10-19-2003, 09:39 AM
இந்த நாடுகளில் உள்ளவர்கள் நம்மைப் போல் பேசினால் (கதைத்தால்) அவர்களை Racist (ரசிஸ்ட்) என்று கூக்குரலிட்டுக் கத்திக் கூச்சல் போடுகிறோம்.
அப்படிப் பட்ட இந் நாட்டு மக்கள் இந் நாடுகளில் எம்மை வாழ விட்டிருப்பதே தவறு. அவர்களது கலாச்சாரத்துக்கு நாம் உண்மையில் எதிரானவர்கள்.
நான் முன்னர் ஒரு வைத்தியசாலையில் வேலை செய்தேன்.சாதாரணமாக வேலை செய்பவர்களுக்கு அங்கு வேலை செய்வோர் கோப்பி குடிப்பதற்காக வைப்பது வழக்கமாக இருந்தது.அதே போல் மீதமாகும் உணவு வகைகளைக் கூட வேலை செய்வோருக்கு கொடுப்பார்கள். அங்கே 4 தமிழர்கள் வேலை செய்தார்கள்.அவர்கள் அந்த இடத்தில் வேலை செய்யும் போது கோப்பிகள் மீதமாகாமல் பண்ணி விடுவார்கள் அல்லது கொட்டி விடுவார்கள்.அது போலவே சாப்பாட்டைக் கூட பன்றி வாளிக்குள் கொட்டி மகிழ்வார்கள்.இது ஒரு பாரிய மன நோய்.
இவர்கள் செய்வது பொறுக்க முடியாது சுவிஸ் மக்களே என்னிடம் வேதனைப் பட்டிருக்கிறார்கள்.
இதனால் ஒரு முறை இவர்களில் ஒருவரை அடிக்க வேண்டி வந்த போது தமிழர்கள் தவிர்ந்து ஏனையோர் என்னை ஆதரித்தார்கள்.அவர்களை பல பிரச்சனைகளில் காப்பாற்றியிருக்கிறேன். அப்படிப் பட்டோர் நான் கூட ஏனையவர்களுக்காக பரிந்து பேசுவதாக என்னை எதிர்த்தார்கள்.நான் வேலையை விட்டு வெளியேற வேண்டிய அளவுக்கு அனைத்து விதத்திலும் முயன்றார்கள்.
சுவிஸ் மக்கள் ,உங்கள் நாட்டவர் இப்படியா அங்கும் எனும் போது வெட்கத்தால் இதயம் வேதனைப் படும்.
நமது கலை கலாச்சாரம் பெரிது என்று சொல்ல விழைவோரும் ,கல்லெறிபட்டுச் சாகவேணும் என்பவர்களும் எங்களுக்கு முன்மாதிரியாக வந்த இடங்களுக்கு திரும்பிச் சென்று அவற்றை உறுதிப்படுத்துங்கள்.அப்போது இங்குள்ளோரும் வரத் தயார்................
ஒரு விலை மாதை நோக்கி கல்லெறிந்து கொல்ல ஒரு கூட்டம் முயன்ற போது ஏசுநாதர் சொன்னார். உங்களில் எவர் ஒருவர் எதுவித பாவமும் செய்யவில்லையோ அவன் முதல் கல்லை எடுத்து எறியட்டும் என்றார்.
அதை ஒருமுறை நினைவு கூர்வது நலம்.
நாங்கள் 10-15 வருடங்களுக்கு முன் நாட்டை விட்டு வெளியேறி விட்டோம்.அதே நாளில் இருந்த நாட்டை மனதில் வைத்துக் கொண்டு இன்றும் பேசி வருகிறோம்.நாடு எவ்வளவோ திருந்தி விட்டது.நாங்கள் திருந்த எவ்வளவோ இருக்கிறது.
வீட்டுக்குள் இருந்து உலகத்தைப் பார்க்காமல் , வெளியே வந்து உலகத்தை பாருங்கள்...........
[scroll:71ee15b264][size=15]எவருக்கும் நீ அடிமையில்லை , எவரும் உனக்கு அடிமையில்லை. -அஜீவன்