08-05-2005, 06:18 PM
Rasikai Wrote:தேவையான பொருட்கள் :
நண்டு 500 கிராம்
வெங்காயம் 4 பொடியாக நறுக்கியது
இஞ்சி பூண்டு விழுது 50 கிராம்
பச்சைமிளகாய் 3 நறுக்கியது
மஞ்சள்தூள் 1/2 டீஸ்பூன்
மிளகாய்தூள் 2 டீஸ்பூன்
தனியா தூள் 2 டீஸ்பூன்
மிளகு 1 டீஸ்பூன்
சீரகம் 1 டீஸ்பூன்
சோம்பு 1 டீஸ்பூன்
பட்டை, கிராம்பு, ஏலக்காய் 2 எண்ணிக்கை
துருவிய தேங்காய் 50 கிராம்
கறிவேப்பிலை சிறிதளவு
கொத்தமல்லி இலை பொடியாக நறுக்கியது
உப்பு தேவையான அளவு
எண்ணெய் 100 மில்லி
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
செய்முறை :
முதலில் நண்டை சுத்தமாக கழுவி எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் 'மிளகு, சீரகம், சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலம் இவற்றை லேசாக வறுத்து எடுத்து, அதனை பொடித்து வைத்துக் கொள்ளுங்கள். வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் உளுத்தம்பருப்பு, சீரகம் தாளித்து பிறகு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கவும். வதக்கிய வெங்காயத்தில் மஞ்சள்தூள், மிளகாய்தூள், தனியாதூள், இஞ்சிபூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
பிறகு நண்டை இதிலே போட்டு நன்றாக பத்து நிமிடம் கிளரி, ஒரு மூடியால் மூடி வைக்கவும். சிறிது நேரம் கழித்து இதிலே வறுத்த பொடி, அரைத்த தேங்காய் விழுது, உப்பு சேர்த்து நன்றாக கிளறவும், நண்டிலிருந்தே தண்ணீர் வரும். அதனால் தண்ணீர் ஊற்ற தேவையில்லை. 15 நிமிடம் அப்படியே நன்றாக மூடி வைத்து வேக வைக்கவும். இப்போது நன்றாக மசாலா வாசனை வரும். நண்டும் நன்றாக வெந்து அப்படியே கிரேவியாக பிரண்டு வரும்போது கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.
கமகம வாசனையுடன் நண்டு பிரட்டல் ரெடி!
எனக்கொரு சந்தேகம்
நண்டுப்பிரட்டல் என்று போட்டு அதுக்கு ஏன் இவ்வளவு மசாலாப்பொருட்களையும் (வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, பச்சைமிளகாய், மஞ்சள்தூள், மிளகாய்தூள், தனியா தூள், மிளகு, சீரகம், சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், துருவிய தேங்காய், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, உளுத்தம்பருப்பு) போடுகிறீர்கள்?? நண்டைசுத்தித்தானே பெரிய ஒரு ஓடு இருக்கும் அப்ப எப்படி இது எல்லாம் நண்டின் ஓடில் தானே படும் அப்ப அந்த நண்டு ஓட்டையா சாப்பிடுகிறனீங்க???

