயன்றாலும் அதனை ஜே.வி.பி. மூலம் தடுத்து நிறுத்துவதற்காகவென்றே திட்டமிட்டு உருவாக்கப்பட்டதுதான் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கம். ஆனால், புலிகளுடனான பொதுக் கட்டமைப்பு விடயத்தில் கதிர்காமரினதும் ஜே.வி.பியினதும் கடும் எதிர்ப்புகளையும் மீறி ஜனாதிபதி இணங்கிப் போனது கதிர்காமருக்கு பேரதிர்ச்சியைக் கொடுத்தது. இதனால் பொதுக் கட்டமைப்பு தொடர்பாக ஒரு தடவையேனும் வெளிநாட்டமைச்சரென்ற ரீதியில் பாராளுமன்றில் கதிர்காமர் விளக்கம் கொடுக்க முன்வரவில்லை. அத்துடன், தற்போது பொதுக்கட்டமைப்புக்கெதிராக உயர் நீதிமன்றில் வழக்குகள் தாக்கல் செய்துள்ள ஜே.வி.பி. மற்றும் ஹெல உறுமய கட்சிகளுக்கு தேவையான சட்ட ஆலோசனைகள், திட்டங்கள் வகுத்துக் கொடுத்து பொதுக்கட்டமைப்பை செயற்படவிடாது தடுத்துள்ள பெருமையும் கதிர்காமரையே சாரும். இவ்வாறு தனது விசேட புலமைகள் அத்தனையையும் சிங்கள பேரினவாதத்தின் நலனுக்காக அர்ப்பணித்து செயற்பட்ட கதிர்காமரின் வாழ்வும், அவரின் இதய தெய்வமான ஜனாதிபதி சந்திரிகாவின் அரசியல் ஆயுளும் முடியும் தறுவாயில் முடிந்துவிட்டது. தமிழர்களுக்கெதிரான கடும்போக்குடைய சிங்கள இனவாதிகளை விட ஒருபடிமேலான தமிழினவிரோதி கதிர்காமரின் மறைவு காலப்போக்கில் சிங்களவர்களுக்கு மறந்து விடும். ஆனால், கதிர்காமரின் துரோகத்தனங்களால் வடுக்களை சுமக்கும் தமிழர் வரலாற்றில் காக்கை வன்னியனாக கதிர்காமர் என்றும் இடம் பிடித்திருப்பார். ...........ஞாயிறு தினக்குரலிலிருந்து...... |