08-03-2005, 11:09 AM
மிலிட்ரி உடையில் முறுக்கிய மீசையும் இறுகிய தேகமுமாக அசப்பில் வால்டர் தேவாரம் போலிருக்கிறார் விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல். திருமாவளவன்.
'மும்பை ஓ பிரஸ்' பேனர்களை கிழித்துக்கொண்டிருந்தவர் எப்போது மிலிட்ரியில் சேர்ந்தார் என்று ஆச்சரியத்துடன் பார்த்தால்இ அது 'அன்புத்தோழி' ஷூட்டிங். "நான் பொதுவா சினிமா பார்க்கிறதில்லை. படிக்கிற காலத்தில் மேடை பக்கம் ஒதுங்கினதில்லை. தமிழ் மக்களை ஒன்று திரட்டும் போராட்டத்தை நடத்த வேண்டும் என்ற கனவு இருந்தது. அரசியல் சூழ்நிலைகளில் அது கைகூடவில்லை. இப்போது நண்பர்களின் அன்பு வேண்டுகோளை தட்டமுடியாமல் இந்தப் படத்தில் அப்படியொரு கொள்கை முழக்க கேரக்டரில் நடிக்கிறேன்" என்றார் இந்த சினிமா எதிர்ப்பாளர்.
'அன்புத்தோழி'யில் திருமாவளவனுக்கு மக்களுக்காக போராடும் புரட்சிவாதி கேரக்டர். இதற்காக சென்னையை அடுத்த திரிசூலம் கல்குவாரியில் பெட்ரோல் குண்டுகளுக்கு நடுவே குட்டிக்கரணம் அடித்துக்கொண்டிருந்தார். இது தவிர கயிறை பிடித்து மலை ஏறுவது போன்ற சாகஸங்களையும் தேர்ந்த ஸ்டண்ட் நடிகர்போல் அசத்திக்கொண்டிருந்தார் திருமா.
படத்தின் இயக்குனர் கிருபாஇ பேசுகையில் பாதி வார்த்தைகளை திருமாவளவன் புராணமே நிறைத்திருந்தது. "ஆலந்தூர் லாட்ஜில் தங்கிக்கொண்டு தினம் வந்து நடித்துக்கொடுக்கிறார். ஒரு அரசியல்வாதி போலவே அவர் இல்லை" என்பது இவர் ஆச்சர்யம். இந்தப்படத்தில் நாயகி அறிமுக நாயகி சவுமியா. இயக்குனர் அகத்தியனின் மகள் இவர்.
திருமாவளவன் சமீபகாலத்தில் தனித்தமிழ் காதலராக உருவெடுத்திருக்கிறார். இவரது சினிமா வசனம் எப்படியிருக்கும்?
யோசித்துப் பார்க்கும்போதே சிரிப்பு பொங்குகிறது. படம் வந்தால் பார்க்கிறவர்கள் வயிறு பணால்தான்!
[size=18]<b>
தகவல் சினிசௌத் என்னும் இணயத்திரைப் பத்திரிக்கையில் இருந்து பெறப்பட்டது.</b>