10-19-2003, 06:50 PM
Quote:குப்பைகளையெல்லாம் குடிநடுவில் குடியிருத்த
கொடிபிடிக்கும் கொள்ளையர்கள்
US - F16 குண்டெறிபட்டு சாகவேணும்
கடவுளே கண்திறவாய்....!
இப்படி எழுதினால் நாகரீக வளர்ச்சியாம்...
Quote:நாம் இன்னும் வேடர்கள் போல் கல்லெறிய நினைப்பதும்.
Quote:கறுப்பாயிருந்த தலை சிவப்பாகி
பச்சையாகி....
நாய் சூப்பிய பனங்கொட்டை
நல்ல வடிவு.
இடைக்குக் கீழாயும் தொடைக்கு மேலாயும்
கம்பிகள்....கம்பிகள்.....
தம்பிகளின் , தங்கைகளின்
காற்சட்டைகளில் ஓட்டைகள்
கடகமளவில் கால் அகலம் றோட்டுக்கூட்ட
கலர் கலராய் நடைநடக்கும்
பெண்ணின் உடைகுறைத்து - அவள்
அங்கங்களை அங்குமிங்கும் அசைத்துக்காட்டி
தானுறிஞ்சிப் பால்குடித்த முலைகளையே
விலையாக்கிப் பிழைக்கும் வித்தகர்கள்
காந்தம் இருப்பதாய்ப் பெண்ணில்
காமக்கனிரசம் சுரப்பதாய்க் கதையளந்து
காலம் பயன்பெறவேண்டிய
கண்ணுணரும் சாதனத்தை விபச்சாரமாக்கி....
இதுவும் வேடுவார் காலம் நோக்கிய பயணம்

