10-20-2003, 11:07 AM
நன்றி அஜீவன். முதலில் திரு வீரா அவர்கள் தனிப்பட்ட முறையில் பெயரை பாவிப்பதை தவிர்த்தால் நல்லது. நான் நிச்சயமாக நீங்கள் நினைக்கும் நபர் அல்ல. அவர் மூலமே நான் இந்த இணையத் தளத்தில் இணைந்துள்ளேன். ஆனால் அவர் பெயரை தயவு செய்து பாவிப்பதை நிறுத்தவும். நானும் தனிப்பட்ட முறையில் பெயர்களை பாவிப்பதன் மூலம் இந்த விவாதத்தை நான் வேறு திசைக்கு கொண்டு செல்ல முனையவி;ல்லை. இந்த திரைப்படம் பற்றிய சில தகவல்களை இங்கே தருகிறேன் இதன் பின் நீங்களே தீர்மானியுங்கள். வீரா பெயர் கூறிய நபர் இந்த திரைப்படத்தின் நடிகரும் உதவி இயக்குனர்களில் ஒருவரும். தயாரிப்பாளர் அல்ல!
நாம் இசைக்கு உண்மையில் இருவரையே அணுகி இருந்தோம்.அதில் ஒருவர் இந்த படத்தின் இன்னுமொரு தயாரிப்பாளர். மற்றவர் பல இசைப்பேழைகளை ஐரோப்பாலில் வெளியிட்டவர். இந்த படம் முடிவடைந்ததும் ஒருவர் தான் பாடலுக்கு மட்டும் இசையமைக்க முடியும் போக்குவரத்து தடைகளால் தன்னல் முழுமையாக செய்ய முடியாது என்பதை அடுத்த அதை செய்ய வில்லை. மற்றையவர் தனது நடிபபு திறைமையை தென்னிந்திய சினிமாவல் பரீட்சிக்க இந்தியா சென்று விட்டார். ஆனால் அவர் அங்கு தனது வேலையில் ஈடுபட்ட போதும் தனது படத்திற்கு இசையமைப்பதில் கவனம் செலுத்த தவறவில்லை. ஆனால்படத்தொகுப்பு முடிந்த தறுவாயில் நமது குழுவில் நடித்த ஒருவர் வீரா கூறும் இசையமைப்பாளரை அணுகி நமது படத்திற்கு வேலை செய்ய முடியுமா என கோரியதை அடுத்தே அவரும் இசையமைப்பு வேலையை தொடர்ந்தார். இந்த திரைப்படத்தை எப்படியாவது வெகுவிரைவில் கொண்டுவரவேண்டும் என்ற் அவரது நல்ல நோக்கம் இவ்வளவு சிக்கல்களை கொண்டுவரும் என நான் நினைக்கவில்லை. இந்த நேரத்தில் நான் இந்தியாவில் இருந்தேன். சில தடங்கல் காரணமாக நான் இந்த இசையமைப்பாளரை சந்திக்க முடியாமல் பேய்விட்டது. ஆனால் யாரும் எந்த ஒரு ஆவணத்திலும் கையெழுத்திட வில்லை. மாறாக இது முதல் முயற்சி என்பதாலும் இசையமைத்த இருவரும் இந்த துறைக்கு புதியவர்கள் என்பதாலும் இருவரினது இசையையும் நாம் சேர்ப்பதாகவே இருந்தோம். நமது எதிர்பார்ப்புக்கேற்ற இருக்கும் இசையை சேர்ப்பது. நாம் ஆனைவரும் வேறு வேறு தொழில் பார்ப்பவர்கள். திரைப்படம் எடுப்பது நம் தொழல் அல்ல மாறாக நமது ஈழ கலைஞர்களை ஊக்குவிப்பதுடன் நமது கலையை முன்னெடுப்பதே நமது நோக்கம். இசையமைத்தவர்கள் யாராவது ஒருவர் முதலில் ஒரு திரைப்படத்திற்கு இசையமைத்த அனுபவம் இருந்திருந்தால் தனியே அவரின் பெயரை பாவித்திருப்போம். எம்மைப் பொறுத்தவரை முடிந்தளவு நம்மவர்களை பாவித்து ஒரு சிறந்த படைப்பை கொண்டுவருவதே நமது நோக்கம். நமக்கு இந்தியவால் ஒரு பிரபலமற்ற இசையமைப்பாளர் இலவசமாக இந்த படத்திற்கு இசையமைக்க சம்மதித்திருந்தும் நமது கலைஞர்களை ஊக்குவிக் வேண்டும் என்ற எனது நண்பரின் கருத்துக்கு மதிப்பளித்ததே நான் செய்த பெரிய தவறு.
இந்த திரைப்படத்தில் இந்த சிக்கல் வர காரணமாயிருந்த பல விடயங்களை நாம் தற்போது இனம் கண்டுள்ளோம். இனிவரும் காலங்களில் அது நடைபெறாது தவிர்க்க அனைத்தையும் ஆவணப்படுத்த உறுதிபூண்டுள்ளோம்.
இந்த திரைப்படத்தை நாம் எடுத்ததன் முக்கிய காரணம்
1. தென் இந்திய சினிமாவிற்கு மாற்றாக நாமும் ஒரு படைப்பை தர முடியும்
2. இலைமறை காயாக இருக்கும் நம் கலைஞர்களை ஊக்குவிப்பது.
3. புலம் பெயர் மண்ணில் நமது வாழ்வை படம்பிடிப்பது
4. புலம்பெயர் ஈழ மக்களின் சந்தையை நம்பி தென்னிந.தியா திரைப்படம் எடுக்கலாம் என்றால், நாமே ஏன் ஒரு சந்தையை நமக்கு உருவாக்க கூடாது என்று சிந்தித்தது.
5. ஈழ நண்பர்கள் என்ற பெயருடன் நாம் ஒரு கூட்டு முயற்சியாக இதை ஆரம்பித்து ஈழ கலைஞர்களை முழுநேர கலைஞரகள் ஆக மாற்றுவது.
இதற்கு நான் தனிப்பட்ட முறையில் செலவு செய்த தொகை பத்தாயிரம் பவுண்கள். எனது பெயர் வரவேண்டும், புகழ் வரவேண்டும் என நினைத்திருந்தால் தென் இந்தியாவ் இலைமறை காயாக திறைமையுடன் எந்த வித வாய்பும் இல்லாத இசைகலைஞர்களுக்கு ஒரு சிறு தொகை பணத்தை கொடுத்து விட்டு என்பெயரை இசைக்கும் சேர்த்திருக்க முடியும். அது இதைவிட நன்றாகவும் வந்திருக்கும்.
மீண்டும் நாம் வலியுறுத்தும் மாற்று ஒரு கூட் முயற்சி, ஈழம் நண்பர்களின் இருவருட உழைப்பு. பலர் எத்தனையோ இரவுகள் கண்விழித்து உழைத்தும் உள்ளனர். அவர்கள் அனைவரும் ஈழம் நண்பர்கள் என்ற அமைப்பினுள் அடக்கம்.! இந்த கூட்டு முயற்சியை நீங்கள் வெற்றிகரமாக்க விரும்பினால் ஆதரவு தாருங்கள், அல்லது தொடரந்தும் தென் இந்திய குப்பபைகளை உள்வாங்க வேணும் என்றால் சேற்றை நன்கே வாரி அடியுங்கள், ஆனால் தமது அனுபவத்தை ஒரு நல்ல பாடமாக எடுத்தபடி ஈழ நண்பர்கள் உறுதியாக முன்னே செல்ல உறுதிபூண்டுள்ளார்கள். காலம் நிச்சயம் பதில் சொல்லும்.