kavithan Wrote:kirubans Wrote:Eswar Wrote:Quote:பாபா இலண்டனில் பாவித்த கார்களை விற்பனை செய்யும் தொழில் செய்கிறார். அவர் போன வாரம் இரண்டு கார்களை தலா 9999 பவுண்டுகளுக்கு விற்றார். ஒரு காரில் அவர் 10% இலாபத்தையும், மற்றையதில் 10% நட்டத்தையும் அடைந்தால், அவர் மொத்தமாக அடைந்த இலாபத்தினது/நட்டத்தினது தொகை என்ன?
அவர் 202 பவுண்டு நட்டப்பட்டிருக்கிறார்.
சரியான பதில். நீங்கள் ஒரு கணக்காளராக இருந்தால், வியாபாரம் செய்யும் தமிழருக்கு லாப நட்டங்களைக் கணக்கிட உதவலாமே. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
எப்படி என்றும் போடலாமே.. என்னை போலை கொஞ்சப் பேருக்காக
இரண்டு காரினதும் கொள்விலைகள் = Y* , Y"
விற்றவிலை = 9999
10% இலாபமும் நட்டமும் என்று தரப்பட்டுள்ளது தரவு...!
இதன் பிரகாரம்
இலாபச் சதவீதம் பின்வருமாறு தரப்படும்
9999 - Y* X 100 / Y* = 10
இதைத் தீர்த்தால் இலாபத்துடன் விற்ற காரின் கொள்விலை = 9090 பவுண்ஸ் என்றாகும்
நட்டச் சதவீதம் பிவருமாறு தரப்படும்
Y" - 9999 X 100 / Y" = 10
இதைத் தீர்த்தால் நட்டத்துடன் விற்ற காரின் கொள்விலை = 11110 பவுண்ஸ் ஆகும்
மொத்தக் கொள்விலை (இரு காரினதும் ) = 9090 + 11110 = 20200
மொத்த விற்றவிலை ( இரு காரினதும் ) = 9999 + 9999 = 19998
மொத்த நட்டம் = 20200 - 19998 = 202 பவுண்கள்...!
ஈஸ்வர் செய்கைமுறை தர தாமதித்ததால் நாங்கள் செய்த வழிமுறையைத் தருகின்றோம்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>