08-08-2005, 09:54 AM
வைத்தியசாலையை நெருங்கியவள் அண்ணன் இருக்கும் விடுதி எண்ணை அறிந்து கொண்டு பதட்டத்துடன் சென்றாள். தமையன் தலை குனிந்த படி அழுது கொண்டிருந்தான் நல்ல வேளை காலில் சிறு காயம் மட்டுமே. அண்ணா என்று கூப்பிட்ட தங்கையின் குரலைக்கேட்டவன் திரும்பிப்பாத்ததும் குற்ற உணர்வால் துடிதுடித்துப்போனான். காரணம் வருகிற கிழமை பரீட்சைக்கு பணம் செலுத்த வேண்டும் என்று தந்தையிடம் அவள் கெஞ்சிய வேளை இவன் நகை அடைவு வைத்து சைக்கிள் வாங்கியவன் ஆச்சே. (ஆண்பிள்ளை என்று தலையில் தூக்கி வைக்கும் சராசரி தமிழ்குடும்பம் தானே அந்த குடும்பமும். பெண்ணின் தேர்வென்ன பெரியவிடயம் ) இப்போ இப்போ அந்த சைக்கிள் பேரீச்சப் பழகாரணுக்கும் உதவாது. தங்கையின் முகத்தை பார்க்க முடியாதவனாய் வெட்கப்பட்டான், தலை குனிகிறான்..
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

