Posts: 1,646
Threads: 97
Joined: Apr 2003
Reputation:
0
வணக்கம்
திரு.பொ.கருணாகரமூர்த்தி அவர்கள் எழுதிய வண்ணத்துப்புூச்சியுடன் வாழ முற்படுதல்............. சிறுகதை வாசித்த போது மனதில் ஏற்பட்ட ஒரு இனம்புரியா ஈர்ப்பு உணர்ச்சிக்கொந்தளிப்பு இந்த கதையிலும் ஏற்பட்டது. என்ன அழகாக கதைகளை எழுதுகின்றார்கள். காட்சிகள் யாவும் கண்முன்னே தோன்றி மறைகின்றன. கருணாகரமூர்த்தி அவர்களின் கதையை வாசித்தபின் கண்முன்னே காணும் தாய்லாந்து பெண்களையெல்லாம் அவர்கதைதான் ஞாபகத்திற்கு தருகின்றார்கள். வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள்
நட்புடன்
[b] ?
Posts: 1,859
Threads: 37
Joined: Apr 2003
Reputation:
0
ஏனெனில் ஆதவன்
அடித்துத் துரத்துவான் என்ற பயத்தில்..!
.
Posts: 329
Threads: 12
Joined: Jun 2003
Reputation:
0
குறும்பு.. குறும்பாக அழகான கவிதைகள். இருவருக்கும் பாராட்டுக்கள்
Posts: 598
Threads: 20
Joined: Jun 2003
Reputation:
0
வியர்வையுமல்ல
வீணியுமல்ல.
வானின் கூரை
வேய்வார் அற்று.
அங்கும் கூட
ஏழ்மையோ.
[b]Nalayiny Thamaraichselvan
Posts: 1,859
Threads: 37
Joined: Apr 2003
Reputation:
0
வேய்வார் மயிலின் ஆட்டத்தில்
மயங்கிவிட்டார்களோ?
.
Posts: 2,087
Threads: 240
Joined: Jun 2003
Reputation:
0
[size=12]வானம்
கலைப் பிரியன்
உலக
நாடக மேடையை
தடையின்றி
ரசிப்பவன்
அவனது
ஆனந்தக் கண்ணீரே
பனித்துாறலாய்
கொட்டியது
புவியின்
மடிதனிலே
அது
மாந்தருக்கு
வியர்வையா? - உம்.......
இல்லை
அறிவாயோ
உறிந்த - உன்
உதிரத்தை
உனக்கே
தந்த கொடை
<img src='http://www.yarl.com/forum/files/images.1.jpeg' border='0' alt='user posted image'>
அஜீவன்
Posts: 1,646
Threads: 97
Joined: Apr 2003
Reputation:
0
மழை கண்டு மயங்காதவர் உண்டோ
இவ்வையகத்தினில் - தோகைவிரித்த மயில் எம்மாத்திரம்
[b] ?
Posts: 375
Threads: 8
Joined: Sep 2003
Reputation:
0
<span style='font-size:25pt;line-height:100%'>வெறும் சடப்பொருளான மண்ணுக்காக
எத்தனை சாவுகள்?
ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதற்கு
ஊடகமான மொழிக்காகவா
இத்தனை மரணங்கள்?
இப்படி அங்கலாய்ப்போர் இருக்கின்றனர்.
இந்தப்போரினால் இறந்து போனவர்களுக்குள்ளே
எத்தனை பாரதிகள்
எத்தனை மக்சிம் கார்க்கிகள்
எத்தனை டால்ஸ்டாய்கள்
எத்தனை மார்கோனிகள்
இன்னும் ஐசாக் நியூட்டன்கள்
மேரிகியூரி அம்மைகள்
எத்தனைபேர் இருந்தார்களே?
அத்தனைபேரும் அழிந்துவிட்டார்களே!
இப்படி மூக்குநீர் சிந்தி
முட்டைக் கண்ணீர் வடிப்போருண்டு
விரிந்த இந்த உலகமே
மனிதன் வாழ்வதற்காககத்தானே
இதில் தமிழனுக்குத் தனிநாடு வேண்டுமா?
இப்படிக் கேட்போர் இன்றும் இருக்கின்றனர்.
கல்தோன்றி மண் தோன்றாக் காலத்துக்கு
முன்தோன்றியது தமிழென்றால்இ
அந்த முதற் தமிழன்
காலெடுத்து நடந்த நிலம் எது?
அவன் மலம் கழித்துவிட்டு கழுவியது எதனால்?
இப்படி அங்கதம் கமழ ஆரவாரிப்போர் உண்டு.
எல்லாவற்றையும் சோத்துக் கோர்த்தால்....
இவர்கள் எழுப்புவதும்
எதிரொலிப்பதும் என்ன?
சரியாக நிலம் வெளிக்காத ~இளம்காலைப் பொழுதுகள்
பகலாகாது@ இரவானது கொடுமையாம்.
சரிஇ
அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும்.
ஆனால்....
உயிர்ப்புடன் பிறந்தலையெல்லாம் போராடுகின்றன
இந்தத் தத்துவம்
இவர்களுக்கு மட்டும்
புதைந்துபோன செப்பேடுகள் ஆனது ஏன்?
போராட்டம் பூப்பறிக்கும் வேலையென்று
இவர்களுக்கு பாடம் கற்பித்த பரமபிதா எவன்?
குருதி சொரியாது உரிமை பெற்றதுக்கு
ஒரு உதாரணம் சொல்லட்டும் பார்க்கலாம்.
தமிழீழம்
இவர்களுக்கு கனவாக இருக்கலாம்.
போராடும் எங்கள் மக்களுக்கு
கையள்ளி மகிழும் காலடி மண்தான்
எட்டிப்பிடிக்கக்கூடிய தாயின் மடிதான்.
விரிந்த காலுடைய கும்பிடு பூச்சிகளான
இவர்களுக்கு
ஆபிhக்கா அத்தை வீடாகவும்இ
அமெரிக்கா அக்கா வீடாகவும் இருக்கலாம்.
எங்கேஇ இந்தச் சர்வதேச வாதிகள்
அத்தை வீட்டுக்குள்ளே...
அனுமதியின்றி நுழையட்டும் பார்க்கலாம்?
இவர்களுக்கு
உலகம் ஒரே கூரையின் கீழ் உறங்குகிறதாம்.
ஆனால்....
கூரை ஒன்றானாலும்
குடியிருப்புகள் வேறு வேறு என்பது
இவர்களின் அகராதியில் மட்டும்
அச்சழிந்து போய்விட்டதா?
தமிழீழம் வெறும் மண்ணாகவா
இவர்களின் கண்களுக்குத் தெரிகிறது?
இந்த மண்ணில் தானே
எங்கள் நு}று தலைமுறையே புதைந்து கிடக்கிறது.
மூன்றடி தோண்டினால் போதுமே
நம் முன்னோர்களின் எலும்புக்கூடுகள் தலைநிமிர்த்தும்.
இங்கு வீசும் காற்று வெறும் காற்று மட்டும் தானா?
எங்கள் பரம்பரையின் மூச்சும் அதில் கலந்திருப்பது
இவர்களின் சுவாசத்துக்கு ஏன் தெரியாமல் போனது?
முற்றத்தில் நிற்கும் பலா மரத்தைக் கீறினால்...
வடிவதும் பால் மட்டும் தானா?
எங்கள் முந்தையரின்
குருதியும்இ வியர்வையும் கொப்பளிப்பது
இவர்களுக்கு மட்டும் ஏன் தெரியவில்லை?
எங்கள் கோவில் வீதிகள்
வெறிச்சோடிப்போன வெறும் வெளிமட்டும் தானா?
யார் சொன்னது?
எமது பாட்டன் ராமன் வேடம் தரித்து
மேடையில் நின்றபோது
பாட்டி தன்னை சீதையாக உருவகித்து
மனதுக்குள்ளே....
மாயமான் கேட்டு நின்ற மண்ணல்லவா?
எப்படி எங்கள் தாய் நிலமும்
அரபுப் பாலைவனமும் ஒன்றாக முடியும்?
இவர்களுக்கு எல்லைகள் தொல்லைகளாக இருக்கலாம்
ஆனால் எல்லாவற்றிற்கும் எல்லைகள் இருக்கின்றனவே.
கடலுக்கு நிலமும்இ
நிலத்திற்கு கடலும் எல்லைகள் ஆகும்போது
எங்கள் தாய் நிலத்துக்குமட்டும்
வேலிகள் வேண்டாமா?
வெள்ளிக்கிழமை விரதச் சாப்பாட்டின் பின்னர்இ
சாணிமெழுகிய திண்ணையில்
சரிந்து படுக்கின்ற இன்பம் இருக்கிறதே.
இது இங்கன்றி
வேறு எந்த மண்ணில் ஏற்படும்?
தாய் மடிதானே சந்தோசம்.
அழகில்லை என்பதற்காக
என்னைப் பெற்ற ஆச்சி
எப்படி அடுத்த வீட்டுக் கிழவி ஆகமுடியும்?
அழகானவள் என்பதற்காக
அடுத்த வீட்டுக் கிழவி
என்னைப் பெற்றவள் ஆகமுடியுமா?
ஊத்தை உடுப்பென்றாலும்
ஆச்சியுடன் ஒட்டியிருக்கும் சுகமிருக்கிறதே
அதைவிடச் சுகம் எதுவுமே இல்லை.
சப்த சமுத்திரங்களுக்கும் சொந்தம் கொண்டாடும்
சர்வதேச வாதிகளுக்கு
மட்டக்களப்பு வாவியின் மகிமை தெரியாது.
நைல் நதி தீரமும் நமதென்று சொல்பவர்களுக்கு
கீரிமலைக் கேணியின்
ஊற்று நீரின் உன்னதங்கள் புரியாது.
அல்ப்ஸ் மலை அழகுதான்
அதற்காக
கோணமலை கோரமலை ஆகிவிடாது.
எங்களுக்கு....
பாய் விரித்துப் படுத்துறங்கவும்இ
அச்சமின்றி ஆடிப்பாடவும்இ
குந்த ஒரு குடிநிலம்
சொந்தமாக வேண்டும்.
எல்லைபோட்ட கொல்லை
இதுதான் எங்கள் குறிக்கோள்!.
-வியாசன்</span>
Posts: 1,073
Threads: 25
Joined: Jan 2004
Reputation:
0
[quote=தணிக்கை]<span style='font-size:25pt;line-height:100%'>வெறும் சடப்பொருளான மண்ணுக்காக
எத்தனை சாவுகள்?
ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதற்கு
ஊடகமான மொழிக்காகவா
இத்தனை மரணங்கள்?
இப்படி அங்கலாய்ப்போர் இருக்கின்றனர்.
இந்தப்போரினால் இறந்து போனவர்களுக்குள்ளே
எத்தனை பாரதிகள்
எத்தனை மக்சிம் கார்க்கிகள்
எத்தனை டால்ஸ்டாய்கள்
எத்தனை மார்கோனிகள்
இன்னும் ஐசாக் நியூட்டன்கள்
மேரிகியூரி அம்மைகள்
எத்தனைபேர் இருந்தார்களே?
அத்தனைபேரும் அழிந்துவிட்டார்களே!
இப்படி மூக்குநீர் சிந்தி
முட்டைக் கண்ணீர் வடிப்போருண்டு
விரிந்த இந்த உலகமே
மனிதன் வாழ்வதற்காககத்தானே
இதில் தமிழனுக்குத் தனிநாடு வேண்டுமா?
இப்படிக் கேட்போர் இன்றும் இருக்கின்றனர்.
கல்தோன்றி மண் தோன்றாக் காலத்துக்கு
முன்தோன்றியது தமிழென்றால்இ
அந்த முதற் தமிழன்
காலெடுத்து நடந்த நிலம் எது?
அவன் மலம் கழித்துவிட்டு கழுவியது எதனால்?
இப்படி அங்கதம் கமழ ஆரவாரிப்போர் உண்டு.
எல்லாவற்றையும் சோத்துக் கோர்த்தால்....
இவர்கள் எழுப்புவதும்
எதிரொலிப்பதும் என்ன?
சரியாக நிலம் வெளிக்காத ~இளம்காலைப் பொழுதுகள்
பகலாகாது@ இரவானது கொடுமையாம்.
சரிஇ
அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும்.
ஆனால்....
உயிர்ப்புடன் பிறந்தலையெல்லாம் போராடுகின்றன
இந்தத் தத்துவம்
இவர்களுக்கு மட்டும்
புதைந்துபோன செப்பேடுகள் ஆனது ஏன்?
போராட்டம் பூப்பறிக்கும் வேலையென்று
இவர்களுக்கு பாடம் கற்பித்த பரமபிதா எவன்?
குருதி சொரியாது உரிமை பெற்றதுக்கு
ஒரு உதாரணம் சொல்லட்டும் பார்க்கலாம்.
தமிழீழம்
இவர்களுக்கு கனவாக இருக்கலாம்.
போராடும் எங்கள் மக்களுக்கு
கையள்ளி மகிழும் காலடி மண்தான்
எட்டிப்பிடிக்கக்கூடிய தாயின் மடிதான்.
விரிந்த காலுடைய கும்பிடு பூச்சிகளான
இவர்களுக்கு
ஆபிhக்கா அத்தை வீடாகவும்இ
அமெரிக்கா அக்கா வீடாகவும் இருக்கலாம்.
எங்கேஇ இந்தச் சர்வதேச வாதிகள்
அத்தை வீட்டுக்குள்ளே...
அனுமதியின்றி நுழையட்டும் பார்க்கலாம்?
இவர்களுக்கு
உலகம் ஒரே கூரையின் கீழ் உறங்குகிறதாம்.
ஆனால்....
கூரை ஒன்றானாலும்
குடியிருப்புகள் வேறு வேறு என்பது
இவர்களின் அகராதியில் மட்டும்
அச்சழிந்து போய்விட்டதா?
தமிழீழம் வெறும் மண்ணாகவா
இவர்களின் கண்களுக்குத் தெரிகிறது?
இந்த மண்ணில் தானே
எங்கள் நு}று தலைமுறையே புதைந்து கிடக்கிறது.
மூன்றடி தோண்டினால் போதுமே
நம் முன்னோர்களின் எலும்புக்கூடுகள் தலைநிமிர்த்தும்.
இங்கு வீசும் காற்று வெறும் காற்று மட்டும் தானா?
எங்கள் பரம்பரையின் மூச்சும் அதில் கலந்திருப்பது
இவர்களின் சுவாசத்துக்கு ஏன் தெரியாமல் போனது?
முற்றத்தில் நிற்கும் பலா மரத்தைக் கீறினால்...
வடிவதும் பால் மட்டும் தானா?
எங்கள் முந்தையரின்
குருதியும்இ வியர்வையும் கொப்பளிப்பது
இவர்களுக்கு மட்டும் ஏன் தெரியவில்லை?
எங்கள் கோவில் வீதிகள்
வெறிச்சோடிப்போன வெறும் வெளிமட்டும் தானா?
யார் சொன்னது?
எமது பாட்டன் ராமன் வேடம் தரித்து
மேடையில் நின்றபோது
பாட்டி தன்னை சீதையாக உருவகித்து
மனதுக்குள்ளே....
மாயமான் கேட்டு நின்ற மண்ணல்லவா?
எப்படி எங்கள் தாய் நிலமும்
அரபுப் பாலைவனமும் ஒன்றாக முடியும்?
இவர்களுக்கு எல்லைகள் தொல்லைகளாக இருக்கலாம்
ஆனால் எல்லாவற்றிற்கும் எல்லைகள் இருக்கின்றனவே.
கடலுக்கு நிலமும்இ
நிலத்திற்கு கடலும் எல்லைகள் ஆகும்போது
எங்கள் தாய் நிலத்துக்குமட்டும்
வேலிகள் வேண்டாமா?
வெள்ளிக்கிழமை விரதச் சாப்பாட்டின் பின்னர்இ
சாணிமெழுகிய திண்ணையில்
சரிந்து படுக்கின்ற இன்பம் இருக்கிறதே.
இது இங்கன்றி
வேறு எந்த மண்ணில் ஏற்படும்?
தாய் மடிதானே சந்தோசம்.
அழகில்லை என்பதற்காக
என்னைப் பெற்ற ஆச்சி
எப்படி அடுத்த வீட்டுக் கிழவி ஆகமுடியும்?
அழகானவள் என்பதற்காக
அடுத்த வீட்டுக் கிழவி
என்னைப் பெற்றவள் ஆகமுடியுமா?
ஊத்தை உடுப்பென்றாலும்
ஆச்சியுடன் ஒட்டியிருக்கும் சுகமிருக்கிறதே
அதைவிடச் சுகம் எதுவுமே இல்லை.
சப்த சமுத்திரங்களுக்கும் சொந்தம் கொண்டாடும்
சர்வதேச வாதிகளுக்கு
மட்டக்களப்பு வாவியின் மகிமை தெரியாது.
நைல் நதி தீரமும் நமதென்று சொல்பவர்களுக்கு
கீரிமலைக் கேணியின்
ஊற்று நீரின் உன்னதங்கள் புரியாது.
அல்ப்ஸ் மலை அழகுதான்
அதற்காக
கோணமலை கோரமலை ஆகிவிடாது.
எங்களுக்கு....
பாய் விரித்துப் படுத்துறங்கவும்இ
அச்சமின்றி ஆடிப்பாடவும்இ
குந்த ஒரு குடிநிலம்
சொந்தமாக வேண்டும்.
எல்லைபோட்ட கொல்லை
இதுதான் எங்கள் குறிக்கோள்!.
-வியாசன்</span>
இவை வியாசன் என்னும் புனைப்பெயரில் புதுவை இரத்தினதுரை அவர்கள் எழுதிய சத்திய வார்த்தைகள்
\" \"
Posts: 1,073
Threads: 25
Joined: Jan 2004
Reputation:
0
குந்த ஒரு குடிநிலம்
சொந்தமாக வேண்டும்.
எல்லைபோட்ட கொல்லை
இதுதான் எங்கள் குறிக்கோள்!.
அதனை தான் கவிதையிலேயே சொல்லிவிட்டாரே எங்களுக்கு தேவை எல்லை போட்ட கொல்லை என்று
\" \"