08-12-2005, 03:44 PM
[size=18]இதயச் சிறையிலிடு
* <b>என்னை ஆள்பவளே!
தூக்கங்களில் மட்டும்
துவண்டு கொண்டிருந்த என்னை
உன் ஏக்கங்களினால்
கனவுகளில் ஏற்றி விட்டவளே!
மனிதக் கால்கள் தொடர்ந்து பட்டால்
புல்வெளியிலும் கூட
புதியபாதை தோன்றி விடுமாம்!
அதுபோல_ என் மனதில்
முதன்முதலில்_
காதல் பாதையை வகுத்து
என்னை வழி நடத்திச் சென்றவளே!
ஏன் காதலைச் சொல்ல மட்டும்
இந்த தயக்கம்?
* ஒரு காலத்தில்_
தலைநிமிர்ந்து நடந்த நான்_
பிற்பாடு ஒன்றும் பேசாமல்,
தலைகுனியத் தொடங்கினேன்,
உன் பார்வையின் வீச்சை
பார்க்கும் திறன் இல்லாததால்!
* உன்னைப் பார்த்த மாத்திரத்தில்
முளைத்து விடுகின்றது_ எனக்குள்
காதல் சிறகுகள்!
ஆனால்_ பறக்கும் பயிற்சியை
நீ அளிக்க முன் வராததால்
அடுத்த கணமே_ அவை
முடமாகியும் போய் விடுகின்றது!
* நேற்றின் தொடக்கம் இன்றாம்
இன்றின் தொடக்கம் நாளையாம்
அதிலெல்லாம்_
எனக்கு நம்பிக்கையில்லை
என் வாழ்க்கையின் தொடக்கமே
உன் வாயென்பது மட்டும் உண்மையடி!
* கனவுகளிலும் கூட_ ஒரு
கட்டுப்பாடுடன்தான் இருக்கின்றேன்
எனது கண்ணியமான காதலின்
கவுரவத்தைக் காப்பாற்றுவதற்காக!
* தொல்லைகள் மட்டுமே தருகின்ற
இக்காதல்_ எனக்கோர்
எல்லையை வகுத்துத் தருவது_
எப்போது பெண்ணே?
சீக்கிரம் ஒரு முடிவெடு_
அப்படியே என்னை_
உன் இதயச் சிறையிலும் இடு!
வைகை.ஆறுமுகம், </b>
* <b>என்னை ஆள்பவளே!
தூக்கங்களில் மட்டும்
துவண்டு கொண்டிருந்த என்னை
உன் ஏக்கங்களினால்
கனவுகளில் ஏற்றி விட்டவளே!
மனிதக் கால்கள் தொடர்ந்து பட்டால்
புல்வெளியிலும் கூட
புதியபாதை தோன்றி விடுமாம்!
அதுபோல_ என் மனதில்
முதன்முதலில்_
காதல் பாதையை வகுத்து
என்னை வழி நடத்திச் சென்றவளே!
ஏன் காதலைச் சொல்ல மட்டும்
இந்த தயக்கம்?
* ஒரு காலத்தில்_
தலைநிமிர்ந்து நடந்த நான்_
பிற்பாடு ஒன்றும் பேசாமல்,
தலைகுனியத் தொடங்கினேன்,
உன் பார்வையின் வீச்சை
பார்க்கும் திறன் இல்லாததால்!
* உன்னைப் பார்த்த மாத்திரத்தில்
முளைத்து விடுகின்றது_ எனக்குள்
காதல் சிறகுகள்!
ஆனால்_ பறக்கும் பயிற்சியை
நீ அளிக்க முன் வராததால்
அடுத்த கணமே_ அவை
முடமாகியும் போய் விடுகின்றது!
* நேற்றின் தொடக்கம் இன்றாம்
இன்றின் தொடக்கம் நாளையாம்
அதிலெல்லாம்_
எனக்கு நம்பிக்கையில்லை
என் வாழ்க்கையின் தொடக்கமே
உன் வாயென்பது மட்டும் உண்மையடி!
* கனவுகளிலும் கூட_ ஒரு
கட்டுப்பாடுடன்தான் இருக்கின்றேன்
எனது கண்ணியமான காதலின்
கவுரவத்தைக் காப்பாற்றுவதற்காக!
* தொல்லைகள் மட்டுமே தருகின்ற
இக்காதல்_ எனக்கோர்
எல்லையை வகுத்துத் தருவது_
எப்போது பெண்ணே?
சீக்கிரம் ஒரு முடிவெடு_
அப்படியே என்னை_
உன் இதயச் சிறையிலும் இடு!
வைகை.ஆறுமுகம், </b>
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............

