10-17-2003, 12:14 PM
Quote:நரகல்களை மடியில்
அள்ளி வைத்து - அது
நாகரீமெனப் பெயர் சூட்டி
கறுப்பாயிருந்த தலை சிவப்பாகி
பச்சையாகி....
நாய் சூப்பிய பனங்கொட்டை
நல்ல வடிவு.
காக்கா அன்னநடை நடந்த கதை
காதுகளை , மூக்குகளை
முகங்களையெல்லாம் நாறவைத்து
பேயோ எனப்பயந்து பேதலிக்க.....
வணக்கம் சொல்ல வாய் நோவில்
கலோ சொல்லும் உதடுகளின்
இடைக்குக் கீழாயும் தொடைக்கு மேலாயும்
கம்பிகள்....கம்பிகள்.....
தம்பிகளின் , தங்கைகளின்
காற்சட்டைகளில் ஓட்டைகள்
கடகமளவில் கால் அகலம் றோட்டுக்கூட்ட
கலர் கலராய் நடைநடக்கும்
காளையரே , கன்னியரே
வாந்தி வருகிறது உந்த வடிவுகளைப் பார்க்க....
வடிவாய்க் கிடந்த தலைமயிரை
வழித்து மொட்டையாக்கி வானரமாய் உருமாறி
டிஸ்கோவுக்குச் சினேகிதியோடு மகன் அலைய
கலாச்சாரம் என்று அங் கன்று நடந்தேறியவை
இங்கின்று நாகரீகமாய் அரங்கேற்றம்?
தவறேதும் உளதெனக் கருதுகிறீர்களா?

