Posts: 870
Threads: 22
Joined: Apr 2005
Reputation:
0
யோவ் மகாத்மா என்ரை அம்மா அப்பா ஒழுக்கமா தான் என்னை வழத்தவை ஆனால் நான் எப்படி தறுதலையானனான் எண்டு சொல்லும் பாப்பம் :mrgreen:
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
vennila Wrote:மன்னிக்கவும். இந்த விவாகரத்து என்பது கணவன் மனவிகளுக்கிடையில் தானா? இல்லை குருவிகள் மலர்கள் இவர்களுக்குமிடையிலும் ஏற்படுமா? :?:
விவாகரத்து என்றால் என்ன? ஏன் ஏற்படுகிறது? என்று நீங்கள் சொன்னவற்றை வாசித்து அறிந்ததில் மகிழ்ச்சி. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
தங்கையே... மலர் - குருவி அன்பால் மனதால் இணைந்தவை... அங்கு பிரிவு என்பது மரணத்தைத் தவிர வேறு எந்த சக்தியாலும் வர வாய்ப்பேயில்லை...! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 112
Threads: 2
Joined: Mar 2005
Reputation:
0
திட்டமிடல் புரிந்துணர்வு அன்பின் பரிமாற்றம் இவைசிறப்புற அமைந்தால் விவாகரத்து எனற சொல் அகராதியில் இருக்காது
_______________________________________________________
'' குடும்பம் ஒரு பல்கலைக்களகம் '' ______________________________________________________
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:தங்கையே... மலர் - குருவி அன்பால் மனதால் இணைந்தவை... அங்கு பிரிவு என்பது மரணத்தைத் தவிர வேறு எந்த சக்தியாலும் வர வாய்ப்பேயில்லை...!
_________________
இப்படித்தாங்க எல்லாரும் ஆரம்பத்தில சொல்லுறவங்க.. முடிவு தான் கோணலாய் போறது. :mrgreen: :wink:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
kirubans Wrote:பெரும்பாலான தமிழ் ஆண்கள் எப்போதும் பெண் மீது அடக்குமுறையைப் பிரயோகிப்பவர்கள் (இது வன்முறை சார்ந்த அடக்குமுறை மட்டுமல்ல, கருத்தியல் சார்ந்ததும்தான்). வளர்ச்சியடைந்த நாடுகளில் பெண்களும் தங்கள் சொந்தக்காலில் நிற்பதால் ஊர் மாதிரி அடங்கி ஒடுங்கத் தேவையில்லை. பிரச்சினையின் வேர் என்னவென்று ஆராயாமல் எப்படியாவது பெண்களை விவாகரத்து கேட்காமல் பண்ணி அடங்கி ஒடுக்க இருக்க சமூகம், கலாச்சாரம், பண்பாடு எல்லாவற்றையும் துணைக்கு இழுக்கிறீர்கள்.
உண்மைதான். இந்த விவாகரத்து பிரைச்சனைக்கு அடிப்படையான புரிந்துணர்வின்மை, மன வேற்றுமைகள் போன்றவை முன்னமே இருந்து வந்திருக்கின்றது. அந்த சமயத்தில் பெண்களுக்கு சொந்த காலில் நிற்கும் அளவிற்கு சுய சம்பாத்தியமோ அல்லது சமுதாய உதவிகளோ இல்லாமையால அவர்களால் விவாகரத்து குறித்து பேச முடியவில்லை. தற்போது அவர்களால் தன்னிச்சையாக செயற்படும் அளவிற்கு தற்துணிவு உள்ள நிலையில் புரையோடி போயிருந்த பிரைச்சனைகள் வெளியில் வருகின்றது. அதனால் இந்த விவாகரத்திற்கான அடிப்படை காரணத்தை ஆராய வேண்டுமே தவிர பெண்களை அவர்களது கருத்துகள வெளிவரா வண்ணம் முன்பு போல் வைத்திருந்தால் பிரைச்சனையே வராது என்று சிந்திக்க கூடாது.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
விவாகரத்து குறித்து இங்கு பேசும் நிலையில் தமிழர்கள் திருமணம் செய்யும் முறை குறித்து ஒருவரின் கருத்தை படித்தேன். அதை இங்கே இணைப்பது பொருத்தமோ தெரியவில்லை, அதனால் தனி தலைப்பாக இணைக்கின்றேன்.
http://www.yarl.com/forum/viewtopic.php?t=5254
தமிழர்களின் திருமண முறை குறித்து முன்பும் ஒரு முறை விவாதித்த ஞாபகம். அது எந்த தலைப்பு என்று நினைவில்லை
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 870
Threads: 22
Joined: Apr 2005
Reputation:
0
அச்சுவினி உண்மையை சொல்லுறதை நிப்பாட்ட சொல்லுறீரோ :twisted:
Posts: 566
Threads: 7
Joined: Feb 2005
Reputation:
0
விவாகரத்துக்கு காரணம் என்னெண்டு எனக்குத்தெரியுமே. இது ஏதோ பெரிய விசயம் மாதிரி நிண்டு சண்டை போடுறீங்கள்.- விவாகரத்துக்கு காரணம் விவாகம் தான். நீங்க விவாகம் செய்யாமலிருந்தால் உந்த விவாகரத்தெல்லாம் செயஇயத் தேவையில்லத்தானே பேசாமல் விவாகம் செய்யாமல் சேந்து வாழ்ந்தால் ஒரு பிரச்சனையும் இல்லையே. :wink:
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
[quote=poonai_kuddy]விவாகரத்துக்கு காரணம் என்னெண்டு எனக்குத்தெரியுமே. இது ஏதோ பெரிய விசயம் மாதிரி நிண்டு சண்டை போடுறீங்கள்.- விவாகரத்துக்கு காரணம் விவாகம் தான். நீங்க விவாகம் செய்யாமலிருந்தால் உந்த விவாகரத்தெல்லாம் செயஇயத் தேவையில்லத்தானே பேசாமல் விவாகம் செய்யாமல் சேந்து வாழ்ந்தால் ஒரு பிரச்சனையும் இல்லையே.
பூனைகள் என்ன விவாகமா செய்யுதுகள்...அப்படித்தானே பூனைக்குட்டி... பூனைக்குட்டி சொல்லுறது ரெம்பச் சரி.... இதுக்காகத்தான் இந்தத் தலைப்பே...பலபேருக்கு கூடி வாழ வேணும் என்றது ஆசை...ஆனா அங்க ஒரு வரையறை இருக்கவும் கூடாது... எதுக்கும் மனிசனுக்கு பகுத்தறிவு அதுசார்ந்த நாகரிகங்கள் தனித்துவங்கள் இருக்கோ இல்லையோ என்றதை ஆராயுறது நல்லம்... இல்லை என்றால் பேசாமா பூனைகளோட சேர்த்துவிட்டிருலாம்...! :wink: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 566
Threads: 7
Joined: Feb 2005
Reputation:
0
மனுசில நம்பிக்கை இல்லாம கல்யாணங்கட்டுறதுக்கு நானென்ன குருவியண்ணாவா? கல்யாணங் கட்டிடோனயே மனுசி தன்னவிட்டு ஓடிப்போயிடுவாள் எண்டுற பயத்தில தாலி கட்டுறதுக்கும் ரெஜிஸ்ரர் செய்யிறதுக்கும் நானென்ன குருவியண்ணாவா என்ர துணைவரோடு நான் 3 வருசமா சேந்து தானே வழுறன். என்ர துணைவனில எனக்கு நம்பிக்க இருக்கு அவருக்கு என்னில நம்பிக்க இருக்கு. தங்களில தங்களுக்கே நம்பிக்கை இல்லாதாக்கள் தான் குரவியண்ணா மாதிரி கல்லாணத்தக் கட்டிப்பிடிச்சு அழுவினமாக்கும் :wink:
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:பேசாமல் விவாகம் செய்யாமல் சேந்து வாழ்ந்தால் ஒரு பிரச்சனையும் இல்லையே.
_________________
அடப்பாவிகளா நல்ல முன்னேற்றம் தான். :mrgreen: :mrgreen: :evil:
Quote:மனுசில நம்பிக்கை இல்லாம கல்யாணங்கட்டுறதுக்கு நானென்ன குருவியண்ணாவா? கல்யாணங் கட்டிடோனயே மனுசி தன்னவிட்டு ஓடிப்போயிடுவாள் எண்டுற பயத்தில தாலி கட்டுறதுக்கும் ரெஜிஸ்ரர் செய்யிறதுக்கும் நானென்ன குருவியண்ணாவா
அப்படியா செய்தி.. :wink: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
poonai_kuddy Wrote:மனுசில நம்பிக்கை இல்லாம கல்யாணங்கட்டுறதுக்கு நானென்ன குருவியண்ணாவா? கல்யாணங் கட்டிடோனயே மனுசி தன்னவிட்டு ஓடிப்போயிடுவாள் எண்டுற பயத்தில தாலி கட்டுறதுக்கும் ரெஜிஸ்ரர் செய்யிறதுக்கும் நானென்ன குருவியண்ணாவா என்ர துணைவரோடு நான் 3 வருசமா சேந்து தானே வழுறன். என்ர துணைவனில எனக்கு நம்பிக்க இருக்கு அவருக்கு என்னில நம்பிக்க இருக்கு. தங்களில தங்களுக்கே நம்பிக்கை இல்லாதாக்கள் தான் குரவியண்ணா மாதிரி கல்லாணத்தக் கட்டிப்பிடிச்சு அழுவினமாக்கும் :wink:
மனித நம்பிக்கை என்பது எல்லோரிடத்திலும் நிலையானது என்று கூறமுடியாது....கையெழுத்துப் போட்டுமே நம்பிக்கையத் தக்க வைத்துப் புரிந்துணர்வோட வாழ முடியாத ஆக்கள்...கையெழுத்து வைக்காததை நம்பி ஒத்து வாழுவியளோ... அதுபோக கையெழுத்து வைக்கிறது உங்கட நம்பிகைக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது..ஒருவேளை உங்க நம்பிக்கை என்பது காலப்போக்கில் மாற்றமடையுமானால்..பாதிப்பு என்ற ஒன்று வருவதைத் தடுக்கவே கையெழுத்து...! நம்பித்தான் எல்லோரும் குழந்தை குட்டி பெத்துக்குவினம்..பிறகு நம்பிக்கையீனம் எண்டுவினம்...பிரிவினம்...குழந்தை குட்டி பெறும் வரை இருந்த நம்பிக்கை...பிறகு எப்படி இல்லாமல் போனது... கையெழுத்து தாலி என்பது வேலிகள் தடைகள்...உண்மையான நம்பிக்கை உள்ளவனுக்கு அந்த வேலிகள் தடைகளாக ஒரு போதும் தெரியாது.. அவை இருப்பது குறையாயும் தெரியாது...அவனுக்கு தன்ர நம்பிக்கைத்தான் பலம்... நம்பிக்கை இல்லாத கள்ளருக்குத்தான் அவை வேலிகள்...அவர்கள் தான்..சும்மா வெளிய நம்பிக்கை என்று சொல்லிட்டு பிறகு எனக்கு அது பிடிக்கல்ல என்று நொண்டிச் சாட்டுச் சொல்லிட்டு விலகிடுவினம்...அப்ப பாதிப்புக்கு உள்ளாபவர் என்ன செய்ய முடியும்..எதுவும் செய்யமுடியாது...அப்படியானவர்களைக் கட்டிப் போடத்தான்...குறிப்பா உங்களைப் போன்றவர்களை கட்டிப்போடத்தான் தாலியும் கையெழுத்தும்...! இப்ப புரியுதா பூனைக்குட்டி...! :wink: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 566
Threads: 7
Joined: Feb 2005
Reputation:
0
உங்களுக்கே நீங்கள் எழுதினது விளங்கேல போலண்ணா? அதான் என்னட்ட கேக்குறீங்கள் போல. நம்பிக்க இருந்தால் எதுக்கண்ணா கல்யாணம் சடங்கெல்லாம். ஒருக்கா எனக்கு கல்யாணமெண்டால் என்னெண்டு விளக்கமா எழுதுங்கோண்ணா. கல்யாணமெண்டால் என்ன? தாலி கட்டுறதெண்டால் என்ன? எண்டு விளக்கம் சொல்லுங்கண்ணா. பூனைக்குட்டி மியா மியா எண்டுறனெண்டு சொல்லி தப்பிக்கலாமெண்டு நினைக்காதேங்கோ. உங்கட குருவிப்புத்தி தெரியுந்தானே எல்லாருக்கும். இனி அது சரிவராதண்ணா :evil:
Posts: 1,857
Threads: 48
Joined: Mar 2005
Reputation:
0
[b][size=18]இறுதிவரை தொடர்வதே காதல்
காதல் என்பது
கவிஞர்களுக்கு ஒரு அழகான கவிதை.
ஆணுக்கு ஒரு அற்புதமான கனவு.
பெண்ணுக்கு ஒரு லட்சியம்.
ஆராச்சியாளருக்கு ஒரு புரியாத புதிர்
பெற்றோருக்கு ஒரு பைத்தியக்காரத்தனம்
காதல் திருமணங்கள் ஒருபுறம் அதிகரித்துக் பொண்டிருந்தாலும் மறுபுறம் விவாக ரத்துக்களும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. ஏனிந்த எதிர் மறைப் போக்குகள்?
நாம் காதல் வயப்படவும் அக் காதல் எந் நாளும் குறையாததாகவும் இருக்கவேண்டுமென நினைக்கிறோம். காதலை வளர்க்க எவ்வித முயற்சியும் செய்வதில்லை. எனவே நடை முறை வாழ்க்கைக்கு காதல் எதிர் கொள்ளும் பிரச்சினைகளையும் சிக்கல்களையும் தீர்க்க நாம் தயாராக இருப்பதில்லை..
யதார்த்தமான காதல்கள் கூட காதல் தானாக தொடரபோதுமானதல்ல. வாழ்நாள் முழுவதும் காதல் நீடிக்க நாம் முயற்சி செய்ய வேண்டும். உழைக்க வேண்டும் எந்த காரணத்தால் காதல் வயப்பட்டோம் எனக் கூறுவது கடினம்.ஆனால் காதலின் போது ஈர்த்த நேசமிகு உணர்வுகள் எப்போதும் வாழ்நாள் முழுவதும் தொடர்வதில்லை. சில மாதங்கள் நிலைத்த மணவாழ்வாகவோ அல்லது சில வருடங்கள் நிலைத்த மணவாழ்வாகவோ அல்லது அலுப்புத்தட்டும் தொடர்பாகவோ அல்லது எதிர் எதிர் துருவங்களாக போராடும் நிலையாகவோ மாறக்கூடும்.
ஆழமான காதலும் கூட தினசரிப் பிரச்சனைகளால் மனஉளைச்சல் பணப்பிரச்சனை குழந்தைகள் பிரச்சனை ஏனைய பிரச்சனைகளால் அழிவதைத் தடுக்க தம்பதிகள் முழு முயற்சி எடுக்க வேண்டும்.
கணவன் தன் மனைவிக்கு நல்ல பரிசுகளைக் கொடுப்பது பல இடங்களுக்கு அழைத்துப் போவது போண்றவை தொடர வேண்டும் பிறந்த நாளும் திருமணநாளும் உங்கள் மனைவிக்கு மிகவும் முக்கியம் அதை ஞாபகம் வைத்து பரிசு கொடுங்கள் காதலிக்கும் காலகட்டத்தில் உங்களை மிகவும் நேசித்த முழுமையான ஒரு ஆண்மகனை சந்தித்த சந்தோஷத்தில் இருப்பீர்கள் யாராவது உங்களுக்கு பிடித்த காதலரை குறை கூறினால் உங்களால் தாங்க முடியாது…..ஆனால் திருமணமான சில நாட்களிலேயே உங்கள் பார்வை வித்தியாசமானது உங்கள் காதலனும் குறை உள்ளவர்தான் என்பதை உணர்வீர்கள் இப்போது உங்கள் நண்பர்கள் .உறவினர்கள் கூறியவை உண்மை என நம்புகிறீர்கள் இப்போது காதலரை வெறுக்கத் தொடங்குகிறீர்கள்.
ஒருகாலத்தில் 100 சதவீதம் நல்லவராகத் தோன்றிய காதலர் இப்போது 100 சதவீதம் சுயநலவாதியாக. சோம்பேறியாக உங்களுக்கு காட்சி தருவார் 100 சதவீதம் தூய்மையான துனையை தேடுவது அல்லது எதிர்பார்ப்பது திருமணத்தை சீர்குலைக்கும் ஒரு வழி ஆகும். ஒரு மனைவியானவள் எப்போதும் தான் சொல்வதுதான் சரி என
நடந்து கொண்டால் திருமணங்கள் வெகுநாட்களுக்கு நிலைப்பது கடினம். திருமணத்திற்குப் பிறகு நீங்கள் எப்போதும் தனித் தன்மையை இழந்து விடக் கூடாது
கணவனைத்தவிர வேறு நட்பு இல்லாமல் ஆக்கிக் கொள்வது பெண்களை முழுமையாக கணவனைச் சார்ந்து இருக்கச் செய்வது ஆகியவை எல்லாம் திருமணத்தை நீடித்து நிலைக்கச் செய்யும் என நீங்கள் நினைத்தால் அது தவறு.
.
பல நிலைத்து நின்ற திருமணங்களைப் ஆராய்ந்தால் இருவரும் சம நிலையில் இருப்பதும் பொருளாதாரத்திலும் சம அந்தஸ்தில் இருப்பதும் திருமணங்களைக் காப்பதாக கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
[b]உங்கள் துணையின் உணர்வுகளை மதியுங்கள்
பெரும்பாலான மனைவிகளுடைய குறை என்னவெனில் கணவர்கள் தாங்கள் கூறுவதை செவிமடுத்துக் கேட்பதில்லை . தங்களை மதிப்பதில்லை என எண்ணுவதுதான்
மனைவியிடம் 6 மணிக்கு செல்கிறோம் என்று கூறிவிட்டு மனைவிதானே சமாளிக்கலாம் என நினைத்து 8 மணிவரை நண்பர்களுடன் அரட்டை அடிப்பதால் மனைவி தன்னை தன உணர்வை கணவன் மதிக்கவில்லை என புண்படுவாள்.
[b]கோபம் உங்கள் உறவைக் கெடுக்க இடம் கொடுக்காதீர்கள்
வாழ்நாள் முழுவதும் கோபமே அடையாமல் இருப்பது முடியாத காரியம் ஆனால் கோபம் உங்களின் வாழ்க்கையை கெடுத்து விடாமல் தடுப்பது எளிது .ஒருவர் கோபத்துடன் இருக்கும்போது வார்த்தைகளை அள்ளித் தெளித்து விடாமல் அதைப் பற்றி விவாதிக்க மற்றோரு நேரம் ஒதுக்குங்கள்
[b]தவறுக்கு மன்னிப்புக் கேட்டுப் பழகுங்கள்
"ஜ யாம் சொரி " என்ற வார்த்தைகள் கோபத்தை முழுமையாக போக்கி விடும் இதை யும் தவிர பிரச்சனைகள் உங்களையும் மீறி போகும் போது பேசாமல் ஒரு உடல் நல வைத்தியரை அணுகுங்கள் அவர்கள் உங்கள் பிரச்சனைகளை தீர்க்க உதவுவார்கள் நீங்களும் அவற்றை நடைமுறைப்படுத்திப் பாருங்களேன் குடுப்பம் குதூகலமாகும்
கதம்பம்
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Posts: 2,840
Threads: 30
Joined: Apr 2005
Reputation:
0
என்னை கேட்டால் காதல் என்டதெல்லாம் வெரும் எதிர்பார்ப்பு எண்டுவன். ஏன்னென்றால் காதலிக்கும்போது ஒருவருக்கு மற்ரவரின் நல்ல பக்கம் தான் தெரியுது. ("இனக்கவர்ச்சியாய் இருக்கலாம்" )
கலியாணத்துக்கு பிறகு தான். ஒன்றாய் இருக்கேக்க தான் எல்லா நாசமும் விளங்கும்.
நான் குருவிகளின்ர பக்கம்
::
Posts: 566
Threads: 7
Joined: Feb 2005
Reputation:
0
கல்யாணமெண்டுறதில எதிர்பார்ப்பில்லாயண்ணா கல்யாணங்கட்டுறதால தானே பிறகு விவாகரத்தே வருதண்ணா?