tamilini Wrote:Quote:இன்னொருவரின் வன்புணர்விற்கு உட்படும் ஒருவர் மறுபடியும் வன்புணர்வுக்கு உட்படுத்தப்படலாம். எனவே உங்கள் கருத்தின்படி பார்த்தால் இரண்டாம் முறை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்படுவதை கற்பழிப்பு என்று சொல்ல முடியாது.
கற்புத்தான்.. ஏற்கனவே அழிக்கப்பட்டுவிட்டதே.. என்னங்க இது மறுபடியும் மறுபடியும்.. அழிக்கா இதென்ன.. அழிக்க அழிக்கா.. புதிசுபுதிசா.. வாறதா என்ன..?? அதை தான்.. வன்புணர்வு என்றாங்க..
என்ன தமிழினி. இது உங்களுக்கே நியாயமா? அப்ப எதை இப்பொழுது கற்பழிப்பு என்று சொல்கிறீர்கள்? கன்னி கழியாத பெண்ணை பாலியல் வன்புணர்வின் மூலம் கன்னி கழிய வைப்பதையா?
Quote:Quote:உதாரணமாக திருமணமான ஒரு பெண் கணவனுடனான உடலுறவு மூலம் கன்னி கழிகிறாள். அந்தப் பெண்ணை இன்னொருவர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்துகிறார். அப்படியெனின் இங்கு இழக்கப்படுவதற்கு என்ன இருக்கிறது? உங்கள் கருத்தின்படி பார்த்தால் கற்பு என்பது கன்னி கழிதலா?
திருமணமான பெண் அல்லது ஆண்.. ஒருவருடன் வாழும் போது தான்.. கற்புடையவராக மதிக்கப்படுகிறார். அங்க.. வன்புணர்வு நடந்தால்.. கற்பழிப்பு தான்.
கண்டிப்பாக கன்னி கழிதல் தான்.. கற்பு என்று நாங்க சொல்லல.. முதலில கற்புக்கு வரைவிலக்கனம் சொல்லுங்கையா.. ரோதனையாய் போச்சு..
கற்பு என்றால் என்ன என்பதைத் தெளிவுபடுத்திக்கொள்ளுங்கள் தமிழினி. அது தெரியாமல் கற்பழிப்பு என்பது சரியே என்று சொல்வது சரியல்ல. <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
கணவனே மனைவி மீது பாலியல் வன்புணர்வு பரிந்தால் அது கற்பழிப்பு இல்லையா? <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Quote:இங்க அந்த இழத்தல் என்றது தான்.. அழிந்ததாக. கருதப்படுது.
வன்புணர்வின் மூலம்..
அய்யோ! இழந்ததை அழித்தது என்று சொல்லமுடியாது தமிழினி. காரணம், இழத்தல் என்பதை வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பயன்படுத்தமுடியும்.
உதாரணம்:
ஒருவர் தனது சொந்த வீட்டை இழந்தார். (அவருடைய வீட்டை வேறு ஒருவர் எடுத்துக்கொண்டதால்). எனவே அந்தவீடு அழிக்கப்படவில்லை.
Quote:மனதாள என்ன.. அழிக்கப்படுகிறது என்றியளா..?? இப்படி ஒரு சம்பவம் நடந்தபின்னர்.. எந்த மனசுங்க.. அமைதியாய் சந்தொசமாய்.. இருக்கும்.. இழந்ததை.. எண்ணி வருந்தாதா..?? அந்த வருத்தமும்.. அந்த நினைவுகள். அதுகள் தான்.இப்ப..
அவர் அந்த சம்பவத்தால் மனவருத்தம் அடைகிறாரே ஒழிய, அங்கே எதுவும் அழிக்கப்படவில்லையே. இழந்த சந்தோசம் மீண்டும் பெறப்படலாம் தமிழினி.
Quote:மனசு மட்டும் தான் கற்புடன் இருக்கவேணும் என்றால்.. ஒரு விபச்சாரி கூட சொல்லலாம்.. நான் மனசாலை.. கற்புடையவளாய் இருக்கிறன். என்று.. அதல்ல பிரச்சனை.. கற்பு என்று வரும் போது.. மனம் உடல்.. இரண்டாலும்.. மாசுபடாமல் இருக்கிறது தான். அதுவும் குறுpப்பா.. வாழ்க்கை துணையாய் ஒருவரை அடைந்தபின். இவை இரண்டும்.. மற்றவருக்கு நம்பிக்கை உள்ள படி நடக்கிறது கூட கற்புத்தான். :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
மனதைப் பற்றி இங்கு நான் குறிப்பிடவில்லை தமிழினி. ஒழுக்கநெறி/பண்பு என்பது பற்றித்தான் குறிப்பிட்டேன். கற்பழிப்பு என்கிற வார்த்தை பற்றித்தான் கதைத்தோம். கற்பு என்பது என்ன என்பதை உணர்ந்துகொண்டுதான் நீங்கள் கற்பழிப்பு என்பது சரியென்று சொல்கிறீர்கள் என்தால்தான் கற்பழிப்பு தவறு என்று சுட்டிக்காட்ட முனைந்தேன். ஆனால் இப்பொழுது விபச்சாரிக்கும், கற்பழிப்பு என்ற சொல்லுக்கும் என்ன சம்பந்தம்? மீண்டும் மீண்டும் பெண்களுக்குரியது கற்பு என்பதையே நீங்கள் வெளிப்படுத்துகிறீர்கள்.
சரி உங்கள் கருத்தின்வழி: விபச்சாரி என்பவர் சமூகம் விதித்த ஒழுக்கநெறியை மீறுவதால் கற்பிழந்தவள் என்றே சொல்ல முடியும்.
Quote:அன்பு பாசம்..அழிக்க முடியாதது என்று யார் சொன்னது.... எப்படிச்சொல்லிறீங்கள.. அவை அழிவுறும் நிலையில தான்.. வெறுப்பு.. பொறாமை.. எல்லாம் உன்டாகிறது.. இல்லை என்கிறீயளா..?? :mrgreen: :mrgreen:
அன்பு பாசம் அழிக்கப்பட முடியாது என்று நான் எங்கும் குறிப்பிடவில்லை. நான் குறிப்பிட்டது அன்பு பாசம் போன்றதுதான் கற்பு என்றால், கற்புக்கும் உடலுக்கும் என்ன சம்பந்தம் என்றுதான். அதாவது உடல் ரீதியாக எது அழிக்கப்பட முடியும் என்பதைத்தான். கன்னி கழிதல் என்பதால் உடல் ரீதியாக எதுவும் அழிக்கப்படுவதில்லை.
பாலியல் கல்வி நீங்கள் கற்றுக்கொண்டீர்களோ எனக்குத் தெரியாது, அப்படி நீங்கள் இதுவரை அதுபற்றிக் கற்றிருக்காவிடின் பாலியல் கல்வியையும், கற்பு என்பதற்கு இன்றைய சமூகத்திலும், அன்றைய இலக்கியங்களிலும் என்னமாதிரியான பொருள் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை வாசித்து தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். என்னால் நீங்கள் விளங்கிக்கொண்டு தெளிவடையும் வகையில் விளக்கம் தரமுடியவில்லை - வருந்துகிறேன்.