சீதன ஒழிப்புத் தேவைதானா?
பெண்கள் விடுதலை என்பது பற்றி இன்று பேசும் அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள், மேடைகளில் அதிகம் பேசுவதும், ஊடகங்களில் எழுதுவதும், தேசவழமைச் சட்டத்தில் பேசப்பட்டுள்ள “சீதனம்” என்ற விடயம் பற்றியும், திருமணமான பெண்கள் தமது “சீதன” உடமைகளையும், வேறு உடமைகளையும்;; கையாளும் பொழுது, கணவனின் எழுத்திலான சம்மதம் வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருப்;பதுமாகும்.
தேசவழமைச் சட்டத்தின்கீழ், “சீதனம்;” என்பது, ஒரு பெண்ணுக்குத்; திருமணத்திற்கு முன்னரும், திருமணத்தின்; போதும்;, பெண்ணின் குடும்பத்தாரால் கொடுக்கப்படுவதாகும்.
இதனை, மனைவியின் சம்;மதமின்றி எந்தவித அனுபவிப்பு உரிமைகூட கணவனுக்கில்லை. மனைவியின் எழுத்திலான சம்மதமின்றி கணவன் சீதனத்தைக் கையாள முடியாது. நிலம், வீடு, காணியாயினும்சரி, பணமாயினும் சரி, நகைகள,; வேறு பொருட்களாயினும் சரி, அதுதான் நிலைமை. ஆனால், பெண்ணுக்குக் கொடுக்கப்பட்ட “சீதனம்;” எவையெவை என்பது உறுதியில் எழுதப்பட்டு, சட்டாPதியாகப் பதியப்படாவிடில், அவற்றைக் கணவன் தனது விருப்பு--வெறுப்புக்கேற்ற வகையில் கையாளும் நிலைமையும் உருவாகலாம்.
சீதனம் என்பதை சட்டரீதியாக உறுதியினை எழுதிப் பதிவதில் ஏற்படும்; சிறு பணச் செலவினையும் தாம் சேமிப்பதாகக் கருதி, சட்டாPதியிலான சீதனப்பதிவைச் செய்யாது விடுவதன்மூலம், பெரும் நட்டத்தையும், பிரச்சனைகளையும்தான் பெண்கள் அனுபவிக்கின்றனர், அடிமைகளாகவும் ஆக்கப்படுகின்றனர்.
சீதனத்தைக் பெண்; கையாளும்பொழுது கணவனின் எழுத்திலான சம்மதம் தெரிவிக்கப்படவேண்டும் என்ற கட்டாயமானது, பெண்ணைச் சங்கடங்களிலிருந்தும், பெண்ணின் சீPதனத்தைக் கணவனு}டாகவும் பாதுகாக்க வழிவகுத்துள்ளது.. தேசவழமைச் சட்டத்தின் கீழான கணவன்மாருக்கு, இந்தப் பொறுப்பினையும் தேசவழமைச் சட்டம் கொடுத்துள்ளது, அல்லது திணித்துள்ளது. அவர், அப்பொறுப்பிலிருந்து விலகிக் கொள்ளமுடியாது என்ற நிபந்தனையையும் அது வலியுறுத்தியுள்ளது.
திருமணமான பெண், தனித்தோ, அல்லது குடும்பமாகவோ வாழும்பொழுது, பிறரின் மிரட்டல்கள், தனது தாய்;-தந்தை--சகோதர-சகோதரி, மற்றும் குடும்பத்தாரின் வேண்டுதல், நெருக்குவாரங்கள் காரணமாக உடைமைகளை மாற்றம் செய்யும், இழக்கும் நிலையிலிருந்து, கணவனின் எழுத்திலான சம்மதம் தெரிவிக்கவேண்டிய கட்டாயம் பாதுகாத்துக் கொள்கிறது.
பிரிந்து வாழும் கணவன், அல்;லது குடும்பத்தில் முரண்;பாடுகளுடன் வாழும் கணவன், மனைவி தனது சீதனமூடாகத் தனது குடும்பத்தைப் பாதுகாக்க முற்படுவதற்குத் தடையாகத் தனது எழுத்திலான சம்மதத்தைத் தெரிவிக்க மறுத்தால், மிகமிகச் சிறிய நிர்வாகச் செலவில் (சில ரூபாய்கள்), அந்தப் பெண் கணவனின்; எழுத்திலான சம்மதமின்றிக் குறிப்பிட்ட காரியங்களைத் தானாகச் செய்யும்;; அதிகாரத்தினை நீPதி மன்றத்திலிருந்து பெற்றுக்கொள்ளமுடியும்!
ஆனால், இப்படியான நிலை மிகமிகக் குறைவாகவே காணப்பட்டுள்ளது என்பதை, வழக்குத் தீர்புகளுடாக உறுதிப்படுத்த முடிகிறது.
30 வருடங்களுக்கு மேலாக யாழ்ப்பாணத்தில் சட்டத்தரணியாக இருந்துவரும் ஓர் பெண் சட்டத்தரணி, தான் இதுவரையில் இரண்டேயிரண்டு தடவைகளே இப்படியான அதிகாரத்தைத் தாய்மாருக்குப் பெற்றுக் கொடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது எனக் கூறியுள்ளார்.
யாழ்ப்பாணச் சமூக அமைப்பானது, பிரிந்துவாழும் கணவன்மாரையும் இப்படியான மறுப்புக்களைச் செய்யமுடியாது செய்துவருவதையே இது காட்டுகிறது.
போர் சூழ்நிலைகளிலும், சமூகச் சீரழிவு நிலைகளிலும், யாழ்ப்பாண இராச்சியப் பகுதியில் வாழும் பெண்கள், தமது உடமைகளைக் கணவனு}டாகவும் பாதுகாத்துக் கொள்ளும் நிலையைத் தேசவழமைச் சட்டம் உருவாக்கியுள்ளது.
மேலும், “சீதனம்;” என்பது, எமது பெண்களை ஆண்களை விட பொருளாதாராPதியிலும், செல்வந்த நிலையிலும், பாதுகாப்;பான நிலையிலும் வைத்துள்ளது!
இதனை, யாழ்ப்பாண இராச்சியப் பகுதியின் அசையாச் சொத்துக்களின் 70 –80 மூ மானவை, பெண்கள்வசம் இருப்பதிலிருந்து உறுதிப்படுத்தமுடிகிறது.
இங்கு எழும் முக்கிய பிரச்சனை என்னவென்றால், தேச வழமைச் சட்டத்தினில் கூறப்பட்டுள்ள “சீதனம்;” என்பதை, இன்றைய “பெண்கள் விடுதலை” பற்றிப் பேசுபவர்கள் மாப்;;பிள்ளை வீட்டாருக்குக் கொடுக்கும் தட்சனையுடன் கலப்பதாகும்! தேசவழமைச் சட்டத்தில் வரதட்சனை என்பதற்கு இடமில்லை! இதனால், மாப்பிள்ளை வீட்டாருக்குக் கொடுக்கப்படும் வரதட்சனையினை சட்டாPதியில் பதியமுடியாது. ஆகையால், தட்சனையினைக் கணவன் என்ன செய்தாலும், மனைவிக்கு அதில் சட்டாPதியிலான அதிகாரம் எதுவுமில்லை.
ஆகவே, தமிழ்ப் பெண்கள் கோரவேண்டியது, வரதட்சனை ஒழிப்பையேயன்றி, சீதனம் ஒழிப்பாக இருக்கமுடியாது!
இந்;தநிலையில், “சீதனம்;” என்பதை ஒழிப்பதன்மூலம் விடுதலையடைவோம் எனக் கூக்குரல் இடும் பெண்கள், உண்மையில் அறிவிலிகளே. “சீதனம்” ஒழிக்கப்பட்டால், பெண்;கள் முழுமையான அடிமைகள் ஆக்கப்பட்டுவிடுவார்கள் என்பதை நன்கு உணர்ந்த நிலையில் வகுக்கப்பட்ட தேச வழமைச் சட்டம் பற்றிப் பிழையான விளக்கங்ககளைக்; கொடுப்பவர்கள், உண்மையில் பெண்களை நிரந்தர அடிமைகள் ஆக்கும் சதி வேலைகளில் ஈடுபட்டுவரும் அதேநேரத்தில், அறிவிலிப் பெண்கள் பகுதியினரால் போற்றப் படுபவர்களும் ஆகின்றனர். இது துன்பமானது. பெண்கள் இதை விளங்காது, உணராது இருப்பது, அவர்களின் அறியாமையாகும்.
அறியாமை நிலையில்; இருக்கும் பெண்கள் கூட்டம் சீதனம் ஒழிக்கப்படவேண்டும் எனப் போர் தொடுத்து, “சீதனம்;” என்பதை சட்டாPதியாக இல்லாது செய்தால், அது ஏனைய பெண்களினது உரிமைகள், நலன்களை இல்லாது செய்யும் ஒரு நடவடிக்கையாகும்.
இங்குதான், ஜனநாயகமும், அறியாமையும் இணைவது, ஒருவித பயங்கரவாத நிலையை உருவாக்கும் என்ற உண்மை வெளிப்படுகிறது!
பொதுவாகக் கூறினால், திருமணமாகிய ஒரு பெண்ணின் கணவர், எந்வொரு அசையாச் சொத்தினையும் தனது பெயரில் மாத்திரம்; வாங்கிக்கொண்டாலும், அவர் அதற்கான உறுதி முடித்த உடனேயே, அந்தச் சொத்தில் அரைப் பங்கானது தேச வழமைச் சட்டத்தின்கீழ் மனைவிக்குரியதாகிவிடுகிறது!
மேலும், தேடிய தேட்டச் சொத்தினை, கணவன் மாத்திரம் தனது விருப்புக்கேற்றவாறு கைளாளும் உரிமை அற்றவர். மனைவியது கையொப்பமில்லாது, கணவன் மாத்திரம் அச் சொத்தினை முழுமையாகக் கையாள முடியாது. அரைப் பங்கிற்கே அவர் உரித்தானவர்.
தேச வழமைச் சட்டமானது, மனைவியின் உழைப்பினு}டாகப் பெறப்பட்ட அசையாச் சொத்துக்;களைப் பெண்ணின் சார்பில் பாதுகாத்துக்கொள்கிறது.
இது பெண் விடுதலை பற்றிப் பேசும் சிலர் குறிப்பிடுவதுபோல் ஆண் ஆதிக்க நிலை நாட்டுகைச் சட்டமா? அல்;லது பெண்களின் நலன்களைப் பாதுகாக்கும் சட்டமா?
திருமணத்தின்போது மனைவிக்குக் கட்டும் தாலி, கொடுக்கும் உடை, ஏனையவைகள் எல்லாம், பெண்ணுக்குக் கணவனால் கொடுக்கப்பட்ட பரிசில்களாகிவிடுகின்றன. இவை, பெண்ணின் சொத்துக்களாகி விடுகின்றன. கணவனுக்கு, அவற்றில் எந்தவித உரிமையும் இல்லை. ஆனால், தேசவழமைச் சட்டத்தினை அறியாத கணவர்கள், பிழையான முறையில் செயற்படுவதையும் நாம் காணமுடிகிறது@ பிரிந்த கணவனும், அவரின் தாய், தந்தையரும், தாலி, நகைகள், ஏனையவைகள் தமதே எனக் கருதுவது அவர்களின் அறியாமையைத்தான் வெளிக்காட்டுகிறது.
யாழ்ப்பாண தேசவழமைச்சட்டம் பற்றிய ஆய்விலிருந்து ஒரு பகுதி.......
நன்றி
Mouse Group
இவைகளைப் பார்க்கும்போது, தேச வழமைச் சட்டத்திற்கு எதிராகப் போர்க்கொடி து}க்கவேண்டியவர்கள் ஆண்களே! வரதட்சணைதான் ஒழிக்கப்டவேண்டும்