Posts: 4,986
Threads: 34
Joined: Jun 2004
Reputation:
0
<b>நெருப்பு பெட்டி ஒன்றில் 48 குச்சிகள் உண்டு. சமமற்ற 3 குவியலாக அவை கொட்டப்பட்டன.
* 2 வது குவியலில் எவ்வளவு குச்சிகள் உண்டோ அதே அளவு குச்சிகள் 1 வது குவியலிலிருந்து எடுத்து 2 வது குவியலுடன் சேர்க்கப்படுகின்றது.
* 3 வது குவியலில் எவ்வளவு குச்சிகள் உண்டோ அதே அளவு குச்சிகள் 2 வது குவியலிலிருந்து எடுத்து 3 வது குவியலுடன் சேர்க்கப்படுகின்றது.
* பின்னர் 1 வது குவியலில் எவ்வளவு குச்சிகள் உண்டோ அதே அளவு குச்சிகள் 3 வது குவியலிலிருந்து எடுத்து 1 வது குவியலுடன் சேர்க்கப்பட்டவுடன் 3 குவியல்களும் சமமான எண்ணிக்கையை காட்டின.</b>
<b>எனவே ஆரம்பத்தில் ஒவ்வொரு குவியல்களிலும் இருந்த குச்சிகளின் எண்ணிக்கை யாது?</b>
----------
Posts: 345
Threads: 8
Joined: Jun 2003
Reputation:
0
நீங்கள் எழுதியவுடன்
மற்றவர்கள் பார்ப்பதற்கு முன் விடையை எழுதிவிடுவதால் மற்றவர்களுக்கு சந்தர்ப்பம் இல்லாமல் போய்விடுகிறது. எல்லோரும் முதல் பார்க்கட்டும்
(தெரியாவிடில் இப்படி சொல்லி சமாளிப்பது சகஜம் தானே கண்டுக்காதீங்க)
Posts: 852
Threads: 18
Joined: Mar 2004
Reputation:
0
கடிகாரமின்றி நேரம் கணித்தல்
எல்லா வகையிலும் ஒத்த ஆனால் சீரில்லாத இரண்டு கயிறுகள் உள்ளன. தனியே ஒரு கயிறு எரிந்து முடிய ஒரு மணித்தியாலம் பிடிக்கும். ஆனால் கயிறு சீரில்லாதபடியால் அரைக்கயிறு எரிய சரியாக அரை மணி எடுக்க மட்டாது.
இந்த இரு கயிறுகளையும் ஒரு தீப்பெட்டியையும் மட்டும் பாவித்து 45 நிமிடங்களை அளவிடுவது எவ்வாறு??
<b> . .</b>
Posts: 345
Threads: 8
Joined: Jun 2003
Reputation:
0
மணிக்கூடு பார்த்ர்தே நேரம் பார்க்கமாட்டாத நிலையை சொன்னால் நம்புவீர்களா?
கயிறை வைத்து நேரம் கணிக்கச்சொன்னால் எப்படி?
எதற்கும் சோழியன் மேலே ஓடுகிறார் வருவார் பொறுங்கள்.
உண்மையில் எனக்கு உங்கள் கேள்வி புரியவில்லை
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
இளங்கோ கிருபன் சொல்வது என்னவென்றால் ...
ஒரு முழுகயிறு எரிய 1 மணித்தியாலம் எடுக்கும் ..அதை வைத்து நீங்கள் அரைவாசி கயிறு எரிய அரை மணித்தியாலம் என எண்ணக்கூடாது. ஏனெனில் கயிறு சீரில்லாத காரணத்தால் முன்னே பின்னே ஆகும்.
ஆனால் முழுவதும் சரியாக ஒரு மணித்தியாலத்தில் எரிந்து விடும்.
( நானும் குழப்பிவிட்டேனோ??)
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Posts: 345
Threads: 8
Joined: Jun 2003
Reputation:
0
அப்படியா?
இப்போது புரிகிறது
இரண்டு கயிறும் (ஒரே மாதரியான கயிறு இரண்டும் ஒரே பக்கத்திலேயே இருக்கவேண்டும்) கயிற்றையும்
சமாந்திமாக நேரக வைத்து ஆனால் ஒன்றைக்கீழ்பக்கத்திலும்
மற்றதை மேல் பக்கதிலும் கொழுத்தி விட வேண்டும்.
இரண்டும எரிந்து சந்திக்கும் இடம் அரை மணித்தியாலம்.
பின் மீண்டும் சரிசமநீளத்தில் முதல்செய்தது போல் சரிசெய்து எரியும் கயிறுகளை வெவ்வேறு பக்கத்தில் விடவும் மீண்டும் சந்திக்கும் இடம் கால் மணித்தியாலம்.
இப்போது கிட்டத்தட்ட 45 நிடம
சரியா?
Posts: 1,859
Threads: 37
Joined: Apr 2003
Reputation:
0
இரண்டு கயிறுதானே இருக்கு..? இரண்டையும் எரிச்சா.. சமநீளமுள்ள கயிறுகளுக்கு எங்க போறது.. copy & paste செய்யலாமா?! நானும் குழம்பிவிட்டேனா?
.
Posts: 180
Threads: 4
Joined: Mar 2004
Reputation:
0
ஒரு கயித்தை இரண்டு பக்கமும் கொழுத்தி விடுற நேரத்தில மற்ற கயித்தில ஒரு பக்கம் மட்டம் கொழுத்தி விடுறது. இரண்டு பக்கமும் கொழுத்தி விட்ட கயிறு எரிச்சு முடியேக்கிள்ளை, ஒரு பக்கம் எரிச்சு கொண்டிருக்கிற கயித்துக்கு மற்றப் பக்கம் கொழுத்தி விட்டால், அந்த கயிறு எரிச்சு முடிய சரிய 45 நிமிசம் எடுக்கும்.
என்ர அப்புவின்ர அப்பு உப்பிடி கனகேள்வி கேக்கும் - நான் சின்னனா இருக்கேக்க.
ம்.......... ................
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
சுருட்டா , வீ. டி.யா கொழுத்திப் பழக்கம். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
விடை சுப்பர் அப்பு. உங்கடை அப்புவையும் கேட்டதெண்டு சொல்லுங்கோ. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Posts: 345
Threads: 8
Joined: Jun 2003
Reputation:
0
என்னப்பா தாத்தாவும் கந்தரையும் கலக்கவிட்டுட்டு இருக்கிறீங்கள்.(மற்றப்பபகுதிகளில் அவர்கள் எழுதினால் அறளை பேந்திட்டு என்று சொல்கிகிறீர்கள்)
நான் சொன்ன வழியிலும் செய்யலாம்.
சிந்திப்பீர்கள் என நினைத்தேன்.
இரண்டு கயிறும சந்திக்குமிடம் அரை மணித்தியாலம்.
பின் கந்தரின் வழி தான் அங்கும்.