12-16-2004, 01:01 AM
கோயிகள் வழிபடவா? பணம் சம்பாதிக்கவா?
திருமுருகன் வரையறுக்கப்பட்ட வர்த்தக நிறுவனம்
புலம் பெயர்ந்து தமிழர் வாழும் நாடுகளில் உள்ள இந்துக் கோயில்கள் குறித்து நான் சிந்திப்பது உண்டு. அந்த கோயில்கள் அமைக்கப்பட்டதன் உண்மையான நோக்கம் என்ன?
கோயில்களுக்கு வருகின்ற சனம் மனம் நிறைஞ்சு ஆத்ம சுகம் அடைஞ்சு போக வேணும் எண்ட நோக்கத்திற்காக அவை அமைக்கப் பட்டிருந்தால் உத்தமம். அல்லது ஆகக்குறைந்தது தேசம் விட்டு வந்து திக்கொன்று திசையொன்றாகி போய்விட்ட தமிழர் கூடிச் சந்தித்து ஊர்ப்புதினங்கள் பேச ஒரு இடம் என்ற நோக்கில் அமைக்கப் பட்டிருந்தால் கூட அதுவும் உத்தமமே.
-அதென்ன ஊர்ப்புதினங்கள் என்று கேட்வர்களுக்காக ஒரு சில உதாரணங்களை தரலாம் என்றிருக்கின்றேன்.
உதாரணம் 1 - இஞ்சை உந்த சீலை சிறிலங்காவில எடுத்ததோ, நல்ல வடிவாக்கிடக்கு, உதே மாதிரி ஒரு சீலை நானும் எடுக்க வேணும்.-
உதாரணம் 2 - நேற்று பின்னேரமப்பா உந்த தேவான்ரை மூத்த மகள் வாணப்பில (யேர்மன் வார்த்தை. ரயில்வே ஸ்ரேசன்) நிண்டு ஒரு அரை மணித்தியாலமா ரெலிபோனில ஆரோடையோ சிரிச்சு சிரிச்சு கதைச்சுக் கொண்டு நிண்டவள். தேப்பனிட்டை ஒருக்கா சாடை மாடையாச் சொல்லி வைக்க வேணும்.-
உதாரணம் 3 - என்ன உம்மடை மூத்த மகளுக்கு இன்னும் காட் கிடைக்கேல்லையோ? ஆரும் B காட் உள்ள பொடியனாப் பாத்து கலியாணத்தை கட்டி வையுமன். எனக்கு தெரிஞ்சே ரண்டு மூண்டு பொடியள் இருக்கிறாங்கள்.
ஆனால் வெளிநாடுகளில் கோயில்கள் வர்த்தக நோக்கம் ஒன்றிற்காவகவே அமைக்கப்பட்டிருக்கின்றனவோ என்று தான் நான் நினைக்கிறன். அட கோயில்களும் கோயில்கள் மாதிரி இல்லை. ஏதோ சினிமாவுக்கு செட் போட்ட மாதிரி.
போன வருசம் சுவிஸ் போயிருந்தன். (அப்பாடி நான் சுவிசுக்கும் போயிருக்கிறன் எண்டதை ஒருமாதிரி எல்லாருக்கும் சொல்லிப்போட்டன்.) அப்ப அங்கை ஒரு கோயிலுக்கு என்னை கூட்டிக்கொண்டு போயிருந்தவை. ஏதோ ஒரு குகைக்குள்ளை போற மாதிரி எல்லாம் போய் குடோன் மாதிரி ஒரு பெரிய கட்டடத்தின் ரண்டாவது மாடியில் ஒரு நீள் சதுர அறையில் பிள்ளையார் கூலாக குடியிருந்தார். (ஆகமமாவது விதியாவது). முசுப்பாத்தி என்னவெண்டால் ஐயர் தீபம் காட்டி கற்பூர விளக்கெல்லாம் ஏத்த இருந்தாப் போல Fire Alarm அடிக்க தொடங்கிட்டுது. எனக்கு சரியான சிரிப்பு வந்திட்டுது.
நான் நக்கல் அடிக்க வில்லை. அதுவும் சாமி விடயம் நக்கல் அடிக்க மாட்டன். ஆனால் பாருங்கோ எதுக்கு உப்பிடி கோயில் அமைக்கினம் எண்டு எனக்கு சரியான கேள்வி. ஆரும் சொல்லலாம் நாங்கள் எங்களாலை முடிஞ்சதைத் தானே செய்ய முடியும் எண்டு. ஆனால் நான் பாத்த வரையிலை சுவிஸிலை எத்தினை கோயில் தெரியுமோ? கன்ரோனுக்கு கன்ரோன் கோயில். என்ரை கேள்வி என்னவெண்டால் ஏன் எல்லா கோயிலும் ஒண்டு சேர்ந்து பொதுவான ஒரு இடத்தில ஒரு பெரிய கோயிலைக்கட்டி அங்கை எல்லாச் சாமிமாரையும் வைச்சு பேணக் கூடாது. இங்கைதான் சரியான பதில் வருது.. அது தான் வர்த்தகம். அப்படி ஒருங்கிணைப்பதால் காசு பாக்க முடியாது. ச்சீ என்ன ஒரு வெட்ககேடு
![[Image: kovil.jp]](http://sajee.yarl.net/archives/kovil.jp)
இந்த படத்தில் நான் இணைச்சிருக்கிற கோயில் அவுஸ்ரேலியா சிட்னியில் இருக்கின்ற சிவா விஷ்ணு கோவில் ஆகம விதிப்படி அமைக்கப் பட்டிருக்கின்ற நல்ல விசாலமான கோவில். இந்தியர்களின் அதிகூடிய பங்களிப்போடு அமைக்கப்பட்டிருக்கிறது. வர்த்தக நோக்கம் இருக்கக்கூடும். ஆயினும் மூலைக்கொரு குட்டிக் கோவில் கட்டாமல் மிகப்பெரிதாய் அமைத்திருக்கிறார்கள். வெளிநாடுகளிலும் கோயில்கள் இருக்கக்கூடும் என்று இந்த கோயிலைப் பார்த்த பின்னர் நான் உணரத்தொடங்கினேன்.
இந்தப்படத்தில் நிற்பது நானேயாகினும் ஏதோ என்படத்தையும் இந்த வலைப்பதிவில் எப்படியாவது திணிக்க வேண்டும் என்ற நோக்கில் இதனை நான் இங்கு இணைக்கவில்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அப்படியே புரிந்து கொள்ளாவிட்டாலும் அது பிழையில்லை என்பதையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேணும்.
நன்றி - சயந்தன்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->