Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்துக்கு ஆறுவிருதுகள் .
#21
<b>கன்னத்தில் முத்தமிட்டால்</b>

மேலிருந்து பலரது கருத்துகளை கவனித்து வந்தேன்.

இன்னமும் நாம் வெகு தூரம் முன்னேற வேண்டிய தேவை நமக்கு இருப்பது தெரிகிறது.

பெற்றோரை இழந்து வளர்ப்பு பெற்றோர்கள் பராமரிப்பில் வளரும் குழந்தை மற்றும் அப் பேற்றோருக்கும் வளர்ப்பு குழந்தைக்கும் இடையிலான மனப் போராட்டம்; இவைதான் கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தில்
ஈழவர் பிரச்சனை ஊடாக கதையாக சொல்லப் பட்டிருக்கிறது.

தாய் அக் குழந்தையை விட்டுச் செல்வதற்கான காரணமாக்க ஈழமக்களது யுத்தம் திணிக்கப் பட்டிருக்கிறது.அல்லது நயமாக பழத்தினுள் ஊசி ஏற்றுவது போல் சினிமாவாக்கப் பட்டிருக்கிறது.

ஆனால் கன்னத்தில் முத்தமிட்டால்
வாயிலாக ஈழத்தில் யுத்த பகுதிகளில் மக்கள் படும் அவலங்கள், வேதனைகள் , இன்னும் எத்தனையோ விடயங்கள் ஈழத் தமிழர்கள் தவிர்ந்த எத்தனையோ பேருக்கு போய் சோந்திருக்கிறது.

அதற்காக மணிரத்தினத்துக்கு நன்றி சொல்லியே ஆகவேண்டும்.
வாழ்த்துகள் அத்தனை கலைஞர்களுக்கும்.
வாழ்துவதற்கும் மனசு வேண்டும்.

தவிர இத்திரைப் படத்துக்கு கிடைத்த விருது குறித்து பெருமைப் படலாம்.இதனால் ஈழ மக்கள் பற்றி அறவே தெரியாத மேலும் பலருக்கு அடிப்படை பிரச்சனை தொடர்பான வியங்களின் ஒரு சில துளியாவது சென்றடைய வாய்ப்புகளுண்டு.......

2003, 16 - 23 March
festival international de films de fribourg
திரைப்பட விழாவில் கன்னத்தில் முத்தமிட்டால்
திரையிப்பட்ட போது ஈழத்தமிழரின் அவலங்களைக் கண்டு கலங்கிய வேற்று நாட்டு மக்களைக் கண்டு அதிர்ந்து போனேன்.இவர்கள் பலர் பொருளாதார அகதிகளாக எம்மைக் கருதியிருந்தது அவர்களது உரையாடல் வழீ புரிய முடிந்தது.

இத் திரைப் படத்தில் ஈழவர் பிரச்சனைக்கான கோணத்தில் பார்த்தால் பல வெற்றிடங்கள் - தவறுகள் இருக்கின்றன.

தமிழைவிட சிங்கள மொழியில் இடம் பெறும் ஒரு வார்த்தை மொழி தெரியாத காரணத்தால் தவராக மட்டுமல்ல தூசனமாகவே (கெட்ட வார்த்தையாக) பாவிக்கப் பட்டிருக்கிறது.

அக் காட்சி:-
வளர்ப்பு பெற்றோருடன் குழந்தை தன் தாயை தேடிப் போக பஸ்ஸில் ஏறியிருக்கும் போது பிரகாஸ்ராஜ் சிங்களத்தில் ஒரு வார்த்தை கேலியாக சொல்வார்.

(நாம் சில சிறு பிள்ளைகளைப் பார்த்து உன்னைக் கலியாணம் பண்ண பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்பது போன்ற கேலியான வார்த்தைகளை சொல்வதுண்டு.)
அப்படிச் சொல்வதாக நினைத்து பிரகாஸ்ராஜ்:- (ஒயாட்ட மம மகுள் கரணவா)
நான் உன்னை கட்டிலில் சந்திக்கிறேன், என்பார்.
(இவ்வார்தையின் உண்மையான மொழி பெயர்ப்பை எழுத முடியாமலிருக்கிறேன்.........)இவ் வார்த்தையை சொல்லி விட்டு பஸ்ஸை விட்டு இறங்குகிறார்.

இதற்கு முக்கிய காரணம் மொழியை அல்லது அந்த சமூகத்தை சரியாகத் தெரியாதவர்களை (அரை குறைகளை) தமது படைப்புகளுக்குள் பயன்படுத்துவதுதான். இவற்றுக்கான பொறுப்பை இயக்குனர்தான் ஏற்கவேண்டும்.

இப்படியான இன்னும் பல லொஜிக்காக உதைக்கும் தவறுகள்..............

1.எந்த ஒரு ஈழத் தாயும் தன் பச்சிளம் குழந்தையை விட்டு ஒரு போதும் போர் ஒன்றுக்கு போகவே மாட்டாள்.
(கள்ளிப் பால் கொடுத்து சாகடிக்கும் தாய்மாரை இலங்கையில் பார்க்கவே முடியாது.)ஈழத்தைப் பற்றிய தேடல் இன்னும் அதிகமாகவே மணிரத்தினத்துக்கு வேண்டியிருக்கிறது.

2.எந்த ஒரு போராளியும் இப்படியான ஒரு தாயை ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள். போராளிகள் தனது மக்களுக்காகத்தான் போராடுகிறார்களே தவிர மாபியாக்களாகவல்ல. அப்படி நினைத்தால் சுபாஸ் சந்திரபோஸின் போரட்டமும் அப்படியாகிவிடும்.

இபபடி எத்தனையோ முரண்பாடுகள்.
இருப்பினும் ஒரு சினிமாவாக எவ்வளவோ சாதித்திருக்கிறது கன்னத்தில் முத்தமிட்டால் என்பது மிகையில்லை.

உலகத் தமிழன் ஒருவனுக்கு கிடைத்த வெற்றிக்காக வாழ்த்தலாம்,பாராட்டாலாம்.அது நம்மால் செய்யப் பட வேண்டியது.
எம்மால் (ஈழத்தமிழரால்) கலை வடிவமாக நமது பிரச்சனைகளை முன் வைப்பதில் நமக்குள் ஏகப்பட்ட பிரச்சனைகள் உண்டு.
அது தீர நீண்ட நாள் எடுக்கும்.
Reply
#22
Kannathil Muthamittal

< retour
> les séances Un Bisou sur la joue
A Peck on the Cheek
Ein Kuss auf die Wange

Ratnam Mani; Inde; 2002




Rétrospective : Comédies musicales; 35 mm; 136'; couleur; v.o. tamil; s-t. français, allemand
Amudha a grandi dans l’État indien du Tamil Nadu et se sent bien, choyée dans sa famille, jusqu’à son neuvième anniversaire du moins. En effet, elle apprend soudain qu’elle est une enfant adoptée. Elle aurait préféré ne rien savoir. Pourtant, aujourd’hui Amudha veut savoir qui sont ses parents biologiques et entend bien partir à leur recherche. Ceux-ci, membres des Tigres tamoules, ont disparu dans la tourmente de la guerre civile qui a ravagé le Sri Lanka. Les parents adoptifs ont, dans un premier temps, cherché à dissuader Amudha de poursuivre son projet. Finalement, ils acceptent de l’accompagner dans ce douloureux voyage…

Mani Ratnam est un des rares cinéastes indiens qui ait essayé d’introduire dans le cinéma commercial de divertissement, plein de chants et de danses, des thèmes politiques et sociaux délicats. Après avoir abordé les luttes d’indépendance des États du nord de l’Inde et surtout le conflit entre hindous et musulmans, il se consacre aujourd’hui à son Tamil Nadu natal, dans le Sud de l’Inde. Deux traits caractérisent l’œuvre de Mani Ratnam: porter au maximum l’intensité des sentiments et l’aspiration constante à la perfection de la structure de l’image. Ces deux pôles sont la toile de fond du conflit qui a secoué l’ancienne Ceylan, entre culture tamile hindoue et culture cinghalaise bouddhiste.

scénario :
Mani Ratnam image :
Ravi K. Chandran montage :
A. Sreekar Prasad son/musique :
A. R. Rahman
(lyrics: Vairamuthu)

interprètes :
Delhi Kumar, J.D. Chakravarthy, Nandita Das, P.S. Keertana, Prakashraj, R. Madhavan, Simran

production :
Madras Talkies
tél.: +91 44 46 15 810
fax: +91 44 49 56 188
madrastalkies@vsnl.net contact copie:
trigon-film
Klosterstrasse 42
5430 Wettingen 1 – Suisse
tél.: +41 56 430 12 30
fax: +41 56 430 12 31
info@trigon-film.org


< retour
Reply
#23
<b>கன்னத்தில் முத்தமிட்டால்</b>

பற்றிய மேலதிக தகவல்கள்:-

www.trigon-film.org

and

http://trigon-film.org/de/showfilm.php?filmid=126


AJeevan
www.ajeevan.com
Reply
#24
திரைப்படத்துறை சார்ந்த ஒருவரால் தரப்பட்ட விளக்கங்கள் நன்றாக அதைந்திருக்கின்றது.
<!--QuoteBegin-AJeevan+-->QUOTE(AJeevan)<!--QuoteEBegin-->  
உலகத் தமிழன் ஒருவனுக்கு கிடைத்த வெற்றிக்காக வாழ்த்தலாம்,பாராட்டாலாம்.அது நம்மால் செய்யப் பட வேண்டியது.
எம்மால் (ஈழத்தமிழரால்) கலை வடிவமாக நமது பிரச்சனைகளை முன் வைப்பதில் நமக்குள் ஏகப்பட்ட பிரச்சனைகள் உண்டு.
அது தீர நீண்ட நாள் எடுக்கும்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
நீண்ட நாள் எடுத்தாலும் தீருமா என்றொரு கேள்வியும் இருக்கிறது.ஆகவே முடிந்தளவு முயற்சி செய்து தங்களது ஆக்கங்களை தொடர்ந்து படைப்பாளிகள் தரவேண்டும்
Reply
#25
ஜீவன் அவர்களே அத்திரைபடத்தில் சித்தரிக்கப்பட்ட பல கதை,காட்சி அமைப்புக்கும் ஈழத்தமிழர் போரியல் போராட்ட, சமூக வாழ்வியலுக்கும் இடையே பல கருத்தியல் வேறுபாடுகள் உள்ள போதும் சிலவற்றை இரத்தினச் சுருக்கமாக சுட்டிக்காட்டி உங்கள் தரமான விளக்கத்தை வைத்துள்ளீர்கள்.... பாராட்டுக்கள் நன்றிகள்...!

எனினும் கதை அம்சங்களைவிடவும் காட்சியமைப்புக்கள் பெரிதும் வேற்று மொழிப்பார்வையாளர்களைப் பெரிதும் பாதிக்கின்றன என்பது அனுபவத்தால் கண்ட உண்மை...சில மாதங்களுக்கு முன் எம்மை சந்தித்த கன்னட நண்பர் ஒருவர் இலங்கையைப் பற்றிக்க கதைக்கும் போது 'தமிழர்களைவிட சிங்களவர்கள் நல்லம் போல' என்று சொன்னார்...ஏன் என்று கேட்க அவர் சொன்ன பதில்..... கன்னத்தில் முத்தமிட்டாள் படத்தில் எவ்வளவோ இடர்களுக்கு மத்தியில் தமிழருக்காக தனது உயிரையே பணயம் வைத்து ஒரு சிங்களவர் செயற்பட அவரையே தமிழர்கள் சித்திரவதை செய்கிறார்களே என்றார்....பின் அவருக்கு உண்மையை விளக்கி, காட்சிகளின் பொய்த்தன்மையைக் காட்டிய பிந்தான் ..அப்படத்தின் மூலம் சொல்லப்பட மறந்த யதார்த்தக் காட்சிகளை அவருக்கு காட்ட முடிந்தது...அவர் நம்பினாரோ இல்லையோ அது வேறு விடயம்....!..இத்தனைக்கும் அவர் ஒரு மருத்துவப் பட்டதாரி...!

இவற்றை வியாபார நோக்கத்துக்கப்பால் உண்மையான இனப்பற்றுடன் தயாரிக்கும் படைப்பாளிகளுக்கு எடுத்துச் சொல்வதே ஏதாவது மாற்றங்களுக்கு வழிவகுக்கும் அதைவிடுத்து உண்மை புரிந்தும் தவறாக காட்ட முனைபவர்களுக்கு எதைச் சொல்லியும் பலம் ஏது கிடைக்கப்போவதில்லை...அவர்களின் பொக்கற் நிரம்பினால் போதும் ...இங்கும் அதுதான் முக்கிய இடம் பிடித்துள்ளதோ...?!

:twisted: Idea :roll: :twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#26
உங்கள் கருத்துக்கு நன்றி பரணி.

ஒரு சிலர் அடிபடுகிறார்கள் உண்மைதான்.
இலங்கையிலும் சரி, புலம் பெயர் நாடுகளிலும் சரி திரைப்படம் - வீடியோ - தொலைக்காட்சி என உள்ள பணம் படைத்தவர்கள் மற்றும் அவற்றைக் கையில் வைத்திருப்பவர்கள் யோசிக்கிறார்களா?
இவர்களும் பொக்கட்டைத்தான் நிரப்புகிறார்கள்.

நான் இவர்களோடு பல முயற்சிகளுக்கு சென்று வேதனையோடு திரும்பியிருக்கிறேன்.உண்மைகளைச் சொன்னால் பிழைக்கத் தெரியாதவன் என திட்டுகிறார்கள்.எனவே எனது வழியை வேறு திசைக்கு மாற்றி விட்டேன்.

இலங்கைத் தமிழர்கள் இன்று படும் வேதனைக்கு ஆரம்ப அரசியல்வாதிகள் காரணம் போல எமது கலை வளராததற்கு இந்த அதிபதிகள்தான் காரணம்.அவர்களை வளர்ப்பது யார்? நாங்கள்தான்............

எமது வீழ்ச்சியும்,எழுச்சியும் நம் கையில்தான் இருக்கிறது.

எத்தனையோ சனத் தொகை குறைந்த நாடுகள் தமக்கென்று ஒரு சினிமாவை - கலை -இலக்கியத்தை படைக்கும் ஆற்றல் பெற்றிருக்கின்றன. ஆனால் நாம்?

பிரச்சனை எங்கே என்று தேடுங்கள்?
Reply
#27
அஜீவன்,

இது குருவி(கள்)<img src='http://server1081.dnslive.net/~yarlcom/forum/images/avatars/3148279743ee24041186bb.gif' border='0' alt='user posted image'>

இது பரணி<img src='http://server1081.dnslive.net/~yarlcom/forum/images/avatars/1082605873f0c1a981fc07.jpg' border='0' alt='user posted image'>
Reply
#28
என் இனத்தின் கதையை சினிமாவாக்காததன் காரணம் பாலுமகேந்திரா
http://www.sooriyan.com/etc/11.asp

:roll:
Reply
#29
பாலு மகேந்திரா அவர்களின் பேட்டியிலிருந்து ..........கேள்வி:- கண்டியில் கதிர்காமம் இருக்கு என்று சொல்கிறார்கள். இப்படி ஒரு தப்பான பதிவுகளை அவர்கள் பண்ணக் காரணம் என்ன? யார் எம்மைக் கேட்டுவிடப் போகின்றார்கள் என்பதுதான். படம் தான் எடுக்க முடியாத சூழ்நிலை. நீங்கள் தன்னும் கூட்டிக்காட்டலமே. மணிரத்தினம் எல்லாம் தன் இஷ்டத்திற்கு படம் பண்ணுகிறார்?

எனக்கு அருவருப்பாக இருக்கு. இவர்களைத் தட்டிக் கேட்பதோ, பதில் சொல்வதோ எனக்கு அருவருப்பாக இருக்கு. ஏனெனில் இவர்கள் மெத்தப் படித்த மனிதர்கள். பொறுப்புள்ளவர்கள் எனத் தங்களை பிரகடனப்படுத்திக் கொண்ட மனிதர்கள். இவர்களைத் தட்டிக் கேட்க அருவருப்பாக இருக்கு. என்னிடம் ஒரு கேள்வி வெளிநாட்டிலுள்ள இலங்கைத் தமிழர்கள் இந்தத் தெனாலியையும் சரி மணிரத்தினத்தின் கன்னத்தில் முத்தமிட்டாலையும் சரி எதற்காக வெற்றிப் படமாக்கினார்கள்.?

இதை ஒரு குற்ற உணர்வு என்றுதான் சொல்ல வேண்டும். எனக்குள்ளும். அந்தக் குற்ற உணர்வு இருக்கு. மணிரத்தினத்தை நான் எதிர்க்காததற்குக்
காரணம் மணிரத்தினம் ஒரு முதிர்ச்சி அடைந்த கலைஞன். மெத்தப்படித்தவர். என்னுடைய நல்ல நண்பன். அவரை விமர்சிக்கவோ, தட்டிக் கேட்கவோ
எனக்குப்பிடிக்கவில்லை. ஏனெனில் எனக்குச் சலிப்பாக இருக்கு. தெரியாமல் ஒருத்தர் பண்ணினால் கூப்பிட்டுக் கேட்கலாம். ஆனால், தெரிந்து கொண்டே
வியாபார நோக்கில் உபயோகப்படுத்துகிற வேளையில் அவருடன் பேச வேண்டிய அவசியமே இல்லை. அது தேவை இல்லாதது, அவர்களைக் கேள்வி கேட்கவே அருவருப்பாக உள்ளது.

புகலிடத்தில் வாழும் எமக்கோ எந்த அருவருப்பும் இல்லை...இதுவரை இந்தப் பேட்டியைப் படிக்காதவர்கள் இனியாவது படியுங்கள்..கொஞ்சமாவது எங்களை நாம் திரும்பிப்பார்க்க உதவும்

-
Reply
#30
Manithaasan Wrote:பாலு மகேந்திரா அவர்களின் பேட்டியிலிருந்து ..........கேள்வி:- கண்டியில் கதிர்காமம் இருக்கு என்று சொல்கிறார்கள். இப்படி ஒரு தப்பான பதிவுகளை அவர்கள் பண்ணக் காரணம் என்ன? யார் எம்மைக் கேட்டுவிடப் போகின்றார்கள் என்பதுதான். படம் தான் எடுக்க முடியாத சூழ்நிலை. நீங்கள் தன்னும் கூட்டிக்காட்டலமே. மணிரத்தினம் எல்லாம் தன் இஷ்டத்திற்கு படம் பண்ணுகிறார்?

புகலிடத்தில் வாழும் எமக்கோ எந்த அருவருப்பும் இல்லை...இதுவரை இந்தப் பேட்டியைப் படிக்காதவர்கள் இனியாவது படியுங்கள்..கொஞ்சமாவது எங்களை நாம் திரும்பிப்பார்க்க உதவும்
இவரு.. மிகவும்.. நேர்மையானவர்.. ஆதலால்.. தலையில் துர்க்கிவைத்து.. ஆடச்சொல்கிறீர்களா..? சோபாவுடன்.. கைகழுவி.. விடுபட்ட.. கேஸ்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#31
அவரது தனிப்பட்டவாழ்க்கையை ஆராய்வது தேவையற்றதென்றெண்ணுகிறேன்.
தலையில் தூக்கிவைத்தும் ஆடவேண்டியதில்லை.
இந்தப் பேட்டியில் உள்ளதைச்சொல்கிறாரா சொன்னது நியாயமானதா இல்லையா?என்பதைப்பாருங்கள் மதி.

-
Reply
#32
ஐயா.. மணிதாசன்.. உங்கள்.. அரசியல்.. தேவைகளுக்கு.. தேவைப்படலாம்.. ஆனால்.. சோபாவுடன்.. இவரது.. கதை.. கந்தல்.. அவ்வளவுதான்.. இவரது.. கருத்து.. ஏற்கப்படமாட்டாது..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#33
மதிவதனன் என்னும் ஒரு சாதாரண மானிடனின் கருத்துக்கள் தேவையெனில் ஏற்கப்படாமல் இருக்கலாம்.
[b] ?
Reply
#34
Karavai Paranee Wrote:மதிவதனன் என்னும் ஒரு சாதாரண மானிடனின் கருத்துக்கள் தேவையெனில் ஏற்கப்படாமல் இருக்கலாம்.
நன்றி. பரணி.. மதிவதனன் என்னும் ஒரு சாதாரண மானிடனின்.. கருத்துக்களுக்கு.. இருக்கும்.. மதிப்புத்தான்.. தணிக்கைசெய்வதிலிருந்தும்.. முழுவதுமாக.. அகற்றுவதிலுமிருந்து.. புரிகின்றதே.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#35
பக்தி மேடையில பைத்தியம் புகுந்து உளறினா தணிக்கை செய்யாம தாளமா போடுவாங்கள்.....! என்ன தாத்தா அடிப்படையே இல்லாம எழுதி........பைத்தியம் என்று....அடிக்கடி...நிரூபிக்கிறியள்....போல....!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#36
kuruvikal Wrote:பக்தி மேடையில பைத்தியம் புகுந்து உளறினா தணிக்கை செய்யாம தாளமா போடுவாங்கள்.....! என்ன தாத்தா அடிப்படையே இல்லாம எழுதி........பைத்தியம் என்று....அடிக்கடி...நிரூபிக்கிறியள்....போல....!
உண்மையை.. மறைக்க.. பைத்தியப்பட்டம்.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#37
<img src='http://www.yarl.com/forum/images/avatars/gallery/general/cartoon_futurama_farnsworth.gif' border='0' alt='user posted image'>ஏதோ என்னால் முடிந்த சிறிய அன்பளிப்பு
Reply
#38
கன்னத்தில் முத்தமிட்டால்

-ஒரு பார்வை-

அண்மைக்காலமாக ஈழத்தமிழர் பிரச்சினை (ஈழவிடுதலைப் போராட்டம்) தமிழகத் திரைப்படங்களில் கணிசமானளவு செல்வாக்கைப் பெற்று வருகின்றது. ஈழத்தமிழர்களின் பிரச்சினையை மையமாகக் கொண்டு காற்றுக்கென்ன வேலி, நந்தா, கன்னத்தில் முத்தமிட்டால் என மூன்று திரைப்படங்கள் கிட்டதட்ட சமகாலத்தில் வெளிவந்திருக்கின்றன. இவற்றில் காற்றுகென்ன வேலி திரைப்படத்தை தந்த புகழேந்தி ஒரு தமிழின உணர்வாளர். தமிழர்களின் போராட்ட வரலாற்றின் உண்மை நியாங்களையும் மக்களின் அவல வாழ்வின் வலியையும் நன்குணர்ந்தவர். எமது சுதந்திரந்திற்கான போருக்கு ஆதரவான கருத்துக்களை தனது காற்றுக்கென்ன வேலியில் சொல்லியிருந்தார். இதற்காக இவர் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தணிக்கைக்குழுவினரோடு போராட வேண்டியிருந்தும் நாமறிந்தே. அடுத்து "நந்தா"வை இயக்கிய பாலா ஈழப்பிரச்சினையை ஆழமாக தொடாவிட்டாலும் ஈழத்தமிழர் பால் அக்கறை கொண்டவராக, தான் சொல்ல வந்த கருத்தை நேர்மையுடன் சொல்லியிருந்தார். அகதிகளாக தமிழகம் செல்லும் மக்கள் அகதிமுகாம்களில் ஆதரவின்றி அவதிப்படுவதையும் படகுமுலம் கொண்டுவரப்பட்டு நடுக்கடலில் தவிக்கவிடப்படுவதையும் நெஞ்சில் நிற்கும் வகையில் காட்சிப்படுத்தியிருந்தார். அத்தோடு தாய்த்தமிழகத்திற்கும் தமிழீத்திற்குமிடையேயுள்ள தொப்புள்கொடி உறவை கவிஞர் தாமரையின் பாடல் மூலம் உணர்தியிருந்தார். காற்றுக்கென்ன வேலி, நந்தா ஆகிய இரண்டு படங்களும் தமிழர் மேல் அக்கறை கொண்ட இனப்பற்றாளர்களால் இயக்கப்பட்டதால் தமிழீழ விடுதலை பற்றிய உண்மை நிலைகளையே எடுத்துரைத்து நின்றன.

ஆனால் மணிரத்தினத்தின் இயக்கத்தில் அண்மையில் வெளிவந்த "கன்னத்தில் முத்தம்மிட்டால்" அப்படியல்ல. புலம்பெயர் தமிழ் மக்கள் அனைவரினதும் கவனத்தை ஈர்த்த இத்திரைப்படம் பலராலும் பல கோணங்களில் விமர்சிக்கப்படுகின்றது. மேலோட்டமான பார்வையோடு இது முற்று முழுதாக எமக்கு ஆதரவான கருத்துடைய படமென்று கருதுபவர்களும் இருக்கின்றார்கள். ஆதலால் இந்தத்திரைப்படம் தொடர்பான ஆழமான பார்வை எல்லாத்தரப்பு மக்கள் மத்தியிலும் எழவேண்டியது அவசியமானதொன்றாகும். மணிரத்தினம் திரைப்படங்களை மிகப்பிரமாண்டமான முறையில் உயர் தொழில்நுட்பத்தை கையாண்டு நேர்த்தியாக திறம்பட இயக்கக்கூடியவரென்பதில் யாருக்கும் கருத்துவேறுபாடிருக்க வாய்ப்பில்லை. ஆனால் இவர் அரசியல் கலந்த கதைகளை இயக்கும் போது நேர்மையாக கருத்து சொல்பவரல்லர் உண்மைச்சம்பவங்களை கருவாகக்கொண்டு இறுதியாக அடுத்தடுத்து ரோஜா, பம்பாய், உயிரே ஆகிய படங்களை இயக்கியர். இந்தத்திரைப்படங்களில் விடுதலைப்போராளிகளை தீவிரவாதிகளென்றும் விடுதலைக்கான உரிமைக்கான போராட்டங்களை பயங்கரவாதப் போராட்டமென்றும் சொல்லி கொச்சைப்படுத்தியவர். அந்த வரிசையில் இவரது இயக்கத்தில் வெளியான "கன்னத்தில் முத்தமிட்டால்" திரைப்படமும், தமிழ்மக்களின் விடுதலைப்போராட்டம் தொடர்பான ஆழமான புரிதலும் தெளிவும் அவரிடம் இல்லை என்பதையே எடுத்துக்காட்டுகின்றது.

தமிழ்மக்களின் அரசியல் நிலைப்பாடுகள் போராட்டத்தின் அடிப்படை காரணிகள் பற்றிய தெளிவான கருத்து அவரிடம் இல்லாததால் படத்தின் சில முக்கிய காட்சிகள் எமது மக்களின் விடியல் நோக்கிய விடுதலைப்போரை கொச்சைப்படுத்துவதாகவே அமைந்துள்ளன. ஆகவே அத்திரைப்படத்தின் கதையைப்பற்றி பேசுவதைத்தவிர்த்து, சில முக்கிய காட்சிகளின் மேல் எமது பார்வையை செலுத்துவோம்.

சிறுபிள்ளைகளுக்கு போர்ப்பயிற்சி அளிப்பது, அவர்களை சண்டையில் ஈடுபடுத்துதல் போன்ற காட்சி அமைக்கப்பட்டிருக்கின்றது. இளகிய மனமும் கருணைகுணமும் கொண்டவர்கள் போராளிகள். தன்னலமின்றி பிறருக்காக தமது விலை மதிக்க முடியாத உயிர்களை தியாகம் செய்பவர்கள். அவர்களுடைய மனிதநேயப்பண்பு அதிஉயர்வுடையது. இப்படியான அவர்களுடைய நற்பண்புகளை காட்டாததுகூட கவலையில்லை. ஆனால் படத்தின் நாயகனையும் அவருடைய சிங்கள நண்பரையும் கண்ட பொழுது, போராளிகள் கொடுரமாக நடந்து கொள்வதாக காண்பிக்கப்படுகின்றது. இக்காட்சி எமது போராட்டம் பற்றிய தெளிவான அறிதல் இல்லாதவர்களுக்கு தவறான கருத்தையே கொண்டுசெல்லும். இதுதவிர மாங்குளம் என்று காட்டப்படுமிடத்தில் சிங்களவர்கள் குடியிருப்பதாகவும், புத்தர் சிலைகள் இருப்பதாகவும் காட்டுவதன் மூலம் இலங்கை முழுவதும் பௌத்த நாடென்ற கருத்தை உருவாக்க முயற்சித்துள்ளார். தமிழரின் பாரம்பரிய தாயக பூமியில் புத்தர் சிலைகளையும் சிங்கள மக்களையும் காட்டுவது ஒருவகையில் வரலாற்றை திரிபுபடுத்துவதோடு, இனவாதத்திற்கு ஆதரவான போக்காகவும் தெரிகின்றது.

உச்சக்கட்ட அடக்குமுறை தந்த அவலங்கள் எல்லைமீறிப்போனபோது, எல்லாவகையான அமைதிவழிப் போராட்ட முறைகளை கையாண்டு சிங்கள பேரினவாத அரசுகளிடம் ஏமாந்து தோற்றுப்போன பின்னர்தான் விடுதலையை அடைவதற்கு தமிழினம் ஆயுதத்தை கையிலெடுத்தது. இந்த உண்மையைக்கூட கொச்சைப்படுத்தும் நோக்குடன் ஆயுதவியாபாரிகளின் சுயலாபத்திற்காகவே இப்படியான போர்கள் தொடரப்படுகின்றதென்று வசனம் அமைத்திருக்கின்றார். அதேயிடத்தில் "கொரில்லாயுத்தம் வெல்வதுமில்லை, தோற்பதுமில்லை சொல்லப்போனால் கான்சர் மாதிரி" என்று வசனம் பேசும் காட்சியை புகுத்தியிருக்கின்றார். தமிழீழ விடுதலைப் புலிகள் மரபுவழிப் போர்முறையில் வளர்ச்சி பெற்ற பலம்மிக்க சக்தியென்பதை மணிரத்தினம் தெரியாமலிருக்க வாய்பில்லை. ஆனாலும் திட்டமிட்டு வேண்டுமென்று இதனைச் செய்திருக்கின்றாரோ என்றெண்ணத் தோன்றுகின்றது.

தமிழீழ விடுதலைப்போராட்டம் தொடர்பான உண்மையான நியாயங்களை, ஒடுக்கப்பட்ட மக்களின் சுதந்திர வேட்கையை மணிரத்தினத்தின் "கன்னத்தில் முத்தமிட்டால்" துணிச்சலாக நேர்மையுடன் சொல்லவில்லை. ஆனாலும் ஒரு திரைப்படம் பற்றிய பார்வையென்று நோக்கும் போது அத்திரைப்படத்தில் எமக்கு ஆதரவாகவுள்ள சில கருத்துக்களையும் சொல்லவேண்டியது அவசியமாகின்றது. அந்த வகையில் தமிழகத்திற்கு ஆதரவுக்கரம் வேண்டிவரும் ஈழத்தமிழர்களுக்கு அகதிமுகாம் என்ற பெயரில் திறந்த வெளிச்சிறைச்சாலைகளே வழங்கப்பட்டிருக்கின்றது என்பது சொல்லப்பட்டிருக்கின்றது. அதைவிட சொந்த மண்ணிலிருந்து இடம் பெயரும் கொடுமை பார்ப்பவர் மனதை தொடும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. கவிஞர் வைரமுத்துவின் வரிகளில் உருவான "விடைகொடு எங்கள் நாடே" என்ற பாடல் மூலம் சோகத்தை வெளிக்கொணர்ந்த விதம் உணர்வுகளை உரசிச்செல்கின்றது.

சில உண்மையான நிலமைகள் யாதார்த்த தன்மையுடன் சொல்லப்பட்டபோதும் "கன்னத்தில் முத்தமிட்டால்" திரைப்படம் சொல்லி நிற்கும் கருத்து தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கும் அரசியல் இலட்சியங்களுக்கும் துணை நிற்கவில்லை. மாறாக கொச்சப்படுத்தப்பட்டிருக்கின்யதென்பதே உண்மை. இனவிடுதலை, தேசியவிடுதலை, மண்விடுதலை. பெண்விடுதலை என்ற எல்லைகளையும் கடந்து சமூக விடுதலைக்கும் வித்திட்ட வரலாற்றைக் கொண்டது தமிழர்களின் போராட்டவரலாறு. அந்த வரலாற்றினுடைய நியாயத்தன்மை பற்றிய ஆழமான வெளிப்பாடு கன்னத்தில் முத்தமிட்டாலில் இல்லை, என்பதை நுணுக்கமான தொழில் நுட்பம், படைப்புத்திறன் போன்றவற்றுக்கப்பால் நின்று அரசியல் கண்ணோட்டத்தில் நோக்குபவர்கள் தெளிவாகப் புரிந்து கொள்வார்கள்.

ரூபன் சிவராஜா
(நோர்வே)
Reply
#39
[quote=Mullai]
ஏதோ என்னால் முடிந்த சிறிய அன்பளிப்பு[/color]நன்றி.. முல்லை.. சரியாகத்தான்.. கணித்துள்ளீர்கள்.. எழுதுபருக்கும்.. அழிப்பவருக்கும்.. உருவ..ஒற்றுமை.. பொருந்துகின்றது..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#40
GMathivathanan Wrote:
Mullai Wrote:ஏதோ என்னால் முடிந்த சிறிய அன்பளிப்பு<img src='http://www.indianchild.com/images/pencilandrubber.gif' border='0' alt='user posted image'>
நன்றி.. முல்லை.. சரியாகத்தான்.. கணித்துள்ளீர்கள்.. எழுதுபருக்கும்.. அழிப்பவருக்கும்.. உருவ..ஒற்றுமை.. பொருந்துகின்றது..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
ஒரு.. படத்துக்கும்.. இனி.. விருது.. குடுக்கப்படாதுபோலை..

மணிரத்தினம்.. வன்முறையைத்.. துர்ண்டிப்.. படமெடுத்தால்.. மாத்திரம்.. நல்ல.. தயாரிப்பாகுமாக்கும்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)