Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வாலி கவிதைகள்
#1
மாண்புமிகு மழையே! உனக்கொரு
மடல்! நீ _
எவ்வளவு பெய்தாலும்
ஏற்க வல்லது _
கடல்கொண்ட
குடல்;
ஏற்க
ஏலாதது _
குடல் கொண்ட
உடல்!

நீ பெய்யலாம்
நூறு அங்குலம்; அன்னணம் _
பெய்தால் என்னணம்
பிழைக்கும் எங்குலம்?

அடை மழையே!
அடை மழையே! உன் _
மடையை உடனே
அடை மழையே!

கொடுப்பதும் மழை;
கெடுப்பதும் மழை;
இது
இரண்டாயிரம் ஆண்டுகள் முன் _
தாடி வைத்த தமிழ்
பாடி வைத்த தமிழ்!

அளவோடு பெய்தால்
உன்பேர் மழை;
அளவின்றிப் பெய்தால் _
உன்பேர் பிழை!

தாகம் _
தணிய....
உன்னைக் குடித்தோம் என்றா _
எங்கள்
உயிரை நீ குடிக்கிறாய்?
மழைக்கே தாகமா? _ எமனுக்கு
மற்றொரு பெயர் மேகமா?

சவத்தைக் குளிப்பாட்டினால் _ அது
சடங்கு; நீ
குளிப்பாட்டியதால் நிரம்புகிறதே _சவக்
கிடங்கு!
நீரின்றி
நிற்காது உலகு; எங்கும் _
நீராகவே இருந்தாலும்
நிற்காது உலகு!

பூகம்பம்;
புகைவண்டி;
புயல் வெள்ளம்;

என
ஏனிப்படி...

குஜராத்தைக்
குறி வைத்து _
இடையறாது தாக்குகிறது
இயற்கை? உன்னொத்த _
இயற்கையைத் தண்டிக்காது
இருப்பதேன் இறைக்கை?

விண்ணிலிருந்து _
வருவது தண்ணீர்;
கண்ணிலிருந்து
வருவது கண்ணீர்;
எனினும்
எஞ்ஞான்றும் _
தண்ணீரைப் பொறுத்தே
கண்ணீர்!

தெய்வம்
தொழாது _
கொழுநன்
தொழுவாளைப் போலே...
மழையே!
மாந்தர் _
பெய் எனும்போது
பெய்; உனது _
பெயரை என்றும்
பெயராமல் வை!

Thanks:Kumudam
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply
#2
நன்றி சுண்டல் அருமையான கவிதையை இணைத்திருக்கிறீர்கள் .
[b][size=18]
Reply
#3
சுண்டல் உங்கள் தொண்டு வாளர்க!...... வாழ்த்துக்கள்.....
::
Reply
#4
சுண்டல் அண்ணா உங்கள் கவிதைக்கு நன்றி <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
அன்பு
jothika
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)