![]() |
|
ஓர் அவசர அழைப்பு By பொன். செல்வகணபதி - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: ஓர் அவசர அழைப்பு By பொன். செல்வகணபதி (/showthread.php?tid=3705) |
ஓர் அவசர அழைப்பு By பொன். செல்வகணபதி - Mahima - 08-10-2005 ஓர் அவசர அழைப்பு By-பொன் செல்வகணபதி தீவிரப் படுங்கள் தீவிரப் படுத்துங்கள்... சிறுமைகளைக் கண்டு சினமுறுங்கள் கொடுமைகளைக் கண்டு கோபப்படுங்கள் எல்லாம் நன்மைக்கே என்று அமைதியடையாதீர்கள்! எல்லாம் நன்மையாய் மலர எதனையும் வற்புறுத்துங்கள்; நாளைய விடியலில் ஒரு சிவப்பு சூரியன் உதயமுற கிழக்கைக் கீறிவிடுங்கள்; எதேச்சாதிகார இருளின் ஆதிக்கக் கேந்திரங்களில் கிரணக்கற்றைகளைக் கொண்டு செலுத்தி அந்த இருளை அறுத்தெறியுங்கள்! இதற்காக தோழர்களே நீங்கள் தீவிரப்படுங்கள் தீவிரப்படுத்துங்கள்- காலா காலங்களாய் நாம் நம்பி வந்த தர்மா தர்மங்களெல்லாம் செயலற்வை என்பதைக் கண்டு கொள்வதில் காலதாமதம் செய்யாதீர்கள்! தைரிய ஆகுதியில் கோழைத் தனத்தைக் கொழுத்துங்கள்; செத்து மடியவும் தயாராகுங்கள்! வாழ்வதற்கு வழிபிறக்கும்!! கோழைக்கு மரணமொன்று தனியாக இல்லை. வீரனுக்கோ மரணங்கூட மறுபிறப்பே! உலகப் பொதுமை கோரி ஒரு படை நடத்துங்கள் உலக அமைதிக்காக ஒரு போரைப் பிரகடனப்படுத்துங்கள் இதற்காக தோழர்களே நீங்கள் தீவிரப்படுங்கள் தீவிரப்படுத்துங்கள்... - Mahima - 08-10-2005 எனக்கு மிகவும் பிடித்த கவிதை.... மிகவும் தத்துவமாக நல்ல கருத்துடன் வடித்திருக்கிறார் இந்தக் கவியின் எழுத்தாளர்... இன்றைய இளஞ்சமுதாயத்துக்கு மிகவும் தேவையான தத்துவம் என்று நான் கருதுகிறேன். - poonai_kuddy - 08-10-2005 நல்லா இருக்கக்கா - கீதா - 08-17-2005 நல்லாயிருக்கு நன்றி ............ jothika - வினித் - 08-17-2005 Mahima Wrote:எனக்கு மிகவும் பிடித்த கவிதை.... மிகவும் தத்துவமாக நல்ல கருத்துடன் வடித்திருக்கிறார் இந்தக் கவியின் எழுத்தாளர்... இன்றைய இளஞ்சமுதாயத்துக்கு மிகவும் தேவையான தத்துவம் என்று நான் கருதுகிறேன்.«ô§À¡ ¿¢í¸û ±Ø¾¡ þø¨ÄÂ? «Ð ¾¡ý ¿øÄ þÕìÌ <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> |