10-17-2003, 03:43 PM
ஒரு தரப்பு நியாயங்களை மட்டும் வைத்துக்கொண்டு எம்மை வெறுமனே சாடுவது எந்த வகையிலும் நியாயமில்லை. இந்த முயற்சி ஆரம்பிக்கும் போது அனைவரும் முதல் முயற்சி என்பதால் ஊதியம் பெறாமல் வேலை செய்ய ஒத்துக்கொண்டே இதில் பங்கு பற்றினர். நீங்கள் குறிப்பிடுபவரும் அப்படியே. ஆனால் இந்த குழுவில் உள்ள ஒருவருடன் தனிப்பட்ட முறையில் ஏற்பட்ட பிரச்சனையை அடுத்து தனது பங்களிப்பை அதில் இருந்து எடுக்கும் படி கூறினார். முழுவெலைகளும் முடியும் தறுவாயில் இருந்தும் கூட அவர் வேண்டுகோழுக்கிணங்கி அவரின் வேலைகள் அனைத்தும் நீக்கப்பட்டது. ஆனாலம் அவர் இந்த முய்ற்சியில் பங்குகொண்டவர் என்ற ஓரே காரணத்திற்காக அவரின் பெயர் டைட்டிலில் சேர்க்கப்பட்டமு; உள்ளது. யாருடைய உழைப்பையும் சுரண்டும் நோக்கம் நமக்கு இல்ரலை. சம்பந்த பட்டவரிடம் நாம் பல தடவைகள் கெஞ்சி மண்டடினோம் தயவு செய்து இந்த கூட்டு முயற்சிக்கு ஒத்துளைக்கும் படி, அனால' தனது தனிப்பட்ட பெயர் மட்டுமம வரவேண்டும் இல்லாது போயின் அனைத்தையும் அகற்றும் படி கூறியதை அடுத்து கிட்டத்தட்ட 5 இரவுகள் கண்விழித்து வேலைசெய்தவரல்களுக்குதான் உழைப்பின் அருமை தெரியும். இந்த படம் ஒரு கூட்டு முயற்சி தனிப்பட்ட முறையில் யாரும் மகுடம் ஏற்றவில்லை. இந்த திரைப்படம் ஈழம் நண்பர்களின் கூட்டு முயற்சியே! கூட்டு மயற்சிக்கு அர்தம் தெரியாவிடன் தயவு செய்து என்னை மன்னித்துக்கொள்ளவும்.

