Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஓர் அவசர அழைப்பு By பொன். செல்வகணபதி
#1
ஓர் அவசர அழைப்பு By-பொன் செல்வகணபதி

தீவிரப் படுங்கள்
தீவிரப் படுத்துங்கள்...

சிறுமைகளைக் கண்டு
சினமுறுங்கள்

கொடுமைகளைக் கண்டு
கோபப்படுங்கள்

எல்லாம் நன்மைக்கே
என்று
அமைதியடையாதீர்கள்!

எல்லாம்
நன்மையாய் மலர
எதனையும்
வற்புறுத்துங்கள்;

நாளைய விடியலில்
ஒரு
சிவப்பு சூரியன்
உதயமுற
கிழக்கைக்
கீறிவிடுங்கள்;

எதேச்சாதிகார இருளின்
ஆதிக்கக் கேந்திரங்களில்
கிரணக்கற்றைகளைக்
கொண்டு செலுத்தி
அந்த இருளை
அறுத்தெறியுங்கள்!

இதற்காக
தோழர்களே நீங்கள்
தீவிரப்படுங்கள்
தீவிரப்படுத்துங்கள்-

காலா காலங்களாய்
நாம் நம்பி வந்த
தர்மா தர்மங்களெல்லாம்
செயலற்வை
என்பதைக்
கண்டு கொள்வதில்
காலதாமதம் செய்யாதீர்கள்!

தைரிய ஆகுதியில்
கோழைத் தனத்தைக்
கொழுத்துங்கள்;

செத்து மடியவும்
தயாராகுங்கள்!

வாழ்வதற்கு
வழிபிறக்கும்!!

கோழைக்கு
மரணமொன்று
தனியாக இல்லை.

வீரனுக்கோ
மரணங்கூட
மறுபிறப்பே!

உலகப் பொதுமை கோரி
ஒரு படை நடத்துங்கள்

உலக அமைதிக்காக
ஒரு போரைப்
பிரகடனப்படுத்துங்கள்

இதற்காக
தோழர்களே நீங்கள்
தீவிரப்படுங்கள்
தீவிரப்படுத்துங்கள்...
Mahima

!
Reply


Messages In This Thread
ஓர் அவசர அழைப்பு By பொன். செல்வகணபதி - by Mahima - 08-10-2005, 01:32 AM
[No subject] - by Mahima - 08-10-2005, 01:40 AM
[No subject] - by poonai_kuddy - 08-10-2005, 05:00 PM
[No subject] - by கீதா - 08-17-2005, 06:39 PM
[No subject] - by வினித் - 08-17-2005, 08:20 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)