kirubans Wrote:<b>
உங்கள் வாதத்தை ஏற்றுக்கொண்டாலும், தனித்தமிழில்தான் எல்லாமே எழுத வேண்டும் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. உதாரணமாக டிஜிடல் கமராவைப் பற்றி எழுத ஆரம்பித்தபோது தமிழ் பதங்களை இயலுமானவரை பாவிக்கலாம் என்று யோசித்தேன். ஆனால் பலவற்றுக்கு என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதற்காகப் பலர் முழுனேரமாக உழைக்கக் கூடும் (http://www.tamilvu.org/). என்றாலும் தமிழ்பதங்களை தேடுவதற்கு அல்லது உருவாக்குவதற்கு நேரத்தை வீணாக்குவதைவிட அந்த நேரத்தில் உருப்படியான விடயங்களைச் செய்யலாம் என்பது என்கருத்து. சிலவேளை தமிழில் படித்திருந்தால் இந்தப் பிரச்சினை வந்திருக்காது!
விஞ்ஞான ஆராய்ச்சிகளில் தமிழன் ஈடுபட்டாலும், அதனை ஆங்கிலத்தில்தான் பிரசுரிக்க வேண்டும்.
யாராவது கீழ்வருவனவற்றுக்கு சரியான தமிழ் பதங்களைத் தந்து உதவ முடியுமா?
Digital
Camera
Mega Pixels
Optical Zoom
Digital zoom
Auto Focus
Auto White Balance
Exposure Control
Shot-to-Shot Delay
camera - புகைப்படக் கருவி என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது (இப்போது புகையும் பாவிப்பதில்லை, படலமும் பாவிப்பதில்லை)
</b>
இவை புதிய ஆங்கிலச் சொற்கள் இவற்றிற்கான தமிழ் சொற்களின் பாவனை எனக்கு அவசியம் தேவைப்படுவது இல்லை. அதனால் நான் இவற்றிற்கான தமிழை சொற்களை அறிந்து கொள்வதில் ஆர்வம் செலுத்தவில்லை. வெகு விரைவில் இவற்றிற்கான தமிழ் ஆக்கங்கள் உங்களுக்கு தரப்படும்.
புகைப்பட கருவி= போட்டோ கமறா.
திரைப்பட கருவி= வீடியோ கமறா.
எனக்கு இந்த சொற்களை ஆங்கிலத்தில் எவ்வாறு அளைப்பார்கள் என்று உங்களால் கூற முடியுமா?
கொக்காரை
பண்ணாடை
காவோலை
பனம் வட்டு
பனம் மட்டை
பிணாட்டு
பனங்காஇ பணியாரம்
இப்படியும் ஒரு சிலர் தமிழ் பேசுகின்றார்களே. நீங்கள் சொல்லும் டிஜிற்றல் இவர்களுக்கு புரியுமா? அன்று கிராமங்களில் மக்களால் உரையாடப்பட்ட மொளழிகளின் உதவியால்த்தான் இன்று பலர் நகரங்களை நோக்கி படையெடுத்த பின் அவர்களையும் அவர்களின் தூய்மையான மொழியினையும் கேலியும் கிண்டலும் செய்திடும் மாந்தர்கள். அவர்களையும் அவர்களாக வாழ விடாது, எதோ ஒருவருக்கும் புரியாத மொழி ஒன்றை உருவாக்கி, அவர்களை நிற்கதி நிலைக்கு தள்ளிய மானிடநேயத்திற்கு புறம்பான மனிதரல்லவா? ஆங்கில மோகம் கொண்டு அலைகின்ற மனிதர்கள். தான் மேலே ஏறிட பயன் பட்ட ஏணியை காலால் உதைவதுதான், மானுட தர்மம் என்றால். கமல காசன் மும்பாய் எக்ஸ் பிரஸ் என்று பெயர்வைப்பதில் குற்றம் காண்பது எமது மடமை என ஒதுங்கி கொள்கின்றேன்.
ஐக்கிய நாடுகள் சபை கூட எல்லா மொழிகளையும் தகுந்த மரியாதை கொடுத்தே கௌரவிக்கின்றது.ஆனால் தமிழை காத்திட வேண்டிய நீங்களோ. கேள்வி கேட்கின்றீர்கள்.
ஆங்கிலம் பொது மொழி அதனை யாரும் பேச வேண்டாம் என சொல்லவில்லை. ஆங்கிலேயரிடமோ, இல்லை பிறரிடமோ பேசும் பொழுது, ஆங்கிலத்தில் பேசிக்கொள்ளுங்கள். ஆனால் தமிழனோடு பேசும் போதாவது, உங்களால் தமிழில் பேசிட முடியாதா?