Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சந்திரமுகி
#41
சந்திரமுகி - திரைவிமர்சனம்(சுட சுட)

அதிக எதிர்பார்ப்பு எப்போதுமே அதிக ஏமாற்றம் தான். எப்படியோ அடித்து பிடித்து இன்று இரவு காட்சியில் சந்திரமுகி பார்த்தாயிற்று. ரஜினி ரசிகர்கள் மத்தியில் நானும் ஒருவன் என்ற நிலைமை. ஏத்திய சுருதியுடன் திரையரங்குக்குள் மணியை பார்ப்பது திரையை பார்ப்பதுமாக ரசிகர்களின் கூக்குரலினூடே வாகாக இருக்கையும் பிடித்து அமர்ந்தாயிற்று. இடைவேளை கிடையாது என்பதால் பாத்ரூமுக்கு போய் டவுன்லோட் பண்ண வேண்டியதை பண்ணி விட்டு திரும்ப இருக்கையில் அமர்ந்தேன். சென்றிருந்த 20 நண்பர்களும் ஒரே வரிசையில் உட்கார்ந்துக் கொண்டு, பாட்டுக்கு ஆட்டம் போடவும் ரெடி.

படம் ஆரம்பித்து எதற்கு எடுத்தாலும் விசில். பெரிய லெவல் ரோடு காண்ட்ராக்டராக பிரபுவை காண்பிக்க தொழில் பொறாமைக் கொண்ட வில்லன் அடியாட்களை அனுப்ப, பிரபு வருவதற்குள் திரையில் ஒரு ஷூவின் அடிப்பாகம் மட்டும் திரையில் குளோசப்பில் காண்பிக்கப்படுகிறது. அப்புறம் பக்கவாட்டில் கவிழ்த்து போட்ட Y எழுத்து மாதிரி காலை அந்தரத்தில் தூக்கி நின்று புருஸ்லீ, ஜாக்கிசான் ஸ்டைலில் ரஜினி காந்த் போஸ் கொடுக்கிறார். விசில் சத்தம் காதைக் கிழிக்கிறது. சில பேர் திரைக்கு ஓடிச் சென்று ரஜினியின் காலை தொட்டு கும்பிட்டு விட்டு வருகிறார்கள். ரஜினி தொட்டாலே போதும் அடியாட்கள் பறக்கிறார்கள். தலைகீழாக சுற்றுகிறார். மேல் கீழாக குதிக்கிறார். என்னனவோ செய்கிறார். வில்லன்கள் அடித்து ரஜினியால் துவம்சம் பண்ணப்படுகிறார். அய்யகோ... இருந்தாலும் ரஜினி ரசிகர்களுக்கு அருமையான பைட்டு சிக்குவென்ஸ்.

அப்புறம் தான் புரிகிறது ரஜினி அமெரிக்காவிலிருந்து இறங்கிய உலகப் புகழ்பெற்ற மனோதத்துவ நிபுணர்.பெயர் சரவணன். பிரபுவுக்கு உற்ற நண்பன். "யாமிருக்க பயமேன்,இந்த சரவணன் இருக்க பயமேன்" இது தாங்க ஒரு சில இடத்துல ரஜினி பயன்படுத்துற பஞ்ச் (பஞ்சு) டயலாக். பிரபு ஜோதிகாவை காதலித்து கல்யாணம் புரிந்தவர். அம்மா கே.ஆர்.விஜயா. பிரபு சொந்த ஊரில் உள்ள வேட்டையப்ப ராஜா அரண்மணை வாங்க போகிறேன் என்று சொல்ல கே.ஆர்.விஜயா பதறுகிறார். பிறகு அந்த ஊரில் உள்ள சொந்தங்களாக அகிலாண்டேஸ்வரி, நாஸர் பத்தியெல்லாம் சொல்கிறார்.அவர்களிடமிருந்து பல வருடம் முன்பு பிரிந்து வந்தவர்கள் பிரபு பேமிலி. அகிலாண்டேஸ்வரியைப் பற்றி ஒரு பெரிய பில்ட்-அப் கொடுக்கிறார்கள். நானும் வழக்கம் போல ரஜினி பட வில்லி என்று நினைத்தேன்.கடைசியில் அந்த கேரக்டரும் தொஸ்ஸ்ஸ்ஸ்....

ரஜினி முதலில் அந்த பங்களாவைப் பற்றி விசாரிக்க அந்த ஊருக்கு வருகிறார். வடிவேலுவும் நாசருக்கு ஒரு மாப்பிள்ளை முறையாக வேண்டும் அந்த படத்தில். ரஜினி வடிவேலுவுடன் சேர்ந்து சில காமெடிகளை செய்கிறார். பங்காளவைப் பற்றி சொன்னதும் எல்லாரும் நடுங்கிறார்கள். நடுங்கிக் கொண்டே இருக்கிறார்கள். பில்ட்-அப் கொடுத்தக் கொண்டே இருக்கிறார்கள். ரஜினியும் வடிவேலுவும் காமெடி என்ற பெயரில் அவஸ்தை பண்ணிக் கொண்டே இருக்கிறார்கள். போதும்டா சாமி இந்த கொடுமை. இடையிடையே பாட்டு வேற.

பங்களா பற்றிய பில்ட்-அப் என்னவென்றால் வேட்டையப்ப ராஜா சந்திரமுகி என்ற நாட்டியகாரியின் மேல் ஆசைக் கொண்டு அவளை தூக்கிக் கொண்டு வர, அவள் ஏற்கனவே ஒருவனை காதலித்து வருகிறாள். ராஜா பொறாமைக் கொண்டு காதலனை கொன்று விட்டு சந்திரமுகியை எரித்து விடுகிறார். அப்புறம் சந்திரமுகி அந்த பங்களாவில் ஆவியாக 150 வருடமாக வேட்டையப்ப ராஜாவை கொல்ல அலைகிறார். இது தான் பில்ட்-அப்.

ரஜினி அந்த பங்காளவை ஆராய்ந்து பேய் எல்லாம் ஒன்னும் கிடையாது என பிரபுவுக்கு ரைட் கொடுக்க, பிரபு பேமிலி உறவினர்களுடன் சர்வ ஜாக்கிரதையாக அந்த பங்களாவுக்கு குடியேறுகிறது. அப்புறம் ரஜினி வெளியூர் போகிறேன் என்று காணாமல் போகிறார். இதற்கிடையில் ஜோதிகா ஆர்வம் மிகக் கொண்டு பங்களாவில் ஒரு பகுதியில் பூட்டப்பட்ட சந்திரமுகி, வேட்டையப்ப ராஜாவின் அறையை திறக்கிறார். அதிலிருந்து வீட்டில் அமனுஷ்யமாக பல கெட்டவைகள் பிரபுவுக்கும் சுத்தி இருப்பவர்களுக்கும் நடக்கின்றன.

ரஜினி வந்து சேருகிறார். துப்பறிகிறார். கண்டுபிடிக்கிறார். மனோதத்துவ ரீதியாக இது ஸ்பிலிட் பெர்சனாலிட்டியின்(Split personality) அட்டகாசம் என்கிறார். நிகழந்த அட்டூழியங்களுக்கு ஜோதிகாவை நோக்கி கையை காட்டுகிறார். அவரை எப்படி குணப்படுத்துகிறார் என்பதே சந்திரமுகி.

டிவியில் வந்துக் கொண்டிருந்த 'விடாது கருப்பு'(இந்திரா சௌந்தராஜன் எழுதியது என நினைக்கிறேன்???) அப்படியே சந்திரமுகி ஆகியிருக்கிறது. படத்தில் ரஜினிக்கு சுருதி ரொம்ப குறைவு. படு இளைமையாகத் தெரிகிறார். இருந்தும் என்ன பயன்? பாபாவுக்கு ஒரு படி மேல் என்று சொல்லலாம் இந்த படத்தை. ரசிகர்களுக்காக முதலிலேயே வழக்கான ரஜினியை காண்பித்து விட்டு, படம் பூராவும் அவரை மிஸ் பண்ணி விடுகிறார்கள். உற்சாகத்துடன் வந்த ரசிகர்கள் படம் கொஞ்ச நேரம் ஓட ஆரம்பித்ததும் ஆங்காங்கே கொட்டாவி விடுவதும், பாடலுக்கு பாத்ரூமைத் தேடி போவதுமாக இருக்கிறார்கள்.

இடைவேளை வரை இந்த படத்தை பேய் படமாக காட்ட வேண்டுமா? இல்லை சஸ்பெண்ஸ் படமாக காட்ட வேண்டுமா? என்ற குழப்பம் பி.வாசுவுக்கு. சும்மா அந்த பங்களாவை சுத்தி சுத்தி கேமிரா சுழட்டி அடிக்கிறது. கூட சேர்ந்து நமக்கும் தலை சுத்துகிறது.

சில ரசிகர்களிடம் அப்பிராயம் கேட்ட போது இடைவேளை வரை தான் ரஜினி படமாக தெரிந்தது என்றார்கள்.எனக்கு என்னமோ இடைவேளைக்கு பிறகு தான் படம் நன்றாக போனதாக நினைப்பு. காமெடி என்ற பெயரில் இரட்டை அர்த்த வசனத்தை ஆங்காங்கே ரஜினி அள்ளி விடுகிறார்.

படத்தில் என்னதான் நிறைவு இருக்கிறது? நிறைவும் நிறைய இருக்கிறது.

பாடல்கள் படமாக்கப்பட்ட விதம் மிக அருமை(தமிழ் பட தரத்தை அளவுக்கோல்களாக வைத்தால்). 'கொஞ்ச கொஞ்ச நேரம்' பாடல் துருக்கி இஸ்தான்புல்-ல் எடுத்ததாகக் கேள்விப் பட்டேன். தமிழ் படத்தில் இது வரை வராத லொக்கேஷன். ரஜினியும் நயந்தாராவும் அருமையாக தெரிகிறார்கள். அடுத்த பாடல் "அண்ணணோட பாட்டு" இதுவும் வெகு அருமையாக எடுத்துருக்கிறார்கள். "கோழி பறபற" பாடலும் அருமை.

அப்புறம் ராஜகமாளிகை. அருமையான செட்டிங்ஸ். அற்புதமாகத் தெரிகிறது அந்த மாளிகை. இது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.கலை யார் என்று கவனிக்கவில்லை.

அப்புறம் படத்தின் கிளைமாக்ஸ். மிக விறுவிறுப்பாக எடுக்கப்பட்ட கிளைமாக்ஸ்.

அப்புறம் ஜோதிகா. கலக்கி அள்ளியிருக்கிறார். கிளைமாக்ஸில் ஜோதிகாவின் நடிப்புக்கு முன் ரஜினியால் ஈடு கொடுக்க முடியாமல் திணறியிருந்தார். சொத்தை சொள்ளையாக படத்தின் ஆரம்பித்தில் வந்துக் கொண்டிருந்த ஜோதிகா ஸ்பிலிட் பெர்சனாலிட்டியாக மாறியதும் சந்திரமுகியாக ஜொலித்திருக்கிறார். அவருடைய மேக்-அப் வெகு அருமை. இன்னும் என் கண்ணிலேயே நிற்கிறது ஜோதிகாவின் அந்த க்ளைமேக்ஸ் நடிப்பு. சபாஷ் நல்ல திறமையிருக்கு ஜோதிகா.

நயந்தாரா? ரஜினிக்கு நாயகி மட்டுமே. வேஸ்ட் செய்திருக்கிறார்கள். நாசருக்கும் கோமாளி வேடம். வேஸ்ட் செய்யப்பட்டிருக்கிறார்.

படம் முழுக்க தோய்வு.எப்படியோ க்ளைமேக்ஸை மட்டும் சரி கட்டியிருக்கிறார் பி.வாசு.

ரஜினி ரசிகர்களுக்கு இதுவும் சரியான படம் அல்ல என நினைக்கிறேன். அவர்கள் தான் சொல்ல வேண்டும் அவர்களின் பார்வையை. ரஜினி நடித்திருக்கிறார். அவ்வளவே....

அப்ப படம் புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...... டமார் (க்ளைமாக்ஸ்)

குறிப்பு: படம் பார்த்த சூட்டில் எழுதியது, தூக்கம் கண்ணை சுழட்டுவதால் மூளையின் மேல்டாப்பில் வந்ததை போட்டுத் தாக்கியிருக்கிறேன். மற்ற விசயங்கள் மற்றொரு பதிவில் மெதுவாக. மும்பை எக்ஸ்பிரஸை கொஞ்சம் ஆறப்போட்டு சனிக்கிழமை பார்க்கலாமென இருக்கிறேன்

Thanx: அல்வாசிட்டி அண்ணாச்சி
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#42
«ñ½ý, ¾¨Ä, ¦¾öÅõ, ¸¼×û, Á¢.. Áñ½¡í.. ÝôÀ÷ŠÃ¡Ã¢ý À¼õ À¡À¡ À¼ò¨¾ §À¡ø À¢Çô ¬É¨¾ ¿¢¨Éò¾¡ø Á¢¸×õ Ðì¸Á¡ þÕì̾ôÀ¡. ¾¨Ä ¿£ ÀÂôÀ¼¡¾,,, «Îò¾À¼ò¨¾ ¿¢îºÂÁ¡ †¢ð ¬ì¸¢Î§Å¡õ.. ¿¡ý ¦º¡øÖÈ «ð¨Å¨… §¸û ¾¨Ä..

±Îò¾Å£îÍìÌ «Îò¾À¼ò¨¾Àñ½¡¾ ´Õ 4 ÅÕ¼õ ¸Æ¢îÍ (¿£ ¯Â¢§Ã¡¼ þÕ󾡸) «Îò¾À¼ò¨¾ ¬ÃõÀ¢,, «ôÀ¾¡§É ¿õÁ ú¢¸÷¸û ±øÄ¡Õõ À¢òÐ À¢ÊîͧÀ¡ö §À¡ «¨ÆÅ¡í¸, «¨¾Å¢¼ ¾¨Ä 4 ÅÕ¼òÐì¸ôÒÈõ À¼õ ¿Êò¾¡ý ºó¾¢ÃÓ¸¢Ä ¸¢¨¼îº 75§¸¡Ê¨Â Å¢¼ ´Õ 100§¸¡Ê (1À¢øÄ¢Âý) ÍõÁ¡ º¡¾Ã½Á¡ «Êì¸Ä¡õ.. Idea .. «¨¾Å¢¼ «Îò¾À¼ò¨¾ ¦Àâ ¨¼ÂÃìÃ÷ Á¡¨Ã ¨ÅîÍ Àñ½¡¾ ¾¨Ä,, ÍõÁ ¯ôÒÁ¡ ¸õÀÉ¢¸¨Ç ÅîÍ ÀñÏ ±ôÀʧ¡ ¿õÁ ¸¼×û 4 ÅÕ¼òÐì¸ôÒÈõ À¼õ ÀñÏÈ¡÷ ±ñÎ ¿¢¨ÉîÍ ¦Àâ͸û Ó¾ø º¢Ú͸û Ũà ¿¡Â¡ «¨ÆÔí¸û,,, «ôÀʧ «Îò¾ 2 ÅÐ Á¸ÙìÌõ «Ð츢¨¼Â¢Ä ´Õ º¢õÒ째¡ «øÄÐ ÃŢ째¡ ¸ðÊÅðÎ ¿£ 99 ÅÂÐŨà 3«øÄÐ 4 ÅÕ¼òÐ 1 À¼õ ±ñÎ Àñ½¢ þñÊÂý æÍ¸Ç¢ñ¼ À½ò¨¾ ¯ý¨¼ ÍÅ¢ŠÀ¡í¸¢Ä §À¡ðÎ ²§¾¡ Å¡ú쨸¨Â ÍÁ¡Ã µð¼ôÀ¡..
¬ «ôÀ «ôÀ ¿õÁ¼ §¾¡Šò ºí¸Ã¡îº¡Ã ¡¨ÃÔõ§À¡ö À¡÷òÐ «ó¾ Âíì §À¡ˆìÌ §ÅñÊ ¯¾Å¢¸¨Ç ¦ºöÐ̼ôÀ¡ :wink: 8) Idea
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#43
திரைவிமர்சனம் : சந்திரமுகி
- ஜெ. ரஜினி ராம்கி

1992. மன்னன் படத்திற்கான குமுதம் விமர்சனம். தளபதியில் சீரியஸான ரஜினியை பார்த்து சோர்ந்து போயிருந்த ரசிகர்களை மனதில் வைத்துக்கொண்டு எழுதியது போல அந்த கடைசி பன்ச் லைன் 'மீண்டும் ரஜினி'

படத்தில் நிறைய ஆச்சர்யப்பட வைக்கும் விஷயங்கள். டைட்டில் கார்டிலேயே கமலுக்கு நன்றி சொல்கிறார்கள். ரஜினி படத்தில் வழக்கமாக வரும் விஷயங்களுக்கெல்லாம் கெட்அவுட் சொல்லியிருக்கிறார்கள். அரசியல் முலாம் பூசப்பட்ட டயலாக் இல்லை; தனிமனித துதி பாடும் பக்கவாத்தியங்கள் இல்லை; ஆர்ப்பரிக்கும் செயற்கையான பின்னணி இசை இல்லை. லாஜிக்கை மீறிய மேஜிக் காட்சிகள் இல்லவே இல்லை. ரஜினி படம்தானா என்று கொஞ்சம் கிள்ளிப்பார்த்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. சர்ச்சைக்கு தீனி போடும் மேட்டர் கிடைக்காமல் மீடியாதான் அல்லாடப்போகிறது, பாவம்!

லாங் ஷாட்டில் ஓடி வந்து, வில்லனை உதைக்க தாவி குதித்து அதை தூக்கிப்போட்டு வாயில் பிடித்து...அதுதான் சிகரெட் அல்ல... சூயிங்கம்! மத்திய சுகாதாரத்துறை அமைச்சரகம், சிகரெட்டை மறந்து விட்டு இன்னும் கொஞ்ச நாளைக்கு சூயிங்க விஷயத்தை மென்று வைக்கலாம்!

எப்போதும் ரஜினியை சுத்திதான் கதை. சந்திரமுகியில் கதையைச் சுற்றி ரஜினி! படத்தின் பெரிய பிளஸ் பாயிண்ட் ரஜினியின் கிளாமரா அல்லது ஜோவின் நடிப்பான்னு பட்டிமன்றம் வைக்கலாம். கிளைமாக்ஸில் ஜோதிகா அசத்துகிறார் என்றால் படம் முழுக்க ரஜினி காட்டும் கிளாமர் கைதட்டலை அள்ளிக்கொள்கிறது. படு கச்சிதமான திரில்லர் திரைக்கதை. ஆவி, பழைய பங்களா என்றெல்லாம் காட்டினாலும் ஸ்பிளிட் பர்ஸனாலிட்டி பற்றிய சுவராசியமான விளக்கங்களுடன் திரைக்கதையை கவனமாக பின்னியிருக்கிறார்கள். கதையோட்டத்துடன் வரும் காமெடி, அரண்டு போயிருப்பவர்களை சிரிக்க வைக்கிறது.

ரஜினி ஏதோ சொல்ல வருகிறார்னு காதை தீட்டிக்கொண்டு கவனமாக இருந்தால் பெரிதாக எதுவுமில்லை. படத்தின் மைனஸ் பாயிண்ட், டயலாக்தான். ரஜினிக்கொன்று ஏதும் ஸ்பெஷலாக எழுதாமல் சாதாரண டயலாக்கை வைத்ததால் ரசிகர்களுக்கு ஏமாற்றம். ரஜினி படத்தில் இல்லாத சங்கதியான நான் வெஜ்
டயலாக், நாசர்-வடிவேலு ஜோடி உபயத்தில். உரைநடை தமிழையே பேச்சுத் தமிழக்கு பயன்படுத்தியிருக்கிறார்கள். சாம்பிளுக்கு ஒன்று. பிரபு ஒரு காட்சியில் மல்லிகை மணம் என்கிறார். மல்லிகை வாசனை என்று சொல்லியிருந்தால் கொஞ்சம் நேட்டிவிட்டி இருந்திருக்கும்.

ஜோதிகாவா இது? சில குளோஸப் ஷாட்டுகளில் ஆச்சர்யப்படுத்துகிறார். அம்மிணிக்கு ஏதாவது அவார்டு கிடைத்தால் ஆச்சர்யப்படுவதற்கில்லை. திரைக்கதையில் அதிகமான வேலையில்லை என்றாலும் படம் முழுக்க வருகிறார் நயன்தாரா. சான்ஸ் கிடைத்தால் தன்னாலும் நன்றாக நடிக்கமுடியும் என்று சொல்லியிருக்கிறார். ரஜினிக்கு ஜோதிகா, நயன்தாராவை விட சொர்ணாவுடன்தான் காம்பினேஷன்!

'என்னை மட்டும் அவுட்டோருக்கு அனுப்பி வையுங்க.. அசத்திப்புடறேன்'னு சொல்கிற மாதிரி படத்தின் ஒளிப்பதிவு. அரண்மனைக்குள் கொஞ்சம் அடக்கி வாசிக்கும் காமிரா, வெளியே வந்தால் மிரட்டுகிறது. பின்னணி இசை பரவாயில்லை ரகம். ஆர்ட் டைரக்டர் ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார். ரிசல்ட்டும் நன்றாகவே வந்திருக்கிறது. தோட்டா தரணிக்கு வாழ்த்துக்கள். மொத்தத்தில் தமிழ்சினிமாவில் சந்திரமுகி முக்கியமான படமாகவிருக்கிறது. வருஷக்கணக்கா டி.வியோடு முடங்கியிருக்கும் தாய்க்குலங்களை தியேட்டருக்கு அழைத்துவரப்போகிறது. தியேட்டரில் மட்டுமே பார்க்கத்தூண்டும் திரைக்கதை வி.சி.டி வியாபாரிகளை திணறவைக்கும்.

இன்னொரு புல் மீல்ஸ் படம் ரஜினியிடமிருந்து. ஆனால், ரஜினி ரசிகர்களுக்கு அல்ல; தமிழ் சினிமாவின் ரசிகர்களுக்கு!
Reply
#44
<b>சந்திரமுகி
பகுதி - 1: சந்திரமுகிக்கு முன்</b>

காலையில் எழுந்ததுமே டிக்கெட்டுக்கு சொல்லி வைத்திருந்த நண்பருக்கு ஃபோன் அடித்து விட்டேன்.

"தலைவா, தாவரக்கரெ லக்ஷ்மி தியேட்டரில காலைல ஒன்பது மணி ஷோவுக்கு டிக்கெட் இருக்கு வர்றீங்களா?" என்றார்.

"வராம?"

அவசரமாய்க் குளித்து முடித்துக் கிளம்பிய போது, இன்னும் தூங்கிக் கொண்டிருந்த அறை நண்பன், தூக்கக் கலக்கத்தில், "எங்க மச்சான் கோயிலுக்கா?" என்றான். அவனுக்குத் தமிழ்ப் புத்தாண்டு ஞாபகம்.

நான் திரும்பிப் பார்த்துச் சிரித்து, "ஆமா!" என்றேன்.

சூப்பர் ஸ்டார் படம் ரிலீஸாகும் தியேட்டர் நமக்கெல்லாம் கோயில் இல்லாமல் வேற என்ன?

-o0o-

நண்பரைச் சந்தித்து டிக்கெட்டைப் பெற்றுக் கொண்டு, பக்கத்திலிருந்த மடிவாலா ஆஞ்சநேயருக்கு ஒரு கும்பிடைப் போட்டு விட்டு தியேட்டரை நோக்கி நடந்தோம். தியேட்டர் வாசலில் கூட்டம் மிரள வைத்தது. ரஜினியின் மாஜிக் இன்னும் மாறாமலிருப்பதைக் காட்டியது. திருச்சியிலிருந்து 'முரட்டு பக்தர்கள்' அனுப்பியிருந்த 120 அடி நீள போஸ்டர் ஒட்டப்பட்டு கண்ணைப் பறித்துக் கொண்டிருந்தது. மற்ற பட போஸ்டர்களுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை.

சூப்பர் ஸ்டார் படத்துக்கெல்லாம் தியேட்டருக்குள் கேட் வழியாக நுழைந்தால் அவ்வளவு மரியாதையாக இருக்காது என்பதால் காம்பவுண்டு சுவர் ஏறிக் குதித்து வளாகத்தினுள் நுழைந்தோம். கையில் தடிகளுடன் சுற்றிக் கொண்டிருந்தது தியேட்டர் படை. அடி, கிடி வாங்காமல் தப்பித்து நுழைந்து க்யூவில் நின்று, ஒரு வழியாக தியேட்டருக்குள் நுழைந்தோம். அரங்கத்தின் நடுவில் ஒரு முழு வரிசையைப் பிடித்துக் கொண்டோம். படம் துவங்க இன்னும் அரை மணி நேரம் இருந்தது. அரங்கத்தினுள் ஒரே திருவிழா தோற்றம். அது சரி, திருவிழாவுகுத் திருவிழா வருவதா சூப்பர் ஸ்டார் படம்? சூப்பர் ஸ்டார் படம் எப்ப வருதோ அப்ப தான் திருவிழா.

திடீரென்று ஒருவர் கூவிக் கொண்டே ஓடி வந்தார்: "பொட்டி வந்திருச்சுப்பா!!" விஸில் தூள் பறந்தது. எல்லோரும் ஆப்பரேட்டர் ரூம் நோக்கி வழி மேல் விழி வைத்துக் காத்திருக்க, அவர் 'ராஜாதி ராஜ.. ராஜ கம்பீர..' ரேஞ்சுக்கு ஒரு என்ட்ரி கொடுத்தார். அவர் ரீலை எடுத்து மெஷினில் மாட்டி சுற்றத் தொடங்கியது தான் தாமதம், அடுத்த ரவுண்டு விஸில் பட்டையைக் கிளப்பியது.

சிவாஜி ப்ரொடக்ஷன்ஸ் பெயர் போட்டு முடித்ததும் விளக்குகளால் "SUPER STAR" என்று வருமே, அது ஆரம்பித்து அடுத்த விநாடி தியேட்டருக்குள் ஒரே ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம், கும்மாளம். அட, இதையெல்லாம் எழுதிப் புரியவைக்க முடியாதுங்க. இதெல்லாம் பார்த்து, சேர்ந்து உற்சாகப் பட வேண்டிய விஷயம்.

<b>பகுதி - 2: சந்திரமுகி

நடிகர்கள்: ரஜினி, பிரபு, ஜோதிகா, நயன் தாரா, வடிவேலு, நாசர்
இசை: வித்யாசாகர்
இயக்கம்: பி.வாசு</b>

ரஜினி என்ற திரை ஆளுமையின் பின்னால் இருக்கின்ற மாயாஜாலத்தைப் புரிந்து கொண்டு படம் எடுத்தால், எப்படிப்பட்ட கதையும் ரசிப்புக்குரியதாய் இருக்கும். அப்படி மூன்று படம் எடுத்திருக்கும் பி.வாசு, இந்தப் படத்தை சொதப்பியிருந்தால் மட்டுமே அது செய்தி. அப்படி எதுவும் தவறு நடக்கவில்லையென்பதால் சந்திரமுகி ரசிகர், பொதுஜனம் ஆகிய இரு தரப்பையும் திருப்திப் படுத்தும் வகையில் இருக்கிறது.

ஸைக்கலாஜிக்கல் த்ரில்லர் என்றெல்லாம் சொல்ல முடியாத எளிமையான கதையும் திரைக்கதையும் தான் சந்திரமுகியில். அந்த எளிமையே அதன் பலமாகவும் இருக்கிறது. ஓவராக குழப்பி மண்டை காய வைக்காமல் ஸ்ப்ளிட் பெர்ஸனாலிட்டி என்று உடனடியாக மெயின் ரூட்டைப் பிடித்து விடுகிறார்கள்.

எப்படியும் எல்லோரும் படத்தைப் பார்க்கப் போகிறீர்கள், நான் எதற்குக் கதை எல்லாம் சொல்லிக் கொண்டு? அதெல்லாம் இருக்கட்டும், மற்ற விஷயங்களைப் பார்ப்போம். ரஜினியின் படத்தில் பெரிதும் எதிர்பார்ப்புக்கு உள்ளாவது அறிமுகக் காட்சியும் அறிமுகப் பாடலும். அறிமுகக் காட்சி ஒரு சண்டையோடு துவங்குவதால் ரசிகர்களுக்கு நல்ல தீனி. ஆனால் தேவுடா பாட்டு எல்லோரையும் கவரும் விதத்தில் கும்மென்று இருக்கிறது. மெஜஸ்டிக் என்று சொல்லத்தக்க பின்னணி இசையுடன் மாட்டு வண்டியில் ஸ்டைலாகக் கால் மேல் கால் போட்டுப் படுத்தபடி ரஜினி நுழையும் போதே அரங்கம் பரபரப்பின் உச்சங்களைத் தொடுகிறது. எஸ்.பி.பி-க்கு சொல்லியா தர வேண்டும்? கலக்குகிறார் மனிதர். மொத்தத்தில் தேவுடா பாட்டு ரொம்ப நாளுக்குப் பிறகு ரசிகர்களுக்கு ஹார்லிக்ஸ், பூஸ்ட், விவா, மால்டோவா என்று சகல விதமான உற்சாக சத்துப் பொருட்களைக் கலந்து கட்டி ஊட்டுகிறது.

காமெடியில் வடிவேலு பின்னி எடுக்கிறார். சில 'ஒரு மாதிரி' காட்சிகளைத் தவிர்த்திருக்கலாம் என்று தோன்றினாலும், மொத்தத்தில் ரசிக்கும்படி இருக்கிறது. குறிப்பிட்டு சொல்ல வேண்டிய ஒரு காட்சி, 'ஆவிகள் வரும் போது என்னவெல்லாம் நடக்கும்' என்று ரஜினி வடிவேலுவிடம் ஒவ்வொன்றாய் விளக்க, அவை ஒவ்வொன்றாய் நடக்க, இருவரும் பயப்படும் காட்சி. என்னமாய் புகுந்து விளையாடுகிறார்கள் இருவரும்? Outstanding.!!

பிரபுவுக்கு வேலையே இல்லை. வந்து போகிறார். முதல் காட்சியில் ரஜினியைப் பார்த்து, "எப்படி இந்த வயசிலயும் ட்ரிம்மா இருக்கீங்க?" என்று கேட்க, ரஜினி அவரைப் பார்த்து, "கண்ணா! நான் குண்டானா நல்லா இருக்காது, நீ இளைச்சா நல்லா இருக்காது" என்று கலாய்ப்பது சுவாரஸ்யம்.

Which reminds me, அவ்வ்வ்வ்வ்வளவு இளமையாகத் தெரிகிறார் ரஜினி. மாமனார் ரஜினியும் மருமகன் தனுஷும் பக்கத்துல பக்கத்துல நின்றால் அண்ணன் தம்பி மாதிரி இருப்பார்கள். ரஜினி தம்பி மாதிரி இருப்பார்..!! (அடே மீனாக்ஸ், போதும், உனக்கே இது ஓவராத் தெரியலையா? யாராவது கத்தியைத் தூக்கிக்கிட்டு வர்றதுக்குள்ள நீயா நிறுத்திடு - அறிவுரை அளிப்பது மிஸ்டர் மனசாட்சி)

அப்புறம் நம்ம ஆளு ஜோதிகா. கடைசி முப்பது நிமிடங்கள் தான் படத்துல முன்னணிக்கு வருகிறார். ஆனாலும் மனசில் நிற்கும் பெர்ஃபார்மன்ஸ். ஷோபனா, சௌந்தர்யா போன்ற நடனமணிகள் பிற மொழிகளில் ஆடிய க்ளைமேக்ஸ் பரதநாட்டியத்தை நம்ம குத்தாட்ட ஸ்பெஷலிஸ்ட் எப்படி சமாளிக்கப் போறாங்களோன்னு பயந்துகிட்டு இருந்தேன். டைரக்டர் பி.வாசு சமயோசிதமா ஒரு சமாளிஃபிகேஷன் பண்ணியிருக்காரு.

ஜோதிகாவின் இறுதிக்கட்ட மேக்கப்பை இன்னும் கொஞ்சம் குறைத்துப் போட்டிருக்கலாம். ஓவராகத் தோன்றுகிறது. ஆனாலும் அவர் முறைத்தபடி "லக்கலக்கலக்கலக்க" என்று ஆவேசமாய்க் கத்தும் போது ஆடியன்ஸ் கை தட்டலை மொத்தமாக அள்ளுகிறார்.

நயன் தாரா நல்ல அழகு. குறிப்பாக துருக்கியில் எடுக்கப்பட்டுள்ள "கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம்" பாடல் நன்றாக இருக்கிறது. நல்ல விஷுவல்கள். மற்றபடி அவருக்கு செய்வதற்கு ஒன்றும் பெரிதாக இல்லை. அவ்வப்போது ரஜினியுடன் சண்டை பிடிக்கிறார். காதல் வயப்படுகிறார், காணாமல் போகிறார்.

நாசர், செம்மீன் ஷீலா போன்றோர் சம்பிரதாயத்துக்கு இருக்கிறார்கள். குறிப்பாக ஷீலாவும், அவரது பணியாளும் பெரிய பில்டப்பிற்குப் பிறகு அம்போவென்று போகிறார்கள்.

படத்தில் சுவை கூட்டியிருக்கும் இன்னொரு அம்சம், கிராஃபிக்ஸ். குறிப்பாக இறுதிக்காட்சிகளில் ஜோவின் ஸ்ப்ளிட் பெர்சனாலிட்டியைக் காட்டும் விதத்தில் நல்ல பயன்பாடு.

அடடா, பாடல்களைப் பற்றிச் சொல்ல மறந்து விட்டேனோ? எல்லாப் பாடல்களுமே பொருத்தமான் இடங்களில் நிறைவாக இருக்கின்றன. நல்ல படமாக்கம். குறிப்பாக முதல் பாதியில் மூன்று பாடல்களும் படத்தைத் தொய்வில்லாமல் கொண்டு செல்ல உதவுகின்றன. வித்யாசாகர் பின்னணி இசையில் ஒன்றும் பெரிதாய்ப் பிரமாதப்படுத்தி விடவில்லை. தேவையான அளவுக்குச் செய்திருக்கிறார். பளபளவென பட்டு வேட்டி சட்டையில் முதல் பாதியிலும், குளுகுளுவென இளமைத் துள்ளலுடன் இரண்டாம் பாதியிலும் ரஜினி கலக்கியிருக்கும் "அண்ணனோட பாட்டு" தேவுடாவுக்கு அடுத்து இரண்டாம் இடத்தில்.

சண்டைகளைக் குறைத்து, காமெடியை அதிகரித்து முழு நீள என்டெர்டெயினராக இருக்கிறது சந்திரமுகி.

ரசிக்க, ருசிக்க என்டெர்டெயினர் கொடுப்பதில் ரஜினியை அடிக்க யாரிருக்கா? எவருமில்லை.

by மீனாக்ஸ்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#45
படம் பார்த்தேன். நல்லா இருக்கு. பாட்டெல்லாம் சூப்பர். மற்ற ரஜனி
படங்களில் இருந்து வித்தியாசமாய் இருக்கிறது.ரஜனி இளமையுடன் சூப்பரா இருக்கிறார் .
ஜோதிகா நல்லா நடிச்சிருக்கிறா. :mrgreen:
Reply
#46
எங்கையாவது சுடலாம் என்றால் ரகசியமாய் சொல்லுங்க பிளீஸ்.. :wink:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#47
எங்கேயாவது கண்டால் சொல்கிறேன். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply
#48
நன்றி வசி. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#49
vasisutha Wrote:படம் பார்த்தேன். நல்லா இருக்கு. பாட்டெல்லாம் சூப்பர். மற்ற ரஜனி
படங்களில் இருந்து வித்தியாசமாய் இருக்கிறது.ரஜனி இளமையுடன் சூப்பரா இருக்கிறார் .
ஜோதிகா நல்லா நடிச்சிருக்கிறா. :mrgreen:

இது போதுமே சனம் விழுந்தடிக்க....! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#50
ரஜினி என்ற திரை ஆளுமையின் பின்னால் இருக்கின்ற மாயாஜாலத்தைப் புரிந்து கொண்டு படம் எடுத்தால்இ எப்படிப்பட்ட கதையும் ரசிப்புக்குரியதாய் இருக்கும். அப்படி மூன்று படம் எடுத்திருக்கும் பி.வாசுஇ இந்தப் படத்தை சொதப்பியிருந்தால் மட்டுமே அது செய்தி. அப்படி எதுவும் தவறு நடக்கவில்லையென்பதால் சந்திரமுகி ரசிகர்இ பொதுஜனம் ஆகிய இரு தரப்பையும் திருப்திப் படுத்தும் வகையில் இருக்கிறது.

ஸைக்கலாஜிக்கல் த்ரில்லர் என்றெல்லாம் சொல்ல முடியாத எளிமையான கதையும் திரைக்கதையும் தான் சந்திரமுகியில். அந்த எளிமையே அதன் பலமாகவும் இருக்கிறது. ஓவராக குழப்பி மண்டை காய வைக்காமல் ஸ்ப்ளிட் பெர்ஸனாலிட்டி என்று உடனடியாக மெயின் ரூட்டைப் பிடித்து விடுகிறார்கள்.

எப்படியும் எல்லோரும் படத்தைப் பார்க்கப் போகிறீர்கள்இ நான் எதற்குக் கதை எல்லாம் சொல்லிக் கொண்டு? அதெல்லாம் இருக்கட்டும்இ மற்ற விஷயங்களைப் பார்ப்போம். ரஜினியின் படத்தில் பெரிதும் எதிர்பார்ப்புக்கு உள்ளாவது அறிமுகக் காட்சியும் அறிமுகப் பாடலும். அறிமுகக் காட்சி ஒரு சண்டையோடு துவங்குவதால் ரசிகர்களுக்கு நல்ல தீனி. ஆனால் தேவுடா பாட்டு எல்லோரையும் கவரும் விதத்தில் கும்மென்று இருக்கிறது. மெஜஸ்டிக் என்று சொல்லத்தக்க பின்னணி இசையுடன் மாட்டு வண்டியில் ஸ்டைலாகக் கால் மேல் கால் போட்டுப் படுத்தபடி ரஜினி நுழையும் போதே அரங்கம் பரபரப்பின் உச்சங்களைத் தொடுகிறது. எஸ்.பி.பி-க்கு சொல்லியா தர வேண்டும்? கலக்குகிறார் மனிதர். மொத்தத்தில் தேவுடா பாட்டு ரொம்ப நாளுக்குப் பிறகு ரசிகர்களுக்கு ஹார்லிக்ஸ்இ பூஸ்ட்இ விவாஇ மால்டோவா என்று சகல விதமான உற்சாக சத்துப் பொருட்களைக் கலந்து கட்டி ஊட்டுகிறது.

காமெடியில் வடிவேலு பின்னி எடுக்கிறார். சில 'ஒரு மாதிரி' காட்சிகளைத் தவிர்த்திருக்கலாம் என்று தோன்றினாலும்இ மொத்தத்தில் ரசிக்கும்படி இருக்கிறது. குறிப்பிட்டு சொல்ல வேண்டிய ஒரு காட்சிஇ 'ஆவிகள் வரும் போது என்னவெல்லாம் நடக்கும்' என்று ரஜினி வடிவேலுவிடம் ஒவ்வொன்றாய் விளக்கஇ அவை ஒவ்வொன்றாய் நடக்கஇ இருவரும் பயப்படும் காட்சி. என்னமாய் புகுந்து விளையாடுகிறார்கள் இருவரும்? ழுரவளவயனெiபெ.!!

பிரபுவுக்கு வேலையே இல்லை. வந்து போகிறார். முதல் காட்சியில் ரஜினியைப் பார்த்துஇ "எப்படி இந்த வயசிலயும் ட்ரிம்மா இருக்கீங்க?" என்று கேட்கஇ ரஜினி அவரைப் பார்த்துஇ "கண்ணா! நான் குண்டானா நல்லா இருக்காதுஇ நீ இளைச்சா நல்லா இருக்காது" என்று கலாய்ப்பது சுவாரஸ்யம்.

றூiஉh சநஅiனௌ அநஇ அவ்வ்வ்வ்வ்வளவு இளமையாகத் தெரிகிறார் ரஜினி. மாமனார் ரஜினியும் மருமகன் தனுஷும் பக்கத்துல பக்கத்துல நின்றால் அண்ணன் தம்பி மாதிரி இருப்பார்கள். ரஜினி தம்பி மாதிரி இருப்பார்..!! (அடே மீனாக்ஸ்இ போதும்இ உனக்கே இது ஓவராத் தெரியலையா? யாராவது கத்தியைத் தூக்கிக்கிட்டு வர்றதுக்குள்ள நீயா நிறுத்திடு - அறிவுரை அளிப்பது மிஸ்டர் மனசாட்சி)

அப்புறம் நம்ம ஆளு ஜோதிகா. கடைசி முப்பது நிமிடங்கள் தான் படத்துல முன்னணிக்கு வருகிறார். ஆனாலும் மனசில் நிற்கும் பெர்ஃபார்மன்ஸ். ஷோபனாஇ சௌந்தர்யா போன்ற நடனமணிகள் பிற மொழிகளில் ஆடிய க்ளைமேக்ஸ் பரதநாட்டியத்தை நம்ம குத்தாட்ட ஸ்பெஷலிஸ்ட் எப்படி சமாளிக்கப் போறாங்களோன்னு பயந்துகிட்டு இருந்தேன். டைரக்டர் பி.வாசு சமயோசிதமா ஒரு சமாளிஃபிகேஷன் பண்ணியிருக்காரு.

ஜோதிகாவின் இறுதிக்கட்ட மேக்கப்பை இன்னும் கொஞ்சம் குறைத்துப் போட்டிருக்கலாம். ஓவராகத் தோன்றுகிறது. ஆனாலும் அவர் முறைத்தபடி "லக்கலக்கலக்கலக்க" என்று ஆவேசமாய்க் கத்தும் போது ஆடியன்ஸ் கை தட்டலை மொத்தமாக அள்ளுகிறார்.

நயன் தாரா நல்ல அழகு. குறிப்பாக துருக்கியில் எடுக்கப்பட்டுள்ள "கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம்" பாடல் நன்றாக இருக்கிறது. நல்ல விஷுவல்கள். மற்றபடி அவருக்கு செய்வதற்கு ஒன்றும் பெரிதாக இல்லை. அவ்வப்போது ரஜினியுடன் சண்டை பிடிக்கிறார். காதல் வயப்படுகிறார்இ காணாமல் போகிறார்.

நாசர்இ செம்மீன் ஷீலா போன்றோர் சம்பிரதாயத்துக்கு இருக்கிறார்கள். குறிப்பாக ஷீலாவும்இ அவரது பணியாளும் பெரிய பில்டப்பிற்குப் பிறகு அம்போவென்று போகிறார்கள்.

படத்தில் சுவை கூட்டியிருக்கும் இன்னொரு அம்சம்இ கிராஃபிக்ஸ். குறிப்பாக இறுதிக்காட்சிகளில் ஜோவின் ஸ்ப்ளிட் பெர்சனாலிட்டியைக் காட்டும் விதத்தில் நல்ல பயன்பாடு.

அடடாஇ பாடல்களைப் பற்றிச் சொல்ல மறந்து விட்டேனோ? எல்லாப் பாடல்களுமே பொருத்தமான் இடங்களில் நிறைவாக இருக்கின்றன. நல்ல படமாக்கம். குறிப்பாக முதல் பாதியில் மூன்று பாடல்களும் படத்தைத் தொய்வில்லாமல் கொண்டு செல்ல உதவுகின்றன. வித்யாசாகர் பின்னணி இசையில் ஒன்றும் பெரிதாய்ப் பிரமாதப்படுத்தி விடவில்லை. தேவையான அளவுக்குச் செய்திருக்கிறார். பளபளவென பட்டு வேட்டி சட்டையில் முதல் பாதியிலும்இ குளுகுளுவென இளமைத் துள்ளலுடன் இரண்டாம் பாதியிலும் ரஜினி கலக்கியிருக்கும் "அண்ணனோட பாட்டு" தேவுடாவுக்கு அடுத்து இரண்டாம் இடத்தில்.

சண்டைகளைக் குறைத்துஇ காமெடியை அதிகரித்து முழு நீள என்டெர்டெயினராக இருக்கிறது சந்திரமுகி.

ரசிக்கஇ ருசிக்க என்டெர்டெயினர் கொடுப்பதில் ரஜினியை அடிக்க யாரிருக்கா? எவருமில்லை.

[size=18]இரண்டு வேறுபட்ட விமர்சனங்கள் ஒன்று ஏற்கனவே உள்ளது. இது புதியது எதை சரி யென்பது.
Thanks Minaks
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#51
சச்சின் யாரும் பார்க்கலையா? நான் தான் பார்த்துட்டு எழுதணுமா?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#52
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#53
சந்திரமுகி www.tamilblast.com என்ற இணைப்பில் இப்பொழது பார்க்கலாம்---------------------------ஸ்ராலின்
Reply
#54
நன்றி...........
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#55
பதிய எல்லாம் வேணும்..?? பொதுவாய் ஒருவர் பதிந்து விட்டு அந்த யுசர் நேம் பாஸ்வேர்ட்டைப்போட்டால்.. எப்படியிருக்கும். :wink: :mrgreen:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#56
<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#57
எங்கையாவது இணையத்தில் இலவசமாக பாக்கமுடிந்தால் இணைப்பை யாராவது தந்துதவுங்கள் :mrgreen:
; ;
Reply
#58
tamilini Wrote:பதிய எல்லாம் வேணும்..?? பொதுவாய் ஒருவர் பதிந்து விட்டு அந்த யுசர் நேம் பாஸ்வேர்ட்டைப்போட்டால்.. எப்படியிருக்கும். :wink: :mrgreen:

shiyam Wrote:எங்கையாவது இணையத்தில் இலவசமாக பாக்கமுடிந்தால் இணைப்பை யாராவது தந்துதவுங்கள் :mrgreen:

கடவுளே...என்னமா அலையுதுகள் படம் பார்க்க... இதுகளாவது திருந்திறதாவது..இதுதான் சரியான தருணம்..வெற்றுக் கோசம் போட... "தென்னிந்திய சினிமாவை எதிர்ப்போம்... சந்திரமுகியை களவாவோ இலவசமாகவோ காசு கொடுத்தோ பார்ப்பதை நிறுத்தி தென்னிந்திய சினிமா அடிமைத்தனத்தில் இருந்து விடுதலையாவோம்... எங்கள் பணத்தில் அவர்கள் உல்லாசம்...சுனாமி நிவாரணத்துக்கு காசு தராதவன் படத்தை புறக்கணிப்போம்...!" :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#59
தாராளமாய். கோசம் போடலாம். இதுவரை ஒரு நாளாவது.. இவர்கள் யாருடைய படத்தையம் நான் தியட்டர்ல போயப்பாத்ததில்லை.. தியட்டர் எப்படியிருக்கும் என்று தெரிந்து கொள்வதற'காய்.. சின்னனில நமக்கு பிடிச்ச.. சாளினி படம்.. சிவசங்கரி பார்க்கப்போனம். 2 தடவையும். அவாவின் படம் தான் பாத்தம் தியட்டர்ல.. அதற்பு பிறகு.. தியட்டர் போய்ப்பாக்கிற அளவிற்கு சினிமா பெரிய விடயமாய் தெரியல.. நமக்கு அது பொழுது போக்கு அம்சம் மட்டும் தான்.. பதிஞ்சு பார்க்க. கன நேரம் எடுக்காது.. அதுவே செய்யவில்லைப்பாருங்க. இந்த அளவில தான் நம்ம சினிமா பற்று.. வெளியில கோசம் போட்டிட்டு.. படம் வந்தவடன்..ஓடிப்போய்ப்பாக்கிற கூட்டம்.. நாங்க இல்லைப்பாத்தியளோ..?? :wink: :wink:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#60
காசுகுடுத்துபாக்க விருப்பமில்லாமல்தான் எங்கையாவது இலவசமா கிடைக்குமா எண்டு கேட்டனான் எனக்குபாக்க ஒண்டும் விருப்பமில்லை யாராவது கேள்வி கேட்டால் பதில் சொல்ல வேணுமல்லோ அதுக்குதான் :mrgreen: :mrgreen:
; ;
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)