07-25-2005, 10:31 AM
யுூலைகள் வந்தால்
யுூலைகள் வந்தால்
வார்த்தைகள் கூட
விழிகசியும் வரலாறுகள் அவை
எங்களது இதயங்களில்
ஆணியடிக்கப்பட்ட அகாலப்பொழுதுகள்
அரைகுறையுயிரில் அறுத்தெறியப்பட்ட
சந்ததியின் சோகம் சொல்லும் யுூலைகள்
எங்களுக்குச் சொந்தம்.
ஒன்றா இரண்டா ஓமென்றிருக்க ?
ஓராயிரம் வதை எங்கள்
உயிர் தின்றகதை...
மறக்க நினைத்தாலும்
மனசைப் பிடுங்கி நெஞ்சை
மறுபடி மறுபடி
நினைக்க வைக்கும்
நெருப்பு யுூலைகள்.
ஆறா ரணங்களவை - எம்மில்
அனலை மூட்டுவித்த
காட்டு மிராண்டிகளின்
கதைமுடித்த 'யுலை5"
கரும்புலிகள் கதையுரைக்கும்
மெய்சிலிர்க்க மில்லரது
மனவுறுதி கேட்டு
மேனியுதற ஓடிய பேய்களின்
கதையுரைத்த யுூலையும் எங்களதே.....
நாமழுத யுூலைகள்
நம்முள் ஆறாது - ஆனாலும்
நீயழுத யுூலை 5
பகையே .....!
தினமிங்கு பிறக்கிறது
குறித்துக் கொள்....!
இனி தினம் யுூலை 5
உன் நெஞ்சில்
நெருப்பு மூட்டும்.
(இன்னொரு காத்திருப்பு கவிதைத் தொகுதியிலிருந்து.....)
(யுூலை 2000)
யுூலைகள் வந்தால்
வார்த்தைகள் கூட
விழிகசியும் வரலாறுகள் அவை
எங்களது இதயங்களில்
ஆணியடிக்கப்பட்ட அகாலப்பொழுதுகள்
அரைகுறையுயிரில் அறுத்தெறியப்பட்ட
சந்ததியின் சோகம் சொல்லும் யுூலைகள்
எங்களுக்குச் சொந்தம்.
ஒன்றா இரண்டா ஓமென்றிருக்க ?
ஓராயிரம் வதை எங்கள்
உயிர் தின்றகதை...
மறக்க நினைத்தாலும்
மனசைப் பிடுங்கி நெஞ்சை
மறுபடி மறுபடி
நினைக்க வைக்கும்
நெருப்பு யுூலைகள்.
ஆறா ரணங்களவை - எம்மில்
அனலை மூட்டுவித்த
காட்டு மிராண்டிகளின்
கதைமுடித்த 'யுலை5"
கரும்புலிகள் கதையுரைக்கும்
மெய்சிலிர்க்க மில்லரது
மனவுறுதி கேட்டு
மேனியுதற ஓடிய பேய்களின்
கதையுரைத்த யுூலையும் எங்களதே.....
நாமழுத யுூலைகள்
நம்முள் ஆறாது - ஆனாலும்
நீயழுத யுூலை 5
பகையே .....!
தினமிங்கு பிறக்கிறது
குறித்துக் கொள்....!
இனி தினம் யுூலை 5
உன் நெஞ்சில்
நெருப்பு மூட்டும்.
(இன்னொரு காத்திருப்பு கவிதைத் தொகுதியிலிருந்து.....)
(யுூலை 2000)
+++++ ++++
http://uyirvaasam.blogspot.com
http://uyirvaasam.blogspot.com

