Yarl Forum
கோயிகள் வழிபடவா?பணம் சம்பாதிக்கவா? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7)
+--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34)
+--- Thread: கோயிகள் வழிபடவா?பணம் சம்பாதிக்கவா? (/showthread.php?tid=6175)



கோயிகள் வழிபடவா?பணம் சம்பாதிக்கவா? - Mathan - 12-16-2004

கோயிகள் வழிபடவா? பணம் சம்பாதிக்கவா?

திருமுருகன் வரையறுக்கப்பட்ட வர்த்தக நிறுவனம்

புலம் பெயர்ந்து தமிழர் வாழும் நாடுகளில் உள்ள இந்துக் கோயில்கள் குறித்து நான் சிந்திப்பது உண்டு. அந்த கோயில்கள் அமைக்கப்பட்டதன் உண்மையான நோக்கம் என்ன?

கோயில்களுக்கு வருகின்ற சனம் மனம் நிறைஞ்சு ஆத்ம சுகம் அடைஞ்சு போக வேணும் எண்ட நோக்கத்திற்காக அவை அமைக்கப் பட்டிருந்தால் உத்தமம். அல்லது ஆகக்குறைந்தது தேசம் விட்டு வந்து திக்கொன்று திசையொன்றாகி போய்விட்ட தமிழர் கூடிச் சந்தித்து ஊர்ப்புதினங்கள் பேச ஒரு இடம் என்ற நோக்கில் அமைக்கப் பட்டிருந்தால் கூட அதுவும் உத்தமமே.

-அதென்ன ஊர்ப்புதினங்கள் என்று கேட்வர்களுக்காக ஒரு சில உதாரணங்களை தரலாம் என்றிருக்கின்றேன்.

உதாரணம் 1 - இஞ்சை உந்த சீலை சிறிலங்காவில எடுத்ததோ, நல்ல வடிவாக்கிடக்கு, உதே மாதிரி ஒரு சீலை நானும் எடுக்க வேணும்.-

உதாரணம் 2 - நேற்று பின்னேரமப்பா உந்த தேவான்ரை மூத்த மகள் வாணப்பில (யேர்மன் வார்த்தை. ரயில்வே ஸ்ரேசன்) நிண்டு ஒரு அரை மணித்தியாலமா ரெலிபோனில ஆரோடையோ சிரிச்சு சிரிச்சு கதைச்சுக் கொண்டு நிண்டவள். தேப்பனிட்டை ஒருக்கா சாடை மாடையாச் சொல்லி வைக்க வேணும்.-

உதாரணம் 3 - என்ன உம்மடை மூத்த மகளுக்கு இன்னும் காட் கிடைக்கேல்லையோ? ஆரும் B காட் உள்ள பொடியனாப் பாத்து கலியாணத்தை கட்டி வையுமன். எனக்கு தெரிஞ்சே ரண்டு மூண்டு பொடியள் இருக்கிறாங்கள்.

ஆனால் வெளிநாடுகளில் கோயில்கள் வர்த்தக நோக்கம் ஒன்றிற்காவகவே அமைக்கப்பட்டிருக்கின்றனவோ என்று தான் நான் நினைக்கிறன். அட கோயில்களும் கோயில்கள் மாதிரி இல்லை. ஏதோ சினிமாவுக்கு செட் போட்ட மாதிரி.

போன வருசம் சுவிஸ் போயிருந்தன். (அப்பாடி நான் சுவிசுக்கும் போயிருக்கிறன் எண்டதை ஒருமாதிரி எல்லாருக்கும் சொல்லிப்போட்டன்.) அப்ப அங்கை ஒரு கோயிலுக்கு என்னை கூட்டிக்கொண்டு போயிருந்தவை. ஏதோ ஒரு குகைக்குள்ளை போற மாதிரி எல்லாம் போய் குடோன் மாதிரி ஒரு பெரிய கட்டடத்தின் ரண்டாவது மாடியில் ஒரு நீள் சதுர அறையில் பிள்ளையார் கூலாக குடியிருந்தார். (ஆகமமாவது விதியாவது). முசுப்பாத்தி என்னவெண்டால் ஐயர் தீபம் காட்டி கற்பூர விளக்கெல்லாம் ஏத்த இருந்தாப் போல Fire Alarm அடிக்க தொடங்கிட்டுது. எனக்கு சரியான சிரிப்பு வந்திட்டுது.

நான் நக்கல் அடிக்க வில்லை. அதுவும் சாமி விடயம் நக்கல் அடிக்க மாட்டன். ஆனால் பாருங்கோ எதுக்கு உப்பிடி கோயில் அமைக்கினம் எண்டு எனக்கு சரியான கேள்வி. ஆரும் சொல்லலாம் நாங்கள் எங்களாலை முடிஞ்சதைத் தானே செய்ய முடியும் எண்டு. ஆனால் நான் பாத்த வரையிலை சுவிஸிலை எத்தினை கோயில் தெரியுமோ? கன்ரோனுக்கு கன்ரோன் கோயில். என்ரை கேள்வி என்னவெண்டால் ஏன் எல்லா கோயிலும் ஒண்டு சேர்ந்து பொதுவான ஒரு இடத்தில ஒரு பெரிய கோயிலைக்கட்டி அங்கை எல்லாச் சாமிமாரையும் வைச்சு பேணக் கூடாது. இங்கைதான் சரியான பதில் வருது.. அது தான் வர்த்தகம். அப்படி ஒருங்கிணைப்பதால் காசு பாக்க முடியாது. ச்சீ என்ன ஒரு வெட்ககேடு

[Image: kovil.jp]

இந்த படத்தில் நான் இணைச்சிருக்கிற கோயில் அவுஸ்ரேலியா சிட்னியில் இருக்கின்ற சிவா விஷ்ணு கோவில் ஆகம விதிப்படி அமைக்கப் பட்டிருக்கின்ற நல்ல விசாலமான கோவில். இந்தியர்களின் அதிகூடிய பங்களிப்போடு அமைக்கப்பட்டிருக்கிறது. வர்த்தக நோக்கம் இருக்கக்கூடும். ஆயினும் மூலைக்கொரு குட்டிக் கோவில் கட்டாமல் மிகப்பெரிதாய் அமைத்திருக்கிறார்கள். வெளிநாடுகளிலும் கோயில்கள் இருக்கக்கூடும் என்று இந்த கோயிலைப் பார்த்த பின்னர் நான் உணரத்தொடங்கினேன்.

இந்தப்படத்தில் நிற்பது நானேயாகினும் ஏதோ என்படத்தையும் இந்த வலைப்பதிவில் எப்படியாவது திணிக்க வேண்டும் என்ற நோக்கில் இதனை நான் இங்கு இணைக்கவில்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அப்படியே புரிந்து கொள்ளாவிட்டாலும் அது பிழையில்லை என்பதையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேணும்.

நன்றி - சயந்தன்


Re: கோயிகள் வழிபடவா? பணம் சம்பாதிக்கவா? - KULAKADDAN - 12-16-2004

அப்ப அடுத்த சமா ரெடி <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Idea


- hari - 12-16-2004

எங்கப்பா படத்தை காணவில்லை???


- Mathan - 12-16-2004

hari Wrote:எங்கப்பா படத்தை காணவில்லை???

இணைப்பில் ஏற்பட்ட தவறு. மன்னிக்கவும் இதோ படம் ...

<img src='http://sajee.yarl.net/archives/kovil.jpg' border='0' alt='user posted image'>


- hari - 12-16-2004

நன்றி BBC
அழகாக இருக்கு கோயில் மட்டும்! <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


ஆரம்பத்தில் கோவில்கள் - Nitharsan - 12-16-2004

ஆரம்பத்தில் கோவில்கள் பிரார்த்தனைக்காகவும்இ எமது சமயத்தை வளர்க்கவுமே அமைக்கப்பட்டன. அப்போது அதற்க்கு புூசை செய்யக்கூட தாயகத்திலிருந்து புூசாரிமார் அழைக்கப்பட்டனர். அதன் பின்னர் பூசாரிமார் அதிகரிக்க அதிகரிக்க கோவில்கள் அதிகரித்தது. கனடாவைப் பொறுத்தவரை இப்போது இருக்கும் கோவில்கள் போதும் ஆனால் இவற்றில் பல வியாபார நோக்கத்திற்காக இயங்கு கின்றன. அதாவது தனியொருவரின் பெயரில் அதன் வைப்பகக் கணக்குள் இருக்கின்றன. அதன் கருத்து என்ன வெனில் அது சட்டப்படி ஒரு பொது லாபநோக்கற்ற நிறுவனமாகவும் நடைமுறையில் அது தனியொருவரின் வியாபார ஸ்தாபனமாகவும். இயங்குகின்றன. ஆனால் எந்த ஆலயத்தில் அதன் வருவாய்கள் பொது பெயரில் அதாவது ஆலயத்தின் பெயரில் இருக்கிறதோ அது நிச்சயம் பக்தர்களுக்கான ஆலயமாகக் கரத முடியும். கனடாவைப் பொறுத்தவரை சில ஆலயங்களுக்கு சிலர் செல்லத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இப்படி இது ஒரு தனி நபர் வியாபாரமாகிவிட்டது. இவர்கள் இப்படி வியாபாரம் செய்ய இன்னோரு சாரார் இன்னோர் மதத்தவர்களால் பணம் கொடத்து வாங்கப்பட்டுள்ளனர். (யேகோவா வை நம்பும் கிறிஸ்தவர்களால்) இவர்கள் இனைந்ததுமில்லாமல் மற்றவர்களையும் இணைத்துக் கொண்டிருக்கின்றனர்;. இவர்களைத் தடுக்க வேண்டிய சில ஊடகங்கள் இதற்க்கு ஆதரவு போல இந்து சமயத்திற்க்கு எதிராக கரத்துக்களை முன்வைக்கின்றனர். ஒன்று மட்டும் எனக்கு புரிய வில்லை இவர்கள் இந்து சமயத்தை எதிர்க்கின்றனரா? இல்லையேல் இந்து சமயத்தில் இருக்கும் சில தீய என்னங்களை எதிர்க்கின்றனரா? இவர்கள் தீய எண்ணங்களை எதிர்பவர்களாயின் ஏன் இந்து சமயத்திற்க்கு எதிராய் பரப்புரை செய்கிறார்கள்? தீய எண்ணங்களை யார் கடைப்பிடிக்கின்றனரோ அவர்களைப் பற்றி எழதுங்கள்? இதில் என்ன வேடிக்கை என்றால் இவர்கள் எழுதுவது இந்து சமயத்திற்க்கு எதிராய் ஆனால் இவர்களின் ஊடகங்களில் வருவதோ ஆலயங்களின் விளம்பரம் இதை என்னவேன்று செல்ல ?
அதை விடுத்து தொடருவோம்..
இங்கு இன்னோர் விடையம் ஆலயத்தை படம் வீடீயோ எடுக்க முடியாது. ஏனென்றால் இறைவனை படம் எடுக்கக் கூடாதாம். ஆனால் இறைவனின் ஆலயத்தில் நின்று வானொலி ஒலிபரப்புச் செய்யலாமா? ஆங்கில தொலைக்காட்சியில் கோயிலுக்குப் புூசை செய்வதாய் போஸ் கொடுக்கலாமா? இது பூசாரிமாரின் பிராடு.
இங்கு ஆலயங்கள் வியாபார நோக்கிலும் இருக்கிறது அதே நேரம் தமிழ் வளர்க்க சைவம் வளர்க்க என்று சமுதாயம் கொண்ட ஆலங்களும் இருக்கன்றன.

-நேசமுடன் நிதர்சன்-


- வெண்ணிலா - 12-16-2004

hari Wrote:நன்றி BBC
அழகாக இருக்கு கோயில் மட்டும்! <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Nada - 12-16-2004

இந்த படத்தில் நான் இணைச்சிருக்கிற கோயில் அவுஸ்ரேலியா சிட்னியில் இருக்கின்ற சிவா விஷ்ணு கோவில் ஆகம விதிப்படி அமைக்கப் பட்டிருக்கின்ற நல்ல விசாலமான கோவில். இந்தியர்களின் அதிகூடிய பங்களிப்போடு அமைக்கப்பட்டிருக்கிறது. வர்த்தக நோக்கம் இருக்கக்கூடும். ஆயினும் மூலைக்கொரு குட்டிக் கோவில் கட்டாமல் மிகப்பெரிதாய் அமைத்திருக்கிறார்கள். வெளிநாடுகளிலும் கோயில்கள் இருக்கக்கூடும் என்று இந்த கோயிலைப் பார்த்த பின்னர் நான் உணரத்தொடங்கினேன்.
இங்கு எல்லாகோவில்களுமேவியாபாரத்துக்காகத்தான். சிட்னிவிஷ்ணுஆலயமாக இருந்தால்என்ன ஜெனிவா விநாயக÷ ஆலயமாக இருந்தாலும்சாி . இவ்வளவு முதல்போட்டு மக்களை ஆன்மீக மயப்படுத்த இந்த வியாபாாிகளுக்கு என்ன தேவை?. மதம் என்பது மக்களை நல்வழிப் படுத்த ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பகாலத்தில் மக்களை நல்வழிப்படுத்த
மதங்களை பாவித்தா÷கள். சட்டங்கள் உருவாகாத காலத்தில் மக்கள் சாமிபற்றிய அச்சத்தில் தப்புசெய்ய அஞ்சின÷. இப்போது பாருங்கள் எவன் ஒருவன் மதங்களுடன் கூடுதலாக ஒன்றியிருக்கின்றானோ அவன்தான் கூடுதலாக தப்புக்கள் செய்பவனாக இருக்கிறான். யாழ்ப்பாணத்தில் ஒரு ஐய÷ தனிப்பட்ட முறையில் 3 கோடி ரூபா செலவில் ஒரு ஆஞ்சநேய÷ கோவில் கட்டியிருக்கிறாராம்.எதற்காக ஒரு தனிநப÷ இவ்வளவு பணத்தை செலவழிக்கிறா÷?
சுவிஸில் மூடப்பட்ட தொழிற்சாலைகள் பலவற்றின் களஞ்சிய அறைகள் (Store room)கோவில்கள் ஆகின்றன. இவ÷களிடம்
பெருந்தொகையான பணம் சேரும்போது இவ÷களும் ஆகமவிதிப்படிகோவில்கள்கட்டுவா÷கள்.போின்பவியாபாரம் இப்ப நல்லவருமானம்தரும்தொழிலாகிவிட்டது.
கோவில்களுக்கு திருவிழா,கும்பாபிசேகம் என்பவற்றுக்கு நாட்டிலிருந்து குருக்களை அழைப்பதாக கூறி பிரயாணமுகவ÷ வேலைவேறு செய்கினம். தற்சமயம் ஐரோப்பாவில் இரண்டுதொழில்கள் செமை இலாபமானவை
1 கோவில்
2 வானொலி
பாருங்கள் இதிலிருந்து பிாிகிறவ÷கள் என்ன செய்கிறா÷கள். முருகன் கோவிலிருந்து பிாிகிறவ÷ ஒரு பிள்ளையா÷ கோவிலையோ அல்லது அம்மன் கோவிலையோ ஆரம்பிப்பா÷. வானொலியும் முதல் இருந்த வானொலியின் பெயருடன் இன்னோரு எழுத்தை சே÷த்து புதிதாக ஆரம்பிப்பா÷.
வாழ்க போின்பவியாபாரம்.
வாழ்க வானொலி வியாபாரம்.


- ஊமை - 12-16-2004

இது ஜேர்மனி ஹம் நகரில் இருக்கும் ஆலயம்.
இதனை அரம்பத்தில் தமிழ்மக்களே நிவகித்துவந்தனர். காலப்போக்கில் இதன் வருவாய்களை அறிந் ஹம் உள்ளூராட்சிசபை தமிழர்களை அணுகி உங்களுக்கு வசதியாக பெரிய கோவில் கட்ட நல்ல இடம் தருகிறோம் இந்த கோவிலை எமது நிர்வாகத்தின் கீழ் இயங்கவிடுங்கள் என்று பர்ந்துரைக்கப்பட்டது. இதற்கு தமிழர்களும் சம்மதிக்கவே இப்படி பெரிதாக கோவில் கட்டப்பட்டு இப்போது ஹம் உள்ளூராட்ட்சி சபையின் நிர்வாகத்தில் இயங்குகின்றது. ஜேர்மானியரே இந்தியாவில் இருந்து சிற்பிகளையும் உருவங்களையும் வாகனங்களையும் கப்பலில் இறக்குமதி செய்தனர். இப்போது உண்டியல் பணம் முதல் சகல வருவாய்களும் ஹம் உள்ளூராட்சி சபையினர்க்கே போகிறது. ஜேர்மானியரே ஐயர்களுக்கு சம்பளம் கொடுக்கின்றனர். என்ன கொடுமை இது ???

http://img137.exs.cx/img137/1126/dsc001442iy.jpg


இதான் ஊமையின் படம் - Nitharsan - 12-16-2004

இதான் ஊமையின் படம்
<img src='http://img137.exs.cx/img137/1126/dsc001442iy.jpg' border='0' alt='user posted image'>

நேசமுடன் நிதர்சன்


- shiyam - 12-16-2004

சரிசரி யொ்மன்காரனும் பிழைக்கட்டுமன் விடுங்கோ


- MEERA - 12-16-2004

எத்தனை கோவில்கள் வந்தாலும் எங்கட சனம் ஏமாற ஆயத்தமாக இருக்குதுகள்.


- kuruvikal - 12-16-2004

பண்டைத் தமிழன் வீரம் கொண்டு நிலம் பிடிச்சு தென் கிழக்கு ஆசியா வரை பண்பாட்டுக் கருவூலமாய் கோயில் கட்டினான்... இற்றைத் தமிழன் தடவித்தடவி அகதியாகி அகிலம் முழுத்தும் கோயில் கட்டி காசு பார்க்கிறான்..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Thusi - 12-16-2004

வரி இது போன்ற பிரச்சினைகள் இல்லாத அதிகூடிய வருமானம் எடுக்கக்கூடிய ஒரே வழி கோயில்தான். ஏன் புலம்பெய÷ நாடுகளிலை மட்டும் தான் கோயிலை வியாபார நிலையமாக்கிப்போட்டா÷கள் என்று கவலைப்படாதேங்கோ. இங்கை தாயகத்திலையும் உதுதான் நிலமை.

கதைக்கப்படுகின்ற விடயங்களும் உதே கருத்துக்கள் அடங்கியதுதான்.
என்ன -சிறீலங்காவிலையே எடுத்தனீங்கள் என்டதுக்குப் பதிலா எந்தக் கடையிலை எடுத்தனீங்கள் நல்ல வடிவாய்க்கிடக்கு - என்று சம்பாசணை மாறும். காட் கதைக்குப்பதிலா வெளிநாட்டில் கையிருப்பில் இருக்கும் மாப்பிள்ளைகளின் டேற்றாபேஸ் அலசப்படும்.


- MEERA - 12-18-2004

வெளிநாடுகளில் விளையாட்டு கழகங்களும் ஆலயங்களும் வரையறுக்கப்பட்ட நிறுவனங்களாகவே (Limited Companies) பதிவு செய்யப்படுகின்றன.
ஏனென்றால் இவற்றை உதவி வழங்குகின்ற அல்லது பொது தொண்ட÷ நிறுவனங்களாக பதிவு செய்தால் Charity Commission (தமிழில் ஞாபகம் வரவில்லை) இற்கு கணக்கு காட்ட வேண்டும். அதோடு அவ÷கள் நி÷வாகத்திலும் செயற்திட்டங்களிலும் செல்வாக்கு செலுத்தலாம்.

எனவேதான் எம்மவ÷கள் ஒரு வியாபார நிறுவனமாக பதிவு செய்து .................... .


- Mathan - 12-21-2004

வெள்ள அனர்த்தத்த்தினால் பாதிக்கப்பட்டோருக்கு லண்டன் சிறீ கனக துர்க்கை அம்மன் ஆலயம் உதவி



கடந்த 15ம் திகதி கிளிநொச்சி அரச அதிபர்ää அரச சார்பற்ற நிறுவனங்களின் இணயத்தின் தலைவரூடாக விடுத்த வெள்ள நிவாரணக் கோரிக்கைக்கு உடனடி நடவடிக்கையை மேற்கொண்ட இன்னர் கொழும்பு லயன்ஸ் கழகம்ää

லண்டனில் உள்ள சிறீ கனக துர்க்கை அம்மன் ஆலய நம்பிக்கை நிதியத்தின் அனுசரனையுடன் உடனடித் தேவையென அறிவிக்கப்பட்ட குழந்தைகளுக்கானதும்ää கர்ப்பிணிப் பெண்களுக்குமான பால்மாப் பொதிகளை விநியோகம் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது.

இதன் முதற் கட்டமாக நேற்று கிளிநொச்சிää கல்மடு கிராமத்தில் வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவிகளை மேற்கொண்டது.

இதன் போது இன்னர் கொழும்பு லயன்ஸ் கழகத்தின் தலைவர் (முNனுழு) நிலையத்தின் உதவிப் பணிப்பாளர்ää கல்மடு கிராம சேவகர்ää மற்றும் சமூகத் தலைவர் ஆகியோர் பிசன்னமாயிருந்தனர்.

இந்தத்திட்டத்தின் அடுத்த கட்டமாக கிழக்கு மாகாணத்திலே கல்முனைää வவுணதீவு மற்றும் கன்னன்குடா பிரதேசத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவிகளை தமிழ் தகவல் தொழில்நுட்ப ஒருங்கமைப்பின் அனுசரனையுடன் இன்று மேற்கொள்ள இருக்கின்றனர்.

நன்றி - புதினம்

http://www.eelampage.com/index.shtml?id=20...10355598498&in=


- sinnappu - 12-24-2004

Quote:கோயிகள் வழிபடவா? பணம் சம்பாதிக்கவா?

தம்பிமார் எனக்கு உது தெரியாது ஆணால் நான் போகும் Zurich சிவன் கோயில் சைவத்தமிழ் சங்கத்தால் நடத்தப்படுகிறது தவறு நடக்க வாய்ப்பில்லை
<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- Vasampu - 12-26-2004

சுவிஸிலே இது எல்லாம் கைத்தொழிலுங்கோ கோயிலில்லை சாமியில்லை என்பவர்களும் கோயில் வைத்தே சம்பாதிப்பார்கள். ஆனால் நீங்களெல்லாம் இதனை கண்டுக்க கூடாது. கோயிலுக்கு வந்தமா சாமி கும்பிட்டமா தட்சனையை நிறையை போட்டோமா போனோமா மூச் :? :|


- shiyam - 01-02-2005

நண்பர்களே இனியாவது கோவில் கடவுள் என்று மூட நம்பிக்கைகளில் உழலாமல் உறவுகளிற்கு உதவுங்கள் தயவு செய்து இதற்கும் கடவுளின் விழையாட்டு என்றுபதில் சொல்ல வேண்டாம்