Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Boys
#61
<!--QuoteBegin-இளைஞன்+-->QUOTE(இளைஞன்)<!--QuoteEBegin-->கலாச்சாரம் தமிழர் பருகும் கள்ளச் சாராயம்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->தம்பி இளைஞனே.. தற்போது ஊத்தப்படும் தணிக்கை கசிப்புக் கலாச்சாரத்தைவிட.. நாங்கள் குடித்து வளர்ந்த சமூகக் கலாச்சார கள்ளச்சாராயம் எவ்வளவோ மேல்.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#62
அண்ணா இளைஞன்....
ஆதி மனிதன் மதமோ கலாசாரமோ இன்றி மரங்களில் தாவித்திரிந்தான்....மனிதகுலம் வளர்ச்சியடைய மதமும் கலாசாரமும் உருவானது...இது இரண்டும் தேவையற்றது என வாதிடுவோர்..மீண்டும் மரத்தாவலுக்கு போகலாம்...தடையேதுமில்லை... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#63
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
புலம் பெயர் நாடுகளில் பிறந்த அல்லது வளர்ந்த குழந்தைகளால் எமக்கு தலை குனிவு இல்லை.மிகக் குறைவு என்று அடித்துச் சொல்வேன்.  
ஆனால் முன்னர் வந்தவர்களால்தான் ஏகப்பட்ட பிரச்சனைகள்??????????  
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

இதற்குக் காரணமும் கலாசாரம்தான்...அதாவது கலாசார அதிர்ச்சி....
தன்நிலை உணராதவர்கள், தான் வளர்ந்த சூழலும் அதன் தன்மையும் அறியாதவர்கள்....புதிய கலாசாரத்தினுள் புகும்போது ஏற்படும் கலாசார அதிர்ச்சியை உள்வாங்க இயலாதவர்கள்......புதிய சூழலுக்கு தக்க தன்னை மாற்றியமைத்துக் கொள்ள இயலாதவர்கள்....மொத்தத்தில் மன ஒருமைப்பாடும் திடமான மனவுறுதியும் இல்லாதவர்கள்....
Be a roman in rome.
Reply
#64
ஐயோ....
படத்தில ஒன்றும் இல்லை.
இதுவரைக்கும் காட்டாத ஒன்றையும் புதுசாக் காட்டேல.
அதாவது இவர்கள் சொன்ன ஆபாசங்கள் புதுசா ஒன்றும் அங்க இல்லை.
இந்த விமர்சனம் எழுதினவர்கள் தான் ஆபாசமா எழுதியிருக்கிறார்கள்.
எதுக்கும் நாளைக்கு வந்து விமர்சனம் தாறன்.


வலிதான் வெற்றியின் இரகசியம் -பாய்ஸ்


Reply
#65
[quote=AJeevan]<b>புலம் பெயர் நாடுகளில் பிறந்த அல்லது வளர்ந்த குழந்தைகளால் எமக்கு தலை குனிவு இல்லை.மிகக் குறைவு என்று அடித்துச் சொல்வேன்.
[b]ஆனால் முன்னர் வந்தவர்களால்தான் ஏகப்பட்ட பிரச்சனைகள்??????????</b>
நட்புடன்
[b]அஜீவன்

[b]இந்தக் கருத்து மிகவும் சரியானதே.
Nadpudan
Chandravathanaa
Reply
#66
காலாசாரம் என்பது ஒரு சமூகத்தின் தனித்துவமான, விழுமியங்கள் பொதிந்த ஒரு வழிகாட்டல் படிமம்.....அதை கட்டாயம் தொடரவேண்டும் என்பது நியதியல்ல...குறிப்பிட்ட சமூகத்தை பிரதிநிதிப்படுத்த விரும்புபவன் அந்த சமூகத்தில் உள்ள மனிதனுக்கு சிறந்த வழிகாட்டலை வழங்கி நிற்கும் கலாசார பண்புகளை கடைப்பிடிப்பது அவனை உலகில் தனித்துவத்துடன் காட்ட வழி செய்யும்...அதை விடுத்து அந்நிய கலாசாரத்துள் கலக்கவிரும்புபவனை தடுக்கும் கலாசார அநாகரிகம் எமது தமிழ் கலாசாரத்துக்கு இல்லை....தாராள சுதந்திரம் உண்டு....எமது கலாசார மகிமையை உணரந்தவன் திருந்துவான்..... உணராதான் திணறுவான்....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#67
திருத்தம்..
உணரந்தவன்.... உணர்ந்தவன்
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#68
[quote=Chandravathanaa][quote=AJeevan]<b>புலம் பெயர் நாடுகளில் பிறந்த அல்லது வளர்ந்த குழந்தைகளால் எமக்கு தலை குனிவு இல்லை.மிகக் குறைவு என்று அடித்துச் சொல்வேன்.
[b]ஆனால் முன்னர் வந்தவர்களால்தான் ஏகப்பட்ட பிரச்சனைகள்??????????</b>
நட்புடன்
[b]அஜீவன்

[b]இந்தக் கருத்து மிகவும் சரியானதே.

ஓமோம்.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
ஈழத்தவர் லண்டனுக்கு முந்தியும் படிக்க வந்தவை...அப்ப ஒண்டும் இப்படி நடக்கேல்லை...இப்பதான் நடக்குது.... தன்னிலை அறியா, தன் கலாசாரம் அறியா, மனஒருமைப்பாடு இல்லா, மனவுறுதி இல்லா மக்(கு)கள் வந்தனரோ?
Reply
#69
உங்க லண்டனில இங்ச பிறந்த தமிழ் வழிவந்ததுகளும் ரீன் ஏஜ்ஜிக்கு முதலில லண்டன் வந்ததுகளுமே குழப்படிகள்.....அவையும் அவையின்ற நடையுடை பாவனையும் சிகரட்டும் தண்ணியும் பப்பும் பாப்பாபும் தலையும் கிறீமும் எண்டு சூப்பின பனங்காய் மாதிரி ஒரு கோலத்தோட உலாவாரது.....சிலது முகத்தில தேமல் பிடிச்சமாதிரி ஒரு தாடி மீசை....மண்ணாங்கட்டி.....முதலில மனிசனா இருக்கப்பாருங்கோ...பிறகு போடுவம் வேசம்.....அப்பா அம்மா என்ன பண்ணினமோ தெரியாது....?????!!!! அதுசரி அவை இங்கிலீசு எல்லே பேசினம்...அப்பா இங்கிலீசுக்காரன வெண்டு காட்ட வேணாமோ.....?!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#70
முன்பு; வந்தவர்களால் தான் ஏகப்பட்ட பிரச்சனை என்றதும் என்னமாதிரி கோவம் வருகுது. பழுத்த பழம் வெம்பல் இல்லை.அதென்ன பிறகு உங்கை எண்ட கதை அங்கை தானே நீங்களும் இருக்கிறியள். நடந்தா மட்டும் காணாது உங்கடை பிள்ளையளை கவனமா பாருங்கோ.பலர் கோட்டை விட்டிடுவினம் மற்றவையை பற்றி கதைச்சு கதைச்சு தங்கடை பிள்ளையள் அதை விட நடுரோட்டிலை நிக்கிற காட்சி. நாங்கள் அறியாததா? பிள்ளைகள் பாவம் என்ன செய்வார்கள் பொற்றோரின் சரியான வழிநடத்தல் இன்மை தான் இவற்றுக்கெல்லாம் காரணம். அவர்களுக்கான சிந்தனைகளை யாரும் மதிப்பது கிடையாது. அவர்களின் பால் எழுகின்ற கேள்விகளிற்கு தக்க பதிலை பலர் கொடுப்பதில்லை. அவர்களிற்கான பொழுதுபோக்கை பலர்; திட்டமிடுவதுமில்லை. பொழுதை எப்படி போக்குவது என புரியாது சிதைந்து விடுகிறார்கள். யோகா கராத்தே இரண்டுமே மனதை ஒரு நிலைப்படுத்தும் நெறி கொண்டவை. அதேபோல் வாத்தியக்கருவிகள் பிள்ளைகளின் மனதை மகிழச்செய்பவை. மனபாரங்களை இறக்கி வைக்க உதவுபவை. உடற்பயிற்சி புத்துணர்வை தருபவை இசைக்கருவிகள் அதாவது விரல்களால் மீட்டப்படுபவை மூழையை பலமடையச்செய்வதாகவும் வலுவடையச்செய்வதாகவும் பல உணர்திறன்களை கூட்டுபனவாகவும் ஞாபக சக்கியை அதிகப்படுத்துவனவாகவும் இருப்பதாக கூறப்படகிறது. பாடசாலை முடிய அவர்களின் பொழுதுபோக்கை இத்தகைய வழிகளில் ஈடுபடுத்துவோமேயானால் அனேகமாக தீய வழிகளில் இறங்கவதை ஓரளவுக்கேனும் குறைத்துக்கொள்ளலாம்.

எத்தனை பிள்ளைகளை லைபிறறிக்கு கூட்டிச்சென்று வாசிப்பு பழக்கத்தை பெற்றோர் ஏற்படுத்தி கொடுத்துள்ளார்கள் என பாற்தால் அரிதாகவே காணப்படுகிறது.இவற்ரை எல்லாம் தாண்டி எத்தனையோ சிறார்கள் நல் ஒழுக்கத்தோடு வாழ்வதை பாக்க கூடியதாகத்தான் உள்ளது .ஒரு பிள்ளை தானாக ஒரு போதுமே கெட்டொழிந்து போக ஆசைகொள்வதில்லை. பெற்ரோரின் வழிநடத்தலும் அன்புப்பரிமாற்றமும் அரவணைப்பும் அதிபங்கு வகிக்கிறது எனலாம்.
[b]Nalayiny Thamaraichselvan
Reply
#71
ஏனக்கா....கராத்தேயும் யோகாவும் எண்டு றிஸ்க் எடுக்கிறியள்...ஒரு சாமிப்படத்தை வைத்து பஞ்சதோத்திரங்களையும் ஒரு ஐந்து நிமிடம் மனதை அடக்கி படிக்கக் கற்றுக்கொடுங்கோ அது போதும்...எங்கட ஆசிரியர்மார் பெற்றோர் அப்படித்தானே சொல்லித்தந்தவை....! அதுக்குப் பிறகுதான் நாங்கள் யோகாப்பயிற்சிக்குப் போனனாங்கள்.....! முதலில செய்ததுதான் பின்னையதற்கு பெரிதும் உதவினது...! இது அறியாப் பருவத்தில கராத்தே கற்று பிறகு அறிந்த பருவம் வர கள்ளக்காட்டுப்பறிக்க வழி சொல்லுறியள் போலவும் கிடக்கு....!எதுக்கும் தீர யோசித்து கராத்தேயை அறிந்த பருவத்தில் கற்கிறது நல்லம் போலக் கிடக்கு....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#72
வணக்கம் நண்பர்களே...

தமிழகத் தமிழர்களிடையே பரப்பரப்பாகப் பேசப்பட்ட திரைப்படம் "Boys". படம் வருவதற்கு முன்னாலேயே
பெரும் எதிர்பார்ப்பு அப்படத்தின் மீது இருந்தது யாவரும் அறிந்ததே. இது தமிழக அரசியல் வாதிகளும்
சினமாத் துறையினரும் பனிப்போர் நடத்திக்கொண்டிருக்கும் காலம். துள்ளுவதோ இளமை, பாபா, சண்டியர்,
பாய்ஸ் என்று பல திரைப்படங்கள் அடுத்தடுத்து மோசமான விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கிறது. இதற்கு
பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. வியாபாரம், விளம்பரம் என்று சிலவற்றைக் குறிப்பிட்டுக் கூறலாம்.
ஆயினும் துள்ளுவதோ இளமை, பாய்ஸ் என்று இவ்விரண்டு படங்களும் கலாச்சார ரீதியாக தமிழ் மக்கள்
மீது பாதிப்பைச் செலுத்துவதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
துள்ளுவதோ இளமைக்கு இருந்த எதிர்ப்பைக் காட்டிலும் பாஸ்ஸ் திரைப்படத்திற்கு அதிகமான எதிர்ப்புகள்
கிளம்பின. ஒன்று விமர்சனங்கள் வாயிலாக. மற்றையது நேரடி நடவடிக்கைகள் வாயிலாக. பெண்கள்
அமைப்புகள் தமது எதிர்ப்பையும், அரசியல்வாதிகள் தமது எதிர்ப்பையும் காட்டத் தவறவில்லை. ஆனால்
இவர்களது எதிர்ப்புகள், எந்த எதிர்பார்ப்புகளோடு நடந்தேறின? சுயநலமா? அல்லது...?

சரி இவர்கள் கலாச்சாரம் சீரழிந்து போகிறது என்று இப்படிப் பொங்கியெழ பாய்ஸ் படத்தில் அப்படியென்ன
இருக்கிறது? ஆபாசம்? இதுவரை தமிழ் சினமாவில் எதிர்ப்பகள் இல்லாமல் வந்து அரங்கேறின திரைப்படங்களை
விடப் புதிதாக ஏதும் உண்டா?

படத்தைவிட சங்கர் மீதுதான் அதிக விமர்சனம். அதற்குக் காரணம். சங்கர் திரைப்படங்களுக்குள் புதுமை நுழைக்க
விரும்பும் ஒரு கலைஞர். அவரது முன்னைய திரைப்படங்களில் நிறையவே செய்தும் காட்டியிருக்கிறார். அதனால்
அவரிடமிருந்து வேறமாதிரியான ஒன்றை சிலர் எதிர்பார்த்திருக்கலாம். அந்த எதிர்பார்ப்புகள் வீண்போனதால்
சிலவேளை இவர்கள் பொங்கியிருக்கலாம். இருந்தபோதும் கலாச்சாரச் சீரழிவு என்றும், புதிதாக ஆபாசம் என்றும்
ஆர்ப்பாட்டம் செய்ய என்ன காரணம்?


சரி... முதலில் படத்தைப் பற்றிக் கொஞ்சம்:

அழகான, அடக்கமான அறிமுகத்தோடு படம் தொடங்குகிறது. ஹீரோவிசம் இல்லாமல் கதாநாயகர்களைச்
சாதாரணமாகவே அறிமுகப்படுத்துகிறார்கள். ஏழை, பணக்காரர், நடுத்தரவர்க்கம் என பலவிதப் பொருளாதாரத்
தளங்களிலும் இருந்து வெவ்வேறு தனித்துவங்களும், திறமைகளும் கொண்ட ஐந்து இளைஞர்கள் பற்றிய கதை
இது. குட்டிச் சுவரில் (?) இருந்துகொண்டு பெண்களின் அழகை இரசிக்கும் கலைஞர்கள் இவர்கள்.
ஆரம்பத்தில் ஐவரும் ஒருவரையே காதலிக்க முனைகிறார்கள், பின்னர் ஒருவனுக்கு வழிவிட்டு நண்பர்களாக
ஒதுங்கிக் கொள்கிறார்கள். ஐவரும் ஐந்து பெண்களைக் காதலிக்கிறார்கள். அதில் கதாநாயகியைக் காதலிக்கும்
பெடியன் காதலிக்காக நிர்வாணமாக ஓடுகிறான். இது வீட்டுக்குத் தெரியவந்து, காதல் விவகாரங்களும் தெரியவர
அனைவரது பெற்றோர்களும் சேர்ந்து முடிவெடுக்கிறார்கள். நண்பர்களையும் பிரித்துக் காதலர்களையும் பிரித்து
வேலி போடுகிறார்கள். ஆனாலும் இதையெல்லாம் அடிக்கடி தாண்டி சந்தித்து தமது தாகங்களைத் தீர்த்துக்
கொள்கிறார்கள் பெடியங்கள். இறுதியாக பொறுக்க இயலாமல் கதாநாயகனும், கதாநாயகியும் திருமணம் செய்து
கொள்கிறார்கள். வீட்டில் இவர்களை ஏற்கவில்லை. இதனால் வெளியேறுகிறாகள். நண்பனுக்காக மற்றைய நால்வரும்
வெளியேறி கூட்டாக இருக்கிறார்கள். எங்கோ ஒரு குடிசையில் இருந்து கொண்டு பகுதிநேர வேலை செய்கிறார்கள்.
அப்போது பலவித சிக்கல்களையும், வாழ்வின் துன்பங்களையும் சந்திக்கிறார்கள். சோர்வடைந்து மீண்டும் துணிகிறார்கள்.
அதில் வரும் பணம் படிப்புக்குக் காணதென்பதால் புதிதாக சிந்திக்கிறார்கள். அதன்படி பாடல் ஆல்பம் செய்து
விற்பனை செய்கிறார்கள். அதன்போது பலவிதப் பிரச்சினைகளை எதிர்நோக்குகிறாகுள். இறுதியாக Sony
நிறுவனத்திற்கு "பாய்ஸ்" இசைத் தட்டுச் செய்து கொடுத்து தங்கள் இலட்சியத்தை சாதிக்கிறார்கள்.
இதுதான் கதைச்சுருக்கும்.

காதல், நட்பு, காமம், வாழ்க்கை, அரசியல், மதம், கலாச்சாரம், சமூகம் என்று அத்தனையையும் சாதுவாகத்
தொட்டுச் சென்றாலும் அற்புதமாக சொல்லவந்த கருத்தைச் சொல்லியிருக்கிறார்கள். காதலுக்காக எதையும்
சந்திக்கத் தயாராகும் குணம், நட்புக்காகக் காதலைத் தியாகம் செய்யும் தன்மை என்று நிறையவே
செல்லியிருக்கிறார்கள். பிரச்சாரமாக இல்லாமல் சுருக்கமாகச் சிறு சிறு செயல்கள் மூலம் விளக்கியிருக்கிறார்கள்.
பொடாச்சட்டக் காட்சி தமிழகத்தின் இன்றைய அடிப்படை உரிமைப் பிரச்சினையப் பற்றிச் சொல்லியிருக்கு.
நக்சலைட் பற்றிச் சொல்லியிருக்கு. மதம் என்னும் பெயரால் பிச்சை எடுக்கும் சோம்பேறிகள் பற்றிச் சொல்லியிருக்கு.
காதல் தியாகம், காதல் வெற்றியும் வாழ்க்கைத் தோல்வியும் பற்றிச் சொல்லியிருக்கு. பிள்ளை வளர்ப்புப் பற்றிச்
சொல்லியிருக்கு. பெற்றோரைவிட்டு வெளியே வந்து அனுபவிக்கும் துன்பங்கள் பற்றியும், பணத்தின் அருமை பற்றியும்,
சொல்லப்பட்டிருக்கு. முயற்சியும், துணிவும், தன்னம்பிக்கயும் பற்றி இளைஞர்கள் மூலம் சொல்லப்பட்டிருக்கு.

உடலுறவு அனுபவம் பெறுவதற்காக ஒரு பெண்ணை அழைத்து வருகிறார்கள். அறைக்குள் ஒவ்வொருத்தராகச்
செல்கிறார்கள். (ஏதோ முந்தி அழியாத கோலங்கள் படத்தில வந்தமாதிரியாம்?)
1. முதலாவது ஒருவன் செல்கிறான். அவனுக்குள் இருக்கும் பயம், உணர்ச்சிச் சிக்கல்கள்
காரணமாக வெளியே வருகிறான். நண்பர்களிடம் தான் அப்பெண்ணை அனுபவித்ததாகப் பொய் சொல்கிறான்.
2. இரண்டாமவன் உள்ளே செல்கிறான். அவன் இது தப்பில்லையா என்று கேட்கிறான். அவள் அதற்குத் தப்புத்தான்
என்று சொல்கிறாள். காவலர்கள் தண்டனை அது இது என்று சிலதைச் சொல்கிறாள். பயப்படுகிறான்! வெளியே
வந்து அவனும் பொய் சொல்கிறான்.
3. மூன்றாமவன் உள்ளே செல்கிறான். அப்போது அவளுக்கு ஒரு குழந்தை இருப்பதை அறிகிறான். அதனால்
அவனும் வெளியே வந்து பொய் சொல்கிறான்.
4. நான்காமவன் உள்ளே. தாலியிருப்பதைக் காண்கிறான். எனவே வெளியே வந்து பொய் சொல்கிறான்.
5. ஐந்தாமவன் உள்ளே. அப்போது இவர்கள் பேசிய நேரம் முடீவடைந்து விடுகிறது. அதனால் கொஞ்சநேரம்
சும்மா இருந்துவிட்டு வெளியே வந்து பொய் சொல்கிறான்.
இப்படி உள்ளே எதுவும் ஆபாசமாய் நடக்கவில்லை. சத்தம் போடுவது போல் ஒருவன் நடித்தான். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->. அவ்வளவுதான்.
எல்லோருமே கலாச்சாரம் என்பதையும், சட்டம் ஒழுங்கு என்பதையும் மதிப்பதால் மதித்ததால் அவர்களால் ஒன்றும்
செய்ய இயலவில்லை. எனவே இந்தக் காட்சி கலாச்சாரச் சீரழிவா? அல்லது கலாச்சாரத்தை மீற எண்ணாத
இளைஞர்களை வைத்து மற்றைய இளைஞர்களுக்குச் சொன்ன பாடமா?

சில கவர்ச்சியாகக் காட்சிகள் வந்தன. இல்லையென்று சொல்வதற்கில்லை. ஆனால் புதிதாக எதுவும் இல்லையே.
"மலே மலே" பாட்டுக்கு நடிகை மும்தாச்சின் ஆட்டம், தாயுமானவளே படத்தில் கள்ளத் தொடர்பு வைத்திருக்கும்
மனைவியாக நடித்தவரின் ஆபாசக் காட்சி, இவற்றையெல்லாம் மீறிய காட்சிகளாக இங்கே எதுவும் படவில்லை.
விஜயகாந்தின் ஒரு திரைப்படத்தில் "ஆபாசக் காட்சி கூடாது" என்று சொல்லும் கருத்திற்காய் ஆபாசமாய்க் காட்சி
அமைத்தார்களே... அப்போது ஒரு எதிர்ப்பும் வரவில்லையே? கத்தி தூக்காதே என்பதற்காகக் கத்தியைத் தூக்கித்தானே
காட்டுகிறார்கள். மற்றவனைக் கொன்றதற்காக இந்தியாவில் மரணதண்டனை செய்து அதே தப்பைத்தானே செய்கிறார்கள்.
இப்படியெல்லாம் பல சிக்கல்கள் இருக்கும் பொழுது இவர்கள் இப்படிக் கத்துவது நியாயமா?

ஒரு பெண்ணைக் கவர்வதற்காக சின்னச் சின்னக் குறும்புகள் செய்வதும், தம்மை மற்றையவரிடமிருந்து வித்தியாசப்
படுத்திக் காட்டுவதும் பெடியங்களின் இளமைத் துள்ளல். இதையெல்லாம் தவறென்று சொல்ல முடியுமா?

படத்திலேயே நகைச்சுவை நடிகர் விவேக்கின் மூலம் கொஞ்சம் நகைச்சுவை கலந்து ஆபாசத்தைப் பற்றியும், கலாச்சாரச்
சீரழிவு பற்றியும் நல்ல கருத்துகள் சொல்லப்பட்டனவே. அவற்றையெல்லாம் இவர்கள் பார்க்கவில்லையா? தொலைக்காட்சி-
களில் ஆபாசமாகக் காட்டுகிறார்கள், வீட்டிலேயே பெற்றோர் புகை பிடிக்கிறார்கள் அப்படியிருக்கும் போது பிள்ளை வெளியில்
போய்த்தானா கெட்டுப் போறான் நெற்றியில் அடிப்பதாய் கேள்விகள். இதுவெல்லாம் கண்ணில் படவில்லையோ?

பாதிமார்பு தெரியப் பெண்களை எல்லா சினிமாவிலுந்தானே காட்டினார்கள்? இதிலென்ன புதுசா? சாதாரணமாக தற்போதைய
தமிழ்த் திரைப்படங்களில் கவர்ச்சி நடிகைகள் என்று தனியாக யாரும் நடிப்பது குறைவு. காரணம் கதாநாயகிகளே முழுநேரமாய்
அதைத்தான் செய்கிறார்கள். ஆனால் இந்தத் திரைப்படத்தில் அப்படி கவர்ச்சி காட்ட யாரும் இல்லை. அதனால் தனியாக
அதற்கென்று வேறு துணைநடிகர்கள். அவ்வளவுந்தான்.

என்ன ஆபாச வசனங்கள் இருக்கு? ஆபாச வசனங்கள் என்று விளங்கிக் கொள்ள முடிந்தவர்களுக்குத் தானே விளங்கும்.
மற்றையவர்க்கு அது எப்படி விளங்கும். அதாவது வயதுக்கு வந்தவர்களுக்கு ஏற்கனவே அதுபற்றித் தெரிந்தவர்களுக்குத்தானே
விளங்கிக் கொள்ள முடியும். இல்லாவிட்டால் வகுப்பெடுத்தால் தான் விளங்கும்.<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> அப்படி சின்னப் பொடியங்கள் பெட்டையளுக்கு
அந்த வசனங்களின் அர்த்தங்கள் விளங்குமென்றால், அவர்கள் வீட்டில் பெற்றோர்கள் அப்படியான வசனங்களை வெளிப்படையாகப்
பேசியதாகத் தானே பொருள்படும்.

கத்தியெடுத்து வெட்டுறான், பாய்ந்து பாய்ந்து அடிக்கிறான் இதெல்லாம் அப்ப சின்னப் பிள்ளையள் பார்க்குதுகள்தானே?
விஜயகாந்த், இரஜனிக்காந்த் என்று எத்தனையோபேர் இப்படி நடித்திருக்கிறார்கள் (அடித்திருக்கிறார்கள்), அப்போதெல்லாம்
பிள்ளையள் கெட்டுப் போகேல்லயா? படத்தில எவ்வளவோ நல்லதுகள் இருக்கு. புதசா எந்த ஆபாசமோ, கலாச்சாரச்
சீரழிவோ அங்கில்லை. அதற்கு மாறாக அதுபற்றிய நல்லகருத்துக்கள் தான் சொல்லப்பட்டிருக்கு.

சரி இத விடுவம்.
கிராபிக் தொழில்நுட்பம் மேற்கத்திய நாடுகளுக்கு ஈடான முறையில் பயன்படுத்தப்பட்டிருக்குறிது என்று பாராட்டலாம்.
கிராபிக் உருவங்களும் பாடல்காட்சிகளில் வந்து போவது அருமை. புதிய தொழில்நுட்பம் நன்றாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
பாடல்களில் ஆங்கிலம் அதிகம். ஆனாலும் தமிழை மேற்கத்திய இசைக்கு ஏற்ப வளைக்க முயன்றிருக்கிறார்கள்.
சில இடங்களில் வளைந்திருக்கிறது. சில இடங்களில் உடைந்து போயிற்று. "கற்கக் கசடறக் கற்றவை கற்றபின் மறக்கச்
செய்வது காதல்" போன்ற வரிகள் உதாரணம். ஆங்கிலத்தைக் குறைத்திருக்கலாம்.

விவேக்கின் நகைச்சுவை இரசிக்கத்தக்கது. சிந்திக்கத் தக்கது. மற்றைய படங்கள் போல் அல்லாமல், இதில் அடக்கமாக
வாசித்திருக்கிறார்.

சில லோஜிக் பிழைகள் இருக்கு. மற்றும் சில குறைகள் இருக்கு. ஆனாலும் அவையெல்லாம் படத்தின் கதையோட்டத்தில்
மறைக்கப்பட்டுவிட்டன. உதாரணமாக சாதாரண இளைஞர்கள் என்று சொல்லப்பட்டாலும் அவர்களின் உடை நடைகள் எல்லாம்
கொஞ்சம் மேட்டில் இருக்கு. இதுபோன்ற சின்னச் சின்னப் பிழைகள் ஆங்காங்கே இருக்கு.
படத்தைப் பற்றி நிறையவே அலசி ஆராயலாம். இருந்தாலும் இங்கே கலாச்சாரச் சீரழிவு மண்ணாங்கட்டி என்று கத்தியவைக்கு
மட்டுந்தான் சிலவற்றை எழுதியுள்ளேன்.

படத்தைப் பாருங்கள். உங்கள் இளம்பிள்ளைகளோடு சேர்ந்திருந்து பாருங்கள். கற்றுக்கொள்ள நிறையப் பாடங்கள் அதிலுண்டு.
கற்றுக்கொள்ளலாம். பெற்றவரும் கற்றுக் கொள்ளலாம்.

சங்கரிற்கு கைதட்டல்கள். இருந்தாலும் தமிழைக் கொஞ்சம் கவனியுங்கள்...<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


Reply
#73
நன்றி இளைஞன்.. கலரும் பிகறும் பரவாயில்லை காலுக்குமெலை கால்போட நல்ல படமாக்கும்.. கண்ணாடி போடாமலே பார்த்து ரசித்தீர்களாக்கும்.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#74
இளைஞனின் அழகான ஆழமான பகுத்தறிவோடு வைத்திருக்கும் விமர்சனத்துக்கு பாராட்டுகள்..............வாழ்த்துகள்.

தொடரட்டும்................இளைஞனின் பணி.

நானும் பார்த்தேன் Boys. இளைஞனால் சொல்லப் பட்டவைக்கு மேல் சொன்னால் படத்தை ரசிக்க எவராலும் முடியாது போய் விடும். சிலவற்றை பின்னர் நிச்சயம் எழுதுவேன்.

<b>அதுவரை எனக்குள் எழுந்த சில கேள்விகள்.</b>

இதுவரை காலமும் சினிமாவில்:-

1.வில்லன் நடிகர்களால் பெண்கள் கதறக் கதற பாலியல் வல்லுறவு செய்த காட்சிகளைப் பார்த்தவர்கள், ஏன் அதை எதிர்க்கவில்லை. அதை யாரும் பின்பற்றியிருக்க மாட்டார்களா?

2.குழந்தைகளை ஏமாற்றி விபச்சார விடுதிகளில் விற்று கெடுக்கும் காட்சியை (மகாநதி) பார்த்தவர்கள், ஏன் அலட்டிக் கொள்ளவேயில்லை?

3.பாலியல் இச்சைகளைத் துாண்டும் பாடல் வரிகளுக்கு (MGR - சிவாஜி காலத்துக்கு முன்பிருந்து) அவை அப்படியே மனதில் பதியும் வண்ணம் ஆடிய ஆட்டங்களை ஏன் எதிர்க்கவில்லை?

4.அப்பாவிப் பெண்கள் காவல் தெய்வங்களான போலீசாரால் அல்லது அரசியல் வாதிகளால் காம இச்சைக்கு உட்படுத்தப்பட்டு, பின்னர் விபச்சாரிகளாக நீதிமன்றங்களில் ஏற்றி தண்டனை வாங்கிக் கொடுக்கும் காட்சிகள் தவறு என்று ஏன் கண்டிக்கவில்லை?

இது போல் இன்னும் எத்தனை எத்தனை??????

படத்தைப் பார்க்காமல் கூச்சல் போடுவது மிகப் பெரிய தவறு.

எவனோ ரோட்டில் ஒருவனை போட்டு உதைக்கிறானே, நமக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஏன் என்று கூடத் தெரிந்து கொள்ளாமல் நாமும் இரண்டு உதை உதைத்து விட்டுப் போவோமே என்று சேர்ந்து உதைப்பது போல இருக்கிறது பலரது அறியாமை வடிவிலான கூச்சல்கள்.

நல்ல கருத்துகளை முன் வைத்த அனைவருடன் நானும் இருப்பதில் மகிழ்ச்சி.............வாழ்த்துகள்.

ஆதிமனிதன் நாளைய விடியலுக்காக இன்றைய நாளை எமக்குத் தந்தான்.இன்றைய மனிதன் அவனது எண்ணங்களைத் தொடர வேண்டுமே தவிர மீண்டும் மரத்தில் ஏற முனையக் கூடாது.
Reply
#75
Mathivathanan Wrote:நன்றி இளைஞன்.. கலரும் பிகறும் பரவாயில்லை காலுக்குமெலை கால்போட நல்ல படமாக்கும்.. கண்ணாடி போடாமலே பார்த்து ரசித்தீர்களாக்கும்.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

ஐயோ... அதை ஏன் கேக்குறீங்கள்.
எதிர்பார்த்தமாதிரி "கலரும் பிகரும்" இல்லை. பாடல் காட்சிகள் கூட அப்படியில்லை. காலுக்குமேல கால் போடுவது, கார் ஆடுவது இந்தக் காட்சியமைப்புகள் வயசுக்கு வராத பெடியங்களுக்கும் பெட்டையளுக்கும் விளங்காது. ஏற்கனவே உதுபற்றிய அறிவிருந்தால் விளங்கலாம். எனவே இந்தப் படத்தின் மூலம் பாதிப்பு அடையப் போவதில்லை.

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
அந்தக் காலத்தில நீங்கள் பார்க்காத கவர்ச்சி நடனங்களா, இரட்டை அர்த்த வசனங்களா என்ன? அதுக்கு இது ஈடாகுமா?


Reply
#76
நன்றி அஜீவன் அண்ணா...
உங்கள் கேள்விகள் நியாயமானவை. நிச்சயமாக உவர்களின்
கூச்சல்களில் எந்தவிதப் பொதுநலமோ, பண்பாட்டு மீதான
பாசமோ இல்லை என்பதே உண்மை.

நன்றி. மகிழ்ச்சி <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


Reply
#77
இளைஞா படத்திலுள்ள நல்லவைகளையே மட்டும் விமர்சித்திருக்கிறாய்? எல்லாம் பார்க்கும் கோணத்தில்தான் இருக்கிறது...
ஆனால் பல இளசுகள் இப்படிப் பார்க்குமா என்பது கேள்விக்குறியே...அதனால்தான் நல்லதையே பார் நல்லதையே கேள் என்று சொல்வார்கள்...
பெரும்பாலும் எமது இளசுகள்...கெட்ட விடயங்களை விரைவில் உள்ளெடுக்கிறார்கள்....என்ன செய்யலாம்?
Reply
#78
Kanani Wrote:இளைஞா படத்திலுள்ள நல்லவைகளையே மட்டும் விமர்சித்திருக்கிறாய்? எல்லாம் பார்க்கும் கோணத்தில்தான் இருக்கிறது...
ஆனால் பல இளசுகள் இப்படிப் பார்க்குமா என்பது கேள்விக்குறியே...அதனால்தான் நல்லதையே பார் நல்லதையே கேள் என்று சொல்வார்கள்...
பெரும்பாலும் எமது இளசுகள்...கெட்ட விடயங்களை விரைவில் உள்ளெடுக்கிறார்கள்....என்ன செய்யலாம்?

இனியவனே,
நாம் மட்டும் நல்லதையே பார்த்து நல்லதையே கேட்பதாக நம் மீது நம்பிக்கை கொள்ளும் போது, எமது இளசுகள்...கெட்ட விடயங்களை விரைவில் உள்ளெடுப்பார்கள்....என்று எப்படி சந்தேகக் கண் கொண்டு பார்ப்பது? நம்மைப் பார்த்து நமது பெற்றோர்களும் இப்படித்தானே சொன்னார்கள்? நாம் என்ன .........ஆகிவிட்டோம். கெட்டுவிட்டோம் என்றால்............அது நானும் நீயும்தான். வென்று விட்டோம் என்றால்.......அதுவும் நானும் நீயும்தான்..........இது தான் உருளும் உலகம்.

இன்றைய இளைஞர்களுக்கு தேவை நம்பிக்கை கலந்த அரவணைப்பும்,அன்பு கலந்த அறிவுரையும்தானே தவிர , அவர்களை நோக்கும் சந்தேகப் பார்வையல்ல. தயவுடன் நம்பிக்கையோடு பார்ப்போமே.........

நேற்றைய இளசுகள்தானே இன்றைய தலைவர்கள். நாளைய எமது தலைவர்களை நாமும் நம்புவோமே.
எமது இளசுகள் மீது நமக்கே நம்பிக்கை இல்லை என்றால், அடுத்தவன் எப்படி நம்புவான்?

"ஒவ்வொருத்தர்கிட்டயும் ஏதாவதொரு திறமை ஒளிஞ்சுக்கிட்டிருக்கும்.
அதை கண்டு பிடிச்சு உழைச்சா உலகமே திரும்பி பார்க்கிற அளவுக்கு பெரியவர்களாகலாம்"

(Boys சில் உள்ள ஒரு வசனம்)
Reply
#79
அஜீவன் இப்ப என்ன வேணுமெண்டுறீங்கள்?
படம் பார்க்காமலே எக்கச்சக்கமாக எழுதி தள்ளியிருக்கிறீர்கள். ஒன்றுமாய் விளங்கேல்லை.
இப்படியான படங்கள் தீங்கு விளைவிக்காது என்று ஒரு முறையும் மறுமுறை புலம்பெயர் இளைஞர்கள் பிரச்சனைபற்றி ஏதோவெல்லாம் தெளிவில்லாத வகையில் எழுதியிருக்கிறீர்கள். இன்னொரு சந்தர்ப்பத்தில் தணிக்கை கூட அவசியமில்லை என்ற தொனியில் எழுதியுள்ளீர்கள்.
மேலோட்டமாக நீங்கள் பலவற்றை எழுதியுள்ளதால் என்னால் உங்கள் கருத்து எதுவென்று புரிந்து கொள்ளமுடியவில்லை.
BOYS படக்கதையை விடுவோம்.

திரைப்படங்கள் ரசிகர்களின் சிந்தனையை திசை திசைதிருப்பிவிடாதா? அல்லது அவர்கள் சிந்தனையை மளுங்கடுத்துவிடதா?
நீங்கள் ஒருமுறை சொன்னதையே உங்களுக்கு ஞாபகபடுத்துகிறேன்.
சத்தியராஜ்ஜின் படத்தை பாரத்துவிட்டு ஒருவன் ஏழு கொலைகள் செய்தான் என்று கூறியிருந்தீர்கள்.
விதிவிலக்குகளை கொண்டுவந்து வாதம் செய்யவேண்டாம் என்று நீங்கள் கூறவரலாம். ஆனால் உளவியலாளர்கள் சொல்கிறார்கள்: பகுத்தறிவதற்கு முதலே பலர் சில விடய்ங்களுக்குள் தம்மையறியாமலே இசைவாக்கம் அடைந்துவிடுகின்றனர்.
இது திரைப்படத்திற்கும் பொருந்தும். அதற்கு மிகப்பெரிய உதாரணம் தமிழ்நாட்டு முதலமைச்சர்கள்.
கல்வியறிவற்றவர்கள் சினிமாவுக்கு அடிமையாகி தங்கள் தலைவர்கள் சினிமா கதாநாகன்-நாயகிகள் எனலாம் ஆனால் கல்வியறிவுள்ளவன் அப்படி செய்யமபட்டன் என்று நீங்கள் கூறலாம.; நானும் அதை ஏற்றுக்கொள்கிறேன். தமிழ்நாட்டு இளைஞர்கள் சிலரோ அல்லது புலம்பெயர்ந்த ஈழத்தமிழரில் சிலரோ தங்கள் தலைவர்கள் சினிமாநாயகர்கள் என்று திரியலாம் அதற்காக எல்லோரும் அப்படி திரிவார்கள் என்று நான் சொல்லவில்லை. ஆனாலும் இப்படி திரியாதவர்களின் மனதை கூட சில திரைப்படங்கள் பாதிக்கவைத்துவிடுகிறது.
இதற்கு ஐரோப்பிய அமெரிக்க இளைஞர்கள் கூட விதிவிலக்கல்ல.
பாரிய குற்றச்செயல்கள் செய்த செய்யும் வயதுக்குவராத இளைஞர்களின் பின்னணி ஹொலிவோட் சினிமாவே முன்னணிகாரணமாக இருக்கிறது என்று கணிப்பீடுகள் சொல்கிறது. (தாத்தா வந்து எந்த கணிப்பீடு எங்கே பார்த்தாய் என்று கேட்கப்போறார். அண்மையில் இங்குள்ள தொலைக்காட்சி ஒன்றில் சிறுவர்கள் குற்றச்செயல்கள் பற்றி விவரணம் ஒண்று போனபோது ஒருவர் அப்படி குறிப்பிட்டார்)

அமெரிக்காவில் சிறுவர்களுக்குள்ளே துப்பாக்கி கொலை கலாச்சாரம் தலைதுக்கியபோது, முன்னை நாள் அமெரிக்க ஜனாதிபதி பில்கிளின்டன் கூறியது எல்லோருக்கும் தெரிந்ததே

அவர்: உங்கள் பிள்ளைகளை கட்டுப்பாட்டுடன் வளர்க்கவும் என்று பெற்றோருக்கு சொல்லவில்லை.

சிறுவர்களின் செயல்களை நன்கு கவனிக்கவும் என்று காவல்அதிகாரிகளுக்கு சொல்லவில்லை.

ஏன் இதை எல்லாம் சொல்லிவில்லை எனில் ஆய்வுகளின் படி இங்கு பிழைஇருக்கவில்லை.

அதனால்த்தான் ஹொலிவூட்டை மன்றாட்டமாக கேட்டார் தயவு செய்து சிறுவர்கள் கெட்டவழிக்கிட்டு செல்வதற்கு ஹொலிவூட் காரணமாக இருக்கவேண்டாம் என்றும். சிறுவர்களின் நற்வாழ்கை பற்றி சிரத்தை எடுக்குமாறு கூறினார்.

இதை அவர் தனது கற்பனையில் சொல்லவில்லை பல ஆய்வகளின் பின்பே


எனவே சினிமாவால் கெட்டுப்போகலாம் என்பதை ஒத்துக்கொள்ளுங்கள்.

இந்தியசினிமாவில் உள்ளபிழைகளில் ஒன்று திரைப்படங்களை வகைப்படுத்தாதே'
வயது வந்தவர்களுக்குமட்டும் வயது வராதவர்களுக்கு என்று இரண்டு பிரிவுடன் சரி
ஆனால் மேலத்தேயர்கள் வயதுவராதவர்கள் படங்களைக்கூட வகைப்படுத்துகின்றனர்
█16 வயதுக்கு மேல்
█12 வயதுக்கு மேல
█6 வயதுக்கு மேல
█எல்லோருக்கும்

இத்துடன் விடவில்லை அது எப்படியானபடம்

http://www.kijkwijzer.nl/engels/epictos.html

░-> பலாத்காரம்
░-> sex
░-> பயங்கரம்
░-> போதை வஸ்து அல்லது வேறுதுர்பழக்கங்கள்
░-> துவேசம்
░-> கெட்ட வார்த்தைகள்
இப்படியாயான கட்சிகள் இருப்பின் அதற்குரிய குறியீட்டுபடங்கள் படநடாவில் குறிப்பிபட்டிருக்கும்.

அது மட்டுல்லாது
நாம் என்ன பொருள் வாங்கினாலும் அது பற்றி விளக்கம் இருக்கும் அதே போல் திரைப்படத்திற்கும் திரைப்படமாளிகையிலோ அல்லது படநாடாபெட்டியிலோ அது பற்றி குறிப்பு இருக்கும்.
இந்தப்படம் தனது தந்தையை கொன்றவனை பழிவாங்கும் மகனின் படம்.
இந்தப்படம் 100 ஆண்டுகளுக்குமுன் அமெரிக்கசிறைச்சாலையில் கைதிக்கு ஏற்பட்ட சம்பவம்.
இந்தப்படம் 2ம் உலகப்போர் சம்பந்தமானது.
இப்படி விளக்கமாக இருக்கும்.
எனவே நாம் என்ன பார்க்கிறோம் என்பதை தெரிந்து கொண்டு பார்க்கலாம்.

இந்த வயது பகுப்பும் திரைப்படபகுப்பும் இல்லாதவரை தணிக்கை செய்தற்கு பொதுநலஅமைப்புகள் தலையிடுவது அவசியமாகிறது.




நான் மேலே குறிப்பிட்டது எதுவும் BOYS கான விமர்சனம் இல்லை ஆனாலும் சங்கர் அவர்களின் திருகுதாளங்கள் பற்றி பத்திரிகையில் பார்த்தேன்.
தமிழருக்காக தமிழக மண்ணில் தயாரிக்கப்பட்ட படத்திற்கு அதே மண்ணிலுள்ள திரைப்படதணிக்கை அமைப்பின் அனுமதி பெறாமல் வேறு மாநிலத்தின் தணிக்கை அமைப்பின் அனுமதி பெற்று தமிழர்களுக்கான தணிக்கை அமைப்பபை முட்டளாக்கி தமிழர்களும் அவர்கள் கலாச்சாரமும் மண்ணாங்கட்டீயும் என்று துட்சமாக எண்ணி பணம் தான் குறி என்று எண்ணி செயற்படும் ஒரு இயக்குனரை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.


கெட்டவார்த்தை ஏதோ பேசியுள்ளதாகவும் அறிந்தேன். அது எப்படியோ எனக்குத்தெரியாது.
ஆனால் எனது குறும்படங்களில் தேவையேற்படும் பட்சத்தில் அப்படியானவசனங்களை சேர்த்துக்கொள்வேன். ஆனால் மனிதகுலம் வெட்கி தலைகுனியாத வசனமாக இருக்கவேண்டும் என்பதில் கவனமெடுப்பேன்.
எனக்குத்தெரியும் எனது குறும்படம் ஒரு குறிகியவட்டத்தினருக்கு மட்டுமே
அதே படம் 6 வயது சிறுவர்களுக்கு சென்றடைய கூடிய சாத்தியம் ஏற்படும் போது இப்படியான கெட்ட வார்த்தைகளையும் தவிர்ப்பேன்.

AJeevan Wrote:இதை விட மோசமான ஆங்கிலப் படங்களெல்லாம் தமிழ் பேசுற போது (டபிங் ஆங்கிலப் படங்கள்) கத்ததாத கூட்டம்
ஏன் BOYS க்காக கத்துது என்றுதான் தெரியவில்லை என்று கேட்கிறார்கள்

இதற்கு நான் விளக்கம் தரதேவையில்லை உங்களுக்கு புரியும் என்று நம்புகிறேன்.
Reply
#80
கண்ணன், நீண்ட நாட்களின் பின் வந்தாலும் நிறைவான கட்டுரை.
<span style='font-size:25pt;line-height:100%'>சுப்பர்.</span>
Reply


Forum Jump:


Users browsing this thread: 3 Guest(s)