Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Boys
[quote]AJeevan[/color]
மீண்டும் விரைவில் உங்கள் அனைவரையும் யாழ் ஊடாக சந்திப்பேன் எனும் நம்பிக்கையுடன் இனிய நண்பர்கள் அனைவருக்கும் நல்-வாழ்த்துகள்.

நல்லது அஜீவன் வேலைகளை செவ்வனவே செய்து முடித்துவிட்டு மீண்டும் வாருங்கள்.
காத்திருக்கின்றோம்
Reply
[quote=AJeevan] [
தோரகாவின் தமிழாக்கம் (Re-make)
திரைப்பட ஒளிப்பதிவின் போது ெஹலிகப்டர் (Helicopter) ஒன்றில் தொங்கி நடிக்க முயன்ற போது கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்த கன்னட நடிகர் சசிகுமார் நிர்மலா நடித்த <b>அவள்</b>

பாடல் வரிகள்:-
ஆடாமல் ஆடுகிறேன்
பாடாமல் பாடுகிறேன்
ஆண்டவனைத் தேடுகிறேன்
வா வா வா..................
Reply
[quote=Mullai][quote=AJeevan] [
தோரகாவின் தமிழாக்கம் (Re-make)
திரைப்பட ஒளிப்பதிவின் போது ெஹலிகப்டர் (Helicopter) ஒன்றில் தொங்கி நடிக்க முயன்ற போது கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்த கன்னட நடிகர் சசிகுமார் நிர்மலா நடித்த <b>அவள்</b>

பாடல் வரிகள்:-
ஆடாமல் ஆடுகிறேன்
பாடாமல் பாடுகிறேன்
ஆண்டவனைத் தேடுகிறேன்
வா வா வா..................

தவறைத் திருத்தியமைக்கு நன்றி.
Reply
[quote=Mullai][quote]AJeevan[/color]
மீண்டும் விரைவில் உங்கள் அனைவரையும் யாழ் ஊடாக சந்திப்பேன் எனும் நம்பிக்கையுடன் இனிய நண்பர்கள் அனைவருக்கும் நல்-வாழ்த்துகள்.

நல்லது அஜீவன் வேலைகளை செவ்வனவே செய்து முடித்துவிட்டு மீண்டும் வாருங்கள்.
காத்திருக்கின்றோம்

முடியும் போது உங்கள் ஆக்கங்களைப் பார்ப்பேன்.அதுவே மகிழ்சியான விடயம்.தெரிந்து கொள்ள நல்ல விடயங்கள்.கருத்து மோதல்கள்,எல்லாம் குடும்பம் ஒன்றுக்குள் இனிமையானது. இப்படியான நட்புகள் இறுக்கமானது. ஒருமாத விடுமுறை, அதற்கு முன் சில வேலைகளை முடித்து விட்டு நிம்மதியாக எங்காவது சுற்ற வேண்டும்.............
மீண்டும் வாழ்த்தகள்.
Reply
வணக்கம் சூரியன் இணையத்தளத்தில் வெளியான சர்ச்சக்குரிய விடயம்

உங்களிற்காக இணைப்பு இதோ

http://www.sooriyan.com/etc/boys.asp

www.sooriyan.com
[b] ?
Reply
நீங்கள் எவ்வளவுதான் பச்சைப்படம்.. சிவப்புப்படம்.. நீலப்படமெண்டு விளம்பரம் செய்தாலும் நான் பார்க்கப்போறதில்லை.. உங்கட வேலையளைப் பார்த்துக்கொண்டு போங்கோ..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
வருமா, வருமா என்று ஆவலுடன் எதிர்பார்த்த பிரபல இயக்குனர் ஷங்கரின் பாய்ஸ் ஒரு வழியாக வந்துவிட்டது. ஐந்து கல்லுõரி மாணவர்கள் கொஞ்சம்கூட கவலையின்றி சுற்றித் திரிகின்றனர். இவர்களின் கேலி, கிண்டல், சீண்டல், அரட்டை அனைத்தும் கொஞ்சம் கூடுதல் என்றாலும் சிரிக்காமல் இருக்கமுடியவில்லை. போதாக்கறைக்க இவர்களுடன் விவேக் இருக்கிறார். சொல்ல வேண்டுமா? இடைவேளை வரை அரட்டைகளிலேயே அரங்கம் அதிர்கிறது. இவர்களில் ஒரவன் துணிந்து பெற்றோர்களை எதிர்த்து திருமணம் செய்துகொள்ள, குருவித் தலையில் பனங்காயாக பாரம் விழுகிறது. இந்த பாரத்திலிருந்து பாய்கள் எப்படி மீள்கின்றனர் என்பது தான் பாய்ஸ். இந்த ஐந்து பையன்களை எங்கிருந்து தான் ஷங்கர் பிடித்தார் என்று தெரியவில்லை. ஐந்தும் ஐந்து ரகம். அதிலிலும் அந்தக் குண்டுப் பையன், நண்பர்களுக்காக உயிரையே விடும் சுருட்டைத்தலையன், பெண்களைக் கண்டாலே கிடார் வாசிககும் மற்றொருவன் இப்படி அனைவரும் அசத்துகின்றனர்.

குறிப்பாக பணம் இல்லாமல் குவார்ட்டர் வாங்கி ஐந்து பேரும் ஐந்து கிளாசில் ஊற்ற அதற்கு ஒருவன் டேய் ஆளுக்கு ஒரு மூடி அளவுதான் வருகிறது என்ற கவலையுடன் கூற, அதற்கு இன்னொருவன் விவேக்கை மடக்கி அவரது பாட்டிலை காலிசெய்வது சரியான காமெடி. முதலில் மோதலில் ஆரம்பித்த இவர்களின் காதல் கடைசியில் வீட்டை விட்டு வெளியே ஓடிவரும் அளவுக்கு ஆகி, விவேக் அறிவுரையில் இவர்களே பெரிய இசைக் குழுவாக மாறுவது அருமை. ஒரே ஒரு காட்சியில் வரும் புவனேஸ்வரி அந்த பாத்திரமாகவே வாழ்ந்துள்ளார். இவரைத் தவிர வேறு யாரும் இந்தப்பாத்திரத்தில் நடித்திருக்க முடியாது.

ஷங்கரின் தனித் திறமையால் படம் முழுக்க பிரமாண்டம். பாடல்களோ அருமை. பல தொழில்நுட்ப ஹைலைட்கள் நிறைய உள்ளன இப்படத்தில்.

ரஹ்மானின் இசையில் ஆறு பாடல்களும் அற்புதம். அதிலும் பூம்... பூம்... மாரோ... மாரோ... பாடல்கள் ஹாலிவுட் தரம். ஒளிப்பதிவு: ரவி.கே.சந்திரன். இப்படியும் முடியுமா போன்ற காட்சிகள் நம் கண்களுக்கு விருந்தாக்கி உள்ளனர். வசனம்: சுஜாதா. கொஞ்சம் நாசுக்காக எழுதி இருக்கலாம். நடம்:ராஜு சுந்தரம். கலக்கி உள்ளார்.

கதை, திரைக்கதை, இயக்கம்: ஷங்கர். இவர் இளைஞர்களை கவர இயக்கியுள்ளார் பாய்ஸ்.

நன்றி: தினமலர்
Reply
விஜய் டிவியில் 'மதன் திரைப்பார்வை'யில் டைரக்டர் ஷங்கரிடம் 'பாய்ஸ் 2 எடுப்பீர்களா' என்று கேட்டபோது, அவர் புன்னகைத்து, 'நான் வேற திசையில் யோசிச்சுகிட்டிருக்கேன்' என்றார்.

'பாய்ஸ்' திரைப்படம் வெளிவந்தபின் நிகழ்ந்த சம்பவங்களே ஒரு முழுதிரைப்படமோ, அதிகபட்சம் குறும்படமோ எடுக்கும் அளவுக்கு உள்ளன. இன்னமும் 'பாய்ஸ்' பரபரப்பு ஓயவில்லை. தினம்தினம் எதிர்ப்பு தெரிவிக்க புதியபுதிய சங்கங்கள், அமைப்புகள் புறப்படுகின்றன. தமிழ்நாடே இந்தப் படத்தை எதிர்ப்பதன்மூலம் தன்னைப் புனிதப்படுத்திக்கொள்ள ஒரு எளிய வாய்ப்பு, Soft target கிடைத்தது போல் வீறுகொண்டு எழுந்திருக்கிறது. கிராமத்தில் பிடிபட்ட பாத்திரத் திருடன் போல, ஆளாளுக்கு இதைச் சாத்துகிறார்கள். பெரும்பாலான பத்திரிகைகள் 'பாய்ஸ்' படத்தின் கவர்ச்சிகரமான படங்களை முழுப்பக்கமும் பிரசுரித்துவிட்டு, விமர்சனத்தில் 'அய்யயோ! இப்படியெல்லாம் எடுத்து நம் இளைஞர்களைக் கெடுக்கிறார்களே!' என்று தாக்கியிருந்தன. 'ஆனந்த விகடன்' இதை, ஒரு வார்த்தையில், நாய் கொண்டு போட்ட வஸ்¢துவைப்போல ஒதுக்கியிருந்தது. . 'எக்ஸ்பிரஸ்', 'தேவி', 'மாலை மலர்', 'மக்கள் குரல்' போன்றவை கடுமையாகத் தாக்கியிருந்தன. சிலர் என்னையும், ஷங்கரையும் பாஸ்போர்ட் கொடுத்து, நாடு கடத்தவேண்டும் அல்லது, பாஸ்போர்ட் இருந்தால் பிடுங்கிக்கொள்ள வேண்டும் என்கிற ரேஞ்சுக்கு எழுதியிருந்தார்கள். இருவரும் அரபு தேசங்களில் போல, நகர நடுவில் மண்டிபோட வைத்து பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஒருவர் எழுதியிருந்ததாக தகவல் சொன்னார்கள்.

'குமுதம்', 'ஹிந்து', 'குங்குமம்', 'தினத்தந்தி'¢ போன்ற பத்திரிகைகள் அவ்வளவு கடுமையாகத் தாக்கவில்லை. இவர்கள் அனைவரும், 'சுஜாதா சார்! நீங்களுமா? இதெல்லாம் உங்களுக்குத் தேவையா?' என்கிற குரலில் விமர்¢சித்திருக்கிறார்கள். தாய்மார்கள், சின்னப் பெண்களுக்கு பூச்சாண்டி காட்ட, 'சுஜாதா சார் கிட்ட சொல்லிடுவேன்! சாப்பிடு' என்று அதட்ட ஆரம்பித்தார்கள். திருமதி ஒய்¢ஜிபி தன் பள்ளியில், ''ஒரு பேரண்ட்¢ சொன்னார். என்ன, ப்ரெஸ்¢ட் எல்லாம் தடவறாளாமே அந்த பிக்சர்ல! ஏன் இப்படி எழுதியிருக்கேள்'' என்று கேட்டார். 'பிரம்ம சூத்திரம் விளக்கம் தந்து, வானமாமலை ஜீயருக்கு வரவேற்புரை அளித்த நீங்களா, இப்படி! உமக்கு பார்த் கலாசார் விருதெல்லாம் கொடுத்தேனே! நான் நம்பவில்லை. எல்லாம் ஷங்கர் சொல்லிக் கொடுத்து அப்படி எழுதினேன்னு சொல்லிடுங்களேன்' என்று பரிந்துரைத்தார். நான், 'அது நியாயம். இல்லை. எழுதிய எல்லாவற்றிற்கும் நான்தான் பொறுப்பெடுத்துக் கொள்ள விரும்புகிறேன்' என்றேன். பாரத் கலாசார் எனக்கு கொடுத்த விருது வாபஸ் வாங்கப்படலாம்.
நாடார் சங்கங்கள், திரு.கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் போன்றவர்கள் பத்திரிகைகளில் அறிக்கை கொடுத்தனர். ஜனநாயக மாதர் சங்கம் தேவி தியேட்டர் முன் மறியல் நடத்தி, 'படத்தைத் தடை செய்யவேண்டும்' என்று குரல் கொடுத்தார்கள். ஜனநாயக பாலர் சங்கம் என்றிருந்தால் அவர்களும் ஊர்வலம் சென்றிருப்பார்கள். தினம் தினம் ஏதேனும் ஒருசங்கம், இன்றைய தினம் என்ன நடவடிக்கை என்று கேள்வி வந்த உடனே, 'ஐட்டம் நம்பர் 1: பாய்ஸ் படத்துக்கு எதிர்ப்பு. நம்பர் 2: மழை நீர் சேமிப்பு திட்டம்' என்று தீர்மானித்தனர். மேற்கு மாம்பலம் பயனீட்டாளர்கள் சங்கம், அயோத்தி மண்டபம் ஆஸ்¢திக சமாஜம், பூந்தமல்லி ஹைரோடில் உள்ள பல மாடிக் கட்டிடங்களின் வெல்ஃபேர் அசோசியேஷன், பசுவதை தடுப்பு சங்கம் போன்றவையும் பாய்ஸ் படத்திற்கு எதிர்ப்புக்குரல் தெரிவிக்க முன்வந்துள்ளன. மாதாந்திர சிறு பத்திரிகைகள் பேனாவைத் தீட்டி வைத்துக்கொண்டு 'பாய்ஸ் - கலாசார சீரழிவின் ஒரு வெளிப்பாடு' என்று டெரிடாவின் மேற்கோள்களுடன் அடுத்த மாத ஆரம்பத்துக்குக் காத்திருக்கின்றன. இத்தனை எதிர்ப்புக்கு என்ன காரணம் என்பதை கொஞ்சம் அலசிப் பார்ப்பது எனக்கு சுவாரசியமாக இருக்கிறது. படம், ஆந்திரபிரதேசில் ஆரவாரமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் ஏன் இப்படி என்றால் - சங்க காலத்திலிருந்து உள்ள நம் மக்களின் இரட்டைத் தகுதரங்களைத்தான் காரணம் சொல்லலாம். Double standard. 'பாய்ஸ்' படம் 15 வயதிலிருந்து 25 வயதுவரை தனியாகப் பார்க்கும் இளைஞர்களைத் தவிர, மற்ற எல்லோரையும் விதிவிலக்கில்லாமல் சங்கடப்படுத்தியுள்ளது. மனைவிகள் - தங்கள் கணவர்கள், தம்மை மணந்து கொள்ளுமுன் அன்றலர்ந்த புஷ்பம் போல, பாலிதீன் உரை பிரிக்காமல் வந்தவர்கள் என்று எண்ணிக் கொண்டிருக்க, அவர்களுக்கு இந்தப் படத்தில் காட்டியது மாதிரியான இளமைக் காலம் இருந்திருக்கலாம் என்ற சந்தேகம் சங்கடப்படுத்தியுள்ளது. அதேபோல், கணவன்மார்கள். தற்போது டை கட்டிக்கொண்டு, டிபன் பாக்சில் எலுமிச்சை சாதம் எடுத்துக்கொண்டு, ஸ்¢¢கூட்டரில் புறப்படுமுன் குழந்தை விகேஷ§க்கு டாட்டா காட்டிவிட்டு, மனைவியை வாத்சல்யத்துடன் பார்த்துக்கொண்டு ஆபீஸ் செல்லும் கணவர்களுக்கு கடந்த காலத்தில் செய்த தப்புக்கள் சிலவற்றை நினைவுபடுத்துகிறது. 'ஏங்க, இந்த மாதிரித்தான் நீங்கள்லாமா? இப்படித்தான் இருந்தீங்களா?' என்ற கேள்வி வரும். அதற்கு பொய் தயாரிக்க வேண்டும் என்று சங்கடப்படுத்துவதால் அவசர அவசரமாக 'படமா இது? சே! எவன் பார்ப்பான்? என்ன ஆச்சு! இந்த ஷங்கருக்கும், சுஜாதாவுக்கும்' என்று திட்டிவிடுவது பத்திரமானது. தாய்மார்கள் - பகலில் கல்லூரிக்குச் செல்லும், இரவில் கம்பைன்டு ஸ்¢டடிக்கு செல்லும் தம் பிள்ளைகள் துடைத்துவிட்ட வெண்பனிபோல சுத்தமானவர்கள்.... 'என் பிள்ளை/பெண் இப்படியெல்லாம் கிடையாது' என்று எண்ணிக் கொண்டிருக்கையில் அவர்களுக்கும் அதிர்ச்சி! வயதானவர்கள் - தற்போது உயர் அந்தஸ்திலும், பொறுப்பிலும் இருப்பவர்கள் பழசெல்லாம் மறந்துவிட்டு - சத் சங்கமோ, ஹிந்துவின் பக்தி பக்கமோ, இலக்கியக் கூட்டங்களோ, மாக்ஸ்முல்லரோ, அல்லையன்ஸோ, ஜட்ஜோ, வக்கீலோ, ஆசிரியரோ போன்ற அறிவுஜீவி நடவடிக்கைகளில் நிம்மதியாக இருக்கும் நிலையில் சின்ன வயசு ஞாபகங்கள் எதுவும் வேண்டாம் என்கிறார்கள். இப்படி எல்லா வயதினரையும் சங்கடப்படுத்தியுள்ளது இந்த படம். அமெரிக்கன் ப்யூட்டி, அமெரிக்கன் பை, பல்ப் ஃபிக்ஷன் போன்ற படங்கள் எல்லாவற்றையும் அனுமதிக்கும் மேலை நாட்டு ஆடியன்சையே ஒருகலக்கு கலக்கினது போல, தமிழ்நாட்டை இந்தப் படம் கலக்கியிருக்கிறது. இதனால், 'இந்தப் படத்தில் அப்படி என்னதான் இருக்கிறது, பார்க்கலாம்!' என்று மக்கள் ஆதரவும், கூட்டமும் அதிகரித்திருப்பது வேறு விஷயம். இதே படத்தின் ஒவ்வொரு வசனமும், பாடலும் நேரடியாக மொழிமாற்றம் செய்யப்பட்டு, ஆந்திராவில் வெளியான 'பாய்ஸ்' எந்தவித எதிர்ப்பையும், மறுப்பையும் ஏற்படுத்தவில்லை. இதை நிதானமாக யோசிக்கையில், படத்துடன் சம்பந்தப்பட்டவர்களின் பிரபலம்தான் முக்கியக் காரணம் என்பது எளிதாக விளங்கும். சுஜாதாவோ, ஷங்கரோ, ஏன் ரத்னமோ கூட ஆந்திராவில் அத்தனை பிரபலமானவர்கள் அல்ல. மேலும், தமிழ்நாட்டின் வினோத கலாசாரக் குழப்பத்தால் - சிலர்தான், சில விஷயங்களைத்தான், சிலவகையில்தான் சொல்ல முடியும். சைக்கிளில் பிரமாதமாக ஓட்டிக்காட்டி, விழுந்து முழங்கால் சிராய்ப்பதைச் சொல்லலாம். மாஸ்டர்பேஷனை, ஷங்கர் சொல்லக்கூடாது, டாக்டர் மாத்ருபூதம் ராத்திரி பத்து மணிக்குமேல் சொல்லலாம். வெளிப்படையான செக்ஸ் காட்சிகள், பெண் பெண்ணையே முத்தமிடும் காட்சிகள் பத்திரிகைகளில்¢ வரலாம். படங்களில் வரக்கூடாது. இந்த வாதம் ஒருவகையில் நியாயமே! பத்திரிகை படிக்கிறவர்கள், எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள். சினிமா பார்ப்பவர்கள் எல்லாரும் அப்படியில்லை. மிகவும் அடிப்படையாகப் பார்த்தால் - தமிழ் சினிமாவின் ஆடியன்ஸ் amorphous வடிவற்றது என்பதாலும், தமிழர்களுக்கு ஏகப்பட்ட conscience keepers மனச்சாட்சி பாதுகாவலர்கள் இருப்பதன் விளைவுதான் 'பாய்ஸ்'க்கு ஏற்பட்ட இத்தனை பெரிய எதிர்ப்பு. 'ஃபயர்', 'மிஸ்டர் அண்ட் மிஸஸ் ஐயர்', 'மான்சூன் வெட்டிங்' அண்மையில் வெளிவந்த 'ஜாகர்ஸ் பார்க்' (அறுபது வயசை இருபது வயசுப்பெண் காதலிப்பது), ரூல்ஸ் (பள்ளிச்சிறுவன் மாடலைக் காதலிப்பது) போன்ற இந்திப் படங்களின் ஆடியன்ஸ்¢ யார் என்பது தௌ¤வான விஷயம் - ஆங்கிலம் தெரிந்த மேல், நடுத்தர வர்க்க இந்தியர்கள். தமிழ் சினிமாவின் ஆடியன்ஸ் என்று பார்த்தால் - மெரினாக் கூட்டங்களையும், வால்மீகி மண்டபங்களையும், ஐயப்பன் பஜனைகளையும், அறுபத்துமூவர், பிள்ளையார் ஊர்வலங்களையும், டிஸ்¢கோக்களையும், ஆட்டோக்களையும், டோயோட்டாக்களையும், கையேந்தி பவன்களையும், டாஜ் ஓட்டல்களையும் நிரப்பும் அத்தனை பேரையும் வளைத்துப்போட்டு, இருட்டில் உட்கார வைத்து படம் காட்ட வேண்டிய அவசியம் இருப்பதால்தான் எந்தப் படம் ஏற்கப்படும், எது தாக்கப்படும் என்பது தௌ¤வில்லாமல் இருக்கிறது.

ஷங்கருக்கு நான் இதுவரை மூன்று படம் எழுதிவிட்டேன். மூன்றும் மூன்றுவித அனுபவங்கள். மூன்றிலும் ஏதோ ஒருவிதத்தில் பிரச்னை வந்தது. 'இந்தியன்' படத்தில் சென்சார் அதிகாரி (அப்போது, ஞான ராஜசேகரன்), 'படத்தில் நிர்வாணக்காட்சி வருகிறதாகச் சொல்கிறார்கள்' என்று சுகன்யா கொடுத்த புகாரை விசாரிக்க, அந்த துணி உருவும் போராட்டத்திற்கு சரித்திர ஆதாரம் கேட்டதால், மஜும்தாரின் சரித்திர புத்தகத்துடன் சாஸ்திரிபவனில் காத்திருந்தது நினைவுக்கு வருகிறது. 'முதல்வன்' படத்தில் காட்டப்பட்ட முதல்வர், தோற்றத்தில் லல்லுபிரசாதைப்போல் இருந்தாலும், திருக்குறள் மேற்கோள் காட்டினதால் கலைஞருடன் ஒப்பிட்டு, மதுரையில் பெரிய போராட்டம் நடந்து சில தினங்களில் அலுத்துப்போய், அடங்கிவிட்டது. இப்போது 'பாய்ஸ்'. இந்த மூன்றுக்கும் பொதுவான விஷயங்கள் இரண்டுதான் - ஷங்கரும், நானும். மணியோசை கேட்கும் என்று எண்ணுகிறேன்.

எனக்கு மெயில் அனுப்பியவர்கள், 'எப்படி ஒருபக்கம் நீங்கள் ப்ரம்மசூத்ரத்துக்கு விளக்கம் எழுதுகிறீர்கள்! மற்றொரு பக்கம், பாய்ஸ§க்கும் வசனம் எழுதுகிறீர்கள்! எது பாசாங்கு? எது நிஜம்?' என்று கேட்டிருக்கிறார்கள். இரண்டுமே நிஜம். எனக்கு கிடைத்த திறமை, அன்றாடம் என்னைச் சுற்றியுள்ள மனிதர்களையும், அவர்கள் சிந்தனையையும், பேச்சையும், வழக்குகளையும், புதிய வார்த்தைகளையும் உன்னிப்பாக கவனித்து எழுதுவது, மனதில் வாங்கிக்கொள்வது. Entering the skin of characters என்பது எழுத்தாளனுக்கு பெரிய சவால். இக்கால இளைஞர்களின் 'ஜெர்க்' விடுவதையும், 'பீட்டர்'களையும், 'ஓடி எம்பி அடிப்பதையும், மங்களம் பாடுவதையும் கவனித்து எழுத ஒரு அவகாசம் ஏற்பட்டது. அதனால், நான் எப்போதும் அந்த பாஷைதான் பேசுகிறேன் என்று எண்ணிக்கொள்வது சிறுபிள்ளைத்தனம். பிரம்ம சூத்திரமும் எழுதுவேன். பாய்ஸ்ஸ§ம் எழுதுவேன். என் உள்மனதில் எந்த முரண்பாடும் இல்லை. நான் ஓர் எழுத்தாளன்.கேரளா, குமாரக்கோமில் 'பாய்ஸ்' கதை டிஸ்கஷன், ஸ்க்ரிப்ட்¢ முடித்த உடனே, 2001 டிசம்பர் மாதத்தில், 'பாய்ஸ் - வரப்போகும் விமர்சனம்' என்று ஷங்கரிடம் எழுதிக் கொடுத்துவிட்டு வந்தேன். இது, டிசம்பர் 2001ல். ஏப்ரல் 2002ல்தான் படப்பிடிப்பே துவங்கியது. இப்போது படம் வெளிவந்தபின் அதைப் பார்க்கும்போது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. How Predictable! அந்த விமர்சனத்தை, சந்தடியெல்லாம் அடங்கியபின் வெளியிடுகிறேன்.

- சுஜாதா
நன்றி: அம்பலம் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Reply
மரத்தடி இணைய களத்திலிருந்து


அன்பு நண்பர்களே!

பாய்ஸ் படத்தைப் பற்றி பலவிதமான கருத்துக்களும் பரிமாறிக்கொள்ளப்படும் இந்த நேரத்தில், இலங்கையின்
தென்பகுதி முஸ்லிம் கிராமமொன்றில் இடம்பெற்ற (தொடர்கின்ற) சம்பவமொன்றைப்பற்றி எழுதலாம் என்று
நினைக்கின்றேன்.

. . . . .

அது ஒரு கலவன் பாடசாலை (அiஒநன ளஉhழழட). அங்கு சமீப காலமாக பாடசாலையினுள் மாணவர்கள்
காதல்லீலைகளில் ஈடுபடுவதாக அதிபருக்கு பல முறைப்பாடுகள் கிடைத்தன. அதிபர் பலமுறை மாணவர்
பொதுக்கூட்டங்களில் எச்சரிக்கையும் செய்தார்.

இந்நிலையில், கடந்த புதன்கிழமை, தங்கள் வகுப்புக்களினுள் அதிகாலையில் வந்து மறைந்திருந்து பாடசாலை
தொடங்கும் வரை பல ஜோடிகள் அநாகரிகமாக நடந்து கொள்வதாகவும் தங்களை மிரட்டுவதாகவும் சின்ன வகுப்பு
மாணவர்கள் இரகசியமாக ஆசிரியர்களிடம் முறையிட்டனர்.

அடுத்தநாள் அதிகாலையில் திடீரென்று அந்த வகுப்பறைகளிற்கு சென்ற ஆசிரியர்களிற்கு பலத்த அதிர்ச்சி
(எதிர்பார்த்ததைவிட மோசமாக). அங்கே தங்களை மறந்து ஆபாசமான நிலையில் இரண்டு ஜோடிகள் இருந்தன
(15, 16 வயதினர்). திடீரென்று ஆசிரியர்களைக்கண்ட அவர்களிற்கும் பலத்த அதிர்ச்சி.

அந்த இரண்டு ஜோடிகளையும் அதிபரிடம் அழைத்துச்சென்ற ஆசிரியர்கள் நடந்ததை சொல்ல அந்த நால்வரையும்
உடனடியாக வீட்டிற்கு சென்று பெற்றோர்களை கூட்டிவரச்சொன்னார் அதிபர். ஆனால் தங்கள் வீடுகளிற்கு செல்லாது
பாடசாலைக்கு எதிரிலுள்ள வீட்டிலுள்ள நண்பனிடம் சென்று அங்கேயே தங்கிவிட்டார்கள் அந்த நால்வரும். அதன்பிறகு
நடந்த சம்பவங்கள்தான் உண்மையில் அதிர்ச்சியானவை.

அந்த நால்வருக்கும் ஆதரவாக அவர்களின் சக ஆண் மாணவர்கள் எல்லோருமாக சேர்ந்து பாடசாலையிற்கு வராது
விட்டனர். அதற்கும் மேலே போய் ஆசிரியர்கள் வகுப்பிற்கு வந்தால் படிப்பிப்பதை மட்டுமே செய்ய வேண்டும் மற்ற
விடயங்களில் தலையிடக்கூடாது என்று ஆசிரியர்களுக்கே அறிவுரை சொல்லி வாக்குவாதப்பட்டனர்.

இறுதியாக ஆசிரியர்களெல்லாரையும் போய் "பாய்ஸ்" படத்தை பார்த்து எப்படி இளவயது காதலர்கள் வாழ்க்கையில்
முன்னேறுகிறார்கள் என்று அறிந்துகொள்ளும்படியும் அவர்கள் சொன்னார்களாம்.

தாங்கள் எல்லாரும் ஒன்று சேர்ந்து அந்த காதலர்களை உயர்த்தப்போவதாக அந்த 15, 16 வயது மாணவர்கள்
கூறிக்கொள்கிறார்கள். இதற்காக பாடசாலைக்கு போவதையும் நிறுத்திவிட்டார்கள் (கிட்டத்தட்ட 25 பேர்).

ஆசிரியர்களுக்கு பயமுறுத்தல்கள் வேறு.

இதனால் இப்பொழுது அந்த ஊரில் பல பிரச்சனைகள். இன்னமும் தொடர்கின்றது.

. . . . .

இலங்கையின் வடகிழக்கு தமிழ் பிரதேசங்களில் "பாய்ஸ்" படம் இன்னமும் திரையிடப்படவில்லை. இனியும்
திரையிடப்படமாட்டாதென்றே நினைக்கின்றேன். ஆனால் தென்பகுதியில் (கொழும்பு உட்பட) திரையிடப்பட்டுள்ளது.
பாடசாலை மாணவர்களே பெரும்பாலும் இந்தப்படத்தை பார்க்கச்செல்கின்றனர். இலங்கையின் ஒரேயரு தமிழ்
தொலைக்காட்சி(சக்தி ரிவி)யில் தொடர்ச்சியான விளம்பரம் (வேறெந்தப்படத்திற்கும் இவ்வாறு
இருந்ததில்லை), "பாய்ஸ்" பட நடிகர்களின் இலங்கை விஜயம் என்று பல்வேறு முயற்சிகளால் முடிந்த அளவு பணம்
சம்பாதிக்க முயற்சிக்கின்றார்கள்.

எனது சொந்தக் கருத்தில் "பாய்ஸ்" என்பது தேவையற்ற, நடைமுறை சாத்தியங்கள் குறைந்த, கருத்துக்களை திரையில்
காட்டி அற்பத்தனமாக பணம் சம்பாதிப்பதற்காக எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம்.

அன்புடன்,
விஜயாலயன்
Reply
சரியான நேரத்தில் சரியான தகவலை பொறுக்கி எடுத்து தந்து இருக்கிறீர்கள்.
ம்.....பாராட்டலாம்.

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
shanmuhi
Reply
கடந்தவார வீரகேசரி பார்த்தேன். அதில் திரைப்பட பகுதியில் திருகோணமலையில் நெல்சன் திரையரங்கில் பாய்ஸ் பெண்களிற்கான பிரத்தியேக காட்சி என்று காணப்பட்டது. இதற்கு அர்த்தம் என்ன ?
[b] ?
Reply
நல்ல முன்னேற்றம் தான்.
இதிலிருந்து என்ன தெரிகிறதா ! ! !
எது அதிகமாக பேசப்படுகிறதோ...அது மக்களை இலகுவில் போய் சென்று அடைகிறது.

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
shanmuhi
Reply
நல்ல விளம்பரம்தான் இங்கும்.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
சும்மாவா தாத்தா 11 பக்கம் தள்ளிவிட்டார்கள். உண்மைசொன்னால் இந்த விளம்பரங்களின் பினதான் படம் பார்க்கும்போது எங்கெங்கு தவறாக பார்க்கின்றார்கள் பாவிக்கின்றாhர்கள் என்று தெரியவருகின்றது. இவைஎதுவுமே இல்லாமல் பார்த்தால் நல்லதொரு கதையம்சம் சமூகத்தில் இளைஞர்களிற்கு ஒரு படிப்பினை ஏற்படுத்தக்கூடிய படமாகத்தான் சங்கர் உருவாக்கியுள்ளார். அருமை இதுதான் எனது விமர்சனம்.
[b] ?
Reply
படத்தில பிரச்சினை இல்லை பரணி அண்ணை....படம் எப்படிப் பட்டது என்று வாங்கிய சான்றிதழில்தான் பிரச்சினை....

வயதுவந்தவர்களுக்கு மட்டும் என்று சொல்லி...அல்லது பெற்றோரின் வழிநடத்தலில் (இது இந்திய சினிமாவில் இருக்கா?) என்றாவது சொல்லி இன்னும் நிறையவே சொல்லியிருக்கலாம் படத்தில்...
Reply
Boysக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு

'பாய்ஸ்' படத்தைத் தடை செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பெண்களை இழிவுபடுத்தும் விதத்திலும், இளைஞர்களை திசைமாற்றும் வகையிலும் பாய்ஸ் படத்தில் காட்சிகள் இருப்பதால் அதை தடை செய்யக் கோரி ஏற்கனவே பேராசிரியை சரஸ்வதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

இந்த நிலையில், இன்று மேலும் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பொதுச் செயலாளர் வாசுகி இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, நீதிபதி குலசேகரன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம், மத்திய, மாநில தணிக்கை வாரியம் ஆகியவற்றிற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

வழக்கு விசாரணை அடுத்த மாதம் 9ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே ஆந்திராவில் உள்ள சென்சார் போர்டில் இந்தப் படத்தை தணிக்கை செய்தவர்களில் யாருக்குமே தமிழ் தெரியாது என்ற விவரமும் தெரியவந்துள்ளது. தமிழகத்தில் தணிக்கை செய்தால், ஆபாசமான வசனங்கள் கட் ஆகிவிடும் என்பதால் மிக விவரமாக ஷங்கர் இதனை ஆந்திராவில் போய் சென்சார் செய்துள்ளார்.

இந் நிலையில் இப்போது தமிழ்ப் படங்களுக்கு தரப்படும் விளம்பரங்களில், ஆபாசமில்லாத திரைப்படம், விரசக் காட்சிகள் இல்லாத படம் என்று பஞ்ச்லைன் கொடுக்க ஆரம்பித்துள்ளனர். 'அலை' படத்தின் மூலம் இது போன்ற விளம்பரம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இப்போது பல படங்களுக்கும் இது போன்ற விளம்பரங்கள் வர ஆரம்பித்துள்ளன.

எல்லாம் 'பாய்ஸ்' தந்த பாடம் தான்!

----------------------------------------------
தகவல் தற்ஸ் தமிழ் டொட் கொம்மில் இருந்து நேரடியாக பிரதியெடுக்கப்பட்டது...!
உதவி சுரதாவின் பொங்குதமிழ்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> தமிழ்ப் படங்களுக்கு தரப்படும் விளம்பரங்களில், ஆபாசமில்லாத திரைப்படம், விரசக் காட்சிகள் இல்லாத படம் என்று பஞ்ச்லைன் கொடுக்க ஆரம்பித்துள்ளனர். 'அலை' படத்தின் மூலம் இது போன்ற விளம்பரம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இப்போது பல படங்களுக்கும் இது போன்ற விளம்பரங்கள் வர ஆரம்பித்துள்ளன.

எல்லாம் 'பாய்ஸ்' தந்த பாடம் தான்!  
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

இன்னும் பலருக்கு வயதே வரவில்லை.
எல்லோரும்

[b]

வளர்ந்தவர்களுக்கான
பக்கமொன்று
உடனடியாகத் தேவை...........

உலகம் விழிக்கக் கூடாது என்பது
பலரது வேண்டுதல்.
விழித்தால் நமது குட்டு வெளிப்பட்டு விடுமே என்ற பீதிதான் அதற்கு காரணம்.
அதற்காக உலகம் விழிக்காமலே இருந்து விடவா போகிறது?
மருந்து கசக்கும் , அதுபோலவே உடனடி நிவாரணமும் தராது.
ஆனால் எல்லாவற்றிற்கும் காலமெடுக்கும்................

ஆரம்ப விமர்சனங்களில் சிறிது மாற்றம் இப்போது தெரிகிறது...................... நாளை இதைவிட முன்னேற்றம் நிச்சயம் இருக்கும்.

பாரதி தன் மனைவியின் தோள் மேல் கை போட்டு நடந்ததை அபச்சாரம் என்று சொன்னவர்கள்.
இப்போது அப்படி நடக்கிறார்களே?

சுடும் சட்டியை தொட்டால் சுடத்தான் செய்யும்.தொட வேண்டுமானால் ஒரு துணியை அல்லது ஒரு பொருளை உபயோகித்து தொட வேண்டும். அதற்காக சட்டியைத் தொடாமலேயே இருக்கவா முடியும்?

இதற்கு தேவையானது கூடவா நம்மிடமில்லை???????????

AJeevan
Reply
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->வளர்ந்தவர்களுக்கான  
பக்கமொன்று  
உடனடியாகத் தேவை...........<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

யாழ் கருத்துக்களத்தில் அப்படியொரு பிரிவைக் கேட்கிறீர்களா? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
ம்...சிறுவர்கள் தானே வளர்ந்தவர்களைவிட நன்றாக சிந்திக்கிறார்கள். நான் நினைக்கிறேன் நீங்கள் வயதளவிலோ அல்லது உடல் வளர்ச்சியிலோ வளர்ந்தவர்களைக் குறிப்பிடவில்லையென்று. உண்மைதானே?

சிந்தனையில், பகுத்தாராயும் பார்வையில் வளர்ந்தவர்களைத்தானே குறிப்பிடுகிறீர்கள். <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


Reply
<!--QuoteBegin-இளைஞன்+-->QUOTE(இளைஞன்)<!--QuoteEBegin--><!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin-->வளர்ந்தவர்களுக்கான  
பக்கமொன்று  
உடனடியாகத் தேவை...........<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

யாழ் கருத்துக்களத்தில் அப்படியொரு பிரிவைக் கேட்கிறீர்களா? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
ம்...சிறுவர்கள் தானே வளர்ந்தவர்களைவிட நன்றாக சிந்திக்கிறார்கள். நான் நினைக்கிறேன் நீங்கள் வயதளவிலோ அல்லது உடல் வளர்ச்சியிலோ வளர்ந்தவர்களைக் குறிப்பிடவில்லையென்று. உண்மைதானே?

சிந்தனையில், பகுத்தாராயும் பார்வையில்
வளர்ந்தவர்களைத்தானே குறிப்பிடுகிறீர்கள். <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

புரிய வேண்டிவர்களுக்கு புரிகிறது. மற்றவர்களுக்குதான்?????????

இன்றைய (29.09.03)BBC யின், தமிழ் ஓசையில்

http://www.bbc.co.uk/tamil/2115.ram

Boys பற்றி ஆனந்தி காணும் பேட்டி இடம் பெற்றிருக்கிறது. முடிந்தால் நாளை (30.09.03) வரைக் கேட்கலாம்.

மாதர் சங்கத்துக்கு ஏற்பட்டுள்ள பிரச்சையினை என்ன என்று கேட்டுப்பாருங்கள்.

படத்தில் இடம் பெற்றிருப்பதை விட,இவர்கள் சொல்லும் போதுதான் இவர்களது உண்மையான பிரச்சனை புரிகிறது.
பெரிதாக்க...........பிட் பண்ண.........இதெல்லாம் உடற்பயிற்சி நிலையத்தில்தான் சொல்லித் தர வேண்டியவையாம். சினிமாவில் சொல்லக் கூடாதாம்.
சங்கர் விபரம் தெரியாதவர்களுக்கும், உடற்பயிற்சி நிலையங்களுக்கு செல்ல முடியாதவர்களுக்கும் பெரியதொரு தொண்டு செய்திருக்கிறதார் போல தெரிகிறது.அது சிலரால் பொறுக்குதில்லையே சாமி................

Free Fitness or Fit ?
Reply
அம்பலம் அரட்டை பக்கத்தில் போய்ஸ் டயலாக்ஸ் திருமதி சுஜாதாவுக்கு பிடிக்கவில்லையாமே என சுஜாதாவை கேட்டேன்.. Hmm <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> அவரிடமிருந்து இப்படி ஒரு பதில்.
புகலிட இலக்கியங்கள் பற்றி அவரது அபிப்பிராயத்தை கேட்டேன்.. நேரமாகுது.. படுக்கப் போகிறேன் எனக் கூறிவிட்டார். Idea
.
Reply


Forum Jump:


Users browsing this thread: 3 Guest(s)